அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி

அரசியல் ஒரு வியாபாரமா? இன்றைய முதலீடு, நாளைய லாபம் என்கிற "ரேஞ்சில்" வளருது இந்திய அரசியல். இந்த பரிநாம வளர்ச்சி எப்படி தோன்றியது! யார் இதை வியாபாரம் ஆக்கியது?

சமீபத்தில் என் நண்பன் கார்த்திக்கின் திருமணத்துக்கு போனபோது ஒரு கலந்துரையாடலில் கிடைத்த மேட்டர் இது. நான், நண்பன் அருள், அருளின் தந்தை, வீரமணி, ராம், etc., ஹோட்டல் அறையிலிருந்து திருமண மண்டபத்துக்கு போகும் வழியில் Time Passக்கு பேச துவங்கினோம், மெதுவா அரசியல் பக்கம் திரும்பியது அப்போது வழக்கம் போல என் அதங்கமான வாரிசு அரசியல் பத்தி டாப்பிக்கு எடுத்து விட்டேன், அருளோட அப்பா ஒரு கேள்வியால் அடித்தருங்க ஒரு அடி நான் வாயடச்சு போயிட்டேன்!!! என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்? உங்க பிஸினசிலே உங்க மகன கொண்டுவர நெனைப்பீங்கல்ல? அது மாதிரிதான் இது என்றார். நான் வாயடச்சதுக்கு Reason அவர் தந்த அரசியலும், வியாபாரமும் ஒன்று என்ற விசயம், அறியாமை படித்தவர்கள் மத்தியுலுமா? என்ற ஷாக்கில் தான்.

நான் அறிந்த அரசியல், மக்கள் சேவை ஒன்றே கொள்கையாக கொண்டு, மக்களுக்கு நன்மைக்காக வாழ்வதே அரசியல்??!! கரெக்ட்டா? இது வியாபாராமா மாறி வருது...

மக்களும், அரசியல்வாதிகள் செய்யும் இந்த வாரிசு அரசியல் கூத்தை ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதைத்தான் "யதா ராஜா...ததா ப்ரஜா" - அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்று சொல்கிறார்களோ?

இதுக்கு என்ன தான் முடிவு?

16 comments:

said...

// As the Ruler so the ruled...//

நல்ல கேள்வி தான்...

அரசியலை ஒரு முமு நேரத் தொழில் போல் நாம் செய்ய விட்டுவிட்டோம்....அது நம் தவறு...(ஜனநாயகத்தில் எல்லா தவறும் மக்களுடயதே!)

சிறந்த ஜனநாயகத்தில் அரசியல் தலைவன் என்பவன் ஒரு பிரஜை, அவ்வளாவே...அவன் காலம் முடிந்தவுடன் அவன் தலைவனாவதற்கு முன்பு செய்துகொண்டிருந்த வேலையைத் தொடரவேண்டும்... என்றைக்கு இந்த நிலை வருமோ அன்றைக்குத் தான் இதற்கு முடிவு.
....
படித்தவன் முதல் பாமரன் வரை புத்தியைப் பார்த்தா பொத்தானை அழுத்துகிறான்?

said...

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.381. படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

People, troops, wealth, forts, council, friends
Who owns these six is lion of kings.

382. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
ஏஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

Courage, giving, knowledge and zeal
Are four failless features royal.

383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.

Alertness, learning bravery
Are adjuncts three of monarchy.

384. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

A brave noble king refrains from vice
Full of virtue and enterprise.

385. இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

The able king gets, stores and guards
And spends them for people's safeguards.

386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

That land prospers where the king is
Easy to see, not harsh of words.

387. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

The world commends and acts his phrase
Who sweetly speaks and gives with grace.

388. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

He is the Lord of men who does
Sound justice and saves his race.

389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

Under his shelter thrives the world
Who bears remarks bitter and bold.

390. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

He is the Light of Kings who has
Bounty, justice, care and grace.
சுமார் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ..,அரசன் தான் கடவுள் என மக்கள் எண்ணி வாழ்ந்த காலத்தில் ,இயற்றிய குறள் சொன்ன ஏதேனும் ஒரு தகுதியாவது நம் நிகழ்கால தலைவர்களுக்கு("தலீவா!")இருக்கின்றதா?


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

said...

என்னங்க இது ச்சின்ன புள்ளையாட்டம்? நல்லாக் கவனிச்சுப் பாருங்க. இதுவும் ஒரு முடியாட்சிதான். அதான்
அதை ஒழிச்சுட்டொமேன்னு சொன்னீங்கன்னா, நீங்க அதைச் சரியாப் புரிஞ்சுக்கலை. மன்னர்குடும்பம் மட்டுமே
வரணும்ன்னு இருக்கறதைத்தான் ஒழிச்சோம். அவுங்களைத்தவிர யாரு வேணுமுன்னாலும் பரம்பரை அரசியல்
பண்ணலாமுன்னு ஒரு எழுதப்படாத சட்டம் கொண்டுவந்துட்டோம். எல்லோரும் இந்நாட்டு மன்னர்!

இல்லேன்னா, ஒரு அரசியல்வாதி இறந்துட்டாருன்னா, உடனே அவர் மகனைப் பார்த்து நீங்கதான் கட்டாயம் அரசியலுக்கு
வந்து அவர் சேர்த்துவச்சதை ( சொத்து?) கட்டி காப்பாத்தணுமுன்னு கெஞ்சுவாங்களா? லோக்கல் அரசியலுக்கும்
இதுதான், மத்திய அரசியலுக்கும் இதுதான். இங்கெ ஒண்ணு அங்கெ ஒண்ணு பேசமாட்டொம்லெ.

எல்லாக்கூத்தையும் பார்த்துக்கிட்டுத்தாமுல்லெ இருக்கொம்.

said...

தமிழி பாலா!

தப்பு தாங்க, தெரியாம என் பதிவுல ஒரு வரி சமஸ்கிரதம் எழுத்திட்டேன். அதுக்காக இப்படி வையாதிங்க.

ஒரு நியாயம் தர்மம் இல்லயா? பிஸினஸ் பண்ண வந்தவன் கிட்ட இத்தனை மேட்டர் எதிர்ப்பார்பது! அய்யோ அய்யோ! இவங்க எப்பயுமே இப்படித்தான்!

Jokes apart!

இவ்வளவு மேட்டர் இல்லனாலும் விடுங்க!

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

இது ஒன்னு மட்டும் இருந்தாலே நாம வல்லரசா மாறி நாம செழிப்பாயிருப்போமே!!!

இவங்க இதை தப்ப நெனச்சுட்டாங்கலோ! இயற்றுதல் - புது வரி போட்டுவது, ஈட்டுதல் - மக்கள் கிட்டயிருந்து சுருட்டிகினு போறது, காத்தல் - அவங்க அவங்க முடிஞ்சாமாதிரி எடுத்துகிட்டு போயி அவங்க வீட்டுல safeவா வைக்கறது, காத்த வகுத்தல் - சுருட்டின பணத்தை தன் மக்கள்(வாரிசுகளுக்கு!) வளர்ச்சிக்கு வழி அமைத்துக்கொடுப்பது.

வள்ளுவர் சாரு ஒழுங்க ஐந்தாவது கூடாத அரசியல்வாதிகளுக்கு பிரியறா மாதிரி எழுதியிருந்த ஒன்னு ரெண்டாவது ஃபாலோ பண்ணுவாங்க!! தம்பி தமிழி பாலா கரெக்ட் மீனிங் உள்ள மாதிரி ஒரு தெளிவுரை எழுதுங்க!

நன்றி!

CT said...

"....ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்."
I think people have accepted this , they are not forced to ...Because we are living in a democrtaic country.

"இதுக்கு என்ன தான் முடிவு?"
We need leaders who can sell them to the people through their unselfish vision for the country rather then selling all the free stuff with punch dialogue.

said...

