விவாதகளத்தில் அநாகரீக பின்னூட்டம்!

இந்த தமிழ்மணம் விவாதகளம் பக்கமே போகாமல் இருப்போம் என்றால் மனம் கேட்கமாட்டீங்குது! அட பொது மேடை தானே நம் கருத்தும் சொல்லிவைப்போமே என்று அங்கு நாம், நம்முடைய கருத்தை பின்னூட்டமா போட்டா!! அங்க உடன்பிறப்பு லக்கி செய்யும் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லை என்று தோன்றுகிறது! அது தமிழ்மணம் விவாதகளமா? அல்லது லக்கிலுக்கின் அரட்டை அரங்கமா?? லக்கிலுக்குக்கு தேவையான, அவர் தலைவனை போற்றும் பின்னூட்டங்கள் மட்டும் ஜல்லியடிக்கும் களமா??

கடந்த வாரம் ஹெல்மெட்! குறிந்தான ஒரு விவாதம் அங்கு துவக்கப்பட்டது! அதில் திருவாளர் லக்கிலுக் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்?


இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன?
நான் பின்னூட்டத்தில் என் கருத்தான

//இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன?//

தலைவருக்கு நல்ல கட்டிங் கரெட்டா கிடைத்திருக்கும். அவ்வளவு தான் அவர் தலைவர் மேல் ஒரு புகார் சொன்னேன். அந்த பின்னூட்டம் பிரசுரிக்கபடவில்லை என்பதோடு அல்லாமல்....

நா. ஜெயசங்கர் அவர்களின் அநாகரிகமான பின்னூட்டத்தினை தவிர்த்து மீதி பின்னூட்டங்கள் வெளியிடப்படுகின்றன. நான் ஏற்கனவே கூறியபடி இது தமிழ்மணம் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான கருத்துக்களம். தலைவர்களின் மீதான தங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை காட்டும் இடமல்ல இது.

அந்த விவாதமேடையில் இப்படி ஒரு பின்னூட்டமிட்டு லக்கி, என் மீது சேர் அடிக்கும் அநாகரீக வேலையையும் செய்ய துவங்கிவிட்டார்!! எப்பொழுதுமே நாகரீக மட்டும் எழுது லக்கி அவர்களே என் பின்னூட்டத்தில் என்ன அநாகரீகம் கண்டீர்கள் என்று சொல்லுங்க பார்ப்போம்? அதை வெளியிட்டு நான் இட்ட அநாகரீகம் பின்னூட்டம் என்ன என்று நிரூபிக்கட்டுமே!

பொது இடத்தில் எல்லாவருக்கும் மதிப்பு கொடுக்கும் பண்பை கற்றுக்கொள்ளுங்கள் லக்கி அவர்களே! உங்களுக்கு கருணாநிதி தலைவர், எங்களுக்கு முதல்வர், நான் முதல்வராக பார்க்கிறேன், என் விமர்சனங்களை சொல்கிறேன்! உங்களுக்கு உங்க தலைவர் சொல்வதும், செய்வது சரியா இருக்கும், நான் அதே ஜல்லி அடிக்கவேண்டும் என்று பொது இடத்தில் வாந்தி எடுப்பது நல்லதல்ல!

அதே போல இதற்கு முன் மாயக்கண்ணாடி பூதக்கண்ணாடியா? என்ற விவாதத்திலும், நான் என் பின்னூட்டமாக

உருப்படியா ஏதாவது விவாதியுங்க இல்ல விவாதமேடையை முடிவிடுங்க!!!
என்று சொன்னேன், சில நாட்களில் அந்த பின்னூட்டமும், பின்னூட்டங்களிருந்து எடுத்து வீசப்பட்டிருந்தது! இப்படி தன் கருத்துக்கு எதிர் கருத்து யார் சொன்னாலும் வெளியிடாமலும், வெளியிட்டாலும் சில நாட்களில் அதை வெட்டித்தள்ளுவதற்க்கு தானா இந்த விவாதக்களங்களின் பொறுப்பாளர் செய்யக்கூடிய வேலை!!!


ஐயா, தமிழ் தெரிந்த புண்ணியவான்களே சொல்லுங்க மேலே உள்ள என் பின்னூட்டங்களில் என்ன அநாகரீகமா இருந்ததென்று சொல்லிக்கொடுங்க தெரிந்து கொள்கிறேன்!

