ஏன் இந்த சாதி வெறி!
அருந்ததியினர் இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஐந்து குழந்தைகள் தமிழக அரசு நடத்தும் அங்கன்வாடியில் சேர்க்கமுடியாமல் தவிக்கும் பெற்றோர் பற்றிய செய்தி வந்திருந்தது! இது நடந்தது வேற எங்கயும் இல்லைங்க நம்ம சமூகநலத் துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை அவர்களின் தொகுதியான ஆளங்குலத்துக்கு உட்பட்ட தெற்குப்பட்டி கிராமத்தில் தான் இது நடந்திருக்கிறது.
இந்த் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளை அங்குள்ள அங்கன்வாடியில் (Kindergarten) வகுப்புக்களில் சேர்க்க மறுத்தது வருபவரும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்த்தவர் என்பதை அறியும் போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்த அங்கன்வாடி ஊழியர் அந்தோணியம்மாள், பள்ளர் என்னும் ஒரு இனத்தை சேர்ந்தவர், இவர்கள் அருந்ததியினரைவிட ஒரு படி உயர்ந்தவராம்! அதனால் அருந்ததியினரை அங்கன்வாடியில் சேர்த்து, அவர்களுக்கு பனிவிடை செய்யமாட்டேன் என்று கூறியிருக்கிறார் அந்த அங்கன்வாடியின் ஊழியர் அந்தோணியம்.
தெற்க்குப்பட்டியில் மேலும் விசாரித்த மும்பய் மிரர்ரின் செய்தியாளருக்கு கிடைத்தது மேலும் அதிர்ச்சியான தகவலகளே!
"கடந்த இருபது ஆண்டுகளில் அந்த அங்கன்வாடியில் அங்குள்ள 40க்கும் மேற்ப்பட்ட அருந்ததியினர் குடும்பங்களிருந்து ஒரு குழந்தை கூட மதிய உணவு மற்றும் பாடசாலையில் சேர்ப்படவில்லை. இதற்க்கு அந்தோனியம்மாள் மட்டும் காரணம் அல்ல, தெற்க்குபட்டி யாதவர், இஸ்லாமிய மற்றும் பள்ளர் இனத்தை சேர்த்தவர்கள் பெருவாரியாக வசிக்கும் கிராமம், அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஒரு அருந்ததியினர் இன குழந்தை படிப்பதை விரும்பாததும் ஒரு முக்கிய காரணம்" என்று சி.பாப்பா, அருந்ததியினர் பெண்கள் வளர்ச்சி அமைப்பின் தலைவர் வருத்ததுடன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் "அங்கு அருந்ததியினர் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது ஒன்று மட்டுமல்ல, தபால்காரர்கள் கூட இந்த 40 குடும்பங்களுக்கு வரும் பணம் மற்றும் தபால்களை கொண்டுவந்து தர மறுக்கு கொடுமையும் பல நேரங்களில் நடக்கும், இந்த குழந்தைகளுக்கு படிக்க வைக்க வேண்டுமானால் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இஸ்லாமியர் நடத்தும் பள்ளில் ஐந்து வயது நிரம்பிய பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பு முதல் சேர்க்கப்படுகிறார்கள், இங்குள்ள சாதி பிரச்சனைகள் அனைத்தையும் அரசு அதிகாரிகள் அறிந்திருந்தும், கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்" என்று வருத்தப்பட்டார்.
அந்த பகுதியின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரியான தேவி குமாரி அனுகிய போது அவர் கூறியது "அந்த அங்கன்வாடியில் ஏற்கனவே 40 குழந்தைகள் உள்ளனர், இடமின்மை மற்று வேலை பளூ காரணமாகத்தான் இந்த குழந்தைகளை அந்தோணியம்மாள் சேர்த்துக்கொள்ளவில்லை!!!".
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி இட்ட அரசாணையில் "இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள் எக்காரத்தை காட்டியும் அங்கன்வாடியில் சேர்ப்பதை தவிர்க்கக்கூடாது"என்ற தெளிவான அரசாணை இருந்தும், திட்ட அதிகாரி சொல்லும் காரணங்கள் சிறிது ஏற்புடையதாக இல்லை.
