வீடியோ - உயிர் போவதை பார்த்ததுண்டா!!!

நீங்க யாராவது வீடியோவில் ஒருவர் இறப்பதை பார்த்ததுண்டா? இங்கே பாருங்க இந்த இந்த வீடியோவில்!நொடிப்பொழுதில் அனைவரின் கண்முன்னே ... ஒரு மன்நிலை சரியில்லாதவன் புகைவண்டியின் மேலேறி அதன் மேல் உள்ள மின்கம்பியை பிடித்த கொடுமை :(

ஒரு நண்பர் எனக்கு அனுப்பியது ...

ஓ.சியில் சிங்கப்பூர் செல்ல வழி!

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

Feel Good

இன்றைக்கு பதிவுலகுக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றனர் மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றனர்.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.

இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.

பதிவுலகில் எழுதும் பலரும் மிகவும் சிறப்பான படைப்புகளைத் தருகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகளை பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம். அத்தகைய நல்ல வாய்ப்புகளை சிங்கைப் பதிவர்களும், தமிழ்வெளி இணையதளமும் ஏற்படுத்திக் கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றனர்.

மணற்கேணி 2009

கிணறு வேண்டும் என எண்ணிய பிறகு வெறும் மணல் தான், ஆழமாக தோண்ட தோண்ட அதனுள் நீர் இருப்பதும், சுரப்பதும் நமக்குத் தெரியவருகிறது. நம் எழுத்துக்கள் வெறும் எண்ணங்களாலும், நடப்புகளாலும் எழுதப்படுவதைவிட ஒரு குறிக்கோள் அதாவது ஒரு தலைப்பின் கீழ் எண்ணங்களைக் குவித்து தகவல்களைத் திரட்டி சிறப்பான ஆக்கமாக மாற்றும் போது அது ஒரு படைப்பாகப் போற்றப்படும். பதிவர்களை ஊக்குவித்து, பரிசளித்து, பதிவர்களை மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல, சிங்கைப் பதிவர்கள் எடுக்கும் சிறு முயற்சியின் முதல் வித்து மணற்கேணி - 2009.

இந்த ஆண்டுக்கான மணற்கேணி - 2009 போட்டி சூலை 01, 2009 துவங்குகிறது. பதிவர்கள் தங்கள் கருத்தாக்கங்களை போட்டிப் பிரிவுகளுக்கான மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஆகச்டு 15, 2009 23:59:59 (தமிழக நேரம்)க்குள் அனுப்ப வேண்டும். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பதிவு வைத்திருப்பது கட்டாயம் இல்லை என்றாலும் இட்டீடு(விவாதம்) வேண்டி பதிவிடுவதை ஊக்குவிக்க விரும்புகிறோம். இயன்ற வரை தனித்தமிழில் ஆக்கங்களைத் தர முயலுங்கள். முனைப்பிற்கான முயற்சி இது. போட்டி ஆரம்பமாகும் தினத்திற்கு முன்போ அல்லது போட்டி கடைசி தினத்திற்கு பின்போ வரும் கருத்தாய்வுகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ள இயலாது, போட்டிக்கு அனுப்பும் கடைசி நாள் வரை போட்டி கருத்தாய்வு வலைப்பதிவுகளிலே அல்லது எந்த விதத்திலும் எங்கேயும் வெளியாகியிருக்க கூடாது, போட்டி விதிமுறைகள் சூலை 01,2009 அன்று வெளியிடப்படும்...

கருத்தாய்வு போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது, ஒவ்வொரு பிரிவிலும் பல தலைப்புகளின் கீழ் நடைபெறுகிறது, இது தொடர்பான விவரங்களை போட்டி தலைப்புகள் என்ற சுட்டியின் கீழ் காணலாம். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒருவர் என மொத்தம் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்து ஒரு கிழமை(வாரம்) தங்கி சுற்றுபயணம் செய்யலாம்

இணைப்பு தர

மணற்கேணி 2009 பற்றிய விளம்பரத்தை உங்கள் தளங்களில் இட்டு இம்முயற்சியை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்

யாரு கிட்டா டுபாக்கூர் விடறீங்க??

