ஒரு இந்திய கனவு

என் நீண்ட நாள் கனவு... அனேகமாக ஒவ்வொறு தமிழனுக்கும் ஏன் ஒவ்வொறு இந்தியனுக்கும் இந்த கனவு இருக்கும்...

இந்த கனவுக்கு base ஷங்கரின் "முதல்வன்" .... நம்மை ஆள்வதற்கு ஒரு புகழேந்தி வரமாட்டானா? நான் சொல்ல வந்தது முதல்வனில் வரும் நாயகன் புகழேந்தி ... தப்பா நினைத்துகொள்ள வேண்டாம் ... யாரையும் மனதில் புகழேந்தியாக வைத்திருக்கவில்லை... இங்கு இருக்கும் யாரும் அந்த அளவுக்கு மக்களை நினைப்பவர்களில்லை... இது என் மனதில் தோன்றியது...

அவன் வருவானா?
ஊழல் இல்லாதவன், ஊழல் பிடிக்காத தலைவன், ஊழல் கறைபடியாதவன், ஒரு நல்ல முதல்வன் ... ஒரு நல்ல பிரதமர் .... ஒரு மக்கள் தலைவன்...
என்று தனியும் இந்த தேடல்!!!!

நாம் ஏமாந்துவிட்டோம் !!! நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்!!!

இவர்களை தெரிந்துகொள்ள தவறிவிட்டோம்.. தன்னிகர் அற்ற தலைவர்களை விட்டுவிட்டு .... இப்போது தலைமகனை தேடி அலைகிறோம்...

கக்கன் - மந்திரியாக இருந்தும் ... ஓலை குடிசையில் வாழ்ந்து... ஓலை குடிசையில் இறந்தார்... இந்த வரலாறு தெரிந்தவர்கள் சிலரே...

அவரை போல் ... காமராஜர் ... பக்தவச்சலம்... என்று பலர்... அவர்களை அரசியலிருந்து... மக்கள் சேவைலிருந்து வெளியேற்றினார்கள் இன்றைய அரசியல் கொள்ளையர்கள்... சுயநலத்துக்காக...

நாடுக்காக உயிர் தியாகம் செய்த பலரை நமக்கு தெரியாமல் செய்துவிட்டார்கள்...

திவிரவாதி பட்டம் கட்டப்பட்ட சிலர்:

1. சுபாஷ் சந்திர போஸ் - இந்திய தேசத்துக்குகாக முதல் ராணுவம் உருவாகியவர்... இவர் உயிரோடு இருக்கிறாரா என்பதே ஒரு சர்ச்சை !!! எப்படி வாழ்தார்? எப்படி ராணுவம் உருவாகினார்? சுதந்திரத்துக்கு முன் இருந்த காங்கிரஸில் இவர் பங்கு? யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை...

2. பகத் சிங் - சிறு வயதில் நாடுக்காக உயிர் தியாகம் செய்தார் ... காந்தி ஒரு வாக்கு சொல்லியிருந்தால்... இவரை தூக்கிலிட்டிருக்க மாட்டார்கள் என்ற கூற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு ... மிதவாதிகளால் கொல்லப்பட்டவர் ...

