VA(A)Tட்டும் சேவைவரியும்

பலர் பல விதமாக இந்த மதிப்புக்கூட்டு வரியை பற்றி கருத்து கூறிவந்தாலும், உண்மையில் இந்த வரி நமக்கு லாபமா? கஷ்டமா? நஷ்டமா? என்ற கேள்விக்கு யாராலும் பதில் தெளிவாக சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. வியாபாரிகள் சங்கம் இதனால் பொருட்களின் விலை கூடுகிறது என்று கூறிவருகிறார்கள், ஆனாலும் அவர்களால் சரியான புள்ளி விவரங்கள் தரமுடியவில்லை, ஏன்னெனில் விலைவாசியும் உயர காரணங்கள் பல காரணங்கள், அதில் முக்கியமானது ஆன்லைன் ட்ரேடிங், பின்னர் டீசல் விலை, சேவை கட்டணங்கள், வரி என பல. இந்த ஆன்லைன் ட்ரேடிங் எனப்படும் இணையவழி வர்த்தகத்தால் நடக்கும் அராஜகங்கள் பல, இதனால் அரசுக்கு நல்ல வருமானம் என்ற ஒரே காரணத்துக்காக அதை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கு என்பதே கொடுமை!

இன்றைய நிலையில், அனைத்து வித அத்தியாவசிய பொருட்களின் விலையும் 5 - 20 ரூபாய் வரை உயர்ந்து இருப்பது உண்மை! அரிசி, கோதுமை, பருப்பு முதல் காய்கறி வரை எல்லா பொருட்களும் விலையேற்றம், இந்த வரியால் மட்டும் அல்ல! சும்மா நம்ம முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில் 50 ரூபாய் இருந்த உழுத்தம்பருப்பு இப்ப 31 ரூபாய் தான் என்று, என்னதான் சப்பை கட்டு கட்டினாலும், மார்கெட்டில் கிடைக்கும் நல்ல உழுத்தம்பருப்பின்(தனியார்) விலை ரூ61/- (நேற்று தான் வாங்கினேன் அதனால தான் தெரிந்தது). இப்படி ஒப்பீட்டு கதைவிடுவதால் ஒரு பயனும் இல்லை, பத்திரிக்கைக்கு ஒரு அறிக்கை என்ற விதத்தில் வேண்டுமானால் நல்லா இருக்கும்!! எது எப்படியானாலும் பாதிப்பு நமக்கு மட்டும் தான்! அதாவது நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனைகள்!

உண்மையில் வாட் வந்ததால், மாநில அரசுக்கு வரியில் வருவாய் பெரும் இழப்பு என்ற நிலை இப்ப, அதனால் இப்ப நம்ம பா.சிதம்பரம் ஒரு சூப்பர் சிறப்பான திட்டம் போட்டு மாநிலத்துக்கு வருமானத்தை தரப்போவதாக சொல்கிறார். எப்படின்னு கேட்கறவங்களுக்கு?

வருகிற ஏப்ரல் முதல், மத்திய அரசு 44 வகையான அத்தியாவசிய சேவைகளை சேவை வரி வட்டத்துக்குள் சேர்க்க உள்ளது. அந்த சேவை வரியை முழுமையாக 100 சதவீகிதமும் மாநில அரசுக்கு கொடுக்கப்போறாங்களாம். மாநில அரசுக்கு சம்பாத்தியம் ஓ.கே! அதை கொடுக்கப்போவது யாரு தெரியுமா?? நம்ம தாங்க!!! எப்படின்னு கேட்பவர்களுக்கு சில உதாரணம் கீழே!