இலங்கை ராணுவம் புலிகள் எல்லோரையும் கொண்ணுப்புட்டோம் என்று சொல்லிட்டு... காலையில் வெளியிட்ட போட்டோக்களை பார்த்தா பயங்கர டவுட் வருது!!!

முதல் படம் சார்ல்ஸ் ஆண்டனியுடையது :இவங்க எல்லாம் யாரு???மரணப்பட்டு கிடக்கும் அநத நபர் போட்டிருக்கும் சொக்காவும் இவர் சொக்காவும் ஒன்று... போட்டோ எடுத்துட்டு போட்டு தள்ளிட்டாங்களா??

LTTE LeaderPrabhakaran Killed And Body Found

நான் பார்த்த வரை சில வித்தியாசங்கள் தெரியுது:

1. இறந்து கிடக்கும் மனிதரின் மீசை மிகவும் அடர்த்தியாக இருக்கு... ஆனால் சார்ல்ஸ்க்கு அப்படி இல்லை... 24 வயதுக்கான இள மீசை மட்டுமே!!!

2. புருவம் வில்லு மாதிரி பெருசா கடைசிவரை இருக்கு ஆனா முதல் போட்டோவில் அப்படி இல்லை!!

3. சார்ல்ஸ்க்கு காது விரிந்த காதுகளா இருக்கு, இறந்தவருக்கு அப்படி இல்லை என்றே தோன்றுகிறது...

இப்படி பல வித்தியாசங்கள் இருக்கு... ஒரு வேளை இலங்கை ராணுவம் நம்ம கிட்ட 10 வித்தியாசம் கண்டுபிடிக்க போட்டி நடத்தறாங்களா??

பின் சேர்ப்பு:

என் சந்தேகத்திற்கான முக்கிய காரணம், இதோடு குறைந்தபட்சம் 100 முறையாவது பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது...

காலையில் சார்ல்ஸ் பிணம் அனாதையா கிடந்தது என்று ஆர்மி சொன்னது, பின்னர் நடேசன், ரமேஷ் மாஸ்டர் பிணங்களுடன் கிடைத்ததுன்னு சொன்னாங்க, அப்புறம், ஆம்புலன்ஸ்ல தப்பிக்க பார்த்த போது இவரையும் பிரபாகரனை கொன்றதா சொல்லறாங்க... அப்படியே வச்சுகிட்டாலும் ரெண்டுபேர் பாடியும் ஒன்னா தானே கிடக்கனும்... சார்ல்ஸ் பாடி மட்டும் தனியா ஒடி வந்துவிட்டதா.....

பி.கு:

சார்ல்ஸ் மாதிரி ஆள் கிடைத்ததால் போட்டோ போட்டுட்டீங்க... என்ன ராஜாக்களா... பிரபாகரன், நடேசன், பொட்டுஅம்மான் மாதிரி ஆட்கள் யாராவது இருக்கானான்னு தேடிக்கிட்டு இருக்கீங்களா போட்டோ போட... இல்ல ஆள் கிடைக்கலையா???

நன்றி : கமெடி செய்திகள் தரும் ஆமி.லங்கா

நடிகர் விஜய் புது கட்சி :(

நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு வருங்கால முதல்வரும் கிடைச்சுட்டாருடே!!! நடிகர் விஜய் கட்சி துவங்க போகிறாராம் :(


வருகிற ஜூன் 22ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் இதற்கான அறிவிப்பு வருமாம்... இந்த கொடுமைய எங்க போய் சொல்ல???!!!

இருக்கறது ஒரு முதல்வர் சீட்டு அதுக்கு எத்தினி ஆளுங்க கெளம்பிட்டாங்க!!!

1. விஜயகாந்த்
2. சரத்குமார்
3. விஜய்

Where to go and tell this story :))))) (டமில்லா மாத்திக்கங்கப்பா!!)

