குலக்கல்வி - என்ன கொடுமை சார் இது!!!

இது என்ன கொடுமைன்னு புரியல... குழந்தைக்கு நாக பாம்பிடம் ட்ரெயினிங் கொடுக்கறாங்களாம்??!!! ஒரு சின்னக் குழந்தையை இப்படி செய்து தான் குலத்தொழில் கற்றுக்கொடுக்க வேண்டுமா??



சிறுபிள்ளையை பாம்புடன் விளையாட விட்டு வீடியோ பிடிக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள்!!! என்ன தான் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருந்தாலும்!!??

இந்த அறியாமை இருளில் இருக்கும் மக்களுக்கு என்று தான் விடிவு காலமோ!!!

Comments

கொடுமை ! படிப்பறிவு எவ்வளவு முக்கியமாக தேவைப்படுகிறது இதிலிருந்தால் வெளியில் வருவதற்கு !
MSATHIA said…
அய்யோ!! பார்ப்பதற்கே நெஞ்சு பதறுகிறது. முழுசா பார்க்கமுடியலை. கொடிது கொடிது இளமையில் வறுமை..
கண்ணன் சொன்ன மாதிரி படிப்பறிவு வந்தாதான் இதல்லாம் சரியாகும். நாம் கடக்கவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு.
ALIF AHAMED said…
நாமெல்லாம் பாம்புனு சொன்னாலே பத்தடி தூரம் எஸ்கேப் ஆவுர ஆளு
இந்த கொழந்த என்னமா விளையாடுது
:(



படுபாவி பயலுவோ கண்னுல கொத்திட்டா என்ன பன்னுறது
ஹும்
நாம் - இந்திய மக்கள்
We The People said…
//கொடுமை ! படிப்பறிவு எவ்வளவு முக்கியமாக தேவைப்படுகிறது இதிலிருந்தால் வெளியில் வருவதற்கு !//

இதுக்கெல்லாம் எங்க நம்ம அரசியவியாதிகளுக்கு நேரம், சொத்துச்சண்டையும், அடுத்த தலைவர் யார் என்று கொலை செய்யச்சொன்னா சூப்பரா செய்யறாங்க! வெட்டிப்பயலுக! ஆட்சியாளர்களுக்கு வரவேண்டும் இவர்களுக்கு படிப்பறிவு புகுத்த! அதெல்லாம் நடக்கும் என்ற ஆசை பகல் கனவு தான்!!!
Anonymous said…
ரொம்ப உனர்ச்சி வசப்பட வேணாம்
பாம்புக்கு பல் பிடுங்கப் பட்டிருக்கும்
மேலும் விஷப் பையிம் நீக்கப்பட்டிருக்கும்

மண்புழு மாதிரி தான்

மிருக வதைக்காக வேண்டுமானால் வருத்தப்படலாம்
We The People said…
//ரொம்ப உனர்ச்சி வசப்பட வேணாம்
பாம்புக்கு பல் பிடுங்கப் பட்டிருக்கும்
மேலும் விஷப் பையிம் நீக்கப்பட்டிருக்கும்

மண்புழு மாதிரி தான்

மிருக வதைக்காக வேண்டுமானால் வருத்தப்படலாம்//

அனானி,

நானே சொல்லியிருக்கேனே "என்ன தான் பல் பிடுங்க பட்ட பாம்பாக இருந்தாலுன்னு" படிக்கவில்லையா??

Cant you see it as child abuse??!! பாருங்க அந்த பாம்பு ஒவ்வொறு முறை கொத்தும் போதும் அந்த குழந்தை படும் பாடு!!! இது போன்ற படிப்பறிவின்மையால் செய்யும் கொடுமையையே எடுத்து சொல்லவிரும்பினேன்!