3. வா.உ.சிதம்பரம் - நாடுக்காக தன் சொத்தை விற்று கப்பல் வாங்கி, அது ஆங்கிலேயர்களால் அழிக்க பட்டு, சொத்தை இழந்து... ஓட்டை காலனா கூட இல்லாமல் இறந்தார்...
இவர்களை நாம் அடையாளம் காணவில்லை... காட்டப்படவில்லை... அவர்களின் வரலாறு சென்சாருக்கு உள்ளாகியிருக்கு... இது போன்ற உண்மையான தியாகிகள் அடையாளம் காட்டப்படவில்லை... அவர்களின் வரலாறுக்கு திரையிட்டது யார்? ஏன்? அதனால் யாருக்கு லாபம்?
இப்படி பலரை இழந்துவிட்டோம்... அது நேற்று!!!
நாம் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது...
இன்றும் மக்களுக்காக உழைக்க வருபவர்கள் மீது திரையிட முயற்சிப்பார்கள்... இன்று மக்களுக்காக முன் வந்திருக்கும் எனக்கு தெரிந்த சிலர்...
டாக்டர் M.S.உதயமூர்த்தி இன்று என்ன செய்கிறார்? மக்கள் சக்தி இயக்கம் என்ற ஒரு மக்கள் இயக்கம் நடத்துகிறார்... 60 கிராமங்களை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்காக உழைக்கிறார்!!! அவர் ஒரு அமைதி புரட்சியை உருவாக்குவது போல் தோன்றுகிறது!!!
ஐ.ஐ.டி மாணவர்களின் கட்சி லோக் பரித்ரான் இவர்கள் ஐ.ஐ.டி மாணவர்கள்... பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலை செய்தவர்கள்... சுயநலம் விட்டுவிட்டு மக்கள் சேவைக்கு வந்திருக்கிறார்கள்....
இன்னும் பலர் வரக்கூடும்.... இதில் மக்கள் தலைவன் உள்ளான என்று தேடுவோம்... இன்றாய அரசியல் கொள்ளையர்களை துரத்தியடிப்போம்... நல்லவர்களை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துவோம்...
நான் புகழேந்தியை தேட துவங்கிவிட்டேன்!!! நீங்க்ள்???

Comments

சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு ஜெய்சங்கர்.

//நான் புகழேந்தியை தேட துவங்கிவிட்டேன்!!! நீங்க்ள்???// ஏங்கிக்கொண்டிருந்தோமே தவிற தேட ஆரம்பிக்கவில்லை. இன்று ஆரம்பித்தாயிற்று :)
We The People said…
நன்றி அருள்,

அனைவரும் தேடுவோம்! ஒருமித்த கருத்து கொள்வோம்...
கலக்கிட்டீங்க ஜெய். இன்னும் நிறைய எழுதுங்க. வாழ்த்துக்கள்.
Roop said…
Unselfish people are there but they never come to politics. If they come maybe you can expect OUR HERO.

Think about MGR regime from 1977 to 1980. If his regime was not dismissed he might have become OUR HERO.
Anonymous said…
Sabash Jaishankar...you have collected alot of information on this...atleast now i come to know about this... but who will protest for this price raise..
வஜ்ரா said…
ஜெய்சங்கர்,

உங்கள் இந்த லிஸ்டில் ஒருவித "சோஷியலிச நெடி" அடிக்கிறதே!!
சோசியலிசம் தங்களுக்கு பிடிக்காதா? சுரண்டலிசம்தான் பிடிக்குமா?
We The People said…
ஷங்கர் தலைவா! நான் மக்கள் பக்கம்! மக்களிசம் என்று கூட சொல்லுங்கள் ;) சோசியலிசம் தவறான சிந்தனையும் அல்ல! சோசியலிசத்தை எந்த நாடும் முழுவதுமாக உபயோகிக்க முடியாது!!! இந்த பதிவு சோசியலிச புகழ் பாடவல்ல... என் கருத்து நல்லவன் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே! என் தேடல் புகழேந்தியைத்தான்! சோசியலிசத்தை அல்ல!!!

நன்பர் bonapert சரியான கேள்வி :)

//*சோசியலிசம் தங்களுக்கு பிடிக்காதா? சுரண்டலிசம்தான் பிடிக்குமா?*//

நன்றி bonapert :D
வஜ்ரா said…
ஜெய்சங்கர்,

சோஷியலிசத்தின் மேல் எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்த விறுப்பு வெறுப்பும் இல்லை. சோஷியலிசத்தின் பேரில் 1990 வரை நடந்த சுரண்டலிசத்தை நான் எதிர்க்கிறேன் (இப்போதும் நடக்கிறது மறுப்பதற்கில்லை). அது அரசின் தேவையில்லாத இடங்களில் தேவைக்கதிகமாக தலியீட்டினால் வந்த வினை.

இன்றும் அரசு தேவையில்லாத இலாக்காக்களில் தேவைக்கதிகமாக தலையிட்டு வரிப்பணாத்தைக் கொட்டி, "வெள்ளையானைகளை" வளர்ப்பதினால் என்ன லாபம்.
...

How good is a king? No good than his people.

