வலைப்பதிவர் சுற்றுலா - 7

ரிலே பதிவின் முந்தய பதிவுகள்:

பாகம் 1: வீரமணி
பாகம் 2: பிரியன்
பாகம் 3: பால பாரதி
பாகம் 4: மா.சிவக்குமார்
பாகம் 5: சிங்.ஜெயக்குமார்
பாகம் 6: அருள் குமார்

வானம் மழைகான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்க கடற்கரை கோவிலை சென்று அடைந்தோம். ஒரு வழியா சுற்றுலாவின் கடைசி கட்டத்தை அடைந்தோம். Parkingயில் பார்க் செய்துவிட்டு பார்த்தால் பாலாபாரதி & மா.சிவகுமார் கோஷ்டியை காணவில்லை. அவர்கள் 10 நிமிடம் தமதமாக வந்தடைந்தனர். ஒருவழியா அனைவரும் வந்து சேர உள்ளே செல்ல தயாராக, அருள் நுழைவு டிக்கெட் எடுக்க முயற்சி செய்ய, அப்ப சிவகுமாரும், நானும் 5 ரதம் பார்க்க எடுத்த நுழைவாயில் சீட்டு இந்த கடற்கரை கோவிலையும் பார்க்க உபயோகபடுத்தலாம் என்ற மேட்டரை அருளுக்கு சொல்ல, அவரும் டிக்கெடை பார்த்துவிட்டு கரெக்ட் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல போகும் வழியில் குப்புசாமி, கவிஞர் பாலபாரதியிடம் சுற்றுலா பற்றி ஒரு விவாதம் நடக்க... சுற்று என்றாலும் உலா என்றாலும் ஒரே அர்த்தம் தானே ஏன் அதை சுற்றுலா என்று சொல்லனும் என்று சர்ச்சை கெலப்பினாரு குப்ஸ். பாலா ஏதோ சப்பை கட்டு கட்டிகிட்டு இருந்தாரு... நாங்க உள்ளே சென்று பார்த்தால் திரும்பவும் பாலா & Co வை காணேம் என்னடான்னு பார்த்தா... பல்லவர்கள் மற்றும் கடற்கரை கோவிலின் வரலாறு பற்றிய நுழைவாயில் உள்ள கல்வெட்டுகளை படிச்சுகிட்டு இருக்கறாங்க... (பண்டைய காலத்தில் வெச்சது மட்டும் தான் கல்வெட்டா?!! இப்ப நம்ம அரசு கல்லில் வரலாறு எழுதி வெச்சிருக்கறதும் கல்வெட்டுதானே!!?? ஹீ! ஹீ!! ) ... உங்களோட வரலாற்று ஆராய்ச்சிக்கு அள்வே இல்லயா என்று ரவுண்டு கட்டிணேம்...

அழகான புல்வெளிக்கிடையே அந்த கடற்கரை கோவில் ரம்மியமாய் காட்சி அளித்தது. அருளுக்கு திடீர் ஐடியா, எல்லவரையும் கோவிலை நோக்கி அமர செய்து பின் நின்று ஒரு சூப்பர் படம் எடுத்தாரு. அருளோட கலை ஆர்வத்துக்கு ஒரு அளவேல்லைங்கோ...

இந்த சுற்றுலாவை பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று முடிவு செய்ய ஐயா தான் அதை ஒரு Relay பதிவா போடுவோம் என்று ஐடியா கொடுத்தேன்.. ஹி! ஹி!! இந்த மாதிரி வெட்டி ஐடியாவுக்கெல்லாம் சூப்பரா என் மூளை செய்யும் பாருங்க. யார் யார் எந்த பகுதியை எழுதுவது என்று அங்கு அமர்ந்தபடியே முடிவு செய்துவிட்டு கோவிலுக்கு உள் சென்று பார்க்காமல் கிளம்பிட்டோம். மழைக்கு முன் சென்னையை அடையவேண்டும் என்ற ஆர்வம் பொங்கி வெளியேறும் போது ஒரு வீசில் சத்தம் என்னடான்னு பார்த்தா கடற்கரை கோவில் பார்வை நேரம் 6 மணி வரைதான் போல அங்கு இருக்கும் காவலர்கள் பிகில் கொடுக்கறாங்க அப்பூ...