நன்றி : தெனாலி.காம்

விரிவான செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

கண்ணிருந்தும் குருடராயிருப்பவர்களுக்கு!

ஈழம் - வன்னி போர்முனையிலிருந்து நேற்றைய வீடியோக்கள்! இதுவா கொத்துகுண்டுகள், ரசாயன ஆயுதங்கள் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என்று சொன்னதுக்கு அர்த்தம்??!!

பி.கு:
இத்தகைய ஒரு வாக்குறுதியை இலங்கை அரசிடம் இருந்து பெருவதே குதிரைக்கொம்பாக இருந்தது. இனி வாக்குறுதியை மீறும் பட்சத்தில் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதே ராணுவநடவடிக்கையை கோரமுடியும் என்று யாரோ ஒருத்தர் சொன்னாருபா நேற்று!

பிரணாப் முகர்ஜி ஒத்துக்கிட்ட்ராருடே!


பிரணாப் முகர்ஜி இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதாக ஒத்துக்கிட்டாரு டே!! இப்ப என்ன செய்யலாம் நம்ம...உங்க கருத்து என்ன?

வீடியோ தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து பார்க்கவும்...

பி.கு: இலங்கை எல்லாம் உங்களுக்கு நட்பு நாடா தெரியுது! ஈழத்தமிழன் மட்டும் தான் உங்களுக்கு நட்பா தெரியலையா...

ஈழத்திலிருந்து வீடியோகள்!

இதையும் பார்த்துவிடுங்கள்! இவர்களா ராஜப்க்ஷே தேடும் புலிகள்??!!!

வீடியோக்களை தந்த அண்ணன் பாலபாரதிக்கு நன்றி

கண்களில் ரத்தம் வருதடா!!

இளகிய மனம் உள்ளவர்கள் இதை பார்க்கவேண்டாம்:

இந்த சிறுபிள்ளைகள் காயப்பட்டு கிடப்பவரை காப்பாற்ற தவிப்பதிலிருந்து தெரியுது, அவர் தான் இந்த பிள்ளைகளில் கடைசி உறவாக இருக்குமென்று !!வீடியோவுக்கு நன்றி - பாலபாரதி

நான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டேன்!

தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான திரு.கருணாநிதியின் அறிக்கை:

இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23-4-2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

***********************
ஐயா, தெரியாமா தான் கேட்கிறேன், இதை யாருடைய கண் துடைக்க நடக்கிறது? எதற்காக இந்த நாடகம். இது மத்திய அரசை எதிர்த்தானால், அந்த மத்திய அரசில் நீங்கள் யார்? அதே மத்திய மந்திரிசபையில் பங்கு கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன தார்மீக பொறுப்பு இருக்கிறது இந்த பந்த் நடத்த?? தாயநிதி மாறனுக்கு ஐ.டி துறை மந்திரி பதவியும், டி.ஆர்.பாலுவுக்கு கப்பல் போக்குவரத்து துறையும் தரும் வரை நான் இந்த ஆட்சியில் பங்கெடுக்க மாட்டோம் என்று சொல்ல முடிந்த உங்களுக்கு, ஈழமக்களுக்கு ஒரு நிறந்தர தீர்வு தந்தால் ஒழிய ஆட்சியில் பங்கெடுக்க முடியாது என்று தர்ணா செய்ய முடியாமல் போனது சரியாக தோண்றுகிறதா??

பந்த், மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரதம், எம்.பிக்கள் ராஜினாமா, பேரணி என எந்தனை நாடகம் அரங்கேரியது, அதனால் என்ன நடந்தது? தமிழக மக்கள் அவதியுற்றர்களே ஒழிய, ஒரு ______ம் நடக்கவில்லை! இப்பொழுது அழைக்கப்படும் பந்தாலும் ஒன்று முடிவாகப்போவது இல்லை, தமிழக மக்கள் அவதியுறுவதை தவிர!!!

