பா.க.ச உலகுக்கு அறிவித்த வினை :)

இன்றைய் இந்தியன் எக்ஸ்பிரஸின் முதல் பக்கத்திலேயே "டாப்"ல நம்ம பா.க.சவின் பெயரை வெளியிட செய்த தம்பி வினையூக்கியை வாழ்த்தியும் நன்றி தெரிவிக்கவும் இந்த பதிவு!!! பா.க.சன்னு மட்டும் சொல்லாம அதன் விரிவாக்கமான பாலபாரதியை கலாய்ப்போர் சங்கம் என்று தெளிவா அச்சிட்டு வந்திருக்கு!!!

இன்னமா வேல செய்யறாங்க நம்ம சங்கத்து சிங்கங்கள்!!! நெனச்சாலே புல்லரிக்குதுபா!!

இந்த செய்தி வெளியானதும் நம்ம பா.க.சவின் தல ஓடிவந்து வினையூக்கியை பாராட்டி சென்றார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!

உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்ன்னு களக கண்மனிகளுக்கு சொல்லிக்கிறோம்பா!!!

நன்றி

நா ஜெயசங்கர்,
பா.க.ச
தலிம களகம்,
சென்னை!!!!

களத்தில் பிரச்சனை வருவதை தவிர்க்க பின்னாடி சேர்த்தது :D ::

இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு சொன்னதில் முக்கிய பங்கு நம்ம களக கண்மனிகள் பொன்ஸ்க்கும் நம்ம சிவஞானம்ஜியுக்கும் பெரும் பங்குள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கிறது சங்கம், அதனால் பொன்ஸையும், சிவஜீயையும் சிறப்ப ஒரு பாராட்டு விழா வைத்து கொண்டாடும் முயற்சியை பொதுகுழுவும், செயற்குழுவும் சேர்ந்து முடிவு செய்யும்.

12 comments:

said...

Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

said...

அநியாயம்..!!!!

பா.க.சவின் பெயரை நாளைய வரலாற்றில் பொறிக்கும் இந்த முக்கிய வேலையில் எனக்கும், மூத்த பாகச உறுப்பினர் சிவஞானம்ஜிக்கும் சிறப்பான பங்கு இருக்கு என்பதை உலகத்துக்கு மறைத்த தலைமைக்கழகத்தின் செயலாளரை வன்மையாக கண்டிக்கிறேன்..

இதை இப்ப சொல்லலைன்னா, அ.உ.பா.க.ச தனியாக தொடங்கப் படும் என்பதை மனவருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

said...

//இதை இப்ப சொல்லலைன்னா, அ.உ.பா.க.ச தனியாக தொடங்கப் படும் என்பதை மனவருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.
//

என்னது இன்னொரு சங்கமா? அய்யோ சாமீ...

said...

பா. க. ச - வை வரலாற்றில் இடம் பெற உதவிய உள்ளங்களுக்கு நன்றி...

பா. க. ச. (புதிய உறுப்பினர்)

Anonymous said...

Balanna paavam

said...

ஹா ஹா ஹா

said...

ரொம்ப சந்தோசமா இருக்கு...

said...

அ.உ.பா.க.ச ஜிந்தாபாத்.
அ.உ.பா.க.ச ஜிந்தாபாத்.
அ.உ.பா.க.ச ஜிந்தாபாத்.

said...

நாடி, நரம்பு, மூளை, இரத்தம் எல்லாம் பா.க.ச உணர்வு ஊறிப் போயிருப்பவர்கள்தான் இந்த செய்தியைக் கொடுத்திருக்கிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக பா.க.ச தல பாலபாரதி கவலையுடன் தெரிவித்தார்.

said...

:))

//பா. க. ச. (புதிய உறுப்பினர்) //

ஜே.கே! உறுப்பினர் கார்டு, உறுப்பினர் சந்தா எல்லாம் வாங்கிட்டீங்களா?

உறுப்பினர் அட்டைல தல ரத்தத்துலயே பேரை எழுதி கொடுப்பார்.

உங்க கொள்ளுத்தாத்தாவோட கொள்ளுத்தாத்தாவிலிருந்து, உங்க தாத்தா, அப்பா அப்புறமா உங்க பேரு வர மாதிரி எழுதி கொடுக்கச் சொல்லுங்க!

said...

அ.உ.பா.க.ச வில் எப்படி பதிவு செய்து கொள்வது என்று தனி வலைத் தளம் தொடங்க இருப்பதாக குசும்பன் தெரிவித்திருக்கிறார்.

said...

THOOYAA said: BALANNA PAAVAM!

பாலான்னா பாவம் இல்லே;
அவருக்குப் பாவப்பட்டா அதுதான் பாவம்!