பி.கு: இது போன்ற கட்சி சார்ந்தவர்களை விவாதக்களங்களின் பொறுப்பாளர்களாக ஆக்கினால் இப்படித்தான் கட்சி சார்ந்து விவாதங்களை நடத்தி விவாதகளத்திற்க்கு எதிர்கருத்துள்ளவர்களை வெளியேற்றி, தான் சொன்னது தான் சரி என்ற மாயை உருவாக்குவார் என்பதை தெள்ளத்தெளிவாக நிரூபித்துவிட்டார் நன்பர் லக்கிலுக் அவர்கள்! இனியாவது தமிழ்மணம் இது போன்ற பொருப்பாளர்களை நியமிக்கும் போது கட்சி சாராத பதிவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், அப்படி செய்தால் தான் இந்த விவாதகளம் தழைக்கும் என்று நிச்சயமான உண்மை!!!

34 comments:

Anonymous said...

மா சிவக்குமார் போட்ட போதாவது சில விவாதங்கள் நடந்தது,மிச்சமெல்லாம் தேவையில்லாத குப்பைகள்.

குமரேசன் said...

தங்களுடைய வருத்தம் புரிகிறது ! ஜால்ரா சத்தம் ஒவ்வேறு தளத்திலும் கேட்கிறது! இங்கு நடக்கும் சண்டைகள் வெட்டி வேலைகள், மனித மனத்துவேசத்தின் வெளிப்பாடுகள் மட்டுமே உருப்படியான் ஒரு தளத்தையும் பார்க்கமுடியவில்லை

Anonymous said...

இது கெட்ட கேட்டுக்கு தமிழ்வெளியின் அட்மினில் ஒருத்தராம்!

ஹையோ ஹைய்யோ!

said...

எது அநாகரிகம் என்று அளவுகோள் இருக்கிறதா? உங்கள் அளவுகோல் படி எதுங்க அநாகரிகம்? ஓ..., பு...., சு.... எழுத்தில் இருப்பவைகள் தான் அநாகரிகம், இவைகள் இல்லாத எல்லா எழுத்துக்களும் நாகரிகமா?

//தலைவருக்கு நல்ல கட்டிங் கரெட்டா கிடைத்திருக்கும். // என்ற உங்கள் எழுத்து நாகரிகமா? இப்படி ஒரு குற்றசாட்டு வைக்கும் முன் கட்டிங் பற்றிய ஏதாவது குற்றச்சாட்டு உங்களிடம் இருக்கிறதா? குறைந்த பட்சம் ஒத்துக்கொள்ளக்கூடிய குறைந்த பட்ச ஆதாரங்களுடனான தனி நபர், பத்திரிக்கைகள் குற்றச்சாட்டாவது ஏதேனும் இருக்கிறதா? எந்த எழவும் சொல்லாமல் இல்லாமல் தலைவருக்கு நல்ல கட்டிங் கரெட்டா கிடைத்திருக்கும் என்று போகிற போக்கில் தூற்றூவது எழுத்து வன்முறை எழுத்து ஆபாசம்....

"ஜெய்சங்கர் தினமும் ஒரு குட்டியோடு குஜால் செய்கிறாராக்கும் அக்காங்...." இப்படி போகிற போக்கில் உங்கள் குடும்ப ஆட்கள் முன்பு 10 பேர் சொல்லட்டும், அவர்கள் சொன்னதில் ஓ..., பு...., சு.... என்ற அநாகரிக வார்த்தைகள் எதுவுமில்லை, அதனால் நீங்கள் அப்படி சொல்லப்படுவதை ஒத்துக்கொள்வீர்களா?

said...

//Anonymous said...
மா சிவக்குமார் போட்ட போதாவது சில விவாதங்கள் நடந்தது,மிச்சமெல்லாம் தேவையில்லாத குப்பைகள்.
//

டிபிஆர் ஜோசப் ஐயா கூட நல்ல விவாதங்களை அமைத்தார். ஒட்டு மொத்தமாக எல்லோர் மீதும் சேறு அடிக்கும்மேற்கண்ட பின்னூட்டத்தை அனுமதித்தது நாகரீகமா ? அநாகரீகமா ?

ஒன்னும் புரியலை.

Anonymous said...

//குறைந்த பட்சம் ஒத்துக்கொள்ளக்கூடிய குறைந்த பட்ச ஆதாரங்களுடனான தனி நபர், பத்திரிக்கைகள் குற்றச்சாட்டாவது ஏதேனும் இருக்கிறதா? எந்த எழவும் சொல்லாமல் இல்லாமல் தலைவருக்கு நல்ல கட்டிங் கரெட்டா கிடைத்திருக்கும் என்று போகிற போக்கில் தூற்றூவது எழுத்து வன்முறை எழுத்து ஆபாசம்....//

கழக மேடைகளில் வைக்காத குற்றச்சாட்டா, சொல்லாத புகாரா?

இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா குழலி?

Anonymous said...

/எது அநாகரிகம் என்று அளவுகோள் இருக்கிறதா? உங்கள் அளவுகோல் படி எதுங்க அநாகரிகம்? ஓ..., பு...., சு.... எழுத்தில் இருப்பவைகள் தான் அநாகரிகம், இவைகள் இல்லாத எல்லா எழுத்துக்களும் நாகரிகமா?/

எது நாகரீகம் என்று அளவுகோல் கிடையாதுதான். ஆனால் அப்படி ஒரு அளவுகோல் இருந்தால் ஜெயசங்கர் எழுதியது தவறு என்று அதில் இருக்காது.பு..சு..ம எல்லாம் அநாகரீகம் என்று வேண்டுமானால் அந்த அளவுகோளில் இருக்கும். ஏன்னா குழலியே அதை எல்லாம் சொல்ல கூச்சப்பட்டு சுயதணிக்கை செய்துவிடுகிறாரே?:-D

Anonymous said...

/டிபிஆர் ஜோசப் ஐயா கூட நல்ல விவாதங்களை அமைத்தார். ஒட்டு மொத்தமாக எல்லோர் மீதும் சேறு அடிக்கும்மேற்கண்ட பின்னூட்டத்தை அனுமதித்தது நாகரீகமா ? அநாகரீகமா ?

ஒன்னும் புரியலை./

இந்துமதத்தை குப்பைன்னு கோவிகண்ணன் பதிவே போட்டார்.அது நாகரிகம்.விவாத களத்தில் சிலபதிவுகள் குப்பைன்னு பின்னூட்டம் வந்தா அது அநாகரீகம்.

பகுத்தறிவு புல்லரிக்க வைக்குது போங்கண்ணா

Anonymous said...

லக்கியிடம் வேறு என்ன எதிர்பார்த்தீர்கள்?

எல்லாம் தெரிந்த கதைதானே!

இவர்களுக்கு பிடிக்காவிட்டால் ஆபாசம், அநாகரீகம். இவர்கள் செயலலிதா முதல் செயேந்திரர் வரை என்ன பேசினாலும் "ஆதாரம்", "நாகரீகம்".

இவர்கள் தமிழ் இணையத்திற்கு ஒரு சாபக்கேடு!

said...

//இந்துமதத்தை குப்பைன்னு கோவிகண்ணன் பதிவே போட்டார்.அது நாகரிகம்.விவாத களத்தில் சிலபதிவுகள் குப்பைன்னு பின்னூட்டம் வந்தா அது அநாகரீகம்.

பகுத்தறிவு புல்லரிக்க வைக்குது போங்கண்ணா//

இந்து மதத்தில் குப்பைகள் இருக்கிறது என்று போட்டு இருப்பேன். இந்து மதமே குப்பை என்றேல்லாம் போடவில்லை ஐயா. எதையாவது சொல்லி என் மீது சேறுவாரி இறைக்க உங்களுக்கு மகிழ்ச்சியாக இரூந்தால் தாராளமாக செய்யுங்கள். குப்பை இருக்கிறது என்று சொல்லு எனக்கு சகிப்புத்தன்மை இருக்கிறது. உங்களுக்கு குப்பையை கொட்டுவது பிடிக்கவில்லை என்றால் எனது கமெண்டை பொருட்படுதத வேண்டாம்

said...

நீங்க அங்க என்ன பின்னூட்டம் போட்டீங்க என்பதை சொல்லுங்க மொதல்ல...

பிறகு அதுல அநாகரீகம் இருக்கா இல்லையான்னு நாங்கள்ளாம் சொல்றோம்...

said...

குழலி,

மக்கள் மேல் பாசம் உள்ள தலைவன் செய்த செயல் அல்ல இந்த ஹெல்மெட் விவகாரம்! மக்கள் மேல் பாசம் உள்ளவர்கள் மே 31ஆம் தேதியே ஹெல்மெட் இடுவதும் இடாமல் இருப்பதும் அவர் அவர் விருப்பம், போலீஸ் மக்களை தொந்தரவு செய்யாது என்று சொல்லியிருந்தால் நான் வரவேற்று வாழ்த்தியிருப்பேன், எத்தனை பேர் ஹெல்மெட் வாங்க இறுதி நாள் வரை காத்திருந்தார்கள், சூன் 1ஆம் முழுவது 5000 பேருக்கு தண்டனை கொடுத்து மக்களை பயபடுத்தி ஹெல்மெட் வாங்க வைத்துவிட்டு, 2ஆம் தேதி சைலன்டா வேணும் என்றால் போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்வது, நிச்சயமாக உள்ளே ஒரு பணம் விளையாட்டு நடந்தற்கான ஆதாரம்! இதை நான் மட்டும் சொல்லவில்லை, என் நன்பர்களும், பல பதிவர்களும், டீ கடை பெஞ்சு மக்களும் இதையே தான் சொன்னார்கள். இது போன்ற Basic சந்தேகங்கள் தான் என்னை இந்த பின்னூட்டமிட தூண்டியது! இதில் அநாகரீக இருப்பதாக எனக்கு தோண்றவில்லை!