ஊழல் இல்லாத "முதல்வன்" புகழேந்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுபவர்களில் நானும் ஒருவன். அவன் வானத்திலிருந்து குதிக்க மாட்டான். நம்மிலிருந்து தான் வர வேண்டும்.
We The People said…
ஷங்கர் அவர்களே,

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி!

//*ஊழல் இல்லாத "முதல்வன்" புகழேந்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணுபவர்களில் நானும் ஒருவன். அவன் வானத்திலிருந்து குதிக்க மாட்டான். நம்மிலிருந்து தான் வர வேண்டும்.*//

நானும் நம்மக்குள் தான் தேடுகிறேன்! புகழேந்தியை நிச்சயம் ஒரு கண்டெடுப்பேன்!!!

//*How good is a king? No good than his people.*//

Perfect comment.. so change the King then people will follow.
ஊழல் செய்யா தலைவன் கிடைக்க ..
குறைந்த விலைக்கு பதிவு செய்யா குடிகள் வேண்டும் :-))
Anonymous said…
சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு
DURAI
சிந்திக்க வைக்கிறீர்கள். உதயமூர்த்தியும் லோக்பரித்ரானும் ஏன் ஆதரவு பெறவில்லை என்பதை ஆழமாக அலசவேண்டும்.

இரண்டாவது zero tolerance on corruption மிகவும் கடினம். ஆனால் இன்று ஊழல் வாங்குவோரின் அடாவடித்தனமும் அதிகாரமுமே மக்களுக்கு எதிரி. அரசின் வளர்ச்சிப் பணிகளை விட ஆட்சியாளர்களுக்கு அடியாள்பணியே அரசு ஊழியர்களின் விருப்பமாக உள்ளது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
Anu said…
Thought Provoking
Ana parunga nallavangala irukkara ellarum arasialla vara bayappaduranga
May be we can call Lok parithran
as a initiation
We The People said…
யாத்திரீகன் சார்,

//*குறைந்த விலைக்கு பதிவு செய்யா குடிகள் வேண்டும்*//

என்ன சொல்ல வரீங்க! மக்கள் குறைந்த விலைக்கு வாக்குகளை விற்கிறார்கள் என்றா சொல்ல வரீங்க? எவனும் உருப்படி இல்லை காசாவது கிடைக்குதேன்னு ஓட்டு போடறாங்களோ என்னவோ?!
We The People said…
மணியன் அவர்களே,

//*உதயமூர்த்தியும் லோக்பரித்ரானும் ஏன் ஆதரவு பெறவில்லை என்பதை ஆழமாக அலசவேண்டும்.*//

அவர்களுக்கு சரியான பத்திரிக்கை ஆதரவு இல்லை, விலை போகும் பத்திர்க்கையே இந்தியாவில் அதிகம்! என்ன செய்ய, ஏதோ நம்மக்கு முடிந்த அளவுக்கு அவர்களுக்கு ஆதரவு தருவோம்.

எப்படிங்க ஒரு நல்லவனுக்கு கிடைக்கர எல்ல மரியாதையும் கெட்டவனுக்கு ஈஸியா கிடைக்குது?? அதை கண்டுபிடிச்சு அந்த ஓட்டைய அடைச்சா நாம் நினைத்தது நடக்கும்.

//*இரண்டாவது zero tolerance on corruption மிகவும் கடினம்.*//

அய்யா, எல்லாம் கடினம் தான், உழைப்பு கடினம், வாழ்வதும் கடினம், நடப்பது கடினம்... ஆனா எல்லாம் நடக்குதுதானே! அது போல கடினம் பார்க்காம சீராக ஆட்சி செய்தால் எல்லாம் நடக்கும். கஷ்டப்பட்டு கிடைக்கற வெற்றி என்றும் இனிக்கும்!
Unknown said…
//ஐ.ஐ.டி மாணவர்களின் கட்சி லோக் பரித்ரான் இவர்கள் ஐ.ஐ.டி மாணவர்கள்... பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலை செய்தவர்கள்... சுயநலம் விட்டுவிட்டு மக்கள் சேவைக்கு வந்திருக்கிறார்கள்.... //

இவர்கள் சாதீகட்சியாகப் போய் பலர் விலகியது தெரியாதா?