உலக வங்கியின் உதவியுடன் நடத்தப்படும் இந்த ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் முக்கிய குறிக்கோள்:
இந்த சாதி வெறி நம்ம வலைப்பதிவர்களிடமும் இருக்கு! நம்ம டோண்டு சார் என்னமோ முதலியார் என்று திரு .நடேசனை சொன்னால் தான் அவருக்கு மரியாதை என்ற ரேஞ்சில் எழுதி சாதியை நிலை நிறுத்த பாடுபடுவதை பார்த்தால் ஒரு பயம் தான் வருது! ஒருவருக்கு மரியாதை அவர் சாதியால் வருவதில்லை மக்களே, அவர் செய்த மக்கள் தொண்டுகள், நம் சமுதாய வளர்ச்சிக்கு அவர்கள் செய்த நற்காரியங்களை வைத்தே வருது!
இந்த சாதி பாகுபாடு ஒழிக்க படித்த, நம்மை போன்றவர்கள் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்ற என்னமே இந்த பதிவுக்கு முக்கிய காரணம்.
என் முந்தய பதிவான குழந்தைகள் தின அதிர்ச்சி! பதிவை படிச்சீங்க!!
செய்திக்கு நன்றி : ஜெயராஜ் சிவன், மும்பை மிரர்

"ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுககு மேம்படுத்தப்பட்ட சத்துணவு, சுகாதாரம் மற்றும் உளவியல்-சமூக நிலைமை உயர்த்துவது"என்ற கொள்கையுடன் துவங்கப்பட்ட அங்கன்வாடிகளே அக்குழந்தைகளுக்கு உளவியல் மற்றும் சமூக முறையில் பிரச்சனைகளை தருவது கொடுமையான விசயம். அரசு இதில் கவனம் செலுத்தி இது போன்ற சாதி அடிப்படையிலான சமுதாய பிரச்சனைகளை குறைந்தபட்சம் அரசுக்கு கீழ் உள்ள தளங்களிலாவது களைய முயற்சி எடுக்கவேண்டும் என்ற ஆசையுடன் இந்த் பதிவை இங்கு பதிக்கிறேன்.
இந்த சாதி வெறி நம்ம வலைப்பதிவர்களிடமும் இருக்கு! நம்ம டோண்டு சார் என்னமோ முதலியார் என்று திரு .நடேசனை சொன்னால் தான் அவருக்கு மரியாதை என்ற ரேஞ்சில் எழுதி சாதியை நிலை நிறுத்த பாடுபடுவதை பார்த்தால் ஒரு பயம் தான் வருது! ஒருவருக்கு மரியாதை அவர் சாதியால் வருவதில்லை மக்களே, அவர் செய்த மக்கள் தொண்டுகள், நம் சமுதாய வளர்ச்சிக்கு அவர்கள் செய்த நற்காரியங்களை வைத்தே வருது!
இந்த சாதி பாகுபாடு ஒழிக்க படித்த, நம்மை போன்றவர்கள் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்ற என்னமே இந்த பதிவுக்கு முக்கிய காரணம்.
என் முந்தய பதிவான குழந்தைகள் தின அதிர்ச்சி! பதிவை படிச்சீங்க!!
செய்திக்கு நன்றி : ஜெயராஜ் சிவன், மும்பை மிரர்
Comments
இந்த சாதி எப்படி நம்ம ஆனிவேர் வரை பதிந்து இருக்குன்னு வருத்தப்படறீங்களா?
இல்ல பதிவு எதிர்பார்த்த ரேஞ்சுக்கு இல்லைன்னு சொல்லறீங்களா?
'சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்' என்று சமுதாய பற்றையும் 'சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா' என தேசபக்தியையும் ஒரு தலைமுறையினருக்கு முறையாக விதைக்க தவறிய நமது பாவத்துக்கு இந்த பிஞ்சுகள் தண்டனை அனுபவிப்பதை பார்க்கும் போது இரத்தக்கண்ணீர்தான் வருகிறது.
**அந்த குழந்தைகளின் முகங்களை பார்த்தும் மனது இளகவில்லை என்றால், உண்மையில் அப்பெரியவர்கள் வெறும் பிசாசுகளே.
**சாதி வெறி பழகும் அனைவரும்தான் நம் இந்தியாவின் முதல் எதிரிகள்.
**பாக்கிஸ்தான், சீனா, அமெரிக்கா இவர்களை எல்லாரையும் விட மிக கொடியவர்கள் இவர்கள். எதிரிகள் என தங்களை அதிகாரபூர்வமாக அறிவித்து போர் செய்பவன் மரியாதைக்கு உரியவன். ஆனால், இப்பரி கூடவே இருந்துகொண்டு, உண்டவன் வீட்டுக்கு இரண்டகம் செய்யும் இழி பிறவிகளுக்கு எந்த மரியாதையும் கிடையாது. உண்மையிலே நான் மேற்கூறியது போல் "இழிபிறவிகள்"தான்.
