உறவுகள் பகைகளே!!! - தேன்கூடு போட்டி

கோவையில் எங்கள் வீட்டு முதல் மாடியில் புதியதாக குடி வந்தார் பாலாஜி, இவர்தான் குடும்ப தலைவர். ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜர். அவர், மனைவி வனஜா மற்றும் பாலாஜியின் பத்து வயது மகள் பூவிதா என சின்ன குடும்பம் தான்.

அன்று ஞாயிறு காலை 8 மணி வழக்கம் போல் என்.டி.டி.வி யில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தேன், முதல் மாடியில் வீட்டிலிருந்து பலர் புதிதாய் வந்திருந்தனர், பெரிய தகராறு நடத்து கொண்டிருந்தது, ஒரே கூச்சலும் குழப்பம். எதோ விவகாரம் என்று மட்டும் தெரிந்தது. அவர்கள் குடிவந்து 6 மாதம் இருக்கும் இதுவரை அவர்களின் சப்தம் கூட வெளியே கேட்டதில்லை, இன்று என்னவாயிற்று என்று எனக்குள் ஒரு ஆவல். மெல்ல அவர்களின் வீட்டிலிருந்து வரும் போச்சுக்களை கேட்க துவங்கினேன். நான் செய்வது தவறு என்று தெரிந்தும் ஏனோ அதை கேட்க தூண்டியது என் உள் மனசு. யாரையோ இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள், அவரை யார் பார்த்துக்கொள்வது என்பது தான் பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ஒரு 2 மணி நேர கூச்சலுக்கு பின் சப்தம் அடங்கியது. என்னவானாலும் நமக்கு நியூஸ் வரும் என்று தேத்திக்கிட்டேன்.

மதியம் நண்பன் மணி வீட்டுக்கு புறப்பட்டு வெளியே வந்தேன், எதிரில் வந்த பாலாஜி, "சார் எப்படி சார் இருக்கீங்க! பார்க்கவே முடியல?" என்று என்னிடம் கேட்டார், "என்ன சார் பண்ணறது பிஸினஸ் என்றாலே அப்படித்தான் எதுக்கும் நேரம் கிடைப்பது இல்லை" என்று என் வழக்கமான பதிலை சொல்லிவிட்டு, பாலாஜிக்கு அருகில் இருந்தவரை பார்க்க உடனே, இவர் என் தம்பி சிதம்பரத்தில் இருக்காரு, எங்க அப்பவை இங்க கொண்டுவந்து விட வந்திருக்காரு என்று எனக்கு ஒரு தகவலை மெதுவா எடுத்து கொடுத்தார்! அப்ப இது தான் பிரச்சனைக்கு காரணம் போல என்று நானாக யூகித்துக் கொண்டே மணியின் வீட்டுக்கு பைக் அமர்ந்தபோது தான் ஒரு 80 வயது மதிக்க தக்க வயதானவர், வாழ்வில் பிடிப்பிழந்து இருண்டா முகத்துடன் பால்கனியில் அமர்ந்து இருந்தார். அவர்தான் பாலாஜியின் அப்பா போல என்று நினைத்துக்கொண்டேன். பார்க்க வீடு படத்தில் வரும் சொக்கலிங்கபாகவதர் போல பாவப்பட்ட முகம். அவர் சோகமாக இருப்பது மட்டும் உண்ர முடிந்தது.

அன்று இரவே அவர் தம்பியும், தம்பியின் மனைவியும் ஊருக்கு சென்றுவிட்டார்கள். அந்த நாள் முதல் வீட்டில் தினமும் பாலாஜியும், அவர் மனைவியும் சண்டையிடுவது வழக்கம் ஆனது! அடுத்த வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என் அம்மாவிடம் அவர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள் பல கதை சொல்லுவது, கதை கேட்பதுமாக சில மாதங்கள் போனது!

