எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!!

நேற்றைய பல்டிக்கு பின் தானே கேள்வி தானே பதில் பேட்டி ஒன்றை தந்தார் முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள், அதில் இப்படி ஒரு கேள்வியும் பதிலும் இருந்தது!

//கே: பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதா?

ப: இது ஜெயலலிதாவை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் ஜெயலலிதாவின் அடிவருடி களாக மாறி அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.//

சரி ஏன் அந்த கேள்வியை ஜெவிடம் மட்டும் கேட்க வேண்டும், நேற்று அப்ஷேக் மானு சிங்வி - காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஜெ சொன்னதையே தான் சொல்கிறார் இங்கே சொடுக்கவும் , வீடியோ இங்கே ... இன்னும் சொல்லப்போனால் ஜெ சொல்வதை கூட பெரிய விசயமாக எடுக்கத் தேவை இல்லை! ஏன் என்றால் அவர் தேசிய ஆட்சி பொறுப்புக்கு வர போவதில்லை! காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி , இந்தியாவின் ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய கட்சி என்னும் போது அது சொல்வதே முக்கிய விவாதமாக எடுத்திருக்க வேண்டும் திரு. கருணாநிதி!!


//
அவர்தான் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து அவரை தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டவர். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிலர் ஜெயலலிதாவின் அடிவருடி களாக மாறி அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.//



அட இதையே தான் காங்கிரஸும் சொல்லுது! அப்போ இவரும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இவரும் காங்கிரஸ் அடிவருடியாக மாறி அவர்களுடம் கூட்டணி சேர்ந்துள்ளாரா??


ஆக எல்லாரும் சேர்த்து நம்மை எமாத்துறாங்களா??!! யாரு சரி ?? யாரு தவறு??? சாமீ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் !!!

Comments

ttpian said…
we are innocent:both jeya&karuna are clever&cunning in cheating usm
We The People said…
We are not innocent ttpian we are fools that's why we have been always taken for ride by all these parties and leader always :((

We have been made to grow as fools so that these leaders can survive better..
Anonymous said…
அடிவருடி
Anonymous said…
நிரந்தர போர் நிறுத்தம் கோரி 23ல் பொதுவேலைநிறுத்தம்::கலைஞர்
http://www.ponmaalai.com/2009/04/23.html