விஜயகாந்த், ஜெயலலிதா என்று தன்னை எதிர்ப்பவர் எல்லாவரையும் என்ன ஆதாரம் வைத்து குடிகாரர்கள் என்று கருணாநிதி கூறினார்? என்ன முகாந்திரம் இருந்தது அதை சொல்ல.... கண்டிப்பா மு.க விடம் இருந்த ஆதரங்களைவிட மக்கள் எண்ணம் என்ற ஒரு ஆதாரத்தை வைத்து தான் அந்த பின்னூடம் போட்டேன் , இப்பொழுதும் சொல்கிறேன் அதில் தவறுள்ளதாக தெரியவில்லை!

said...

இந்த பதிவுக்கு என்ன ஆனானி கூட்டம் அதிகமா இருக்கு??

கரூர், சேலம் சம்பவங்களை தொடர்ந்து கருத்தை சொல்லக்கூட அனானியா வரும் மக்களை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு!

said...

ரவி,

என் கமென்ட் கிட்டதட்ட இது போல ஒன்று தான் ??

//
//இந்த கட்டாய ஹெல்மெட் வற்புறுத்தலை பற்றி உங்கள் கருத்து என்ன?//

தலைவருக்கு நல்ல கட்டிங் கரெட்டா கிடைத்திருக்கும். வேற விசயம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்//

Exacta சொல்லமுடியவில்லை! இதில் ஏதாவது அநாகரீகமா இருக்கா ரவி??

Anonymous said...

/இந்து மதத்தில் குப்பைகள் இருக்கிறது என்று போட்டு இருப்பேன். இந்து மதமே குப்பை என்றேல்லாம் போடவில்லை ஐயா./

இது இரண்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்றுதான் தெரியவில்லை.

தேவாரம், திருவாசகத்தை கொளுத்த வேண்டும் என எழுதுங்கள். ஏன் என்றால் குப்பையைதானே கொளுத்துவார்கள்? அப்படி எழுதிவிட்டு வரும் பின்னூட்ட குப்பைகளை கணக்கிட்டு மே மாத வெயிலில் அக்கினி பறக்கிறது என பூரித்து புளகாங்கிதமடையுங்கள். ஆனால் "விவாத களத்தில் குப்பை" என ஜெய் எழுதினால் பொங்கி எழுந்து வந்து பின்னூட்டம் போடுங்கள்.

நீங்க எழுதினா அக்கினி, இன்னொருத்தன் எழுதினா குப்பை அப்படித்தானே?

said...

//இது இரண்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்றுதான் தெரியவில்லை.//

இரண்டுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு வேறுபாடுகள் தெரிந்திருந்தால் என்றைக்கோ குப்பைகள் வெளியில் கொட்டப்பட்டு மக்கி போயிருக்கும். வேறுபாடுதெரியாதவர்கள் எப்படி விளங்க வைக்க முடியுமோ ?

தேவாரம் திருவாசகத்தை போற்றுவதற்கு அவற்றை முறையாக போற்றி அதன் புனிதம் கருதி பயன்படுத்த வேண்டும். அப்படி சிதம்பரத்தில் அதற்கு அங்கே அனுமதி இல்லை என்னும் போது அதை வைத்து பெருமை பேசுவதால் சிவனுக்கு என்ன பெருமை வந்துவிடப்போகிறது ? வேண்டாதவற்றை போகி அன்று கொளுத்துவது தானே வழக்கம் ?

நான் லக்கி செய்தது சரி என்று சொல்லவில்லை. ஆனால் அடுத்தவரை குறை சொல்லும் முன்பு தன் பக்கம் ... சரி விளக்கி மட்டும் விளங்கிடவாப்போகிறது.
:(

said...

லக்கி... லக்கி.... லக்கி...

ஒரு தரம்... ரெண்டு தரம்... மூனு தரம்.

லக்கி வந்து இந்த ப்ளாக் பதிவை படிக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்!

லக்கி எங்கிருந்தாலும் வரவும்!

said...