ஷப்ப்ப்ப்ப்ப்பா எஸ்கேப் ஆங்குங்க தல என்று.... மழைக்குமும் சென்னை அடைவோம் என்று வண்டியை எடுத்துகிட்டு புறபட.... திரும்பும் போது எங்களுக்கு காத்திருக்கும் பிரச்சனைகள் தெரியாமல்...

அந்த மேட்டரையெல்லாம் நம்ம குப்ஸ் சொல்லுவருங்க... அங்கே பாருங்கோ....

16 comments:

said...

நல்ல ரிலே தொடர்.

புகைப்படங்களில் நம்ம ஊரைக் காட்டியதற்குப் பிரத்தியேக நன்றிகள்.

சென்னையிலிருக்கும் தமிழ் வலைப்பதிவாளர்கள் புகைப்படங்களுக்கென்று ஒரு கூட்டு வலைப்பதிவு வைத்து, என்னை மாதிரி ஆட்களை அப்பப்ப காதில் புகை வருமாறு செய்யலாமில்லையா? என்ன சொல்றீங்க? நினைச்சா, சென்னைக்கென்றே ஒரு தனிப்பதிவுகூடத் தொடங்கலாம். ;)

புகைப்படங்களில் இருப்பவர்களில் ஓரிருவரை அடையாளம் காண முடிகிறது. கொஞ்சம் பெயர் போட்டிருக்கலாமே.

சுவாரசியமான அனுபவம் - எங்களுக்கும்.

said...

சுற்று என்றால் சுத்தி வருவது.
உலா எல்லாத்துக்கும் பொருந்துமே.. நேர் ரோடில் நடந்தாலும் உலா தானே?
அதுக்காக ஒரே இடத்தைச் சுத்திச் சுத்தி வரணுமான்னு கேட்காதீங்க.. சுற்றுலான்னு சொல்லும் போது, (ஒரு சுத்து சுத்திட்டு) திரும்பி வந்துடுவோம்னு ஒரு பொருள் வருதுன்னு நினைக்கிறேன்..

said...

எப்பா மதி சார் இல்ல சாரி .


நீங்க 7 பேரும் ரெண்டாவது போட்டோவில தூரத்துல இருக்கற வெள்ளக்கார ஜோடியை பார்த்து ஜொள்ளுரீங்களே ( சரி சரி கடற்கரை கோவில்தான் பாக்குறீங்க ) நாமும் பாப்போமினு கிளிக்குனா மறுபடியும் மொத படம்தான் வருது.மாத்துப்பா

அன்புடன்
சிங்கை நாதன்.

said...

இப்பிடிப் பின்னாடி திருப்பி உக்கார வெச்சிப் புடிக்கிறதுல ஒரு வசதி தெரியுமா....யாரையும் வயித்த எக்கச் சொல்ல வேண்டியதில்ல. சரியா?

said...

அட அமர்க்களம் போங்க
நடத்துங்க ராசா நடத்துங்க

said...

நன்றி மதி.

//சென்னையிலிருக்கும் தமிழ் வலைப்பதிவாளர்கள் புகைப்படங்களுக்கென்று ஒரு கூட்டு வலைப்பதிவு வைத்து, என்னை மாதிரி ஆட்களை அப்பப்ப காதில் புகை வருமாறு செய்யலாமில்லையா? //

நல்ல ஐடியாவா இருக்கே!!! அடுத்த மீட்டிங்ல பேசிட்டு சொல்லறேன்... ;) நல்ல புகைவருதா மேடம்!??

//புகைப்படங்களில் இருப்பவர்களில் ஓரிருவரை அடையாளம் காண முடிகிறது. கொஞ்சம் பெயர் போட்டிருக்கலாமே.// ஐயோ பயங்கரமான ஆளா இருப்பீங்க போல.. எனக்கே பின்னாடியிருந்து பார்க்கறதால டிரெஸ் வெச்சுதான் அடையாளம் தெரியும் உங்களுக்கு எப்படிங்க... கலக்கறீங்க.. :))))

said...

பொன்ஸ்,

விளக்க உரைக்கு நன்றி. மறக்காம பாலாவுக்கும் குப்ஸ்க்கும் சொல்லிடுங்க பிளீஸ்.. ஐய்யோ! ஐய்யோ!! எப்படிங்க...(வாலி அஜித் ஸ்டைல படிங்க)

said...

G.Ragavan & Senthil க்கு நன்றி.

