நன்றி நன்பர்களே!

என்னை நட்சத்திரமாக ஒரு வாரம் வலம் வர செய்த தமிழ்மணத்துக்கு என் முதல் நன்றி!

என்னை நட்சத்திரமானதற்கு வாழ்த்திய அனைத்து வலைப்பதிவர்களுக்கும் நன்றி!

இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தமுடியவில்லை என்ற ஆதங்கம் இன்று எனக்கு உண்டு! நேரமின்மை காரணமாக எழுதிய பதிவுகளை கூட சரி செய்து வெளியிட முடியவில்லை! சரி விடுங்க விரைவில் எல்லா பதிவையும் வெளியிடுவோம்! பதிவு வெளியிட நட்சத்திரமாக வேண்டிய அவசியம் இல்லையே!

நன்றி மக்களே! இந்த நன்றியை சொல்லும் வேளையில் என் ஆசை மீண்டும்:

  • சாதி, மதம், ஏற்றத்தாழ்வுகள் இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்க நம் பாடுபட வேண்டும்!
  • கீழ் சாதி என்று மேல்சாதியும், மேல் சாதி என்றும் கீழ் சாதி ஒருவரை ஒருவர் சொல்வதை நிறுத்தி அனைவரும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்க திட்டமிடுவோம்!
  • என் மதம் சிறந்தது! உன் மதம் தாழ்ந்தது என்று வெட்டியாக மதச்சண்டையிடுவதை நிறுத்து அனைவரும் இணைந்து ஒரு ஒப்பற்ற இந்தியாவை உருவாக்குவோம்!

2 comments:

said...

//பதிவு வெளியிட நட்சத்திரமாக வேண்டிய அவசியம் இல்லையே!//

அதானே!

said...

சிறப்பான வாரத்தை அளித்ததற்கு நன்றிகள்....
பாகச பதிவு சூப்பர்...ஆனா நாந்தான் லேட்டா வந்துட்டேன்.

சென்ஷி