என்னை தெரியுமா?

என்னையும் நட்சத்திரமாக் தேர்ந்தெடுத்து என்னை ஆச்சர்யப்படுத்திய தமிழ்மணத்துக்கு நன்றி சொல்லி முதலில் என்னை பற்றிய சிறு குறிப்புடன் என் பதிவுகளை துவங்குவோம் என்று நினைத்தேன் :)

பெயர்: ஜெயசங்கர் நா
வயது: 34
படிப்பு: பொறியியல் பட்டம்
தொழில்: மென்பொருள் ஏற்றுமதி

ஏன் வலைப்பதிவு:

நான் பொதுவா அரசியல் சார்ந்து எழுதுவதாக எல்லாரும் சொன்னாலும், நான் மக்கள் பிரச்சனை சார்ந்து எழுதுகிறேன்னு என்பதே உண்மை.

அரசியல் சாக்கடை ஆனதால், மக்கள் படும் அவதிகளை சொல்லும் பதிவே என் பதிவுகள், மக்கள் விழிப்புணர்வு பதிவுகள், ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட எழுத துவங்கினேன். என்னை தேசிய ஜல்லி அடிப்பவன் என்று பலர் சொல்லறாங்க! ஆமாம் என்று பெருமையா சொல்லிக்கிறேன். ஏன்னென்றால் நான் முதலில் இந்தியன், அப்புறம் தான் மற்றவைகள்...இதை ஜல்லி என்று சொல்பவர்கள் சொல்லட்டும், அது அவர்களின் சுதந்திரம் :)

என் தலைவன்:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொருத்தவரை தேசத்தின் தந்தை.

என் ஆதங்கம்:

இந்திய போராட்டத்தின் உண்மை தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டது! நேதாஜி, கப்பலோட்டிய தமிழன், சுப்பிரமனிய சிவா, பகத்சிங், ஆஸாத் போன்றவர்களுக்கு பற்றி இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் உண்மைகள் எழுதப்படவில்லை என்பது ஆதங்கம்!!

என் நீண்ட நாள் கனவு:

ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்புக்கு உதவி, வழிக்காட்டுதல், அதரவற்ற ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கு செய்ய வேலை, உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க இடம் என்ற் நோக்த்தோடு ஒரு பொது தொண்டு நிறுவனம் தொடங்கி என்னால் இயன்றளவு உதவி செய்வது.

எனக்கு வலையுலகில் பிடித்தது:

நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட ஒரு அருமையான தளம் என்ற வகையில் ரொம்ப பிடிக்கும். நம் கருத்து மற்றும் பிறர்கருத்தக்களை தெரிந்து கொள்ள, அதை அலசி ஆராய ஒரு ஒரு அரியதொரு தளம், வலையுலக நட்பு, என்று பல..

நான் வலையுலகில் வெறுப்பது:

சாதி, இனம், மதம் என்று சொல்லி வலைப்பதிவர்கள் சண்டையிடுவது.

சமீபத்திய ஆசை:

சாதி, மத, இன, கட்சி என பல காரணம் சொல்லி பிரிந்து கிடக்கும் அனைவரும் இணைந்து மக்களுக்கு நம்மால் ஆன உதவி செய்ய நினைப்பது.

என் வழி:
"I cannot speak anything but the truth. I cannot turn back on my duty, just to please some one. - சர்தார் வல்லப்பாய் பட்டேல் "


என் பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் பதிவை படிச்சீங்க!!

Comments

பராக் ! பராக் ! பராக் !

நட்சத்திர வணக்கம் !
வாழ்த்துக்கள் ஜெய்!
கலக்குங்க ஒரு வாரத்துக்கு.

//வயது: 34// ரொம்ப கம்மியா சொல்றாப்ல இருக்கு ;)

//படிப்பு: பொறியியல் பட்டம்//
முடிச்சிட்டீங்களா?
வாழ்த்துக்கள் ஜெய்!
Unknown said…
All the best jay.I Expect a great star week from you.
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.
நன்றி
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.
நன்றி
BadNewsIndia said…
வாழ்த்துக்கள் ஜெயசங்கர்!

//சாதி, மத, இன, கட்சி என பல காரணம் சொல்லி பிரிந்து கிடக்கும் அனைவரும் இணைந்து மக்களுக்கு நம்மால் ஆன உதவி செய்ய நினைப்பது.//

ரொம்ப நல்லது. தொடரட்டும் பணி!