அந்த 44 சேவைகளில் மருத்துவர்களின் கட்டண சேவை வரி, மருத்துவ சோதனை சேவை வரி, வழக்குறைஞர்களுக்கு சேவை வரி, கேளிக்கை கூடங்கள் சேவை வரி, கேளிக்கை விடுதிகளுக்கு சேவை வரி, கேளிக்கை பூங்காக்கள் சேவை வரி, சினிமா நட்சதிரங்களுக்கு சேவை வரி என பன்முனை தாக்குதலுக்கு தயார் ஆகிவருகிறது நிதியமைச்சகம்! இவை வரும் ஏப்ரல் 1, 2007 முதல் அமலுக்கு வருகிறது! இதற்கு பா.சி சொல்லும் சில காரணம் இவர்களின் வருமானம் கணக்கு காட்டப்படாமல் இருக்கிறது! இவர்கள் சேவை கட்டணம் கணக்கு வெளிவருதில்லை என பல கதை சொல்லப்படுகிறது!

இனி உங்க மருத்துவரிடம் சென்றால் உங்க மருத்துவர், தன்னுடைய கட்டணம் + 12.24% சேவை வரியையும் உங்க கிட்ட வாங்க போறாங்க!! அதாவது என் குழந்தை நல டாக்டர் ரூ200க்கு பதில் இனி ரூ 225.00 வாங்க போறாரு!!! அதே போல தான் இனி ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கு 12.24% சேவை வரி விதிக்கப்படும்.

சரி மந்திரி சார், இந்த கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் வருமான வரி செலுத்தவில்லை என்று சேவை வரி கொண்டுவரும் உங்களுக்கு , அந்த சேவை வரியை மருத்துவரோ, மருத்துவ சோதனை கூடமோ கட்டப் போவதில்லையென்று உங்களுக்கு தெரியாதா? அதை கட்டப்போவது அந்த மருத்துவரிடமோ/பரிசோதனை நிலையத்துக்கு நோய் என்று போகும் ஏழை எளிவரே என்று தெரியாத உங்களுக்கு??

இனி நம்ம ஓய்வு நாட்களை பொழுது போக்க எம்.ஜி.எம், வீ.ஜி.பி , மாயாஜால் போன்ற இடங்களுக்கு போனால் 12.24% சேவை வரி நீங்க தரவேண்டியிருக்கும். அதாவது எம்.ஜி.எம் டிக்கெட் விலை ரூ 300 என்றால் இனி நம்ம தரவேண்டியது ரூ 337.00 மட்டுமே!!!

ஏற்கனவே சத்தமில்லாமல், கேட்டரிங் எனப்படும் விசேஷங்களுக்கு சமையல் சேவை செய்பவர்களுக்கு, சலவை கட்டணத்துக்கு என 33 வகை சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்ட்டு நம்மிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

இப்படி ஏழை மற்றும் நடுத்தர மக்களை கசக்கி பிழிந்து தான் இந்த அரசை நடத்த முடியுமா? ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை மட்டும் கசக்கி பிழிந்து, பணக்காரர்களை பாதுகாக்கும் ஒரு அரசு நமக்கு தேவையா? இதுக்கெல்லாஅம் ஒரு விடுவு காலம் வாராதா??? நம்ம நிதியமைச்சரிடம் ஒன்று செய்ய சொல்லலாம் :

இப்படி பல டைப்புல வரியை கண்டுபிடித்து, அதை எங்க அதை தூக்கிப்போட்டு, எதுக்கு கஷ்டப்படறீங்க, நாங்க பேசாமா, உங்ககிட்ட மொத்த சம்பளத்தையும் கொடுத்திடறோம், நீங்களா பார்த்து ஏதாவது பிச்சை போடுங்க எடுத்துட்டு போய் எங்கயாவது பொழச்சுக்கறோம் என்று!!! ஓ.கே சொல்லுவாரா??


மொத்ததில் VAT வந்ததால் என்ன லாபம்? என்ற கேள்விக்கு பதில் அரசுக்கு லாபம் மக்களுக்கு சாபம் என்று தான் என்னால் சொல்லமுடியும்.

பி.கு:
நம்ம நிதி அமைச்சர் பா.சி இன்னும் பல சூப்பர் ப்ளான் வைத்து இருக்காருங்க! சேவை வரியை 25% ஆக்கி, ஐரோப்பிய நாடுகளுக்கு இணையா சேவை வரியை விதிப்பது! அது அடுத்த திட்டம், அனேகமாக அது இந்த நிதியாண்டில் இருக்காது என்பது நமக்கு ஒரு ஆறுதலான விசயம்.