ஒரு நாள், காலை சுமார் 6:30 மணிக்கு காலிங் பெல் யாரோ அடித்தார்கள், நான் தான் கதவின் அருகாமையில் உள்ள அறையில் உள்ளதால் யார் காலிங் பெல் அடித்தாலும் கதவை திறப்பது என் வேலையானது, திறந்ததும் பாலாஜி, "என்ன சார் இந்த நேரத்தில ஏதாவது பிரச்சனையான்னு கேட்டேன்", அவர் உடனே "ஒன்னும் இல்ல சார், நாங்க பழனிக்கு சாமி கும்பிட போறோம், அப்பா வீட்டில தனியா தான் இருக்காரு ஏதாவது சத்தம் வந்தா பாத்துக்குங்க, நாங்க இரவுக்குள் வந்துவிடுவோம்" என்று கூறிவிட்டு போனார். என் மனசெல்லாம் பாவம் அந்த பெரியவரையும் அழைத்துப்போனால் குறைந்தாபோவார்கள் என்று வருத்தப்பட்டேன். ஆனா நம்ம வருத்தப்பட்டு என்ன செய்யமுடியும். முதுமையும் ஒரு கொடுமையான விசயமாக எனக்கு தோண்றியது. காலையில் அவர் என்ன சாப்பிடுவார், 6:30க்கே போயிட்டாங்களே, காலை உணவு ஏதாவது செய்துவெய்துவிட்டு பொயிருப்பார்களோன்னு, இல்ல பட்டினி போட்டிருப்பாங்களோ என பல சிந்தனைகள், 10 மணிக்கு இருக்கும் என் அம்மாவிடம் கேட்டேன் ஏம்மா பெரியவர்க்கு ஏதாவது சாப்பிட கொடுக்களாமான்னு, அம்மாவும் சரி என்று காலையில் செய்த இட்லி + சட்டினியை பாத்திரத்தில் போட்டு என்னிடம் கொடுத்தார்கள்.

அதை எடுத்துக் கொண்டு மேலே போய் கதவை தட்டியதும் தான் தாமதம் கதவு திறந்தது. ரொம்ப ஆவலா காத்திருந்தார் போல பெரியவர். நான் என்னை அறிமுகம் செய்துவிட்டு, கொண்டுசென்ற டிப்பனை அவரிடம் கொடுத்து சாப்பிடுங்கள் என்றேன். அவ்வளவுதான், அவர் கண்ணில் நீர் அருவி போல் கொட்ட துடங்கியது. என்னால் சகித்துக்கொள்ள முடியாமல் என்ன சார் இப்படி என்றேன். அவர் உடனே யார் பெத்த புள்ளயோ, நீங்க என்னை பத்தி நினைக்கற அளவுக்கு கூட என் மகன் நினைக்கவில்லையேன்னு... என்று சொல்லும் போது அவரால் அடக்கமுடியாமல் கண்ணீர் கொட்டியது. எனக்கும் கண்கள் கலங்கின... சமாளித்துக் கொண்டு... முதலில் சாப்பிடுங்கள் பிளீஸ் என்றேன். அவர் மெதுவாக இரண்டு இட்டிலியை சப்பிட்டுவிட்டு, போதும் என்றார். மீதம் உள்ளதை வைத்துக்கொள்ளுங்கள் பிறகு பசித்தால் உண்ணலாம் என்றேன். சரி சார் நான் வறேன் என்றதும், ஒரு 10 நிமிஷம் என்னோடு இருக்கமுடியுமா என்று கேட்டர். ஓகே என்று சொல்லும் முன் தான் பர்மாவில் வியாபரியாக இருத்ததையும், நல்ல செல்வ செழிப்பாய் வாழ்ந்து, மனைவி இறந்தபின் பர்மாவிலிருந்து திரும்பிவந்து திருச்சியில் மோசைக் (Mosaic) வியாபரம் செய்து பாலாஜி உள்ளிட்ட மூன்று குழந்தைகளையும் நன்றாக வளர்த்து வாழ்கைக்கு வேண்டிய பணத்தையும் வியாபரத்தையும் பிரித்து கொடுத்து, நல்வழி படுத்திவிட்டு மூன்று மகன்களின் தயவில் 6 மாதத்துக்கு ஒரு மகன் வீடு என்று வாழ்வதாகவும் சொன்னார். "இப்ப இவர்களுக்கு என்னை கவனிக்க இஷ்டமில்லை, பாலாஜி என்னை முதியோர் விடுதியில் சேர்க்கவேண்டும் அல்லது மூத்தவினிடம் போன்னு சொல்லறான், அவனை விட அவன் மனைவிக்கு தான் என்னை அங்கே சேர்ப்பதில் முடிவா இருக்கா" என்று அவர் சொன்னதும் என் மனம் பதைத்தது. வளர்த்து பெரிதாக்கிய தந்தையை இப்படி நடு ரோட்டில் விட தயாராகும் மகன்களும் மருமகள்களும். இப்படி தன் சோகத்தை எல்லாம் பகிர்ந்து கொண்டார். முதல் நாள் சண்டையிட்டது எதற்கு தெரியுமா? இந்த ஆறு மாதம் அன்று இவரை பாலாஜிவிட்டில் கொண்டு வந்தவிட்ட இளைய மகனின் Turn dutyயாம். அவர் மனைவி பார்த்துக் கொள்ளமுடியாது என்று இங்கு அனுப்பிவிட்டாராம். உறவுகள் எப்படி பாரமாக மாறுகிறது என்று என்னிப்பார்கிறேன். அன்று மனைவியை இழந்த இந்த பெரியவர் தன் 3 மகன்களை பாரம் என்று நினைத்திருந்தால்... எண்ணிக்கொண்டு அவரிடம் விடை பெற்றேன்.