வேண்டுகோள்: இதைப் பற்றி ஏதாவது (முடிந்தால்) எழுதுங்கள், இந்த நட்சத்திர வாரத்தில்: அனானிமஸும், STAR பதிவர்களும்

நன்றி!
இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சங்கருக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்...
சரவணன்.
வாழ்த்துக்கள் ஜெய்...
கலக்குங்க

சென்ஷி
We The People said…
வாழ்த்துக்களுக்கு நன்றி மக்களே!

அருள் ரொம்ப கும்சும்பு தான் உங்களுக்கு!! நானே 34 ரொம்ப ஜாஸ்தின்னு நினைக்கிறேன்.

வாங்க அருள் எங்க காலேஜுக்கு, அப்ப தெரியும் நான் முடிச்சனா இல்லையான்னு!!! ஹீ! ஹீ! ஹீ!! என் பெயரை சொன்னாலே காலேஜுல நல்ல மதிப்பு தான் இன்னைக்கு என்னை தெரியும்ன்னா பார்த்துக்கோங்களே!!
வாழ்த்துக்கள் தல..

மறைக்கப்பட்ட வரலாறுகளையும், புள்ளி விபர தகவல்கள் அடங்கிய வழமையான உங்கள் கட்டுரைகளையும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

////வயது: 34// ரொம்ப கம்மியா சொல்றாப்ல இருக்கு//

ரிபிட்டே... :-)
அறிமுகம் அருமை. தொடர்ந்து கலக்குங்க. வாழ்த்துக்கள்
இந்த வார நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக ஒளிவீச வாழ்த்துக்கள்!
RBGR said…
aநல்வாழ்த்துகள்..

நல்ல பதிவுகளை இப்பவாது எதிர்பார்க்கிறோம்...

:):):)

3 ஸ்மைலி..


அப்புறம் புதுபடத்தைப் புரபைலில் போட்டிருந்தால் இப்படி அருள் 34 ரொம்ப கம்மின்னு சொல்லிருப்பாரா!!?
என்ன அப்படம் எடுத்து ஒரு 10 வருடம் இருக்குமா!

தற்போதையப் புகைப்படத்தைப் போடவும்.

:)
//நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொருத்தவரை தேசத்தின் தந்தை.//
:-)

வாழ்த்துக்கள் We The People!
வாழ்த்துக்கள் ஜெய்!
//நல்ல பதிவுகளை இப்பவாது எதிர்பார்க்கிறோம்...//

தலை தமிழி!

சந்திப்பை மிஸ் பண்ணீட்டீங்களே.... செம அராஜகமா இருந்தது :-)))))

இனிமேல் வலைப்பதிவர் சந்திப்புகள் இந்த டைப்புலே நடந்தா நல்லா இருக்கும் :-)
வாங்க ஜெய் பட்டைய கெளப்புங்க !! :)) வாழ்த்துக்கள் !!
We The People said…
//நல்ல பதிவுகளை இப்பவாது எதிர்பார்க்கிறோம்...

:):):)//

யோவ் தமிழி அரஜகத்துக்கு கலாய்கறீங்களே!! ஏதோ எனக்கு தெரிந்த அளவு எழுதறேன் அது உமக்கு புடிக்கலையா??

:)
நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் ஜெய்.

நேதாஜி, சந்திரசேகர் ஆஸாத், சுப்ரமணியசிவா, பகத்சிங்ன்னு தீ மாதிரியான இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஆதர்சமாகக் கொண்டிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள். கலக்கல் வாரமாக பதிவுகள் தந்து ஜமாயுங்கள்!

அன்புடன்,

ஹரிஹரன்
RBGR said…
//லக்கிலுக் said...
//நல்ல பதிவுகளை இப்பவாது எதிர்பார்க்கிறோம்...//

தலை தமிழி!

சந்திப்பை மிஸ் பண்ணீட்டீங்களே.... செம அராஜகமா இருந்தது :-)))))

இனிமேல் வலைப்பதிவர் சந்திப்புகள் இந்த டைப்புலே நடந்தா நல்லா இருக்கும் :-)
//

லக்கியாரே!
தனிஅலுவல் காரணமாக பதிவர் சந்திப்புக்கு வர இயலாத, நான் அன்று நடசேன் ********* பூங்கா வழியாகத் தான் அன்று சென்றேன்.
:)
அப்போது தான் ஒன்றை கவனித்தேன்.
பதிவர் வட்டம் ...பதிவர் வட்டம் என்பதின் பொருள்.

நண்பர்கள் நீங்கள் எல்லோரும் வட்டமாய் அமர்ந்திருந்தீர்கள்.

