MPக்களே ரொம்ப சந்தோஷம் சாமீ!!!

கடந்த மே 5ஆம் தேதி பாராளமன்றத்தில் வருமை ஒழிப்பு பற்றி ஆலோசனை செய்ய பாராளமன்றம் கூட்டப்பட்டது! அதில் ஜனநாயத்தின் தூண்களான நம் அருமை MPக்கள் அசத்திட்டாங்கன்னா பாருங்களேன்!! கேட்டதும் ஆடிப்போயிட்டேன்!!!!

வருமை ஒழிக்க அலோசனை சொல்லி அசத்திட்டாங்கன்னு, நீங்க பாட்டுக்கு ரொம்ப ஓவரா சிந்திச்சுபுடாதிங்க சார்!!!

545 பேர் கொண்ட பாராளமன்றத்தில் அன்றைய அலோசனைகள் துவங்கும் நேரத்தில் வெறும் ஆறு MPக்கள் மட்டும் ஆஜர், பின்னர் வந்து சேர்ந்தவர்கள் மற்றொரு ஆறு பேர்!!! எப்படி!!!! அசத்தப்போவது யாரு??!!

வந்த அந்த பனிரெண்டு பேர் யாருன்னு கேட்பீங்கன்னு தெரியும்:(வந்த வரிசையில்)

1. டாக்டர். சித்ரா மோகன் (காங், திருப்பதி)
2. பத்ருஹரி மஹதாப் (பீ.ஜே.டி, கட்டக்)
3. பேராசிரியர்.ராசா சிங் ராவத் (பி.ஜெ.பி, அஜ்மீர்)
4. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (காங், கான்பூர்)
5. நவீன் ஜின்டால் (காங், குருஷேத்ரம்)
6. ப்ரான்சிஸ் ஃபாந்தோம் (காங், நியமன உருப்பினர்)
7. சி.எஸ்.சுஜாதா (சி.பி.எம், மாவேலிக்கரா)
8. சி.கே.சந்திரப்பன் (சி.பி.ஐ, திருசூர்)
9. கே.எறான் நாயுடு (தெ.தேசம், ஸ்ரீகாகுலம்)
10. பி.கே. ஹன்டிக் (காங், ஜோர்ஹத்)
11. பா.சிதம்பரம் (காங், சிவகங்கை)
12. ஜெய்ராம் ரமேஷ் (காங்) - இவர் ராஜிய சபா உறுப்பினர் எனபது குறிப்பிட தக்கது. (இவர் ஆள் குறைவா இருக்கு அவை நடக்கன்னு மணி அடித்தப்பின் உள்ளே ஓடிவந்தவர், அதுக்கு முன்னாடி எங்க இருந்தாருன்னு தெரியவில்லை)

இதில் கொடுமை என்னவென்றால் குறைந்தபட்சம் 10 சதவிகித MPக்களாவது (55 பேர்) வரவேண்டும் அவை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற :( வந்தவர்கள் வெறும் 2 சதவீதம் கூட இல்லை!!!!

நம்ம பாராளமன்ற உறுப்பினர்களுக்கு என்னமா மக்கள் மேல அக்கரைன்னு இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்க மக்களே!!!

தமிழ்நாட்டுல தான் டி.வி, 1(2) ஏக்கர் நிலம்ன்னு எல்லாம் கொடுத்து வறுமையை சுத்தமா ஒழித்துவிட்டதால் நம்ம தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி MPக்களும் போகவில்லை, வெளிநாட்டவர் பிரச்சனை நமக்கு எதுக்கு சைலன்டா ஜகா வாங்கிடாங்க போல... அட சிதம்பரம் இருந்தாரே சொல்லவறீங்களா? ஏங்க அவர் தாங்க வருமை ஒழிப்பு பத்தி பேசனும், ஏன்னா, அவர் தான் நம்ம நிதியமைச்சராமே (இந்தியாவுக்கே)! அதனால வேற வழி இல்லாம வந்தாரா இல்லை தெரியாம வந்திட்டாரான்னு யாராவது கேட்டு சொல்லுங்கப்பா!!!

இறுதியில் வருமை ஒழிப்பு ஆலோசனை கூட்டம் ஒழிக்கப்பட்டு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக கேள்வி! அதுவும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை ஏன்னென்றால் பாராளமன்றத்தில் ஏற்கனவே மே 15 வரை அலுவல்கள் திட்டமிடப்பட்டிருப்பதாக பாராளமன்ற நடவடிக்களுக்கான அமைச்சர் ஏற்கனவே கருத்து சொல்லிருந்தாராம் :((((

நம்ம அரசியல்வாதிகள் மற்றும் அசத்தல் MPக்களில் ஏழை மக்கள் மேல் உள்ள பாசத்தை நினைக்கும் போதே எனக்கு புல்லரிக்குதுபா!!! உங்களுக்கு???!!!

பி.கு: இந்தியாவில் 2004-2005 வருட கணக்கு படி, சுமார் 23% மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர் என்று National sample survey organisation (NSSO). அதாவது 23 கோடி மக்களின் ஏழ்மை நிலையை ஒழிக்க ஆசைப்படும் பாராளமன்ற உறுப்பினர்கள் வெறும் 12 பேர்... என்ன கொடுமை சார் இது!!!

நன்றி: Deccan Chronicle, chennai edition

4 comments:

said...

நா.ஜெ. ஸார்..

வறுமையை ஒழிக்க வேண்டும் என்று மீட்டிங் போட்டு அதற்கு வறுமையில் உழல்பவர்களை அழைத்தால் ஓடோடி வருவார்கள்.. வறுமை என்றாலே என்னவென்று தெரியாத இராஜகுமாரர்களை அழைத்தால் எப்படி வருவார்கள்?

அதுதான் நீங்களே டைட்டில் வைத்திருக்கிறீர்களே உருப்படாத ஜென்மங்கள் என்று.. அதேதான்..

said...

//வறுமை என்றாலே என்னவென்று தெரியாத இராஜகுமாரர்களை அழைத்தால் எப்படி வருவார்கள்?//

கரெக்ட் தாங்க உண்மை தமிழன். இதுங்களுக்கெல்லாம் ஓட்டுப்போட்டு அனுப்பறோமே நம்மை சொல்லனும் :(

Anonymous said...

//We The People said...
//வறுமை என்றாலே என்னவென்று தெரியாத இராஜகுமாரர்களை அழைத்தால் எப்படி வருவார்கள்?//

கரெக்ட் தாங்க உண்மை தமிழன். இதுங்களுக்கெல்லாம் ஓட்டுப்போட்டு அனுப்பறோமே நம்மை சொல்லனும் :(

//


பின்னுடம் இடம் போது இதை எழுததுரீங்க ஆனா எலெக்திோன் நேரத்துல DMk or ADMK .

said...

//பின்னுடம் இடம் போது இதை எழுததுரீங்க ஆனா எலெக்திோன் நேரத்துல DMk or ADMK//

அட உங்களுக்கு விசயம் தெரியாதா நான் இதுவரை அ.தி.மு.க & தி.மு.க இரண்டு கட்சிக்கு ஓட்டுப்போட்டது கிடையாது! நம்ம ஓட்டு வீண் ஓட்டு, உபயோகமில்லாம தான் போகுது! அடுத்த தபா "ஓ" வந்தா என் கருத்தும் வெளிவர துவங்கும்!!

வருமையை ஒழிக்கறதுக்கு முன்னாடி இந்த கொள்ளையர்களை ஒழிக்கனும் என்பது என் ஆசை :)