இத்தனை நாளாய் நடத்திய நாடகம் போதும்! இந்த பந்த்க்கு என் எதிர்ப்புக்கள் இங்கு பதிவு செய்யப்படுகிறது!

பி.கு:

இதற்கு முன்பே இது போன்ற பந்த் அரசு பொறுப்பிலிருந்து அறிவித்ததற்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல்வர் என்ன எதிர்ப்பார்த்து இந்த பந்த் எனற சங்கதியை முழங்குகிறார் என்பது சந்தேகத்திற்கு உரியது! அனேகமாக அவர் தன் அரசை நீதிமன்றம் கண்டித்தாலும் பதவியை பொருட்படுத்தாமல் பந்த் நடத்தினோம் ஈழத்தமிழர்களுக்காக என்று எடுத்துக்காட்ட செய்கிறார் என்றால், அது காலம் கடந்த காமெடியே என்பதை அறியாமல் செய்கிறார் என்றே சொல்லமுடியும்.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!

நேற்றைய பல்டிக்கு பின் தானே கேள்வி தானே பதில் பேட்டி ஒன்றை தந்தார் முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள், அதில் இப்படி ஒரு கேள்வியும் பதிலும் இருந்தது!

//கே: பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதா?

ப: இது ஜெயலலிதாவை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் ஜெயலலிதாவின் அடிவருடி களாக மாறி அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.//

சரி ஏன் அந்த கேள்வியை ஜெவிடம் மட்டும் கேட்க வேண்டும், நேற்று அப்ஷேக் மானு சிங்வி - காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஜெ சொன்னதையே தான் சொல்கிறார் இங்கே சொடுக்கவும் , வீடியோ இங்கே ... இன்னும் சொல்லப்போனால் ஜெ சொல்வதை கூட பெரிய விசயமாக எடுக்கத் தேவை இல்லை! ஏன் என்றால் அவர் தேசிய ஆட்சி பொறுப்புக்கு வர போவதில்லை! காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி , இந்தியாவின் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய கட்சி என்னும் போது அது சொல்வதே முக்கிய விவாதமாக எடுத்திருக்க வேண்டும் திரு. கருணாநிதி!!


//
அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் ஜெயலலிதாவின் அடிவருடி களாக மாறி அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.//அட இதையே தான் காங்கிரஸும் சொல்லுது! அப்போ இவரும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இவரும் காங்கிரஸ் அடிவருடியாக மாறி அவர்களுடம் கூட்டணி சேர்ந்துள்ளாரா??


ஆக எல்லாரும் சேர்த்து நம்மை எமாத்துறாங்களா??!! யாரு சரி ?? யாரு தவறு??? சாமீ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் !!!

திருமங்கலம் லேட்டஸ்ட் முடிவுகள்! தி.மு.க 41,341 முன்னிலை!!

திருமங்கலம் லேட்டஸ்ட் முடிவுகள்!

நேற்று நாம் சொன்னதில் ஒன்று அனேகமாக நடந்துவிட்டது!

தி.மு.க - 78,106
அ.தி.மு.க - 36,765
வித்தியாசம் - 41,341

அடுத்த விசயங்கள் விரைவில் தொடரும்... மேலும் விவரங்களுக்கு என் நேற்றைய பதிவை பார்க்கவும்.

மறக்காமல் வலது பக்கம் உள்ள வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் :)

திருமங்கலம் முடிவும் மாறும் கூட்டணிகளும்

நாளைய திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் என்ன நடக்கலாம் என்ற சிறு அலசலே இந்த பதிவு. திருமங்கலம் தொகுதி வர இருக்கு பாராளமன்ற தேர்தலுக்கு ஒரு வெள்ளோட்டமாக கருதப்படுகிறது! இங்கு விழும் ஓட்டுக்களை வைத்து மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் என்ற ஒரு மாயாயை உருவாக்க முடியும், அதனால் ஜெயிக்கும் கட்சிக்கு கண்டிப்பாக சில சதவீத ஆதரவு பெருகும் என்பது ஒரு கருத்து! அதனால் எப்படியும் ஜெயிப்பது என்று இரண்டு கழகங்களும் கச்சை கட்டி இறங்கி இருக்கிறது!