அதற்கு பின் அவர் பால்கனியில் தினமும் பார்ப்பேன், புன்(ண்)முறுவல் தருவார்... நானும் நல்ல இருக்கீங்களான்னு எப்பயாவது கேட்ப்பேன். அவ்வளவே! எனக்கு அவர்கள் குடும்பவிவகார கேட்க மணம் இல்லாமல் மேல்வீட்டுக்கு செல்வதை தவிர்த்தேன்.

தந்தைக்கு புத்தாண்டு பரிசு:

இரண்டு மாதத்துக்கு பின், அன்று கிருஸ்துமஸ் நாள், பெரியவர் என் வீட்டுக்கு வந்து "தம்பி, என்னை முதியோர் இல்லத்தில் இன்று கொண்டுபோய் விடுகிறார்கள், மத்த இரண்டு மகன்களும் வந்திருக்காங்க, எல்லாரும் சேர்ந்து முடிவு எடுத்துட்டங்க, எமகண்டம் முடிந்ததும் கிளம்பறேன். போகறதுக்கு முன்னாடி உங்களை பார்த்து பேசனும்னு தோணுச்சு, அதான் வந்தேன், Anyway Happy new year தம்பி, இனி அடுத்த நியூ இயருக்கு நான் இருப்பனோ மாட்டேனோ! " என்று சொல்லும் போது அவர் கண்கள் கலங்கி இருந்தது. அவர் மனதில் உள்ள பதட்டம் எனக்கு புரிந்தது. புது இடம், புது மனிதர்கள், உறவுகள் யாரும் இல்லை என பல சிந்தனைகள் அவர் மனதில் பதைப்பை ஏற்படுத்துகிறது என நினைத்துக்கொண்டேன். அவருக்காக நான் மணம் வருந்த மட்டுமே முடியும். அவருக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும் என்னால். ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் தலையை மட்டும் அசைத்து விடை கொடுத்தேன்.

