இந்திய குடிமகனானுமா?

நீங்க எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் பரவாயில்லை, தீவிரவாதியா இருந்தாலும் பரவாயில்லை!!!! உங்களுக்கு எங்க மண்ணின் மைந்தர்களும், அரசு இயந்திரங்களும் இந்திய குடியுரிமை வாங்கி தராங்கோ!!! அதுவும் வெறும் ரூ. 32,500/- இருந்தா போதும்!!!!

குடியுரிமைன்னா சும்மா இல்லைங்க!

1. ரேஷன் கார்டு
2. பிறப்பு சான்றிதழ்
3. PAN Card
4. Pass Port Rs 7,500/-
5. படிப்பு சான்றிதழ்
6. Voter ID Card - Rs 1,800/-

என்று எல்லா மேட்டரும் உண்டு...

அடுத்த மாசம் முதல் வேணும்னா ரேஷன் கூட வாங்கிக்கலாம்!!!

ஆள் வரவேண்டிய தேவையில்லை! சும்மா யார்கிட்டயாவது 32,500 ரூபாயை கொடுத்து அனுப்பினா போதும்! எல்லா மேட்டரும் ரெடி செய்து தர ஆள் இருக்கு! பாஸ்போர்ட்க்கு Verification கூட இல்லாம ஈஸியா வாங்கித்தராங்க! ஜாலி பண்ணுங்க!

IBN Live முயற்சியால் வெளிவரும் இந்த கொடுமையை பாருங்க!



லஞ்சம் எப்படி எல்லாம் கொழுத்து போயிருக்குன்னு பாருங்க! அட இதெல்லமாம் மாமூலான விசயம்ன்னு நம்ம முதல்வர் மாதிரி ஸ்டேட்மென்ட் தந்திடாதீங்க ப்ளீஸ் :)

இது அரசுகளுக்கு தெரியுமா? அரசுகள் ஏன் இது போன்ற வழியை அடிக்க வழிவகை செய்யவில்லை!! அரசுகளின் அலட்சிய போக்கு நாளை தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுறுவும், சதி திட்டங்கள் தீட்டவும், நம் உயிர்களுக்கு உலைவைக்கக்கூடும்!!!

லஞ்சம் கொடுப்பதையும், லஞ்சம் கேட்பவரையும் தடுக்கவும் முயற்சி செய்ய துவங்குவோம்!

நன்றி: IBN Live

Comments

Popular posts from this blog

லக்கிலுக்கும் - நீதிமன்ற அவமதிப்பும்

பா.க.ச வில் சேர்வது எப்படி?

நீயா? நானா? - டாக்டர் அன்புமணி