மீள்பதிவு: பாக்கெட் உணவு பொருட்கள் உஷார்!

சில நாட்களுக்கு முன் பலசரக்கு அங்காடிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க போயிருந்தோம், என் மகன் ஒரு பெட்டி Lay's Stax எடுத்துவந்து, அப்பா, இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லு? Zero Added Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கனும் என்று பெரிய ஆள் மாதிரி ஒரு மேட்டரை கேட்டான்!!! போன மாதம், என் மகனுக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வைஸ் அது!!! நான் மறந்துவிட்டேன், என் மகன் ஞாபகம் வைத்து கேட்டான்!!! ஆச்சர்யமாக இருந்தது!!! இந்த தகவல் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் உபயோகமா இருக்கும் என்று தோன்றியதால் இந்த பதிவு.

Hydrogenated Trans Fat & Partially hydrogenated oils:

Trans Fat இயற்கையாகவே பசுவின் பாலில் 2 - 5% சதவீதம் இருக்கும். ஆனால் Hydrogenated Trans Fat என்பது செயற்கையாக செய்யப்படும் Trans Fat. இது பசு, எறுது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும், சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது!!!
இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து!!
இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL)) சத்தை குறைத்து, கெட்ட கொழுப்பு (Low-density lipoprotein (LDL)) சத்தை இருமடங்காக உயர்த்தி நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது!!!

பல எதிர்வினைகளையும் உண்டாக்கும் கொழுப்பு!!! இது இருதய நோய்(coronary heart disease), Cancer, Diabetes மற்றும் உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு. Partially hydrogenated oils என்பது இந்த கொழுப்பிலிருந்து தயாரிக்கபடும் எண்ணை. நாம் உபயோகிக்கும் ஃப்ரென்ச் ஃப்ரைஸ், பாக்கெட்டில் கிடைக்கும் உருலைகிழங்கு சிப்ஸ் வகைகள், பீட்ஸா, சாக்லெட் என் துவங்கி பல வகையான துரித உணவு வகைகள் தயாரிக்க உபயோகிக்கப்படுகிறது!!!

இத்தனை தீங்குள்ளது என்று தெரிந்தும் ஏன் இந்த கம்பெனிகள் உபயோகிக்கிறது இந்த Partially hydrogenated oils/Hydrogenated Trans Fat ?

  • இந்த எண்ணைகள் பல முறை திரும்ப திரும்ப உபயோகித்தாலும், தயாரித்த உணவில் மணம் மாறாது!
  • 18 மாதம் வரை வேண்டுமானாலும் இதில் தயாரித்த கெட்டுப் போகாமல் வைத்துக்கொள்ள முடியும். சாதாரண எண்ணையில் தயாரித்தது 3 நாட்களுக்கு மேல் தாங்காது!!
  • இந்த எண்ணையில் தயாரிக்கும் போது கிடைக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணமே!! நீங்களே கூட நினைத்திருக்கலாம் நம்ம வீட்டுல செய்யற ஃப்ரென்ச் ஃப்ரைஸ் மெக் டொனால்ட், மேரி ப்ரெளன், பீஸா கார்னர்களில் கிடைக்கும் அளவுக்கு சுவை இல்லை என்று!!!

பல முன்னேறிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் இந்த Hydrogenated Trans Fat உள்ள உணவுகளை தடை செய்து வருகிறது!! மெக் டோனால்ட், KFC போன்ற பல நிறுவனங்கள் இன்று இதை உபயோகிப்பதால் பல கோடி டாலர்கள் வழக்குகளில் போராடிவருகின்றன!!! சில நிறுவனங்கள் ஏப்ரல் 2007 முதல் இந்த எண்ணைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் உத்தரவாதங்களும் தந்திருக்கின்றன, அட இந்தியவில இல்லைங்க, அமெரிக்காவிலே!!! இந்தியாவில் இன்றும் மெக் டோனால்ட், KFC போன்றவை சுதந்திரமாக இந்த எண்ணை உபயோகித்து நம் ஆரோக்கியத்தை அழித்து வருகிறது.

நீங்க செய்யவேண்டியது என்ன?