என் நன்பர்கள் சில பேர் 25% சேவை வரி கட்டுபவர்கள்! அவர்கள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கானடா என பல நாடுகளில் வாழ்கிறார்கள், அவர்களுக்கு கிடைக்கும் சில அரசு சலுகைகள் இவை:
  • குழந்தைகள் கல்வி பள்ளி இறுதியாண்டு வரை அரசு ஏற்றுக்கொள்கிறது!
  • குறைவான செலவில் மேல் கல்விக்கு உதவி
  • சீரான சாலைகள், குழிகளில்லா சாலைகள்
  • சுகாதாரமான வாழ்க்கை சூழல்
  • இலவச மருத்துவ வசதி
  • சோஷியல் செக்யூரிடி என்ற பெயரில் வேலையில்லை என்றால் உணவுக்கு காசு!
  • வயது முதிர்ந்த குடிமக்களுக்கு ஓய்வு ஊதியம்
  • இன்னும் பல...
இதில் எவை நம் மக்களுக்கு கிடைக்குதுங்க மிஸ்டர் மினிஸ்டர்!

6 comments:

said...

ஒரு கவிஞன் எழுதினான்.

"இலவச வேட்டி வாங்கப் போனேன்
இடுப்பு வேட்டியைக் காணவில்லை"

அதிகாரத்தில் இருப்பவர்களை நாம் எப்படிக் கேட்கமுடியும்?

மூக்கைச் சிந்திகொண்டு கட்ட வேண்டியதுதான்.

இடுப்பு வேட்டியாவது மிஞ்சும்!

said...

ஸ்டார் டெஸ்ட்டிங், ஸ்டார் டெஸ்டிங்!!

said...

* இதுவரை வரியற்ற 150 பொருட்கள் வரி விதிப்புக்கு உள்ளாகின்றது.

** உள்ளமைப்பு மற்றும் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள் வாங்கும்/விற்கும் அம்மாநிலத்தினுள்ளே இருந்தால் வரி தள்ளுபடி உண்டு. எனவே, உள் மாநில வர்த்தகம் மேன்பாடு அடையும்.(அப்ப மாநிலங்களிடையே வர்த்தகப் பரிமாற்றம் தடுக்கப்படும் என்கிறதா 'இந்திய அரசு'...அதன் நோக்கம் தான் என்ன!!!)

*** சிறு வணிகர்கள் என்ற அளவு பத்து லட்சம் ரூபாய் அளவிற்கு ஏற்றப்பட்டு விட்டது என்று மகிழ்வாய் சொல்கிறார்கள்.
ஒரு சாதாரண மளிகைக் கடை ஒரு மாதத்திற்கு 20 மூட்டை அரிசி வாங்குகிறது. மாதம் ஒன்றிற்கு 20 x 2500 = Rs.50000. ஆகவே வருடத்திற்கு சுமார் ஆறு லட்சம் வெறும் அரிசி வாங்கி விற்றதிலேயே போய் விடுகிறது.

இந்த 10 லட்சம் என்ற எல்லை லாபத்திலிருந்தால் சரி...10 லட்சம் என்பது வர்த்தக பரிவர்த்தணை ( turn over) கொண்டே கணிக்கப் படுவதால் நிலமை மோசம் தான் அடையும்..

இப்படி நிறைய நான் சொன்னால் தனிப்பதிவாய் போகும்..

முத்தாய்ப்பாக மளிகைக்கடை வைத்திருக்கும் நண்பர் சொன்னார்.

"ஐயா! விலை ஏற்றம் என்பது வியாபரிகளிடம் தான் உள்ளது! எனவே, எவ்வடிவில் வரி வந்தாலும் பாதிப்பு மக்களுக்கே! நாங்கள் எதிர்ப்பு காண்பிப்பது எங்களை கணக்கு கேட்காதே என்று மட்டும் தான்.! எங்களுக்கும் தெரியும் வணிகத் துறை அதிகாரிகள் கண் மற்றும் 'கை' கட்டும் ரகசியம்."

said...

