நாளைய தீர்ப்பு - தினகரன் ;)

தினகரன் நாளிதழும் ஏசி நீல்சனும் இணைந்து நடத்தும் கருத்து கணிப்பில் நாளை கருணாநிதியின் அரசியல் அடுத்த வாரிசு யார் ? என்று வெளியிடப் படும் என்று நம்ம கோவி கண்ணன் பதிவு போட்டிருக்காரு!

என் ஆருடம் (ஆருடம் எனக்கு தெரியாவிட்டாலும்!) முடிவு இப்படித்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்!

1. ஸ்டாலின் - 46.4 %
2. தயாநிதி மாறன் - 46%
3. ஆற்காடு வீராசாமி - 4%
4. மற்றவர்கள் - 3.6%

இதில் 5% ஏற்றமோ இறக்கமோ இருக்கக்கூடும் ;)

உங்க கருத்தை சொல்லுங்க ப்ளீஸ் ;)

19 comments:

said...

ஜெய்சங்கர் சார்,

கட்சியிலும் சரி பொது மக்களிடமும் சரி "ஸ்டாலின்" தான் என்பது என் எண்ணம்.

தயாநிதி செல்ல வேண்டிய தூரம் வெகு தொலைவு. அவரை வாரிசு என சொன்னால் அது திமுக வின் அழிவு ஆரம்பித்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

கட்சியில் இருப்பவர்கள் கருத்து கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

said...

சிவபாலன் சார் இன்னுமா தினகரன் & ஏ.சி.நீல்சன் மக்கள் நினைப்பதை தான் கருத்துக்கணிப்பின் பேரில் போடறாங்கன்னு?? ஐயோ பாவம் சார், உலகம் தெரியாம இருக்கீங்க போல ;)

சிவபாலன் சார் இந்த கருத்துக்கணிப்பே தயாநிதி மாறனை முன்னிலைப்படுத்ததான் என்று நினைக்கிறேன்! கருணாநிதியின் வாரிசு யார் என்று மட்டும் கருத்துக்கணிப்பு நடத்தினால் பிரச்சனை ஆகிவிடும் என்று ஆத்தோட போகறமாதிரி வேறு சில கருத்துக்கணிப்பும் நடத்தினாங்கன்னு நினைக்கிறேன் :)

sundaram ayyangar said...

அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவது நியாயமென்றால் , கோவிலில் மணியாட்டுவதற்கு எங்கள் வாரிசுகள் வருவது தானே நியாயமாக இருக்க முடியும்?
அவருக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா?

said...

கலைஞரின் கலை வாரிசு கனிமொழிய எப்படி சாமி விட்டீங்க? ;)

said...

பொன்ஸ் அவங்க கலைவாரிசு! உங்களுக்கு புரியலையா? நாளைய தீர்ப்பு யார் அரசியல் வாரிசு என்பது தான்?!! ;)

said...

அன்பழகன் - 2%
ஆற்காட்டார் - 1.5%

said...

//
Boston Bala said...

அன்பழகன் - 2%
ஆற்காட்டார் - 1.5%

//
+

durai murugan - 1.25 %
ponmudi - 1 %
Ko Si Mani - 0.75%

said...

கருத்து கணிப்புக்கு ஒரு கருத்து கணிப்பா? அதுவும் ஒரு டுபாக்கூர்(போலி) கருத்து கணிப்புக்கு!!!;-(

said...

ஏ.சி நில்சன் குழுவை உலகப்புகழ் பெற்ற என்ற அடைமொழி இல்லாமல் எழுதியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். ;)

said...

சிறில் அலெக்ஸ் 100%

என்னை உருவாக்கிய என் பெற்றோர் 'கலைஞர்'கள் இல்லியா

ஹி ஹி ஹி

said...

//2. தயாநிதி மாறன் - 46%//

தயாநிதி : (கலாநிதி) அண்ணன் காட்டிய வழியம்மா .. இது அன்பால் விளைந்த பழியம்மா . :))

said...

ஜெய், கடைசியில் கனிமொழியும் வந்தாச்சு.

