கட்டாய ஹெல்மெட் சட்டம் வாபஸ்?

ஜூன் 1ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கடுப்பேத்தின அரசு, இன்று நைசா கை நழுவுதுங்க!!! 99% பேர் வாங்கி போட்டுக்கிட்டாங்க, நல்ல கலெக்ஷன் ஆயிடுச்சு என்றது, இன்று மாலை அறிக்கை விடுறாங்க, போக்குவரத்து காவல் அதிகாரிங்க ஹெல்மெட் அணிவதை கட்டாய படுத்த மாட்டாங்களாம், சும்மா ... அன்பா அட்வைஸ் பண்ணுவாங்களாம்...

பல தரப்பட்ட மக்கள் கிட்ட இருந்து வந்த கோரிக்கை ஏற்று நைசா எஸ்கேப் ஆகுதாம் அரசு???

அடப்பாவிகளா இதை ரெண்டு நாள் முன்னாடி சொன்னா என்ன உங்களுக்கு !!! நல்லா இருங்கடா !

பி.கு:

ஹெல்மெட் போட்டா உங்க உயிருக்கு தான் நல்லதுன்னு அரசுக்கு பின்னாடி ஜல்லியடிக்க சென்ற உடன்பிறப்புக்களே, உங்களுக்கெல்லா என் பதில் என் உயிரை இவ்வளவு நாள் அரசு காப்பாத்தல, இனிமேலும் இந்த மாதிரி அரசு காப்பாத்தாதுன்னு தெரியும், அதனால க்லோஸ் த டோர்!!!

பி.கு:

அரசே இந்த கட்டாய ஹெல்மெட் மாதிரி, எங்க கையில் உள்ள காசை கரெக்ட் பண்ண வேற ஏதாவது நல்ல ஐடியா இருக்கா??

Comments

Unknown said…
துக்லக் ஆட்சியின் துயர்கள்
Unknown said…
துக்லக் ஆட்சியின் துயர்கள்
Kalaingar is Known for like this.

Where as, Jey asked every residence to put Rainwater harvesting. It was big success. And now, everywhere, for new residence it is mandatory. She never went back on this issue. She was very stubborn thou lot of ppl opposed it, as it was mandatory.

I think, Kalaingar is lacking in these kind of decision making abilities.
We The People said…
சிவா சார்,

கருணாநிதியின் இது போன்ற தேவையற்ற வேலையில் கட்டிங் முயற்சி செய்யாமல் உருப்படியா வேலை ஏதாவது செய்யலாம். இந்த ஹெல்மெட் 100% சில்லறை சம்பாதிக்க செய்த மேட்டர் என்று நினைக்கிறேன். ஏற்கனவே ஒரு முறை இதை கொண்டுவந்து தோல்வி யடைந்த விசயம் தான் இது! நிச்சயம் Some kickback behind this move. He kept fingures crossed till a day after D Day and say its not compulsory! some fishy thing around this order.
Sir,

You mean to say, the law itself lacking qualities? I do not think so. But he should have implement this in a better way.

And every one knows all politicians know for bribes/commission/etc etc... So It is obvious.
உயிர்களுக்கு மரியாதை அவ்வளவுதான்.

நாளை விபத்து ஏற்படும்போது அரசாங்கத்தின் தலை உடையாது, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவரின் தலைதான் உடையும். காயம்பட்டவரை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று வைத்தியம் பார்ப்பது என்று பொது மக்களின் வரிப்பணம்தான் செலவாகும்.

ஹெல்மட் போடுவது தமது சொந்த நலனுக்கு என்று மக்கள் உணர வேண்டும்.

இந்த சட்டத்தை அரசு கண்டிப்பாக அமுல் செய்ய வேண்டும்.

உலகிலேயே ஹெல்மட் அணியாமல் பயணம் செய்ய அனுமதிக்கும், விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் (பாக்கிஸ்தான், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ, லைபீரியா, இன்னும் சில மேற்காபிரிக்க நாடுகள்) இந்தியாவும் ஒன்று.
//இந்த சட்டத்தை அரசு கண்டிப்பாக அமுல் செய்ய வேண்டும். //

I do agree..
///////////////////
அரசே இந்த கட்டாய ஹெல்மெட் மாதிரி, எங்க கையில் உள்ள காசை கரெக்ட் பண்ண வேற ஏதாவது நல்ல ஐடியா இருக்கா??
///////////////////

இது ஒரு நல்ல கேள்வி. . . .


இப்ப ஹெல்மட் வியாபாரிகள் எல்லாம் சந்தோஷமா இருக்காங்க, அதானல அரசாங்கத்துக்கு சந்தோஷம்.
Anonymous said…
அட பாவிங்களா! தலைக்கவசம் உலகத்தில் பல நாடுகளில் கட்டாய பாவனையில் உள்ளது. அதன் பயன் ஏன் இந்தியாவில் புரியப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது?

புள்ளிராஜா