நட்புக்கும் உண்டு அடைக்கும் தாள்

இந்த பதிவு நேற்று என்னை ரொம்பவே பாதிச்ச ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள தோன்றியதன் விழைவுதான்.
13 வருடங்களுக்கு முன்!
கல்லூரி நாட்களில் நட்பு ரீதியா நிறைய பேரிடம் பழகினாலும் ஒரு 6 பேரு ஒரு Groupபா தான் அலையுவோம்! நான், சிவஞானம், சிவ அமுதன், டானி, அசோக் & Iyer என்று அன்போடு அழைக்கப்படும் ஷிரிக்ஸ். தினம் ஒரு லொள்ளு, கலாட்ட, கல்லூரி முன் உள்ள டீ கடை அரட்டைகள் என பல கூத்துகள் Daily. நினைத்தால் திருப்பதி ட்ரிப், திடீர் கோனை நீர்விழ்ச்சி பயணம் என சுத்தி சுத்தி நாங்க உயிர் நன்பர்களா மாறிவிட்டோம்!
இப்ப என்ன அச்சு? எதுக்கு இந்த Build upன்னு தான நினைக்கறீங்க? நீங்க நெனைக்கறது சரிதான்! அதை பத்திதான் இப்ப சொல்லப்போறேன்.
நேற்று!
அமுதன் என் கைப்பேசிக்கு அழைத்து, டேய் ஒரு மேட்டர் தெரியுமா, நம்ம அசோக்கு ஆண் குழந்தை பொறந்திருக்குன்னு சொன்னான், ரொம்ப சந்தோஷம் டா!!! பரவால்ல மச்சி 10 வருஷம் குழந்தையில்லன்னு கஷ்டப்பட்டாலும் அதுக்கு ஒரு முடிவு வந்திருச்சு, Very good சொன்னேன். அடுத்து அமுதன் சொன்ன மேட்டர் "மச்சி அவனுக்கு கொழந்த பொறந்து ஒரு மாசம் ஆச்சாம!!!" அப்ப தான் எனக்கு பயங்கர ஷாக்!!! ஒரு மாசமாயியும் நமக்கு இந்த சந்தோஷ விசயம் சொல்ல படல, அமுதனுக்கே இந்த நட்புக்கு Link இல்லாத மூன்றாவது ஆள் தான் சொல்லியிருக்காரு... இதை USல இருக்கற இன்னொறு நணபனிடம் புலம்பினேன், அவன் "இதெல்லாம் இங்க சகஜம் மச்சி dont take it to your heart!!! busy scheduleல மறந்திருப்பான் டா! " நட்பே முக்கியம் என்று வாழ்ந்த எனக்கு இதை ஜீரனிக்க முடியவில்லை! நான் ஒரே கேள்வி மட்டும் கேட்டேன் busy scheduleனா குழந்தை பொறந்த மேட்டரை தந்தையிடம்(தந்தையை நண்பனாக தான் சொல்லுவார்கள் தோழனாக compare செய்வார்கள்!) சொல்ல மறந்திடுவானா?
என்னட இது நம்ம friends இப்படி பிரிஞ்சு போயிட்டோம்னு நினைக்க தோன்றியதன் விழைவே இந்த பதிவு!
நட்பு ஒரு அலசல்:
நட்புக்கு இரண்டு முகம் இருக்கும் முடிவுக்கு வந்திட்டேன். நட்பு க.மு, நட்பு க.பி. ரொம்ப யோசிக்க வேண்டாம்... கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் அது தான் அந்த க.மு, க.பி.
நட்பு க.மு:
முடிஞ்சா தினம் சந்திப்பது or atleast phone , கண்டிப்ப வாரம் ஒரு முறை மீட்டிங், weekend சினிமா, ஊர் சுத்தரது, Summer உல்லாச பயணங்கள் (ஊட்டி, கொடைகானல்,..) , ஜாலி வாழ்க்கை! இதெல்லாம் நடந்தது க.முவில்.
எங்க டீம்ல முதல் கல்யாணம் அசோக்கு நடந்தது ! இரண்டாவதா எனக்கு!! May be we two are 2-3 years elders to other friends. மற்றவர்களுக்கு 4-5 வருசங்களுக்கு அப்புறம் தான் கல்யாணம் நடந்தது. இதில் என் கிட்ட கேட்டு தான் கல்யாண பெண்ணை finalize செய்த நண்பர்களும் அடங்கும். சினிமா டைப்ல பொக்கே தர Idea சொல்லரது, பெண்ணை finalize செய்ய அவள் படிக்கும் Computer Institute முன்பாக வெட் செய்து பெண் பார்த்து ஓ.கே சொன்னதுன்னு...
சிவா USல இருந்து வந்த நாங்க எல்லாவரும் (என்ன எல்லாவரும் நான் & அமுதன் மட்டும் தான் இந்தியாவில் குப்பை கொட்டரோம்) வேலைக்கு Ta! Ta! சொல்லிவிட்டு fulla சிவா கூட ஊர் சுத்தர வேலையை மெயின் தொழிலா மாத்திக்குவோம்! சிவா அம்மா எங்க கிட்ட கெஞ்சுவாங்க, "என் பையனை ரெண்டு நாலுக்கு எனக்கு தாங்கனு"
ஒரு கொண்டாட்மா இருந்த நட்பு அது, அது அந்த காலம்!!!
நட்பு க.பி:

இப்போ சிவா சென்னை வந்த விமானதளத்தில் ஒரு 5 நிமிடம் பின்னர் அவன் சென்னையில் உள்ள 25 - 30 நாட்களில் சுமார் 1-2 மணி நேரம் தான் நாங்கள் சந்திக்க முடிகிறது.

இது என்ன இந்தியாவில் குப்பை கொட்டர நானும் அமுதனுமே ஒரு மாதத்க்கு ஒரு முறை கூட போன் பேசறதில்ல 4-5 மாசத்துக்கு ஒரு முறை தான் சந்திக்குறோம் அதுவும் ஒரு மணி நேர கால அவகாசம் தான் இருக்கும். எதாவது நிகழ்ச்சிகளில் (குழந்தைகளின் பிறந்த நாள், கல்லூரி நண்பர்களின் கல்யாணம் இப்படி எதாவது சிக்கனா ஒரு 4 -5 மணி நேரம் ஒன்னா இருக்க முடியுது)

கடந்தமுறை(சுமார் 1.5 Yrs) அசோக் இங்கு வந்த போது அவன் மனைவி வேலை நிமித்தமா அவன் கூட வரல அப்ப தான் சுமார் 4-5 நாள் சந்திச்சோம், சுமார் 3-4 மணி நேரம் எங்களோட இருந்தான்!

இன்று:

என்னடா இவ்வளவு தான் நட்பா? இதையா பெரியா விசயமா நெனச்சோமா? ஒன்றும் புரியவில்லை!!! நான் பெற்றோர்க்கு இணையாக நண்பர்களை நினைத்தன் விழைவே இந்த ஆத்ங்கமா?

பிசிராந்தையாரின் நட்பும் , திருவள்ளுவனின் நட்பியலில் படித்து, நட்பு இன்றியாத ஒன்று என்று நினைத்திருந்த எனக்கு இது பேரிடி!

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு."

Anyway நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்? என்று கேட்பார்கள். என் அலசலின் முடிவு நட்புக்கும் உண்டு அடைக்கும் தாள்! அந்த தாள் தான் திருமணம்!

(பி.கு: இந்த பதிவில் வரும் நட்பு க.மு, க.பி ஆணுக்கு பெண்ணுக்கும் பொதுப்படையாக எழுதப்பட்டது. பெண் சுதந்திர போராளிகள் கவலைப்பட வேண்டாம். எனக்கும் உண்டு பெண் சுதந்திர வேண்டும் என்ற உணர்வு :))

10 comments:

said...

இதெல்லாம் க.பி வாழ்க்கைல சஹஜமப்பா....

said...

