யாரு கிட்டா டுபாக்கூர் விடறீங்க??

இலங்கை ராணுவம் புலிகள் எல்லோரையும் கொண்ணுப்புட்டோம் என்று சொல்லிட்டு... காலையில் வெளியிட்ட போட்டோக்களை பார்த்தா பயங்கர டவுட் வருது!!!

முதல் படம் சார்ல்ஸ் ஆண்டனியுடையது :இவங்க எல்லாம் யாரு???மரணப்பட்டு கிடக்கும் அநத நபர் போட்டிருக்கும் சொக்காவும் இவர் சொக்காவும் ஒன்று... போட்டோ எடுத்துட்டு போட்டு தள்ளிட்டாங்களா??

LTTE LeaderPrabhakaran Killed And Body Found

நான் பார்த்த வரை சில வித்தியாசங்கள் தெரியுது:

1. இறந்து கிடக்கும் மனிதரின் மீசை மிகவும் அடர்த்தியாக இருக்கு... ஆனால் சார்ல்ஸ்க்கு அப்படி இல்லை... 24 வயதுக்கான இள மீசை மட்டுமே!!!

2. புருவம் வில்லு மாதிரி பெருசா கடைசிவரை இருக்கு ஆனா முதல் போட்டோவில் அப்படி இல்லை!!

3. சார்ல்ஸ்க்கு காது விரிந்த காதுகளா இருக்கு, இறந்தவருக்கு அப்படி இல்லை என்றே தோன்றுகிறது...

இப்படி பல வித்தியாசங்கள் இருக்கு... ஒரு வேளை இலங்கை ராணுவம் நம்ம கிட்ட 10 வித்தியாசம் கண்டுபிடிக்க போட்டி நடத்தறாங்களா??

பின் சேர்ப்பு:

என் சந்தேகத்திற்கான முக்கிய காரணம், இதோடு குறைந்தபட்சம் 100 முறையாவது பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது...

காலையில் சார்ல்ஸ் பிணம் அனாதையா கிடந்தது என்று ஆர்மி சொன்னது, பின்னர் நடேசன், ரமேஷ் மாஸ்டர் பிணங்களுடன் கிடைத்ததுன்னு சொன்னாங்க, அப்புறம், ஆம்புலன்ஸ்ல தப்பிக்க பார்த்த போது இவரையும் பிரபாகரனை கொன்றதா சொல்லறாங்க... அப்படியே வச்சுகிட்டாலும் ரெண்டுபேர் பாடியும் ஒன்னா தானே கிடக்கனும்... சார்ல்ஸ் பாடி மட்டும் தனியா ஒடி வந்துவிட்டதா.....

பி.கு:

சார்ல்ஸ் மாதிரி ஆள் கிடைத்ததால் போட்டோ போட்டுட்டீங்க... என்ன ராஜாக்களா... பிரபாகரன், நடேசன், பொட்டுஅம்மான் மாதிரி ஆட்கள் யாராவது இருக்கானான்னு தேடிக்கிட்டு இருக்கீங்களா போட்டோ போட... இல்ல ஆள் கிடைக்கலையா???

நன்றி : கமெடி செய்திகள் தரும் ஆமி.லங்கா

19 comments:

said...

sariyaana santheengam
pathil solla evanukkum mudiathu

said...

அய்யொ அய்யொ
இந்தியா இலங்கை
காமெடி தர்பார் அட்டகாசம்
வடிவேலு எங்க போனாரு
அவரையும் மிஞ்சிட்டானுவ

said...

நண்பா, இனி தலைவர் உயிரோட இருந்தாலும் அரசு வென்றதாகவே சொல்லும். தலைவரும் தலை மறைவாகவே வாழ வேண்டிய கட்டாயம். தலைவிதி! முன் நடந்த விசயம் வேறு.. இப்போ நிலமை வேறு. தலைவர் உயிரோடு இருக்காராங்கிறதா இப்போதைய கவலை?

said...

ILA,

Ground Zero is not new for LTTE it will come up like anything...

Anonymous said...

நம்மை நாமே ஏமாற்றி கொள்வதில் அர்த்தமில்லை.

எனக்கு இருக்கும் சந்தேகம் இதுதான். இந்த ஒருவரைத் தவிர மற்றவர்கள் படங்கள் ஏன் வெளியிடவில்லை.?

இந்த ஐயிகிய நாடு போண்டா க்ளப் இன்று என்ன செய்கிறது ? போர் நின்று விட்டதென்றால் தமிழ்னாட்டிளிருந்தாவது சென்று உதவி செய்யலாமே ? அதற்கு கூடவா தமிழ்நாட்டு எட்டப்பங்களுக்கு மனமிலை?
-aathirai

Anonymous said...

நண்பரே!

உங்கள் ஊகம் சரியானதுதான். இறந்துகிடப்பவர் வேறொரு போராளி. ஆனால் பிரபாகரனின் மகனைச் சுட்டால்தானே சிறிலங்கா இராணுவத்துக்குப்பெருமை. அதனால்தான் இந்தப்போராளிக்கு பிரபாகரன் பிள்ளையெனும் பெயர் சூட்டல். ஆனால் இவர் பெயரும் சார்ள்ஸ் என்பது உண்மைதான்.
எந்தச் சார்ள்ஸ்சாக இருந்தாலும் இறந்தவர் போராளி. அவருக்கு எமது வீர வணக்கங்கள்.

said...