What your friends father told, Director Bhagayaraj said the same thing in the public meeting.

said...

//நான் வாயடச்சதுக்கு Reason அவர் தந்த அரசியலும், வியாபாரமும் ஒன்று என்ற விசயம், // ஜெய், இதை இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டுமா என்ன? எனில், தன் அப்பா அரசியல் வாதியாக இருப்பதாலேயோ இந்த ஜனநாயகத்தில் ஒருவருக்கு அரசியல்வாதி ஆக தகுதி இல்லையா என்ன? அப்படி வருபவர் சரியில்லை எனில் தேர்தலில் சொல்லுங்கள் உங்கள் முடிவை. அதை விட்டு விட்டு அரசியல்வாதி மகன் அரசியலுக்கு வருவதே தவறு என்று சொல்வது சரியல்ல என்று நான் நினைக்கிறேன்.

said...

அருள்,

ஒரு அரசியல்வாதியின் மகன் அரசியலுக்கு வருவது மேட்டர் அல்ல அவன் வந்ததும் அரியனை ஏறுவதும்.
இந்தியாவில் நடப்பது முடியாட்சியா? மக்களாட்சியா? அரசியல் ஆர்வம் உள்ளவன், தன் மக்கள் தொண்டுகளால் மக்களை கவர்ந்து, மக்கள் அரியனையில் ஏற்றவேண்டும் என்பதே மக்களாட்சியின் முக்கியமான கோட்பாடு. இதை அரசியல்வாதியும் மறந்துவிட்டான், மக்களாகிய நாமும் மறந்துவிட்டோம். When we compromise they take it as advantage!!!

said...

வேற என்ன செய்ய சொல்லறீங்க... அரசியல்வாதி மகனா பொறந்ததுக்காக அரசியலுக்கு வரக்கூடாது அப்படின்னு சொன்னா என்ன அர்த்தம்...

இந்திராகாந்தி மகனா பொறந்த ஒரே காரணத்துக்காக ராஜீவ்காந்தி வேண்டாம் என்று சொல்லி இருந்தால் உலகமே வியந்த ஒரு தலைவர் கிடைத்திருப்பாரா...

இன்று தகவல் தொழில்நுட்பத்தில் சக்கைபோடு போடும் இந்த முன்னேற்றத்துக்கு ராஜீவ் தானே காரணம்...

இன்று சென்னையில் பல மேம்பாலங்களை கட்டிய ஸ்டாலின், மேயராக இருந்து சிறப்பாக செயல்பட்டார்...ஆனால் கருணாநிதி மகன் என்பதற்க்காக அவரை வேண்டாம் என்று சொல்லவேண்டாமே..

ஊழல் செய்யும் அரசியல்வாதி கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்..ஆனால் வாரிசு என்பதற்க்காக வாய்ப்பே இல்லை என்பது ஓவரா தெரியலியா

said...

செந்தழல் ரவி வாங்க, மறுமொழிக்கும் நன்றி. இதே போன்ற கருத்தை தான் அருளும் கூறியிருந்தார், அதற்கு நான் பதில் கூறியுள்ளேன் பார்க்கவும்.

//அரசியல்வாதி மகனா பொறந்ததுக்காக அரசியலுக்கு வரக்கூடாது அப்படின்னு சொன்னா என்ன அர்த்தம்...//

ரவி நான் எப்பங்க அப்படி சொன்னேன், என் கருத்து Direct Entry to Ministership/ cheifministership/primeministership தான் தவறு என்றேன். அவன் அரசியலுக்கும் வரட்டும், மக்கள் சேவையும் செய்யட்டும், மக்களால் அடையாளம் காட்டப்படவேண்டும், தன் தந்தையால் அல்ல என்பதும், அரசியல் ஒரு பிஸினஸ் அல்ல அது ஒரு மக்கள் சேவை இயக்கம் என்பதுமே என் கருத்து!!!

said...