**இதுபோன்ற பிரச்சினைகளை மேலோட்டமாக சாதாரண ஒரு சமுதாய பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது. நம் நாட்டின் மக்கள் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை உள்ளிருந்து அரிக்கும் ஒரு கொடிய நோயைப்போல் கருத வேண்டும்.
**இன்னும் நிறையவே எழுதவே வேண்டி இருக்கிறது. வெறுமனே இப்படி எழுதிக்கொண்டே இருந்தால் மட்டும் போதுமா.....?
'அதை' பெற தகுதிகளையும்(?) உருவாக்கினர். அதே மனப்பான்மை இன்றும் தொடர்கிறது.
இந்த கிராமத்து மக்களின் இப்போதைய மனப்பான்மைக்கும், நடத்தைக்கும் மூல காரணம் யார்?
மூல காரணம் கண்டுப்பிடித்து அதை அறவே அகற்றிவிட்ட நிலையிலும், அதில் வாழ்ந்து பழகிய மக்கள் அந்த தாக்கத்திலிருந்து வெளிவர மனமின்றி அலைவதே இன்றைய நிலை! பொது நல ஆர்வலர்கள் தான் இதை மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டும், படித்து பயன் பெற்ற நாம் இதற்கு துணைப்போக வேண்டும்! இதுவே என் வேண்டுகோள்!
இதற்கு காரணம் எந்த ஜாதி, மதத்தினராய் இருந்தாலும் அவர்கள் மேல் நியாயமாய் தீண்டாமை ஒழிப்பு சட்டம் பாய வேண்டும். ஆனால் நம் அரசியலமைப்பு சட்டம் இதற்கு தகுந்த ஆதாரங்களை கேட்கும். ஒரு இந்தியனாய் இந்த செய்தியை படித்து நான் வெட்கப்படுகிறேன்.
எந்த இனத்தவராயினும் படிப்பை மறுக்கும் சாதி கண்டிப்பாய் மனித சாதியில்லை.
அந்த அருந்ததியின மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய ஒரு செயல், இந்த செய்தி பதிவர்களின் மனதை உண்மையாய் வருத்தம் செய்ய வைத்தால் அதை சரிசெய்ய என்ன செய்வது என்று மட்டும் கூறுங்கள்.
ஆவண செய்வோம்.
சென்ஷி
நன்று.
முகவரிகள் அழிக்கப்பட்டு, தத்தமது பண்பாடு, கலாச்சாரம், வாழ்முறை, மண், வரலாறு ஆகிய அனைத்து மனித அடிப்படை அடையாளங்களை அழித்தும் அதிலிருந்து பிய்த்து பிடுங்கி எங்கெங்கோயோ எறிந்து, வீசப்பட்டு இருக்கும் இவர்களை போன்ற மக்கள் இந்நாட்களில் எதை எதையோ காரணம் காட்டி, சமுதாயத்தில் இழந்த தங்களுடை தகுதி, இடம், பெயர், உரிமைகளை நிலைநாட்ட அராஜக முறைகளையும் கையாள தயங்கமாட்டேன் என்கிறார்கள்.
குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்" போன்ற தாலாட்டு பாடல்களை பாடி தூங்க வைப்பதைவிட, அராஜகங்களின் கோர பிடியில் சிக்கி தவிக்கும் இக்குடும்பங்களுக்கு புதியதொரு நவீன உலகம் அவர்களது வாசற்படி அருகிலேயே இவர்களை போன்றவர்களுக்காக காத்திருக்கிறது என்பதை அறியப்படுத்த வேண்டும். திறமை, தகுதி, தைரியம் உள்ளவர்களை மட்டும் ஏற்று போற்றக்கூடிய புதிய இந்நவீன உலகத்திற்கு அவர்களை அறிமுகம் செய்யவும் வேண்டும்.
i am aasath
i got wound at my everything while heard this poisonized root upto Childs..
But, before 2500 years a ccommunity in india has refusing the education to all other suffered Castes. Can it now include in human sectors or not ...
Their philosophy (superiority by birth) has giving the guidelines to the BC/SC communities also.
If we become to change this state, we fight against father/mother of Caste system. Father is Feudal system; mother is Hindutvaa ...
i expect the original face of Hindu religion by its' rep. Neelagandan
நான் அப்படி ஏதும் சொல்லவில்லையே!