ஆஹா... ஜெய். நான் second show படத்துக்கு கூப்பிட்டப்பல்லாம் ஒருவாட்டியாச்சும் வந்திருக்கீங்களா நீங்க? வயசுல சின்னவன்னாலும் நானும் உங்க friend தானே. என்ன மதிச்சீங்களா நீங்க. ஒரே ஒரு டைம் உங்க wife ஊருக்கு போயிருந்தப்பதான வந்தீங்க.

சினிமாக்கும் வரதும் குழந்தை பிறந்தத சொல்லாததும் ஒன்னான்னு கேக்காதீங்க. இதுல ஆரம்பிக்கிற gap தான் பெரிசாகி அதுல முடியுது.

Anonymous said...

Thats very true Jai, Infact guys spend some time(as u said 3- hours in months) even after marriage. But gals once get married then i hear,

" hey epdipa irukea allea marritea?? blah...blah...ok pa take care" thats it. :-)

Its a big fullstop to the friendship with the gals the day they get married. :-)

--
Jagan

said...

அன்பு அனாமி! இந்த பதிவு வரும் நட்பு க.மு, க.பி ஆணுக்கு பெண்ணுக்கும் பொருந்தும். நான் ஆணுக்கு மட்டும்தான் இந்த ஆத்ங்கம் என்று சொல்லவே இல்லயே தலைவா!!!

said...

நட்பு மட்டுமல்ல...எல்லா உறவுகளும் நம் மனதைப் பொருத்தது மட்டுமே...

நண்பர் அருள் கூறியதைப் பாருங்கள்..அவர் மனம் புண்பட நீங்கள் காரணமாயிருந்துள்ளீர்.

என்னைக்கேட்டால்,

தொடு வானத்தை தொடத் துடிப்பதை விட,
காலடியில் உள்ள மண்ணை என்றாவது நாம் உற்றுப் பார்த்துள்ளோமா என்றால் இல்லை...


எங்கோ படித்தாக ஒர் நினைவு,
"ஓருவர் உன்னை எப்படி நடத்த வேண்டுமென நினக்கிறோயோ..! அப்படி நீ மற்றவரை நடத்தினால் உறவுகள் உவக்காது,,,"

அனைவருக்கும் அவரவர் நியாங்கள்,தர்மங்கள் அவர்களுக்கு சரி தாம்....எல்லா உறவுகளும் பிரியத்தான்...
எல்லா நினைவுகளும் மறக்கத்தான்....


உங்களுக்கு இன்னும் நடந்தவை மறக்கவில்லை...நீங்கள் கொடுத்து வைத்தவர் ...

அடுத்த முறை..உங்கள் சொந்த மண்ணுக்கு செல்லும்போது..ஒரு மணி நேரம் நிதானமாக பழைய ..பழகிய தெருக்களுக்கு சென்று வாருங்கள்...
பிறகு தெரியும் நீங்கள் காயப்படுத்திய இதய்ங்கள் எத்தனை என..

"இவ்விநாடி மட்டுமே நிஜம்"

said...

அருளய்யா! நீங்க செஞ்சது உங்களுக்கே நல்ல இருக்க! நம்ம இனிதமிழ் பாலா சேட்டைய பாருங்க! ஒரு second show cinemaவை குழந்தை பிறந்த சந்தோஷ மேட்டர்கூட லிங் பண்ணிட்டீங்களே!!! மேட்டர் அதுவல்ல நட்பு விலாசம் இல்லமா தவிக்குதே என்ற ஆதங்கம்தான் எனக்கு!

said...

இப்ப எனக்கு என் நட்பு ஞாபகம் வருது.. நல்ல நினைவு கூறல் நண்பா..

பொதுவா கல்யாணத்திற்குப் பிறகு பொறுப்புகள் - எண்ணங்கள் எல்லாம் திசைமாற்றப்படுகின்றன.

said...

தல, இப்பெல்லாம், க.மு.கூட உங்களோட க.பி. மாதிரிதான் அப்படித்தான் இருக்கு.

Anonymous said...

there is a misunderstanding abt my comment. All I said was the situation is the same between the genders. but it's bit worse among the female's. :-)

--
Jagan

said...

Ethu than enna mari 2 friend erukanum.