//அவர்களுக்கு கிடைக்கும் சில அரசு சலுகைகள் இவை:

குழந்தைகள் கல்வி பள்ளி இறுதியாண்டு வரை அரசு ஏற்றுக்கொள்கிறது!
குறைவான செலவில் மேல் கல்விக்கு உதவி

சீரான சாலைகள், குழிகளில்லா சாலைகள்
சுகாதாரமான வாழ்க்கை சூழல்
இலவச மருத்துவ வசதி
சோஷியல் செக்யூரிடி என்ற பெயரில் வேலையில்லை என்றால் உணவுக்கு காசு!
வயது முதிர்ந்த குடிமக்களுக்கு ஓய்வு ஊதியம்

இன்னும் பல...
இதில் எவை நம் மக்களுக்கு கிடைக்குதுங்க மிஸ்டர் மினிஸ்டர்!//


இன்று அரசாங்கம் பெறும் வரிப்பணத்தில் எவ்வளவு சதவிகிதம் மக்கள் நலப்பணிகளுக்காக செலவிடப்படுகிறது என்று பார்க்கவேண்டும். இது பற்றாக்குறையாக இருந்தால், பிறகு மக்களிடம் மேலும் வரி பெறாமல் அரசாங்கம் எப்படி சமூகப் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த முடியும்?

அவர்களிடம் அட்சயப் பாத்திரம் ஏதும் இல்லையே?

முதலில் சமூகப் பாதுகாப்பு கொடு பின்னர் வரி தருகிறேன் போன்ற வாதங்கள், முதலில் முட்டை வந்ததா இல்லை கோழி வந்ததா வகையைச் சேர்ந்தவையே.

கொடுக்கும் நிலையில் இருக்கும் எனக்கு இது பெரிய விடயமாகத் தெரியவில்லை. அடித்தட்டு மக்களின் சுமையை குறைக்கும் பொருட்டு 12.5% பதிலாக 4% அல்லது 5% வரி என்று சிறிய சதவிகிதத்தில் ஆரம்பிக்கலாம்.

said...

//முதலில் சமூகப் பாதுகாப்பு கொடு பின்னர் வரி தருகிறேன் போன்ற வாதங்கள், முதலில் முட்டை வந்ததா இல்லை கோழி வந்ததா வகையைச் சேர்ந்தவையே.//

ஐயா பெத்த ராயுடு இப்ப நாம் வாங்கு ஒவ்வொறு பொருளிலும் நாம் வரி கட்டறோம்! சில நேரடி வரி, சில மறைமுக வரி! வாங்கனதுக்கு என்ன செய்தார்கள் இவர்கள்!! ஒவ்வொறு MP முதல் கௌன்சிலர் வரை கோடீஸ்வரர்களானது தான் மிச்சம்! நமக்கு ஒன்று உண்மையில் வரவில்லை என்பது ஆதங்கம்! எங்களுக்கு சமூக பாதுகாப்பு வேண்டாம் எங்க பாக்கெட்க்கு பாதுகாப்பு போது! உள்ள ஒரு ரூபாய், ரெண்டு ரூபாயையும் அள்ளிக்கிட்டு போகாம இருந்தா போதும்!

//அவர்களிடம் அட்சயப் பாத்திரம் ஏதும் இல்லையே?//

இது உங்க அறியாமையை காட்டுகிறது! இன்றைய நிலையில் ஏழை மற்றும் மிடில் கிலாஸ் நம்மிடம் பிடிங்கிக்கொண்டு, பணக்காரனை சும்மா ஜாலியா வாழவைக்க தான் பட்ஜெட்! ஏ.ஸிக்கு வரி விலக்கு கொடுக்கும் அரசு,யாரை வாழவைக்கும்!!!

said...

நல்ல பதிவு ஜெய். keep it up