மாறாக : //இவர்களுடைய இன்றைய பிரச்சனை அறியாமை!// இத்துடன் ஒத்துப்போகிறேன்.
மாசிலா நீங்க இதை சொல்லியிருந்த காரணத்தால் அப்படி சொன்னேன்!
தாழ்த்தப்பட்ட மக்களிடையேயே இது போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது மற்ற சாதியினை குறை சொல்ல என்ன இருக்கிறது.
கருப்பு போன்றவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் இது ஒன்றுதான்.
முதலில் தன் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு அடுத்தவன் வீடு அசிங்கமாக இருக்கிறது என்று கூறுங்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களிடையேயே இது போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது மற்ற சாதியினை குறை சொல்ல என்ன இருக்கிறது.
***** போன்றவர்களுக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் இது ஒன்றுதான்.
முதலில் தன் வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு அடுத்தவன் வீடு அசிங்கமாக இருக்கிறது என்று கூறுங்கள்.//
அனானி சார் இந்த ஏற்ற தாழ்வுகள் அவர்களாக உருவாக்கியது அல்ல! அது அவர்கள் வேலையை வைத்து உருவாக்கப்பட்டது! அவர்களை சொல்லிக்குற்றம் இல்லை! இன்னும் அந்த வலையத்துக்குள் இருக்கிறார்கள், அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுதான் இந்த பதிவின் ஆவல்!
பார்ப்பனீயம் என்பது அதளபாதாளம் வரை பாய்ந்துள்ளது.அருந்ததியினர், பொதரவண்ணான் போன்ற சாதிகள் ஆதி திராவிடர்களில் ஆகக்கீழ்மட்டத்தில் உள்ளவர்கள்.தனக்கு மேலே மிதிப்பவனைபற்றியெல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை.தனக்கும் கீழே மிதிக்க ஒருவன் வேண்டும் என்ற பார்ப்பணீயத் தத்துவம் படுத்தும்பாடு. :-((
கல்வி மட்டும் இவர்களைத் திருத்தாது. கல்வி கற்ற மடையர்கள்தான் இன்னும் சாதி/ஜாதகம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நாம் நினைத்தால் நமது அடுத்த தலைமுறைக்கு சாதியை கொடுக்காமல் மனிதத்தை காக்கலாம்.
வெரி சிம்பிள் மதம்,ஜாதி அடையாளங்களை உங்கள் அளவில் விட்டுவிடுங்கள் இப்போதே.
அனைவரும் சுலபமாக மறந்துவிடுவது ....மதம்...அது உள்ளவரை மனிதப் பிரிவுகள் இருக்கும். 3 பெரிய (நமக்கு பரிச்சயமான) மதங்கள் சனாதனமதம்,இஸ்லாம்,கிறித்துவம் ..இந்த மூன்றும் இல்லை என்று ஒரு நிமிடம் கற்பனை செய்யுங்கள். ...
அதே..இவை இல்லாவிட்டால் அதனுள் அடங்கிய பிரிவுகளும் இல்லை. அதனை எதிர்க்கும் நாத்திகமும் இல்லை ..அவ்வளவுதான் ரொம்ப ஈஸியா இல்ல ? இது நடக்குமா? நடக்கவே நடக்காது என்பதுதான் உண்மை. :-((( பின்னே எப்படி சாதி ஒழியும்?
பொதரவண்ணான்
http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?table=tamil-lex&page=2920&display=utf8
//சாதியில் உள்ள பிரச்சனைகள்/ ஏற்றதாழ்வுகள் என்னை சாதியை ஒழிக்கத் தூண்டுகிறது! //
நீங்கள் எந்தமதம் என்பதைப்பற்றி எனக்கு கேள்வி இலலை. ஆனால் உங்களின் மதம் எதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது?
அதன்படி உலகில் உள்ள மனித இனம் அனைத்தும் சமமா?
இல்லை அதுதான் உண்மை.
எந்த மதமாக இருந்தாலும் அதிகபட்சம் சகிப்புத்தன்மைதான் இருக்குமே தவிர அனைத்து மனித உயிர்களையும் சமமாக பர்க்காது.
மதச்சகிப்பு என்பது பிடிக்காததை வேறு வழியில்லாமல் அனுசரித்துப்போவது.
X என்று ஒரு மதம் தோன்றும்போதே X-அல்லாதவர் என்ற ஒரு மதமும் சேர்ந்தே தோன்றிவிடுகிறது. இப்படி மனிதனைப் பிரித்தே வளர்ந்த X மதம் அதற்குள்ளேயே மேலும் பல பிரிவுகளைத் தோற்றுவிக்கிறது.