நல்ல தலிமைக்கு படிப்போ பணமோ தேவை இல்லை. மனமும் முயற்சியும் அத்துடன் நேரமும் வேண்டும்

கக்கன், காமராஜ் சிறந்த மக்கள் தலைவர்கள். அந்த அண்டங்காக்காவை அரசியலில் சாணக்கியத்தில் கொழுத்திவிட்டார்கள். :-(
முதலில் முதல்வன்''புகழேந்தி'' போன்ற போலிகளிடம் மயங்காதிருக்கும் மனம் வேண்டும்.
Hi

I think the basic changes has to come from people. M S Udayamurthy has even contested election(in madurai) but we were so ignorant such that he lost his deposit. People these days are not voting for person's attitude they only vote by seeing the money power and other negative factor.

I sometimes feel that even in olden days(kings period) people were well disciplined than these days.

Most of the people think that they are smart and deserved than others and they alwasy ignore the regular queues and basic trafic rules. If the mindset of the people changes and if they know the power of their vote it may bring some good persons in important posts which will end up in realisation of our dreams.

In my view, what our country needs now is a moral revolution which can be initiated by some great thinkers.

I am happy that there are some like you who thinks about our country and its improvement in the future. Please dont lose your determination at any point and definitely the day will come if we keep spirits going in changing atleast some few minds around us.
Thanks,

p.s: please pardon me of not writing in tamil which i love to do.
வஜ்ரா said…
..
முத்துகுமரன் said...
முதலில் முதல்வன்''புகழேந்தி'' போன்ற போலிகளிடம் மயங்காதிருக்கும் மனம் வேண்டும்.
..

என்ன சொல்ல....

ஐயா, இங்கே ஒரு உவமைக்காகவே ஜெய்ஷங்கர் முதல்வன் புகழேந்தி யை வேண்டுகிறார்...அதைப் புரிந்து கொண்டீர்கள் என்றால் நலம்...அவர் போலி என்றால் யார் தான் உண்மையானவர்...

தேசிய வங்கிகளில் வேலை பார்த்துக் கொண்டு தேசியத்தை எதிர்ப்பவர்கள், சிங்கப்பூரில் உட்கார்ந்து கொண்டு சமூக நீதி பேசுபவர்கள், தன் மகனை மந்திரியாக்கி அழகு பார்ப்பவர்கள், Hypocrites, psedo-intellectuals...!!
வஜ்ரா said…
jai,
சோம்பேறிபையன் என்ற பெயரில் இடப் பட்ட பின்னூட்டம் போலி... அது வெறும் நல்ல பதிவு என்று தான் குரிப்பிடுகின்ரது...அது எதுவாயினும் அதை நீக்கிவிடுங்கள்...போலிகளை Encourage செய்யக் கூடாது..
We The People said…
நன்றி வஜ்ரா ஷங்கர் போலி எந்த உருவில் வந்தாலும் தடை செய்வோம். அந்த போலியின் பதிவை பார்த்தேன் படு கேவலமாக எழுதியுள்ளார். இளைஞர் சமுதாயம் திக்கற்று போகிறது என்பதுக்கு ஓர் எடுத்துக்காட்டு.
We The People said…
கல்வெட்டு, உங்கள் லோக் பரித்ரான் பற்றிய கருத்து //*இவர்கள் சாதீகட்சியாகப் போய் பலர் விலகியது தெரியாதா? *//

ஐயா அங்கும் நம் அரசியல்வாதிகள் வேலையை காட்டியுள்ளனர் என்பது என் கருத்து! தமிழ்மண போலிகள் போல்!!!