வாரிசு அரசியலுக்கு ஜே என்று சென்ற ஆண்டில் நான் எழுதிய ஒரு பதிவு இங்கே http://kuzhali.blogspot.com/2005/09/blog-post_11.html

said...

வாங்க குழலி சார்,

முதல் முறையா ஒரு மறுமொழி தந்திருக்கீங்க, இதை ஒரு அவார்டு மாதிரி பார்க்கிறேன் :)

உங்கள் பதிவிலிருந்து சுட்டது இங்கு மக்களாட்சியின் மன்னர்களான மக்களின் பார்வைக்கு...

//*ஸ்டாலின் அரசியல் பிரவேசம், வாரிசு அரசியல் என இந்தியா டுடே கணக்கிலெடுக்கவில்லை*//

நானும் இதை ஆமோதிக்கிறேன். கட்சி பணியில் தன் 30 வருடங்களை சமர்பித்திருக்கிறார். அவர் அரியனை ஏறினாலும் தவறில்லை என்பது என் கருத்து!

//* தலைவனுக்காக கொள்கை என்பதை கைவிட்டு கொள்கைக்காக தலைவன் என்ற நிலை வரும்போது தான்(நானும் விதிவிலக்கல்ல) இந்த மன்னராட்சி மனோபாவமும் வாரிசு அரசியலும் முடிவுக்கு வரும் *//

இதைத்தான் நானும் வழிமொழிய ஆசைப்பட்டேன்! நானும் விதிவிலக்கல்ல என்று சொல்லி தவறை உணர்ந்தாலும் தடுமாறி நிர்க்கும் உங்கள் உள்ளுணர்வு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ;)

நன்றி குழலி.

said...

//அரசியல்வாதி மகன் அரசியலுக்கு வருவதே தவறு என்று சொல்வது சரியல்ல என்று நான் நினைக்கிறேன்.
//

அருள், அரசியல்வாதி மகன் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை தான். ஆனால், ஸ்டாலினுக்கும் தயாநிதி மாறனுக்கும் வித்தியாசம் இருக்கிறதே. ஸ்டாலின் திட்டம் போட்டு கொண்டுவரப்பட்டவர் தான். ஆனால், atleast அவராவது 35 வருடமாக இயக்கத்தில் இருக்கிறார். தயாநிதி மாறன்?

said...

சரியாக சொன்னீர்கள் திரு.சீனு. அதுவே என் வாதமும் கூட!!! மறுமொழிக்கு நன்றி சீனு.

said...

//*ஸ்டாலின் அரசியல் பிரவேசம், வாரிசு அரசியல் என இந்தியா டுடே கணக்கிலெடுக்கவில்லை*//

/*********************************
நானும் இதை ஆமோதிக்கிறேன். கட்சி பணியில் தன் 30 வருடங்களை சமர்பித்திருக்கிறார். அவர் அரியனை ஏறினாலும் தவறில்லை என்பது என் கருத்து!
*********************************/

30 வருடங்களை சமர்பித்திருக்கிறார் சரி, 30 வருடங்களை தி.மு.க வில் சமர்ப்பித்தவர்களில் ஸ்டாலின் தான் சிறந்தவரா . . . ?

ஸ்டாலினுக்கு முன்னும் பின்னும் திறமையானவர்கள் யாருமே, தி.மு.க வில் சேரவில்லையா. . .?

said...

/*****************************
ஸ்டாலின் திட்டம் போட்டு கொண்டுவரப்பட்டவர் தான்.
*****************************/

கலைஞர் யோசித்த அளவுக்கு முரசொலி மாறன் யோசிக்க வில்லை அவ்வளவு தான் வித்தியாசம்.

கலைஞரின் புத்திசாலித்தனம், அரசியலில் காய் நகர்த்தும் திறமை யாருக்கும் வராது. ஸ்டாலின் தி.மு.க வில் முன்னிறுத்தப்படுவது, ஒரு திட்டமிட்ட செயல்.