கோவி,

//
//Anonymous said...
மா சிவக்குமார் போட்ட போதாவது சில விவாதங்கள் நடந்தது,மிச்சமெல்லாம் தேவையில்லாத குப்பைகள்.
//

டிபிஆர் ஜோசப் ஐயா கூட நல்ல விவாதங்களை அமைத்தார். ஒட்டு மொத்தமாக எல்லோர் மீதும் சேறு அடிக்கும்மேற்கண்ட பின்னூட்டத்தை அனுமதித்தது நாகரீகமா ? அநாகரீகமா ?//

நான் இதை ஆமோதிக்கவில்லையே! கருத்து சுதந்திரம் அந்த அனானிக்கு உண்டு என் பதிவில். டி.பி.ஆர் ஜோசப் ஐயாவின் அமைத்த விவாதகளம் நல்லதா ? இல்லையா என்று உங்க கருத்தையும் சொல்லுங்க! அனானி அவர் கருத்தை சொல்கிறார். அந்த பின்னூடம் அநாகரீகமா இல்லை அதனால் வெளியிட்டேன்! அவ்வளவு தான்!

///இந்து மதத்தில் குப்பைகள் இருக்கிறது என்று போட்டு இருப்பேன். இந்து மதமே குப்பை என்றேல்லாம் போடவில்லை ஐயா./

இது இரண்டுக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம் என்றுதான் தெரியவில்லை.
//


அனானி ஐயா, இரண்டுக்கு நிறைய வித்தியாசம் இருக்கு! கோவி சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்.இந்து மதத்தில் நிறைய குப்பைகள் இருக்கு! உதாரணத்துக்கு சாதி பிரிவுகள், சாதிக்கேற்றார் போல் மதிப்பு, கோவிலுக்கு செல்ல அனுமதிப்பது என பல உள்ளன! அவைகள் குப்பைகளே! அவைகளை அகற்றினால் இந்து மதமும் பயனடையும், மக்களும் பயனடைவார்கள்! அதை புரிந்து கொள்ளுங்கள் அனானி அவர்களே.

said...

அனானி ஐயா,

கோவியை பற்றி எழுதிய சில கருத்துக்கள் சரி என்று தோண்றாததால், கடைசியாக வந்த அனானி பின்னூட்டம் பிரசுரிக்கப்படமாட்டாது. அதுவும் அல்லாமல் மதம் பற்றிய விவாதம் இந்த பதிவில் வேண்டாம் என்று நினைக்கிறேன். இங்கே நான் இட்ட பின்னூட்டம் அநாகரீகமானதா இல்லையா என்பதை மட்டும் சொல்லுங்க. ப்ளீஸ் வேண்டாமே வேறு விவாதங்கள்!!

said...

அன்பு ஜெய் ஸார்

இதனால்தான் நான் அந்தப் பக்கமே போகாமல் இருக்கிறேன். தம்பி லக்கி என்னதான் நட்பாக இருந்தாலும் எழுத்தென்று வந்தவுடன் உடன்பிறப்பாக மாறி விடுகிறார். அதுதான் பிரச்சினை..

நீங்கள் எழுதியிருப்பது குற்றச்சாட்டு. அநாகரீகம் அல்ல. இது லக்கி அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் வெளியிட்டால் அவருடைய இதய தெய்வத்தைக் குற்றம்சாட்டுவது போல் அவருக்கு உள்ளது. குற்றச்சாட்டேதான் என்பது நமக்கும் தெரியும். ஆனால் அதை வெளியிட அவர் மனம் ஒப்பவில்லை. எந்த வார்த்தையை வெளியிட்டு பின்னூட்டத்தை நிறுத்துவது என்று யோசித்தவர் அவசரத்தில் அது அநாகரீகம் என்று சொல்லிவிட்டார்.

ஜெய் உங்களுக்கு வந்துள்ள கட்டிங் பற்றிய சந்தேகம் எனக்கும் அப்போதே வந்தது. ஆனால் நான் எழுதிய ஹெல்மெட் பற்றிய கட்டுரையின் நோக்கம் அரசியல் அல்ல என்பதால் அதைப் பற்றி நான் எழுதவில்லை. இமற்றபடி கட்டிங் மேட்டர் நடந்துள்ளது என்று இப்போதும் நான் உறுதியாக உங்களைப் போலவே நம்புகிறேன்..

மற்றபடி இது ஒரு தமிழ்மணத்தின் விவாதக் களம்.. இதில் லக்கி போன்ற கட்சி சார்ந்தவர்களின் பங்களிப்பு நியாயமான கருத்துக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன்.