இனி நீங்கள் வாங்கும் குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ், ப்ரெச் ஃரைஸ் என எதை வாங்குவாதா இருந்தாலும் அதில் Hydrogenated Trans Fat = Zero (0) , Zero Added Hydrogenated Trans Fat , Zero Hydrogenated Vegitable Oil இவைகளில் ஏதேனும் லேபிலில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு பொருட்களை வாங்குங்கள்!!!

டாப் 10 Hydrogenated Trans Fat உள்ள உணவுகள் இங்கே சொடுக்கவும்.

உபரி தகவல்:

உங்கள் வீட்டில் பூரி மற்றும் Deep Fry செய்யப்பட்ட மிச்சம் ஆகும் எண்ணையை திரும்ப உபயோகித்தாலும் அந்த உணவு பொருட்களில் இது போன்ற Hydrogenated Trans கொழுப்பு நிறைந்துவிடும். அதனால் ஒரு முறை உபயோகித்த எண்ணையை திரும்ப உபயோகிக்காமல் இருப்பது நல்லது!!! வீட்டு உபயோகத்தில் இந்த கொழுப்பை கட்டுப்படுத்த பல நல்ல தகவல்கள் இங்கே சொடுக்கவும்.

10 comments:

said...

தகவலுக்கு நன்றிகள்.

said...

நல்ல பதிவு தல...

ஆனா... இடையிடையே ஆங்கிலச்சொற்கள் கலப்பு இல்லாமல் எழுதி இருக்கலாம்.

வாழ்த்துக்கள்

said...

மதுசூதனன் நான் சென்னைவாசிங்க! நன்றி மதுசூதனன்,முத்துலெட்சுமி.

பாலாபாய் ஆங்கிலசொற்களுக்கு தமிழாக்கம் என்னிடம் இல்லாத காரணம் மற்றும் சில விசயங்கள் தவிர்க்கமுடியாதவை :)

அடுத்த முயற்சியில் சரி செய்யலாம் ஜீ! ஓ.கே வா..

said...

இதுக்குப் பயந்துக்கிட்டுதானே மெக்டோனால்ட்ஸ் பக்கம் தலை காமிக்கறதே இல்லை:-)

said...

Jai Anna,
I am waiting at the Tamilmanam Gate for the Paa.Ka.Sa. Post!
To-day is Friday. Only 2 days are left.
When you are going to post it?

P.S. A young guy from Delhi ia also waiting along with me!!!!:-))

said...

வாத்தியார் சார்,

உங்க ஆவல் எனக்கு புரியுது! நாளைக்கு வைத்துக்கொள்வோம் பா.க.ச பதிவு! என்ன சொல்லறீங்க!! பதிவு ரெடி!!!

said...

ஓக்கே!
மதியம் 12 To 2ற்குள் பதிவிட்டு விடுங்கள்
அதற்குப் பிறகு என்றால் என் நண்பர் கோயிந்து தூங்கப் போய் விடுவார்

said...

வாத்தியார் ஐயா,

உங்கள் சித்தம். கண்டிப்பா போட்டுத்தள்ளுவோம் கோயிந்துவை!!

said...

முக்கியமான பதிவு இது. உங்கள் நட்சத்திர வாரத்தில் இதை மீள்பதிவிட்டது மிகப் பொருத்தம். உயிர் கொல்லி உணவுகள் என்ற உங்கள் பழைய பதிவின் சுட்டியையும் இடுங்களேன், அதிலிருந்த பின்னூட்டங்களும் ஆர்வமிருக்கும் மக்களுக்கு உதவும்.

said...

நல்ல பதிவு. அமெரிக்காவில் குறிப்பாக நியுயார்க் இந்த எண்ணெயை பயன்படுத்த தடை விதித்திருக்கிறது. ஆனாலும் இதனால் வரும் சுவையை எப்படி மாற்ருவழியில் கொண்டு வர முடியும் என்பது ஆய்வில் இருக்கிறது. இது அமலுக்கு வர இன்னும் இரண்டாண்டுகள் ஆகலாம். உணவுப்பொருட்களை படித்து வாங்கவே 4 மனி நேரம் ஆகிறது ஒவ்வொன்றாய் சின்ன எழுத்தில் உள்ள மூலப்பொருட்களை படிக்க எத்தனை சிரமம் ன்றுதான் நிறைய பேர் படிப்பதில்லை.