லோக் பரித்ரான் பற்றி மக்கள் பேச துவங்கியது அதை தடுத்தாக வேண்டிய கட்டாயம் ஒவ்வொறு போலி அரசியல் கட்சிக்கும் தேவை, ஏன்னெனில் அவர்கள் வந்தால் இவர்களுக்கு வேலை போய்விடும், அதனால் அதற்கு சாதி பெயிண்டு, மத பெயிண்டு எல்லாம் அடிக்க முயற்சி நடக்கும். நாம் தான் உண்மையை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பது என் தாழ்வான கருத்து.
//ஐயா, இங்கே ஒரு உவமைக்காகவே ஜெய்ஷங்கர் முதல்வன் புகழேந்தி யை வேண்டுகிறார்...அதைப் புரிந்து கொண்டீர்கள் என்றால் நலம்...அவர் போலி என்றால் யார் தான் உண்மையானவர்...//


வஜ்ரா,
தவறான உவமையை சொல்ல வேண்டாம் என்பதைத்தான் சொல்லி இருந்தேன். ஜெய் அவர்களின் அடிப்படை எண்ணம் சிறப்பானது. தலைவன் ஒருவன் வருவான் நம்மை காக்க என்று காத்திருப்பதை விட நாமே அந்த நிலைக்கு உயர முயல வேண்டும்.அதற்கு போலித்தனமான சிந்தனைகளில் ஆட்படாது இருத்தல் அவசியம். லட்சம் வாங்காதே என்று சொன்ன ஷங்கர் வாங்கிய சம்பளம் எல்லாமே வெள்ளையா??. சமூக பிரச்சனைளை, அதன் அவலங்களை காசாக்க மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் பிரமாண்ட கழிசடைகளை முன்னுதரனமாக்கி மாயவலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்பதுதான் என் கருத்து.
**
இந்தியா ஜனநாயகநாடு( என்று சொல்லபடுகிறது). எவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. முத்து தமிழினி தேசியத்திற்கு எதிராக என்ன கூறிவிட்டார். அவருக்கு வரையறுக்கப்பட்ட வேலையைச் செய்வதற்குதான் அவர் ஊதியம் வாங்குகிறாரே தவிர அவரை அவரது சுயசிந்தனைகளை, இன்ன பிறவற்றை எல்லாம் அடமானம் வைப்பதற்காக அல்ல.

நீங்கள் வரையறுக்கும் தேசியம் என்பது என்ன? வாய்மூடி ஊமைகளாக, கருத்தை தெரிவிக்க வாய்ப்பு இல்லாமல் இருப்பபதா? அப்படி வாழ்பவனுக்கு பேர் சுதந்திர மனிதன் அல்ல. அடிமை.

தேசியத்திற்கு எதிராக நடந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கும் அறிவு அரசாங்கத்திற்கு இருக்கிறதல்லவா. அதை நிறைவேற்ற சட்டங்கள் இருக்கிறதல்லவா. அவர்கள் பார்த்து கொள்வார்கள். தேச பக்தியை வேறு வழியில் காட்டிக் கொள்ளவும்.
We The People said…
முத்துகுமரன் உங்கள் கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

ஆனால் உங்கள் முன்னுதாரண வாதம் சரியல்ல,முதல்வன் புகழேந்தி எப்போ சார் காசு வாங்கினாரு! அவரை படைத்த ஷங்கர் காசு வாங்கினாரு(கொஞ்சம் அப்படி கொஞ்சம் இப்படி)! நான் சொல்ல வந்த மேட்டர் புகழேந்தி என்ற கதாபாத்திரத்தின் வீரியம், துணிச்சல், அவர் முதல்வரா செயல் படும் விதம்!

புகழேந்தி கதாபாத்திரம் தான் முன்னுதாரணமாக கூறினேன்,அதன் இயக்குனர் ஷங்கர் அல்ல

இதை உணர்ந்தால் போதும். ஜனநாயகம், கருத்துரிமை என்று விவாதத்தை திசை திருப்பவது போல் உள்ளது உங்கள் கருத்துக்கள். என் ஆசை புகழேந்தியைப் போல் ஒரு முதல்வன் வரவேண்டும் என்பதே!