அழகிரி அண்ணனை ஆட்டத்துலேயே சேர்க்காத உங்களைத் தேடி மதுரைலேருந்து ஆட்டோ வந்திட்டிருக்காம் ;)

said...

//அழகிரி அண்ணனை ஆட்டத்துலேயே சேர்க்காத உங்களைத் தேடி மதுரைலேருந்து ஆட்டோ வந்திட்டிருக்காம் ;)//

பொன்ஸ் நானே அந்த பயத்துல தான் இருக்கே நீங்க வேற டென்ஷனாக்காதீங்க :(((

//மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் தாக்குதல்-2 பேர் பலி. 7 பஸ்களுக்கு தீ வைப்பு//

2 உயிர் அவ்வளவு சின்னதா தெரியுது அவர்களுக்கு!

எய்தவன் ஜாலியா இருக்க, அம்பு அல்பா ஆயுசுல போனது மிக கொடுமை! இதற்கும் ஆதரவு கும்பல் வரும் ஜால்ரா அடிக்க!!!

said...

ஐயா ஏன் இப்படி எல்லாரும் வந்து என்னை பயப்படுத்தறீங்க!

உண்மையா கொஞ்சம் பயமா இருக்கு! நல்ல காலம் நான் சென்னையில் இருக்கேன்! என்னை ஆதரிக்க இங்க 2 கோஷ்டி இருக்கு ;)

said...

ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூஊஉ....

தம்பி! இங்கின வா! நாங்க மதுரை அஞ்சாநெஞ்சன் ஆட்டோ சங்கத்துல இருந்து வர்றோம்! இங்க "we the people" னு ஒருத்தர் இருக்காராம்ல,அவர் ஆபீச நீ காட்டு, நாங்க அவரக் கொஞ்சம் ஒரு காட்டு காட்டனும்,

அன்புடன்...
சரவணன்.

said...

//இங்க "we the people" னு ஒருத்தர் இருக்காராம்ல,அவர் ஆபீச நீ காட்டு, நாங்க அவரக் கொஞ்சம் ஒரு காட்டு காட்டனும்,//

யாரோ என் வலைப்பதிவை ஹாக் செய்து இந்த பதிவை போட்டிருக்காங்க பா!!!;)

விசாரணை நடக்குது... இப்படி சொன்னா தப்பிக்க முடியுமா??

kaveri ganesan said...

anne , enke maduraiele cabletv morning onwrads theriyale, iyo kapathunga, enne nadakuthu, maduraiele??

from 9 o clock morning onwards whole madurai totally off all cable connection.

whiats this??
where we are going ??
ethula vera thagaval puratichyam??

said...

//உண்மைத் தமிழன் said...
வீதபீப்பிள் அய்யா,

இன்னமும் உங்கள் அலுவலகத்துக்கு ஆட்டோவை உடன்பிறப்புகள் அனுப்பி வைக்கலையா? போட்டோ வேற போட்டிருக்கிங்க. சாக்கிரதையா இருங்க ராசா.

Wednesday, May 09, 2007 4:14:00 PM//

நா.ஜெ. ஸார்.. நான்தான் ஒரிஜினல் உண்மைத்தமிழன்.. இந்த மேற்குறிப்பிட்ட கமெண்ட்ஸை சத்தியமாக நான் இடவில்லை. போலி.. போலி.. போலி..

http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_09.html - இந்த முகவரிக்கு வந்து பாருங்கள்.. தெரியும்..

ஏற்கெனவே குமரன், சற்றுமுன் பதிவில் சிந்தாநதி அவர்களுக்கு, டோண்டு ஸாருக்கு இப்போது உங்களுக்கு..

உண்மைத்தமிழனுக்கு ன்றைக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன்..

தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்..

said...

காவேரி கனேசன்,

இங்க போய் பார்த்து மதுரையில் என்ன நடக்குதுன்னு தெரிந்து கொள்ளுங்க :)))

//rom 9 o clock morning onwards whole madurai totally off all cable connection.//

அட நியூஸ் வெளிய வராம இருக்க இப்படி ஒரு வழியிருக்கா?? பாவங்க ஸ்டாலின் அந்த சூட்சமம் தெரியாது போல ;)