நான் எனக்குத் தோன்றியதை எழுதப் போய் அது எப்படி எங்கள் தலைவனை நீ குறை சொல்லலாம் என்று லக்கி கோபித்துக் கொள்ள நட்பு கெட்டுப் போய் விடுமே என்பதால்தான் நான் என் பதிவிலேயே எதுவாக இருந்தாலும் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறேன்..

வலைத்தளத்தில் இப்போது நம் முன் எழுந்துள்ள முக்கியக் கேள்வியே நட்பு பெரிதா? கொள்கை பெரிதா என்பதுதான்.

யார் யாருக்கு எது வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொண்டால் நல்லது..

ஜெய் ஸார்.. எனக்கு நட்புதான் பெரியது..

ஸோ.. லக்கியிடமிருந்து தூரமாகவே நிற்கிறேன்.. அவ்வளவுதான்.

said...

உண்மை தமிழன்,

//வலைத்தளத்தில் இப்போது நம் முன் எழுந்துள்ள முக்கியக் கேள்வியே நட்பு பெரிதா? கொள்கை பெரிதா என்பதுதான்.

யார் யாருக்கு எது வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொண்டால் நல்லது..//

இது தமிழ்நாட்டு சாபக்கேடு! கொள்கை சண்டை நட்பை பாதிக்கக்கூடாது! கேள்வி பட்டிருக்கிறேன் எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இறுதிவரை நட்பு பாராட்டினார்கள் என்று, ஆனால் இன்று எதிர்கட்சிக்காரனை நட்பு ரீதியா சந்தித்தாலே கட்சியை விட்டு வெளியேற்றும் சமுதாயமாக மாறியிருக்கிறது! எனக்கு லக்கியுக்கு நட்பு உண்டு! ஆனால் கருத்து சண்டை இந்த நட்பை ஒன்றும் செய்யாது என்று நினைக்கிறேன். நட்புக்காக நம் கருத்தைவிடுவது மிக தவறு! நம் கருத்தை புரிந்துகொள்ளாத நட்பு நட்பே அல்ல என்று நினைக்கிறேன்.
:)

Anonymous said...

உங்கள் கருத்தை பற்றி இவர்கள்
தி.ம.க - அநாகரீகம்
அ.தி.ம.க - நாகரீகமோ இல்லையோ ஆனா சூப்பர்
காம்கிரஸ்- நாகரீகம் இல்லை
பா.மு.க - ஆதாரம் இல்லாத பேச்சு.
தே.மு.த.க - நாகரீகமோ இல்லையோ ஆனா உண்மைன்னு நினைக்கிறோம்.
மற்றவை் - நாகரீகம். டி.விய போல இலவசமா ஹெல்மெட் கொடுக்காதது அநாகரீகம்.

said...

///வலைத்தளத்தில் இப்போது நம் முன் எழுந்துள்ள முக்கியக் கேள்வியே நட்பு பெரிதா? கொள்கை பெரிதா என்பதுதான். ////

கம்மான் கைஸ்...ஏன் இப்படி சீரியஸாக எடுத்துக்கொள்கிறீர்கள்...?

ஒரு கட்சியை ஆதரித்தால் நமக்கு உருப்புடியாக ஏதாவது காரியம் ஆகும் என்றால் அந்த கட்சியை ஆதரிப்பதில் தவறில்லை...

அது தான் என்னோட கொள்கை...

மற்றபடி நமது கொள்கைக்கு எதிர்ப்பான கருத்துக்கள் வரத்தான் செய்யும்...

அதை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ஜஸ்ட் லைக் தட் தாண்டிப்போகவேண்டியது தானே...

இந்த பதிவின் பின்னூட்டங்களை பாருங்க...இங்க அழுத்துங்க

பாருங்க, இப்போ ஜெ வை திட்டாதவங்க யாரு இருக்கா ? அதுக்காக எல்லோரிடமும் போய் வக்காலத்து வாங்க முடியுமா, நான் அ.தி.மு.க அப்படீங்கறதால ?

அப்படியே ஜாலியா லைட்டா எடுத்துக்கிட்டு போகவேண்டியது தான்...:)

said...

//லக்கி... லக்கி.... லக்கி...

ஒரு தரம்... ரெண்டு தரம்... மூனு தரம்.

லக்கி வந்து இந்த ப்ளாக் பதிவை படிக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்!

லக்கி எங்கிருந்தாலும் வரவும்!//

பாத்துட்டேன் தோழர் கருப்பு. சொல்றதுக்கு ஒண்ணுமில்லை :-)))))

Anonymous said...