நன்றி பின்னூட்டமிட்ட அனைவருக்கும்.
ALIF AHAMED said…
Anonymous said...
மிருக வதைக்காக வேண்டுமானால் வருத்தப்படலாம்
///


அடபாவி குழந்தை வதையை பற்றி ஒன்னுமே சொல்லாம பாம்பைபத்தி கவலைபடுரீயே...:(
இதை நான் ஏற்கனவே பார்த்தேன். இவர்கள் செய்வது சரியா? பிழையா? இங்கே? வதை நடை பெறுகிறதா? என்பற்றை ஆராயாமல்; என் இளமைக்காலத்தில் வீட்டில் பெரியவர்கள்; சிறுகுழந்தைகளின்
அறியாமையையும்; பயமின்மையையும்...குறிப்பிட "ஓடும் பாம்பைப் பிடிக்கும் வயது எனக் குறிப்பிடுவார்கள். அதே ஞாபகம் வந்தது.
மேலும் இதில் 5 தடவைகள் இப்பாம்பு குழந்தையை கொத்துகிறது. இதில் ஒரு தடவை தன்னும்
குழந்தை அழவில்லை; அதாவது அக் கொத்து குழந்தைக்கு வலிக்கவில்லை.
நம் வீட்டில் நாயுடன் பிள்ளை விளையாடுவது போல்; இது பாம்புடன் விளையாடுகிறது.
அவ்வளவே!!...பல நகர்புற "தொலைக்காட்சிச் சீரியல்" அம்மாக்களுடன் ஒப்பிடும் போது இந்த
அம்மாவின் அன்புக்கு அப்படி ஒரு குறையுமிராது.
ஏன் ?முடிந்தால் வசதியை செய்து கொடுங்கள்!! நீங்கள் மகிழ இக்குழந்தையும் போமேரியன் நாயுடன் விளையாடும்.
நான் இன்னுமொரு காட்சி பார்த்தேன். கோவில் யானையிடன் பிள்ளைகளைக் கதறக் கதற ஆசி பெறுவது.அது கொடுமையோ கொடுமை...ஆனால் நம் படித்த ஆண்டவன் அறியாமை..அதை இலகுவாக
ஏற்றுக் கொள்கிறது.
இந்தப் பாம்பை விட அந்த யானை கொடியதென்பது...நம் இந்தியப் பக்திகண்ணுக்குத் தெரிய மறுக்கிறது.(பாரதியே இதற்குச் சாட்சி)
இதே பகுதியில் கேரளாவில் கோவில் யானையின் அடித்துத் துவைப்பைப் பாருங்கள்.
ஏழைகள் என்றதும் இந்த குறவர் இனம் உங்கள் ஏளன "உச் உச்" க்குள் ;சிக்கிய பரிதாபத்தைப் பார்த்து
எனக்கு உங்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.
இங்கே குலக்கல்வியை தேவையில்லாமல் தேடுகிறீர்கள்.
We The People said…
//ஏழைகள் என்றதும் இந்த குறவர் இனம் உங்கள் ஏளன "உச் உச்" க்குள் ;சிக்கிய பரிதாபத்தைப் பார்த்து
எனக்கு உங்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.//

ஐயா இங்கே எதை ஏளனம் என்கிறீர்கள்? நான் அறியாமை என்னும் கொடுமையால் பச்சிளம் குழந்தை பாம்பு பிடிக்கும் வித்தையை படிப்பிக்கும் படிப்பறியாமை இருளை ஒழிக்க வேண்டும், அதற்கு அரசும், அரசியல்வாதிகளும் தம் பணியை செய்வதில்லை என்ற விசயத்தை சொல்லவே இந்த பதிவிட்டேன்!

ஜோஹான்,

//முடிந்தால் வசதியை செய்து கொடுங்கள்!! நீங்கள் மகிழ இக்குழந்தையும் போமேரியன் நாயுடன் விளையாடும்.//

நாய்கள் வீட்டுப்பிராணிகளாக வளர்க்கபடுபவை! பாம்புகள் அப்படியா?

பின்னூட்டங்களுக்கு நன்றி.