//சந்திப்பை மிஸ் பண்ணீட்டீங்களே.... செம அராஜகமா இருந்தது :-)))))//


ஆமா! அராஜகம்ன்னு சொல்லி ஸ்மைலியும் போட்டிருக்கீங்களே!

ஒண்ணும் பிடிபடல..
We The People said…
This comment has been removed by the author.
We The People said…
வாழ்த்த வந்த லக்கி என்னை கலாய்ப்பதை வன்மையா கண்டிக்கிறேன் ;)

நன்றி நன்பர்களே!!
Anonymous said…
★ _/|\_
Anonymous said…
நட்சத்திர வாழ்த்துக்கள்.
சீனு said…
//வயது: 34//

அடடா! 44 மாதிரியே தெரியலையே? இளமையா இருக்கீங்க?

//சாதி, இனம், மதம் என்று சொல்லி வலைப்பதிவர்கள் சண்டையிடுவது.//

ஏது! தமிழ்மணத்தை மூட வைத்டுவிடுவிங்க போல இருக்கே!!

வித்தியாசமான பதிவு ஜெய்.
நீங்கள் ஸ்டார் பதிவரானதில் என்ன ஆச்சரியம், ஜெயசங்கர்,

நல்ல எண்ணங்களும், நல்ல எழுத்துக்களும் அங்கீகரிக்கப் படவேண்டும், நீங்கள் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றீர்கள்.

வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் நற்பணி.
Anonymous said…
வாழ்த்துக்கள்

//என் ஆதங்கம்:

இந்திய போராட்டத்தின் உண்மை தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டது! நேதாஜி, கப்பலோட்டிய தமிழன், சுப்பிரமனிய சிவா, பகத்சிங், ஆஸாத் போன்றவர்களுக்கு இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் உண்மைகள் என்பது ஆதங்கம்!!//

உண்மைத் தியாகிகளின் வரலாறு மறைகக்கப்பட்டதாகக் கூறுகிறீர்கள், நான் இந்தியாவைச் சேர்ந்தவன் அல்லாதவிடத்தும் அறிந்தவரையில் பகவத் சிங், சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்கள் இல்லாதிருந்தால் காந்தியால் கூட இந்தியாவின் சுதந்திரத்தினைக் கனவு கண்டிருக்கமுடியாது.
கதிர் said…
நட்சத்திர வாழ்த்துக்கள்!

இந்த வாரம் சிறப்பான ஒரு வாரமா மாற்றுங்கள்.
Anonymous said…
i am aasath

i haven't come for shaking hands with you.

Was the intentoin of Bose/INA unique factor for so-called got freedom ?

How Patel and Bose came to the same-line. This line may fall on Fundamentalism ?

Everyone could know the plan Patel on India after !947. But what is the plan of Bose for India after 1945 ?

aasath, Bagath, VOC, Siva, were difer from Bose and Patel.
Di you heard Utham singh, Thaalvar rebelions, Telungana (Patel had against them) Peaseants ?

Pls write about 1857 sepor minuity, 1806 vellore mutinity, Poligar wars, Thippu, Kattabomman, Vishwanatha Dass, Maphlaah rebels, Umaithurai, Marudhu Brors, Virupatchi gopalnayak, Kirushnappaa, Keralavarman, Thuntha-ji-waugh, Maapillai Vanniyan, Father Hyder, Hyder Ali, Siraj-Uth-Chowla, Jansi rani lakshmibai, Hazrath Magal, Thanthiya Thope, Ashim Mullah, Sundharalingam .... etc

And describe about Throgis of ettapppan, Thondaimaan, saraboji, Arcot nawab, Hyderabad Nizam, Gandhi, Bharathi, Savarkaar, Vajpayee, Maraathaas upto Manmohansinhg/Karunanithi....

If you start to talk about the problems of peoples, you should fight against recolonization. For example if you fight for a vessel of water on roadside, police should come for state. But state gave permissions to take the groundwater for Coca-Cola. While your struggle a bottled water company (MNC) 's vehicle come across, you should broken the way infront of it and destroy it. This action has the same of the attack on Americam embassy. So it is also political
We The People said…
வாங்க ஆசாத் சார் உங்களைதான் எதிர்ப்பார்த்தேன் வந்திட்டீங்க!! உங்க வழி நமக்கு சரிப்பட்டுவராது! நீங்க ஏதேத்தோ எழுதறீங்க, இவ்வளோ பெரிய ஸ்டெரர் எங்க கிடைக்குது தலைவா!! இப்படி ஆளை போட்டு கொழப்பறீங்க!