எனக்கு தெரிந்தவர்களிடமிருந்து தகவல் படி இறக்கப்பட்ட காசுக்கு கண்டிப்பா தி.மு.க தான் ஜெயிக்கும், அது நிச்சயம்! ஒரு ஆளுக்கு 5 - 6 ஆயிரம் வரை காசு கொடுத்திருக்கிறார்கள் ஓட்டுக்காக என்ற நிலையில் கண்டிப்பா அதிகம் கொடுத்தவருக்கே ஓட்டு என்ற லாஜிக்ல் பார்த்தால் நிச்சயம் அது தி.மு.கவுக்கு தான் அதிக ஓட்டு கிடைக்க வழி உள்ளது! இத்துணை கோடி செலவு செய்து எதற்காக இந்த ஓட்டு பிச்சை என்றது எனக்கு தோன்று சில விசயங்கள். பாவம் அ.தி.மு.க குறைவான காசு + தி.மு.க ஆட்சிக்கு எதிர்ப்பு ஓட்டுக்களை மட்டும் வைத்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டது என்றே தோன்றுகிறது! 25% வெளியூரில் வேலை செய்யும் மக்கள் கொண்ட ஒரு தொகுதியான திருமங்கலம் 89% ஓட்டுகள் விழும் அளவுக்கு காசுக்காக வந்து ஒரு பெரிய ஜனநாயக புரட்சியை செய்ய வைத்திருக்கிறது தி.மு.க மற்றும் அ.தி.மு.க என்று நினைக்கும் போது! ஜனநாயத்தின் மேல் எனக்குள்ள நம்பிக்கை குழி தோண்டி புதைந்தது போன்று தோன்றுகிறது! அது வேறு விசயம்.


தி.மு.க ஜெயித்தால் இவை எல்லாம் கண்டிப்பாக நடக்கும்:

1. தி.மு.க தன் பாராளமன்ற கூட்டணியை மெதுவாக பா.ஜ.கவிடம் சாயப்பார்க்கிறது என்று தோன்றுகிறது! ஏன்னா டாக்டர் ராமதாஸை நக்கல் அடிக்கு அதே தி.மு.கவும் அதே ஜெயிக்கும் கட்சிக்கு தாவுதல் என்ற கோட்ப்பாட்டை தான் இதுவரையும் செய்துள்ளது. உதாரனத்துக்கு இதற்கு முன்பு தி.மு.க - பா.ஜ.கவுடன் கூட்டணி இருந்தது! ஐந்து வருடங்கள் சரியாக முடியும் போது, திரும்ப பா.ஜ.க வருவது கடினம் என்று தெரிந்ததும், பெரிய காரணம் ஒன்றும் சொல்லாமல் நைசாக காங்கிரஸ் பக்கம் தாவியது அனைவருக்கும் தெரிந்ததே! இப்பொழுது எனக்கு தெரிந்து காங்கிரஸ் போனமுறைக்கு வந்த அளவுக்கு கூட வர வாய்ப்பு இல்லை, அதனால் இந்த முறை கண்டிப்பா பா.ஜ.கவிடம் ஆட்சி அகப்படலாம். அதனால் மு.க தன் பங்குக்கு காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்.

2. இப்படி சாயும் போது மக்கள் மீண்டும் தாவிட்டார் என்று நினைக்க கூடாது என்ற நோக்கில் மீண்டும் ஈழம் மக்களில் பிரச்சனையை கவனிக்காதா மத்திய காங்கிரஸ் அரசு, தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு உதவுவது ஏதோ நேற்று தான் தெரிந்தது போல அறிக்கை வெளியிடப்படும். காங்கிரஸ் தி.மு.கவால் கண்டிக்கப்படும். சில அறிக்கை போருக்கு பின் வழக்கம் போல மு.க தான் காங்கிரஸுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவார்.

