நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்த தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் என்னை கவர்ந்த விசயங்களை இங்கே பட்டியலிட விரும்புகிறேன்... வினையூக்கியும் மற்றும் ஜெயாவும் பட்டறைக்கு ஏற்பாடுகள் நடந்த முதல் நாள் மாலையும் சரி பட்டறை தினத்தன்றும் சரி அயராத உழைப்பை தங்கள் பங்கிற்கு கொடுத்தார்கள், துடிப்புடன் காலை முதல் மாலை வரை ஆர்வமாக கற்றுக்கொள்ள வந்த பார்வையாளர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த விசயம் என்னை அசர வைத்தது!!! என்ன எனர்ஜி அவருக்குக்கு! ஒரு நிமிடம் கூட சலிக்காம ஆர்வமா எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கு என் முதல் சபாஷ்! அடுத்தது விக்கி, மா.சி & பொன்ஸ்: இது தான் முதல் பட்டறை, அனுபவம் இல்லாத காரணத்தால் ஒரு குறையும் வந்துவிடக்கூடாது என்று இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறப்பான பலனை தந்தது என்பது 100% உண்மை. பல பட்டறைகள் நடந்த்திய அனுபவம் வாய்ந்தவர்கள் நடத்தியது போல சிறப்பாக கலை கட்டியது பட்டறை. இவர்கள் முயற்சியும் உழைப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்! பாலாபாய் பம்பரமா சுழன்று கொண்டேயிருந்தார், CD வாங்கிவருவது முதல் உணவு ஏற்பாடுக...
Comments