லக்கி எப்போதுமே தன் தலைவரை விமர்சித்து வரும் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை.
உதாரணமாக நடுநிலை வாந்திகள் என்று சமீபத்தில் தன் தலைவனைபோல மற்றவர்களை விமர்சித்து ஒரு பதிவு
வெளியிட்டு இருந்தார். அந்த பதிவு சமீபத்தில் ஒரு போலீஸை அதிமுகவினர் கொளுத்தமுயன்றதற்காக வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சி எல்லோராலும் கண்டிக்கப்பட்டது.

அதற்கு நான் அவருடைய பதிவில் இட்ட பின்னூட்டம் இதுதான்

"இது எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதிதான்!.

வயசான காலத்தில் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வெண்ணீராடை மூர்த்தி மாதிரி இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசி, தன் பேரன்களைப்போல தமிழகத்தில் கலவரங்களை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறார்.

போகிற காலத்தில் ஆட்சிக்கு வந்து ஏதாவது நல்லது செய்து புண்ணியம் தேடாமல், இதெல்லாம் இவருக்கு தேவையா?

தினகரன் கருத்துக்கணிப்பால், கலவரம் நடந்து மூன்று உயிர்கள் பலியானபோது சும்மா கைகட்டி வாய் பொத்தியிருந்த காவல் துறையினர், இந்த கொடும்பாவி எரிப்பு சம்பவத்தின் போதும் அதே மாதிரி இருந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆளும் கட்சி கிண்டினா அல்வா, மத்தவன் கிண்டினா களியா?
என்னடா உங்க ஊரு நியாயம்!"

ஆனால் இதை அவர் தன் பதிவில் வெளியிடவில்லை. இது மட்டுமல்ல இது போல பல பின்னூடங்களை அவர் வெளியிடவில்லை.

நீங்கள் வேண்டுமானால கருணாநிதியை,
"தானைத்தலைவன், தங்கத்தமிழன், சங்கத்தமிழன், மற்றவர்க்கு சங்கூதும் தமிழன்" என்று எழுதிப்பாருங்கள் ஒருவேளை வெளியிட்டாலும் விடுவார்.

said...

//....மற்றவர்க்கு சங்கூதும் தமிழன்".....//

ha ha ha Anony romba kusumbu, sandhadi saakula unmaiya solreengale, itha eppadi veli iduvanga.

Anonymous said...

yov mandu ippo nee veliyittirukkum pinnoottangale solludhe nee anagarigamanavan dhan endru

said...

///பாத்துட்டேன் தோழர் கருப்பு. சொல்றதுக்கு ஒண்ணுமில்லை :-)))))//


இதற்கு அர்த்தம், நீங்க வேண்டும் என்று தான், என் பின்னூட்டத்தை அநாகரீக பின்னூட்டம் என்று சொன்னதாக எடுத்துக்கொள்ளலாமா லக்கி அவர்களே??? வேண்டும் என்றே என் மீது சேர் வாரிவீசும் பின்னூட்டம் போட்டதாக எடுத்துக்கொள்ளவா??

said...

அட்வைஸ் கொடுத்த அனானிக்கு நன்றி!!!

பி.கு: இந்த பதிவு லக்கியிடமிருந்து நியாயத்தை எதிர் பார்த்து அல்ல!!! நான் ஒன்றும் அநாகரிமாக எழுதவில்லை என்று எடுத்துச் சொல்லவே!

துவக்கிய பயனிலிருந்து திசை மாறிச் செல்லும் தமிழ்மணம் விவாதகளம் குறித்து என் ஆதங்கத்தை எடுத்துச் சொல்லவே!

பின்னூட்டமிட்ட அனைவருக்கு நன்றி!

Anonymous said...

Mr jaishankar
I totally support your view
please explain your friend what is democracy and it's uniqueness.

thank you for your service

said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்...:)

//இப்படித்தான் கட்சி சார்ந்து விவாதங்களை நடத்தி விவாதகளத்திற்க்கு எதிர்கருத்துள்ளவர்களை வெளியேற்றி, தான் சொன்னது தான் சரி என்ற மாயை உருவாக்குவார் என்பதை தெள்ளத்தெளிவாக நிரூபித்துவிட்டார் நன்பர் லக்கிலுக் அவர்கள்!//

ஒருவேளை, கொஞ்ச நாள் சன் டி.வி.யில இருந்திருப்பாரோ?