போட்டுத்தாக்குங்க!!
நடசத்திர வாழ்த்துக்கள்.இந்த வாரம் இனிய வாரமாய் அமையட்டும்
SP.VR. SUBBIAH said…
வாழ்த்துக்கள் ஜெய்சங்கர்!
வாரக்கடைசியில் பா.க.ச பதிவு ஒன்றைப் போட்டுவிடுங்கள்!
நட்சத்திர வாழ்த்துக்கள்
ஆக்கபூர்வமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்,
கொடுப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

ஜொலிக்க வாழ்த்துக்கள்.
சீனு said…
//வாங்க ஆசாத் சார் உங்களைதான் எதிர்ப்பார்த்தேன் வந்திட்டீங்க!! உங்க வழி நமக்கு சரிப்பட்டுவராது! நீங்க ஏதேத்தோ எழுதறீங்க, இவ்வளோ பெரிய ஸ்டெரர் எங்க கிடைக்குது தலைவா!! இப்படி ஆளை போட்டு கொழப்பறீங்க!

போட்டுத்தாக்குங்க!!//

நான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க ('அது தானே நமக்குள்ளே இருக்கிற ஒற்றுமை'-ன்னு சொல்லிடாதீங்க).
We The People said…
//மறைக்கப்பட்ட வரலாறுகளையும், புள்ளி விபர தகவல்கள் அடங்கிய வழமையான உங்கள் கட்டுரைகளையும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.//

//ஆக்கபூர்வமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்,
கொடுப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.//

என்னங்க வழ்த்தவருபவர்கள் எல்லாம் என்னை டென்ஷன் பண்ணிடுவீங்க போல.... என்னால முடிந்த அளவுக்கு தெரிந்த விசயம் எழுதலாம்ன்னு இருக்கேன்! எவ்வளவு தூரம் ஆக்கப்பூர்வமா இருக்கும்ன்னு சொல்லமுடியல... :(( :))
நட்சத்திர வாழ்த்துக்கள்!!
வாங்க வி த பீப்பிள்.
எங்கள் குரலை ஒலியுங்கள்.

:)

வித்தியாசமா அருமையா ஆரம்பிச்சிருக்கீங்க.
நட்சத்திர வாழ்த்துகள், நல்லதொரு நட்சத்திரத்தை எதிர்பார்க்கிறேன், ஆமா உங்களுக்கே வயசு 34னா எனக்கு என்ன 14?

நன்றி
We The People said…
வாங்க மணியன், அலெக்ஸ் அண்டு குழலி. வாழ்த்துக்களுக்கு நன்றி!

குழலி உங்களுக்கும் எனக்கு 20 வயசா வித்தியாசம் இருக்குன்னு சொல்லறீங்க? உங்களுக்கே நியாயமா இருக்கா?? 14வயசுல புள்ளக்குட்டிக்காரன் ஆகமுடியுமா?? அசத்தறீங்க! :)))))

அட நிஜமாவே எனக்கு 34 தாங்க! ஏங்க இப்படி ரவுண்டு கட்டறீங்க?
மகிழ்ச்சி!!

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!!
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.
நேர்மையான பதிவுகள் கொடுப்பதினாலேயெ நண்பர்களைச் சேர்த்து இருக்கிறீர்கள்.

புதுமையான ஆரம்பம்.
நட்சத்திர வாழ்த்துக்கள். மறைக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்களை புரட்டுங்கள்.
நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.
வாழ்த்துக்கள்! ஆகா.. நீங்க நட்சத்திரமானா பாகசவே நட்சத்திரமான மாதிரி ஒரு ஃபீலிங் தான் போங்க :-)

//வாரக்கடைசியில் பா.க.ச பதிவு ஒன்றைப் போட்டுவிடுங்கள்!//

சுப்பையா சார் பாகசவா இல்லையா? என்னுடைய இந்த நீண்ட நாள் சந்தேகத்தை நட்சத்திர வாரத்தில் தீர்த்துவைங்களேன் :-)
//ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்புக்கு உதவி, வழிக்காட்டுதல், அதரவற்ற ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கு செய்ய வேலை, உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க இடம் என்ற் நோக்த்தோடு ஒரு பொது தொண்டு நிறுவனம் தொடங்கி என்னால் இயன்றளவு உதவி செய்வது.//
மிக நல்ல குறிக்கோள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்
வாழ்த்துக்கள் ஜெய்!!ஹிந்த்.
Rajesh said…
வாழ்த்துக்கள்!
MSV Muthu said…
வாழ்த்துக்கள் ஜெயசங்கர்.


//நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொருத்தவரை தேசத்தின் தந்தை.
//

நேதாஜி மிகப்பெரிய வீரர். பெரும் தியாகி , நல்ல strategist என்பதை யாராலும் மறுக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் அவரால் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது என்பதையும், அவர் தான் தேசத்தின் தந்தை என்பதையும், அவர் சுதந்திரப்போராட்ட தியாகத்திற்கு யாரும் இணையில்லை என்று சொல்வதெல்லாம், nothing but just emotional. எல்லோரது சுதந்திரப்போராட்ட தியாகமும் ஒன்றே. யாரும் குறைந்தவர்கள் அல்ல யாரும் பெரியவர்கள் அல்ல. ஒரு சாதரண தொண்டரின் போராட்டமும் உயர்ந்ததே.

அதைதான் பாரதி சொன்னார்:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அதை
ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு -தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

>>தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

சுதந்திரப்போராட்டத் தியாகத்தில் சின்ன தியாகம் பெரிய தியாகம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன?
Anonymous said…
naan AASATH

Neengal eaathavathu seiyya ninaikkireergal.

Naano ithaithaan seiyya vendum ena thittathin adipadaiyil kuurugiraen.
We The People said…
AASATH சார்,

அப்படி என்ன தான் திட்டம் போட்டு வேலை செய்யறீங்க, எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன், நாங்களும் தெரிந்து கொள்கிறோம்!!
Anonymous said…
from aasath

Ungalathu aaval matrum seyalpadum munaippirkku mikka vaazthukkal!!

1. nethaji - Hoped the domiating Japan at 2nd ww. If he had planned after the freedom for india with democracy and socialism, i will support and follow him. But you can show this growthful view at Bagath. So i have inspired by him. He is the symbol for freedom ...

We should opposed Patel for his Bismarkism which has against Democracy. He prooved it while Telungaanaa Peasents strugle also.


2. Your plan to Chidrens has give the partial solution. Partial soultion give the unexcited state to society. Basic needs for peoples also can't give by small no of peoples. It is the duty of Govt. But after the signing of GATS by our Govt, it has removing from the Welfare nature of it. So we should educate this aspect to the peoples to got their rights through struggles against WTO/World Bank.

ie, education, food, housing facility, medicine, healthy food, dressings also the rights to got to peoples. But govt has releave from this commitment. So Tsunami affected fisher womens at TN had gave their Kidney against 40,000 rupees for their living.

Your aim has always done by WB's NGOs for avoid the struggled nature of peoples.

3. Castism, Religion, LAnguage - all of it have such important aspect to mass struggle. If you want to form a paradise on earth, you should account it by democratical factors of its elements.

4. Our forthcoming paradise have rights for work to skilled and it give corect salary to their work. After the continuing education to the society, they shuld change to remove their mood for property.

Due to get own-land suffered caste will get their social-respect and individuality also.

After that, working hours of the individuals has been change and reduced by their esential requirement. So working hrs can reduced. Remaining time individuals have rights to learn/participate their own interest like dance, music, writings, sports, drawing, research ... etc with new new inventions on everyfield. Whole society on world have enter the real paradise through this manner ...

That day is the celebrated day of todays' landless Dalits ....
That day is the celebrated day of Females for their untreatness like a property ....
It is the day of Minorities whom had suffered by majority peoples....

Society has work and occupy its result also. Noe occupation can done by minorities only. Which is the real paradise... So-called Kadavul will run away from the path of work of whole society
சீனு said…
//14வயசுல புள்ளக்குட்டிக்காரன் ஆகமுடியுமா?? அசத்தறீங்க! :)))))//

அப்போ உங்க வயசு 34க்கும் மேலேயா???

//மறைக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்களை புரட்டுங்கள்.//

மறைக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள்னு எதை சொல்றீங்க? இதற்கும், என் கேள்விக்கும் சம்பந்தம் இல்லையே, சிவா?
thiru said…
வாழ்த்துக்கள் நட்சத்திரமே! நட்சத்திரத்துக்கு ஏது வயது? :)
suvanappiriyan said…
நட்சத்திர வாழ்த்துகள்,

நல்லதொரு நட்சத்திரத்தை எதிர்பார்க்கிறேன்,

-Suvanappiriyan
We The People said…
நன்றி சுவனப்பிரியன் & திரு!


//நட்சத்திரத்துக்கு ஏது வயது? :)//

அதானே!!!
ஓகை said…
நட்சத்திர வாழ்த்துக்கள்!
ஓகை said…
நட்சத்திர வாழ்த்துக்கள்!
கொஞ்சம் தாமதமான வாழ்த்துக்கள் நண்பரே