3. கடந்த 2 வருடங்களாக ஈழத்த்தை ஒரு பெரிய பிரச்சனையாக பார்க்காத தி.மு.கவும், மு.கவும் தீடீர் பாசம் பொங்கி படங்கள் காட்டப்படும். மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையில் உண்ணாவிரதம், மனித சங்கிலி என பல போராட்டங்கள் நடக்கும்.

4. பா.ஜ.க சில நாட்களுக்கு முன் தன் பங்கிற்கு காய்களை நகர்த்த துவங்கிவிட்டது! இல கணேசன் ஏதோ அவருக்கு ஈழத்தமிழர் கஷ்டப்படுவது நேற்று தான் தெரிந்தது போல அறிக்கையும், பா.ஜ.க தன் கட்சியில் கூட்டம் போட்டு ஈழப்போராட்டத்துக்கு ஆதரவு என்று ஒரு முடிவு போட்டுள்ளது!

5. பா.ஜ.க அந்த நிலையை விடாது பிடித்துக்கொண்டு, தி.மு.க போராட்டங்களுக்கு ஆதரவு தரும், பின்னர் பாராளமன்ற தேர்தலுக்கு கூட்டணி பேசப்படும்.

6. ராமதாஸும் மெதுவாக ஈழம் ஆதரவு காரணமாக நாங்களும் தி.மு.க மற்றும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஈழ மக்களை காப்பாற்ற போகிறோம் என்று சூழுரைக்கப் போகிறார்.

7. ம.தி.மு.கவுக்கு நூல்விடப்படும், வை.கோவும் அந்த கூட்டணிக்கு தாவுவதற்கு நல்ல வாய்ப்புக்கள் இருக்கிறது! ஈழம் மேட்டர் ஒன்றே போதுமானது!

8. தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் + சன் டிவி என்று ஒரு பலம்வாய்ந்த கூட்டணியை காட்டப் போகிறார்கள். அந்த் பலத்தை வைத்து தி.மு.க தன் மாநில ஆட்சியையும் காங்கிரஸ் ஆதரவு இல்லாம தக்கவைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.

9. அடிபட்ட காங்கிரஸ் அ.தி.மு.க மற்றும் விசயகாந்தின் தே.மு.தி.கவை கூட்டணிக்கு முயற்சிக்கும், சில தகவல்கள் படி காங்கிரஸ் ஏற்கனவே தே.மு.தி.கவுக்கு வலை விரித்து இருப்பாதாக சேதி! விஜயகாந்த் எந்த பக்கமும் சாயாமல் இருப்பார அல்லது மெதுவாக பாராளமன்றம் என்பது ஒரு தேசிய நீரோட்ட்டம் அதற்கு ஒரு தேசிய கட்சி தேவை என்ற வகையில் காங்கிரஸுக்கு தலையாட்டுவாரோ தெரியவில்லை! ஆனால் அதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். அப்படி ஒரு நிலை வந்தால் காங்கிரஸ் - தே.மு.தி.க மற்று சில துக்கடா கட்சிகளும் இணைந்து ஒரு பலமான மூன்றாம் அணியாக காட்ட முயற்சிக்கலாம்.

10. அ.தி.மு.க வேறு வழியில்லாம் கம்யூனிஸ்டுகள் மற்றும் வாண்டையார் போன்ற ஒரு சில ஆயிரம் ஓட்டுகள் உள்ள கட்சிகளை வைத்துக் கொண்டு, தி.மு.க மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்களை நம்பி ஒரு அணியாக முயற்சி நடக்கலாம். ஒரு வேளை திருமங்கலம் வெற்றி பெற்றால் அந்த வெற்றியும் மக்கள் ஆதரவு சீன் போட ஒரு நல்ல மேட்டராக இருக்கும் ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு!

வரும் நாட்களில் இவைகள் அனைத்து நடக்க வாய்ப்புக்கள் அதிம் என்றே தோண்றுகிறது!

பி.கு: மறக்காமல் வலது பக்கம் உள்ள வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் :)