அன்று புத்தாண்டு ஊரே கலைகட்டியிருந்தது, காலை 10:30 மணியிருக்கும், தபால் ஊழியர் வந்து சைக்கிளை நிறுத்தினார், புதுவருட நிதி கலெக்ஷன் இன்றே துடங்கிவிட்டனரே என்று நினைத்து கொண்டு வாங்க என்றேன். "சார் பாலாஜி இருக்கருங்களா? அவருக்கு ஒரு டெலிகிராம் வந்திருக்கு, அவர் அப்பா இறந்துவிட்டாராம் சார்!!!"அவர்கள் கோவிலுக்கு போயிருந்ததால் நான் வாங்கி வைத்தேன். என் மணம் புத்தாண்டு கொண்டாத்தை மறந்தது. அவர் இங்கிருந்து போகும் போது சொன்னது போல நடந்துவிட்டதே என்று சங்கடப்பட்டேன். 10 நிமிடத்தில் கோயிலுக்கு போன பாலாஜி வந்தார், டெலிகிராமை கொடுத்து, சாரி சார் உங்க அப்பா... என்று சொன்னேன், அவருக்கு சின்னதாய் கண்கலங்குவது தெரிந்தது, டெலிகிராமை வாங்கிக்கொண்டு மேலே போகும் வழியில் பாலாஜியின் மனைவி எழவு சாவதற்கு கிடைச்ச நாளைப்பாரு என்று சொன்னது என் காதில் விழுந்தது.

உறவுகள் பகைகளே...!!! என்று எண்ணிக்கொண்டு என் வேலையை பார்க்கலானேன்.

இந்த சம்பவம் உறவுகள் பற்றிய என் பார்வையை மாற்றியது! Nuclear family என்று பெயர் ஒன்றை சூட்டி, தன் பிள்ளைகளுக்கு தாதாவையும், பாட்டியையும் புகைபடமாக கண்பிக்கும் கலாசார சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது. கூட்டு குடும்பம் என்ற ஒரு விசயமே நம் பிள்ளைகள் காலத்தில் காணாமல் போனால் ஆச்சர்ய படுவதற்கில்லை. இந்த உறவுகள் ஒரு மின் மினி பூச்சிகள் போல் சில நேரம் மின்னும் சில நேரம் இருண்டுவிடும். உறவுகள் நம் வாழ்வில் ஒளியேற்றது, அவர்கள் ஒரு மின் மினி பூச்சியைப்போல் தன் தேவையின் போது தான் தனக்காக ஒளியேற்றுவார்கள்.

பி.கு:
இது எங்க ஊரல நடந்த உண்மை கதை. என்னை ரொம்பவே பாதிச்ச விசயம். இங்கு பெயர்களும், ஊரும், சில சம்பவங்களும் மாற்றப்பட்டுள்ளது.

Comments

Sivabalan said…
சார்,

ரொம்ப உணர்வு பூர்வமா அருமையாக எழுதியுள்ளீர்கள்..

பதிவை படித்து முடித்தவுடன் மனம் பாரமாகிவிட்டது.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சார், நானும் கோவை , வடவள்ளியை சேர்ந்தவன்.
We The People said…
சிவா சார்,

வாங்க சார். வாழ்த்துக்களுக்கு நன்றி.

நீங்களும் கோவையா! நான் ராமநாதபுரம் திருவள்ளூவர் நகர் ஏரியா.
Sivabalan said…
Sir,

I have voted for you in Tamilmanam..