//கரூர், சேலம் சம்பவங்களை தொடர்ந்து கருத்தை சொல்லக்கூட அனானியா வரும் மக்களை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு!//

:)

என்கிட்ட ஏற்கனவே ஒரு தலைக்கவசம் இருக்கு. இருந்தாலும் சட்டப்படி போகலாம்ன்னு(!!!) இன்னொரு தலைக்கவசம் வாங்க போனா, அது ஒரு கொள்ளையடிக்கும் இடத்துக்கு போனது போல இருந்தது. இருந்தாலுன் நான் கேட்ட மாடல் இலையென்பதாலும், தற்போது அது தேவை இல்லை என்பதாலும் வாங்கவில்லை. பின் தான் தெரிந்தது, நல்லவேளை வாங்கவில்லை என்று. கலைஞரை நம்பி எதுவும் செய்யமுடியாது போல.

//இது தமிழ்நாட்டு சாபக்கேடு! கொள்கை சண்டை நட்பை பாதிக்கக்கூடாது! கேள்வி பட்டிருக்கிறேன் எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இறுதிவரை நட்பு பாராட்டினார்கள் என்று,//

மதியின் ஒரு கார்ட்டூன் தான் நியாபகத்திற்கு வருகிறது.

அ.தி.மு.க - "அடிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்" தி.மு.க - "திருப்பியடிக்கும் முன்னேற்றக் கழகம்".

லக்கி பதிவுல போய் பின்னூட்டம் போட்டா, அதற்கு பதில் சொல்ல மாட்டார். மாறாக குரங்குக்கும் எனக்கும் ஜீனில் எவ்வளவு வித்தியாசம் இருக்குன்னு தான் பதில் போடுவார், of course, எந்த வித்தியாசமும் இல்லை என்றாலும்...

விடுங்க கண்டுக்காதீங்க ஜெய். நீங்க கேட்டது தப்பேயில்லை.

said...

//துவக்கிய பயனிலிருந்து திசை மாறிச் செல்லும் தமிழ்மணம் விவாதகளம் குறித்து என் ஆதங்கத்தை எடுத்துச் சொல்லவே!//
லேட்டா புரிஞ்சிகிட்டாலும் லேட்டஸ்டா புரிஞ்சிகிட்ட அண்ணன் ஜெய்யுக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓ போடுங்கப்பா..

Anonymous said...

லக்கிலுக்கின் சார்புகளும், தீவிர கலைஞர் ஆதரவும் தெரிந்தவை.நீங்கள் இந்தக் கேள்வியை தமிழ்மணத்திடம் கேட்டிருக்க வேண்டும்.விவாதக்களம் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாகி
விட்டது.சிவக்குமார் நடுநிலையாளர், கருத்து வேறுபாடுகளை மதிப்பவர்.லக்கிலுக் திமுக தொண்டன் என்பதைத் தாண்டி சிந்திக்க மறுப்பவர். அவர் இடுகைகளின் தரம் என்ன?.
தமிழ்மணம் திராவிட இயக்க அனுதாபிகளையும், ஆதரவாளர்களையும் முன்னிறுத்த விரும்புகிறது. அது தன்னை விமர்சிப்பவர்களையும், நடுநிலையாளர்களையும் விரும்புபதில்லை.எனவே லக்கிலுக்கிற்குக் பதிலாக தமிழ்மணம் குழலியை அல்லது கருத்து ரீதியாக தமிழ்மணத்துடன் ஒத்திருப்பவரைப் போடும். விவாதக்களத்தினை புறக்கணியுங்கள். தமிழ்மணம் ஒரு நடுநிலையாளரை
மட்டுறுத்துனராகப் போட்டால் மட்டும் பங்கெடுங்கள். என்னுடைய பல பின்னூட்டங்கள் விவாதக்களத்தில் ஏற்கப்படவில்லை. அதில் தனி நபர் தாக்குதல் இல்லை. விவாதக்களத்தில் விவாதப் பொருள் குறித்த துவக்க குறிப்பினை விமர்சித்திருந்தேன், விவாதம் உருப்படியாக
னடைபெற இப்படி ஏனோதானோவென்ற குறிப்புகள் உதவா என்று எழுதியிருந்தேன். இதையே
லக்கியால் பொறுக்க முடியவில்லை. எனவே உங்கள் நேரத்தினை லக்கிகள், குழலிகள்,கோவி.கண்ணன்களுடன் இது குறித்து விவாதித்து வீணாக்க வேண்டாம். தமிழ்மணம் உங்களை விட அவர்கள் சார்பாகவே இருக்கும். இது கசப்பான உண்மை.

said...

என் பின்னூட்டமும் வரலீங்கோ. ஏதோ spam filter தடுத்து நிறுத்திடுச்சாம்.

நான் ஒண்ணும் spamaல :(

wethepeople, பின்னூட்டத்தை தடைய மாடரேட்டருக்கு உரிமை உண்டு. ஆனால், அநாகரீகம்னு ஒரு குத்தல் விடாம செஞ்சிருக்கலாம் :)