Yes, You are right.

See Image- Properties>>summary>>Advance view...for all the photos.

said...

ஒரு இயக்கத்துக்கு, அதனை வழி நடத்த தலைமை மிக முக்கியம்... இயக்கத்தின் நலனை கருதி தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு வெளியேறி இருப்பார் என்றே நினைக் கிறேன்...! போராளிகள் வீழ்வதில்லை, அவர்கள் விதைக்க படுகிறார்கள்...! மீண்டும் எழுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்போம் ...! நம்பிக்கையே வாழ்கை, அதுவரை நம் தார்மீக ஆதரவை தருவோம்...!

Anonymous said...

http://www.nerudal.com/nerudal.6277.html

Anonymous said...

முன்பொரு றோகண முப்பதாயிரம் சிங்கள உயிர்களை பலிகொண்டு சுடப்பட்டான் ---
இன்று இவர் ---
நாளை எவரும் இல்லை ---
ஓர் பாடம் படித்தோம் ---
சிண்டு முடியாதடா மூதேவி

said...

என்ன சொல்ல
நடக்கிறது கூத்து

Anonymous said...

Thank you brother.

Last few days very upset. Now better after read your blog.

mm.. people are dying.. we can only cry.


- Kiri kamal

Anonymous said...

பிரபாகரன் பாதுகாப்பாக இருக்கிறார்

Watch This Link:

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14502&lang=ta&Itemid=57

Anonymous said...

ஜெய் எப்போவிலிருந்து புலி ஆதரவாளர் ஆனிங்க

said...

அண்ணா! ரொம்ப நல்லாவே எல்லாக் கட்டுரைகளும் இருக்கு. இன்றைக்கு தான் பார்த்தேன் உங்களை. எங்களுக்கு உங்களை மாதிரி இருக்கும் தாய்த் தமிழ் உறவுகள் தான் இப்ப ஆறுதல். எங்களாலை வவுனியா போய் உறவுகளை பார்ர்க்க முடியவில்லை. தூக்கிடுவாங்கள். இன்னும் புது மாத்தலனிளையும், வெள்ளமுள்ளி வாய்க்காலிலும், ஓமந்தையிலும் எத்தனையோ மக்கள் செத்து கொண்டு இருக்கினம், காயத்துக்கு மருந்து போட மருந்து இல்லை, ஆள் இல்லை, தண்ணீர் இல்லை, உணவு இல்லை, உடை இல்லை, உறைவிடம் இல்லை, உறவு இல்லை, இழவு வீடு கொண்டாட கூட இல்லை. துப்பாக்கி முனையில சொல்லுறதை செய்யுறாங்கள், இல்லை சாகிறாங்கள். மூன்றாம் தரப்பா யாரவது வந்தாலும் கடத்திடுறாங்கள். எங்கள் தமிழகத்து உறவுகள் 2 கோடி சேது சமுத்திரத்தில் இறங்கினால், இலங்கையின் மொத்த சனத்தொகையே ஆடிப் போயிடும், எங்கே உங்களின் தாய்க் கரம்? தவிக்கிறோம் நாங்கள். செயலில் எங்களை எப்போது வந்தடைவீங்கள்?

said...

//ஜெய் எப்போவிலிருந்து புலி ஆதரவாளர் ஆனிங்க//

அனானி இதுக்கு பெயர் தான் புலி ஆதரவா?? சாரிங்க தெரியாம எழுதிட்டேன்... சந்தோஷமா...

Anonymous said...

see this link... is this true? idhu unmaiyaha iruka koodadhu

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=14165

Anonymous said...

அண்ணா! ரொம்ப நல்லாவே எல்லாக் கட்டுரைகளும் இருக்கு. இன்றைக்கு தான் பார்த்தேன் உங்களை. எங்களுக்கு உங்களை மாதிரி இருக்கும் தாய்த் தமிழ் உறவுகள் தான் இப்ப ஆறுதல். எங்களாலை வவுனியா போய் உறவுகளை பார்ர்க்க முடியவில்லை. தூக்கிடுவாங்கள். இன்னும் புது மாத்தலனிளையும், வெள்ளமுள்ளி வாய்க்காலிலும், ஓமந்தையிலும் எத்தனையோ மக்கள் செத்து கொண்டு இருக்கினம், காயத்துக்கு மருந்து போட மருந்து இல்லை, ஆள் இல்லை, தண்ணீர் இல்லை, உணவு இல்லை, உடை இல்லை, உறைவிடம் இல்லை, உறவு இல்லை, இழவு வீடு கொண்டாட கூட இல்லை. துப்பாக்கி முனையில சொல்லுறதை செய்யுறாங்கள், இல்லை சாகிறாங்கள். மூன்றாம் தரப்பா யாரவது வந்தாலும் கடத்திடுறாங்கள். எங்கள் தமிழகத்து உறவுகள் 2 கோடி சேது சமுத்திரத்தில் இறங்கினால், இலங்கையின் மொத்த சனத்தொகையே ஆடிப் போயிடும், எங்கே உங்களின் தாய்க் கரம்? தவிக்கிறோம் நாங்கள். செயலில் எங்களை எப்போது வந்தடைவீங்கள்?//

ஆமாம் உயிரோடு மாண்டு கொண்டிருக்கும் மக்களுக்காக எல்லோரும் ஏதாவது செய்யுங்கள்
அதுவே அவசரம் அவசியம் முக்கியம்

said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்