just FYI...
We The People said…
ஓட்டுக்கு நன்றி சிவபாலன் சார்.
ஜெயசங்கர்,

பாவம் அந்தப் பெரியவர். இப்படியும் பிள்ளைகள் இருக்கற உலகம் இது.
சீக்கிரம் போய்ச் சேர்ந்ததே அவருக்கு விடுதலையா இருந்திருக்கும்.
Jazeela said…
நல்ல உருக்கமான கதை. அந்த பெரியவருக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நேராமல் இருக்க பிராத்திக்க மட்டும்தான் முடியும். //அதற்கு பின் அவர் பால்கனியில் தினமும் பார்ப்பேன், புன்(ண்)முறுவல் தருவார்// ரசித்த வரி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
We The People said…
துளசி மேடம் நானும் அப்படித்தான் நினைத்தேன். நாமே அப்படி நினைக்கும் போது அந்த பெரியவரை நினைத்து பாருங்க. நான் சுருக்கமா எழுதிட்டேன், அவர் பட்ட மணகஷ்டம் எண்ணும் போது இன்றும் எனக்கு கண் கலங்குதுங்க. என்னை ரொம்பவே பாதிச்ச ஒரு சம்பவம் இது.
We The People said…
நன்றி ஜெஸிலா,வந்து ரசித்து, வாழ்தியதற்கு நன்றி
Anu said…
After reading this its so disturbing.
You have written it very well.
It reminds me the great grandfathers I have met in old age home.
Whenever I go to India I used to visit oldage home
I dont understand how people could consider their own parents as burden.
and shocked that this daugher in law and the son you have mentioned in this story have completely forgotten that they too will become old some day.
கதிர் said…
பாவம் அந்த பெரியவர்.
ஒரு சின்ன தப்பு செஞ்சுட்டாலே நம்ம மனசு கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியல, வயசான காலத்தில அந்த பெரியவரை அலைகழிச்சி சாகடிச்சு இருக்காங்க அவங்களால எப்படி எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாம இருக்க முடியுது?.

பந்த பாசங்கள் மேல அதிக நம்பிக்கையும், அக்கறையும் உள்ள நம்ம நாட்டுலதான் இதுபோல நடப்பது வேதனை அளிக்கிறது.

மனசை பிசைய செய்த நிகழ்ச்சிய, இயல்பா தொகுத்திருக்கிங்க.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
தம்பி
Anonymous said…
You Have Writen very Well.
This Story Realy Touch with People Heart.

You Win Defenetly.
We The People said…
அனிதா மற்றும் தம்பி அவர்களுக்கு நன்றி.


//shocked that this daugher in law and the son you have mentioned in this story have completely forgotten that they too will become old some day.//

அனிதா நீங்க சொன்னது படிக்கும் போது எங்க சொன்ன ஒரு கதை நியாபகத்துக்கு வருது. ஒரு மகன் தன் தந்தையிடம் "அப்பா தாத்தாவுக்கு சாப்பாடு போடற அலுமினிய தட்டை பத்திரமா எடுத்துவை, உனக்கு வயசானது அதுல தான் சாப்பாடு போடனும்ன்னு" சொன்னானாம். எப்படியிருக்கு!!
Anu said…
mmm..correct
oru kalatthula moral instructionla ketta kadai
i think ore paiyan irundha indha prachanai varadho ennamo
2 3 pasanga irundha...caring ellam..sharing aydidudu...
cha cha.
nenachhalaye kovama varudu
ivannga ellam ivanga kozhandingalukku enna sollitaruvanga...
We The People said…
அனிதா நீங்க சொல்லவது கரெக்டா தப்பா தெரியல.. என்ன தான் caring ellam..sharing aydidudu... சொந்த அப்பாவை எப்படிங்க இப்படி செய்ய முடியும். நம்ம நாட்டின் பெருமையே இந்த அன்பு, பாசம் தாங்க! அதையும் துலைத்துக்கிட்டு இருக்கோமோன்னு எனக்கு தோணுது.
We The People said…
அனானி வாழ்த்துக்களுக்கு நன்றி.
Anonymous said…
This is story is disturbing. You have rightly quoted.

Nuclear family என்று பெயர் ஒன்றை சூட்டி, தன் பிள்ளைகளுக்கு தாதாவையும், பாட்டியையும் புகைபடமாக கண்பிக்கும் கலாசார சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது.
Anonymous said…
என்ன கொடுமை இது. இப்படி கூட நடக்குதா. பாவம் அந்த தாதா.
Roop said…
Heart touching, it reminds my Grand mother.
Anonymous said…
Manathai migavum baathitha kathai