பி.கு: முதல்வன் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கரே தான் அதனால் சம்பளம் கரெக்டா தான் வாங்கியிருப்பார்.
We The People said…
Vetri Thirumalai, Anitha Pavankumar ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு வெற்றி:
//I think the basic changes has to come from people. M S Udayamurthy has even contested election(in madurai) but we were so ignorant such that he lost his deposit. People these days are not voting for person's attitude they only vote by seeing the money power and other negative factor.//

உதயமூர்த்தி மதுரை தேர்தலில் தோல்விக்கு பல காரணங்கள் இருக்கலாம், முக்கியமானது பத்திரிக்கையாளர்கள் முன் மொழிந்தால் தான் அது மக்க்ளுக்கு தெரியும், அவர் யாரென்று மக்களுக்கு சென்று சேரவில்லை என்பது ஒரு காரணம், பின் நீங்கள் சொல்லும் காரணமும் இருக்கலாம்.
ஜெய்,
உங்கள் பதிலுக்கு நன்றி.
உங்கள் விவாதம் என்னால் திசை திரும்பாது. அது என் நோக்கமும் அல்ல.

வாழ்த்துகள்

நன்றி
We The People said…
முத்துகுமரன் சாரி தப்பா நினைத்துவிட்டீர்கள் போல... நம் விவாதம் நல்ல தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதே. நீங்களும் வஜ்ரா அவர்களும் வேறு சில வேண்டாத, இந்த விவாததில் ஒட்டாத வாதங்கள் வந்ததால் எடுத்து கூறினேன். தவறாக என்ன வேண்டாம்.
இல்லை ஜெய், தவறாக எதுவும் நினைக்கவில்லை. கவலை வேண்டாம்.
We The People said…
என் நோக்கத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி முத்துகுமரன்.
JTP said…
சுய புத்தியில் சோதித்து, unbiased கூட்டு புத்தியுடன் விவாதிது அறிந்தது, லோக் பரித்ரான் equal opportunity providing கட்சி அல்ல. இதற்கு நீங்கல், எந்த சாயமும் பூசலாம், உங்கள் சாய இருப்பு பொருத்து :)
We The People said…
JTP,

//சுய புத்தியில் சோதித்து, unbiased கூட்டு புத்தியுடன் விவாதிது அறிந்தது, லோக் பரித்ரான் equal opportunity providing கட்சி அல்ல. இதற்கு நீங்கல், எந்த சாயமும் பூசலாம், உங்கள் சாய இருப்பு பொருத்து :) //

நானும் லோக் பரித்ரான் சரியான கட்சியென்றோ, அவர்களுக்கு வாக்கு அளியுங்கள் என்று சொல்லவில்லை. நான் சொன்னது:

//இது போல இன்னும் பலர் வரக்கூடும்.... இதில் மக்கள் தலைவன் உள்ளான என்று தேடுவோம்... இன்றாய அரசியல் கொள்ளையர்களை துரத்தியடிப்போம்... நல்லவர்களை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்துவோம்... நான் புகழேந்தியை தேட துவங்கிவிட்டேன்!!! நீங்க்ள்??? //

நான் தேடுவது ஒரு நல்லவன், மக்கள் தலைவன், மக்களுக்காக உழைப்பவன், சுயநலமற்றவன் அவ்வளவே. இதுக்கு எதுக்குங்க சாயம் பூச போறேன், அனேகமா தமிழ்மணம் சண்டைகள் உங்களை இந்த நிலைக்கு கொண்டுபோய்விட்டுவிட்டது என்று புரிகிறது. :)
bala said…
//நான் தேடுவது ஒரு நல்லவன், மக்கள் தலைவன், மக்களுக்காக உழைப்பவன், சுயநலமற்றவன் //

we the people அய்யா,

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போல் இருக்கிறது, நீங்கள் பேசுவது.

என் புரட்சிகர கட்சியின் தலைவர் அசுரன் அய்யா உங்கள் கண்ணுக்கு தென்படவில்லையா?
அவர் தான் நீங்கள் தேடும் புகழேந்தி.
அவருக்கு assistant அஞ்சா நெஞ்சன் விடாது கருப்பு.

பாலா
Anonymous said…
//*உதயமூர்த்தியும் லோக்பரித்ரானும் ஏன் ஆதரவு பெறவில்லை என்பதை ஆழமாக அலசவேண்டும்.*//

லோக்பரித்ரானுக்குள்லேயே அடிதடி வரை போய்விட்டது பேப்பரில் மாற்றி மாறி பேட்டி கொடுத்தார்களே அதைப் படிக்கவில்லையா ?