இது எப்படி இருக்கு!

ஆனாலும் ரொம்ப குசும்புங்க இந்த லாலு பிரசாத் மச்சானுகளுக்கு.

சூன் 19, 2006:

ஒரு மச்சான் (சுபாஷ் யாதவ், MP) பாட்னா ரெயில் நிலையத்தின் பிளாட்பாரம் #1 இருந்துகினு மூன்றாவது பிளாட்பாரதில் வந்த ரெயில் வண்டிய ஓட்டிகினு வா இங்கன்னு கட்டளை வுட்டிருக்காரு! உடனே ரெயில்வே அமைச்சரின் மச்சானாச்சே உடனே ரெயில்வே அதிகாரிகளும் பறந்து அடிச்சுகினு பிளாட்பாரம் #1 வண்டிய ஓட்டி வந்திருக்காங்க.

சூன் 20, 2006:

விடுவார அடுத்த மச்சான் (சாது யாதவ், MP) (யாரு வெயிட்டுனு காட்ட வேண்டாம்!!!) அதே பாட்னா ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரம் போயி நின்னுகினு, இரண்டாவது பிளாட்பாரதில் வர வேண்டிய ரெயில் வண்டிய முதல் பிளாட்பாரத்துக்கு ஓட்டிக்கின்னு வா சொல்லியிருக்காரு தலிவரு, எதோ ஒரு லொல்லு புடிச்ச ரெயில்வே அதிகாரி அதெல்லாம் முடியாதுன்னு சொன்னாரு போல,

சாதுவின் சூப்பர் டயலாக் " அந்த மச்சானுக்கு வரும் வண்டி, ஏன் எனக்கும் வர கூடாது " நியாயமான கேள்விதான?

சுமார் ஒரு மணி நேரம் ரெயில் நிலையத்தை உண்டு இல்லைன்னு பண்ணியிருக்காரு நம்ம சாது! (யாதவ்!) இதில் ஒரு தொண்டர்கள் தர்ணாவும் அடங்கும்போல! அய்யோ பாவம் ரெயில்வே அதிகாரி தண்ணியில்ல காட்டுக்கு போற நேரம் வந்திருக்கும் போல... கடைசிவரைக்கும் ரெயில முதல் பிளாட்பாரத்துக்கு கொண்டு வர விடவில்லை அந்த அதிகாரி (அப்புறம் இரண்டாவது பிளாட்பாரத்துக்கே போயி சாது ரெயில் ஏறியதாய் கேள்வி!)

முடிவுரை (காமெடிக்காக):

பொறந்தாலும் லொல்லு சாரி லல்லுவுக்கு மச்சான பொறக்கனும், அட்லீஸ்ட் ஒரு அமைச்சர் சொந்தக்காரனாவது பொறக்கனும்!

கடுப்புரை:

என்னைக்குத்தான் மக்கள் இது போன்ற ஆட்களை MP ஆகவும் , மந்திரியாகவும் ஆக்குவதை நிருத்துவார்களோ! மக்களாய் பார்த்து திருத்தாவிட்டால் இவர்களை ஒழிக்க முடியாது!!!

Comments

//பொறந்தாலும் லோல்லு சாரி லல்லுவுக்கு மச்சான பொறக்கனும், அட்லீஸ்ட் ஒரு அமைச்சர் சொந்தக்காரனாவது பொறக்கனும்!// - என்னதான் கமெடிக்காகன்னாலும், 'அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி' பதிவை எழுதிய நீங்கள் இப்படி எழுதலாமா?!

வேற என்னங்க பண்றது, நான் உங்களைத்தான் கேள்வி கேட்க முடியும். லல்லுவையா கேட்க முடியும்?!
நம்மளும் திருந்த வேண்டும். ஆனால் இது போல எல்லா அதிகாரிகளும் நடந்து கொண்டால் இவங்க பாச்சா பலிக்காது. ஆனால் பெரும்பாலும் அதிகாரிகள் அவர்க்களின் தலையாட்டி பொம்மையாக இருப்பது தான் வேதனை.
We The People said…
நன்றி நாகை சிவா & CalabazaBlog.

சிவா இதுக்கு சொல்யூசன் அதிகாரிகள் கையில் இல்லை சாமி, மந்திரியை முண்டிகிட்ட தண்ணியில்ல காட்டுக்கு தான் போகனும் தல. இதுக்கு மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்,

குழழியின் பக்கங்களிலிருந்து:

//* தலைவனுக்காக கொள்கை என்பதை கைவிட்டு கொள்கைக்காக தலைவன் என்ற நிலை வரும்போது தான் இந்த மன்னராட்சி மனோபாவமும் வாரிசு அரசியலும் முடிவுக்கு வரும் *//

so by all means we the people has to decide... அய்யா அந்த we the people நான் அல்ல நாம், இந்திய மக்கள்.
We The People said…
//* என்னதான் கமெடிக்காகன்னாலும், 'அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி' பதிவை எழுதிய நீங்கள் இப்படி எழுதலாமா?!*//

எப்படியோ அருள், கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டீங்க, வெரி குட் விடாம புடிங்க ஒரு நாள் இந்த மாதிரி அரசியல்வாதியையும் கேள்வி கேட்கதோன்றும்.
manasu said…
# 1 cabinet minister as per india today rating.
We The People said…
பார்த்துங்க # 1 cabinet minister இப்படி என்றால் மத்தவங்க எப்படின்னு? சூப்பரப்பூ!!!