//இப்பிடிப் பின்னாடி திருப்பி உக்கார வெச்சிப் புடிக்கிறதுல ஒரு வசதி தெரியுமா....யாரையும் வயித்த எக்கச் சொல்ல வேண்டியதில்ல. சரியா?// G.Ragavan நம்ம மேட்டரை நம்ம கோஷ்டிங்க யாராவது உங்களுக்கு சொல்லிட்டாங்களா இல்ல எழுதிட்டாங்களா??

said...

//இப்பிடிப் பின்னாடி திருப்பி உக்கார வெச்சிப் புடிக்கிறதுல ஒரு வசதி தெரியுமா....யாரையும் வயித்த எக்கச் சொல்ல வேண்டியதில்ல. சரியா?//

ராகவன், க க க போ :)

said...

// We The People said...
G.Ragavan & Senthil க்கு நன்றி.

//இப்பிடிப் பின்னாடி திருப்பி உக்கார வெச்சிப் புடிக்கிறதுல ஒரு வசதி தெரியுமா....யாரையும் வயித்த எக்கச் சொல்ல வேண்டியதில்ல. சரியா?// G.Ragavan நம்ம மேட்டரை நம்ம கோஷ்டிங்க யாராவது உங்களுக்கு சொல்லிட்டாங்களா இல்ல எழுதிட்டாங்களா?? //

// அருள் குமார் said...
//இப்பிடிப் பின்னாடி திருப்பி உக்கார வெச்சிப் புடிக்கிறதுல ஒரு வசதி தெரியுமா....யாரையும் வயித்த எக்கச் சொல்ல வேண்டியதில்ல. சரியா?//

ராகவன், க க க போ :) //

:-)))))))))))

அதாகப்பட்டதுங்க....அதாங்க....

said...

G.Ragavan உங்க ஊரு ஐயம்பேட்டையா? பலே நல்லா போட்டுதறீங்க!! வீடாமா மெயிடெயின் பண்ணுங்க... அப்ப தான் எல்லாருக்கு எல்லாருடைய மேட்டரும் வெளிய வரும். வாழ்க வளர்க...

இந்தியன் said...

ரிலே தொடர் நல்லா இருக்கு. அடுத்த ரிலே எப்ப வரும்.

said...

சுற்றுலா பதிவு ஐடியாவுக்கு நன்றி ஜெய்
அப்படியே தேசியக்கொடிக்கும்.

/// திரும்பும் போது எங்களுக்கு காத்திருக்கும் பிரச்சனைகள் தெரியாமல்...///

என்ன பிரச்சனைகள்???????????

சொல்லவே இல்ல

said...

கலக்கல் தொடர்!

said...

நன்றி மதுமிதா & போஸ்டன் பாலா. மதுமிதா

/// திரும்பும் போது எங்களுக்கு காத்திருக்கும் பிரச்சனைகள் தெரியாமல்...///

வேற ஒன்னும் இல்லை நல்லா மழையில மாட்டிக்கிட்டு... ஒதுங்க இடம் இல்லாமல் அப்படியே மழையில வண்டிய ஓட்டிக்கிட்டு வந்தோம். இது பத்தாதுன்னு வீரமணி ஓட்டி வந்த வண்டி MGMகிட்ட பெட்ரோல் இல்லாமா மாட்டிகிச்சு.. நாங்க திருவாண்மியூர் கிட்ட இருந்தோம்... பாவம் மழையில் பெட்ரோல் இல்லாம ரொம்ப கஷ்ட பட்டுட்டாங்க... நல்ல காலத்துக்கு பாலாவும் சிவகுமாரும் MGMலிருந்து ஒரு 5 கிலோமீட்டர் தூரத்துல இருந்தாங்க... அவர்களை பெட்ரோல் வாங்கிட்டு போக சொல்லி அட்ஜஸ் செஞ்சோம்.. அவ்ளோதாங்க அந்த மேடர்... இதை எல்லாம் குப்ஸ் எழுதுவாருன்னு நினைத்தேன் அவரு விட்டுவிட்டாரு...

said...

//இதை எல்லாம் குப்ஸ் எழுதுவாருன்னு நினைத்தேன் அவரு விட்டுவிட்டாரு...//

அவரு.. ஒங்களுக்கு முன்னாடியே வூடு போய் சேர்ந்துட்டார்... சரி.. விடுங்கண்ணே... அடுத்த தபா.. பாத்துக்கலாம்...