முகமது,இயேசு,முருகன்....போன்ற வரலாற்று மனிதர்கள் என்ற நம்பிக்கையளவில் எனக்குப்பிடித்தவை இருந்தால் எடுத்துப் பயன்படுத்திக் கொள்வேன்.அதற்காக அவர்களையே சுற்றிவர வேண்டும் ,நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று தேவை இல்லை.
இப்படிச் செய்ய வேண்டும்,இவர்தான் செய்ய வேண்டும் என்ற விசயங்கள்தான் மனிதனுக்குள் பிரிவினைகளை உண்டாக்குகிறது.நல்லவைகள் மறக்கப்பட்டு வெறும் சம்பிரதயமாகப்போய்விட்டது சில போதனைகள்.
சம்பிரதாயங்களின் மொத்த உருவம்தான் மதங்கள்.
//மதம் என்னும் லேயர் எடுப்பது நடக்காத விசயம் கல்வெட்டு!//
உலகில் மொத்தம் 5% நாத்திகர்கள் இருப்பார்களா? பின்னர் ஏன் மனித குலம் இவ்வளவு கேவலமாய் இருக்கிறது.
95% பேர் ஏதோ ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள்தான். இவர்கள் நம்பும் மதம் நல்லதாய் இருந்தால் சாதி,போலீஸ்,இராணுவம்,சிறைச்சாலைகள் உலகில் இருந்திருக்காது.கொஞ்சம் யோசியுங்கள்.
மதம் உள்ளவரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் மனிதன் அதனால் சீரழிந்துகொண்டே இருப்பான்.அது வேர். அது அழியாமல் சாதி/பாகுபாடு போன்ற கிளைகள் அழியாது.
சில நேரம் சரியே! நான் என் மதத்தில் எது நல்லதோ அதை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்! :)
//95% பேர் ஏதோ ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள்தான். இவர்கள் நம்பும் மதம் நல்லதாய் இருந்தால் சாதி,போலீஸ்,இராணுவம்,சிறைச்சாலைகள் உலகில் இருந்திருக்காது.கொஞ்சம் யோசியுங்கள்.//
சிந்திக்க வைக்கும் விடயம், எல்லாம் மதத்தை முழுமையாக பின்பற்றியோ! அல்லது பின்பற்றாமலோ!!! இருப்பவர்களால் வரும் பிரச்சனைகள்!
எந்த மதத்தை பின்பற்றினாலும் மனிதத்தை கடந்து செல்லாமல் இருந்தால் போது என்று நினைக்கிறேன்..
நீங்க என்ன சொல்லறீங்க கல்வெட்டு? கரெக்டா?
நேரமிருந்தால் சாதி பற்றிய ஒர் உண்மைச் சம்பவத்தை இங்கே பார்க்கலாம். http://hongkongeelavan.blogspot.com
இதை புரிந்து கொள்ள முடியாத நீங்களனைவரும் பார்பன பனியாக்கள். வெற்றுடம்பில் பூணூல் நெளியும் சோம்பேறிகள்."
எங்கே இப்படிப்பட்ட திம்மிகளின் கும்மிகள்? பாசக்காரர்கள் பாரத ரத்னா ஆசையில் ஆழ்ந்து விட்டார்களா?
ஆம் எழுதினேன். யாருடைய சாதிப் பெயரை யார் எடுப்பது என்று. அதில் ஒரு மாற்றமுமில்லை. அவ்வாறு பல இடங்களில் சாதிப் பெயரை எடுத்தவர்களே தங்களுக்கு வேண்டிய இடங்களில் டாக்டர் நாயர் ரோடு என்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ரோடு என்று போட்டு கொள்ளும் போலித்தனத்தையும் சாடினேன்.
தன்னுடைய காரியம் நிறைவேறினால் தன் நண்பனுக்கு மொட்டை போடுவதாக கடவுளிடம் வேண்டிக் கொள்வது போலத்தான் இது உள்ளது.
முக்கியமாக நிர்வாக குழப்பங்களுக்கு இந்த அரை வேக்காட்டுத்தனம் துணை போனதையும் எழுதினேன். அதற்கென்ன இப்போது?
அதே சமயம் சகபதிவர்களுக்கு ஒரு கேள்வி. உங்களில் எவ்வளவு பேர் வேறு சாதியில் மணம் செய்துள்ளீர்கள்? அதில் எத்தனை பேர் தங்களுக்கு கீழ்நிலையில் இருக்கும் சாதியிலிருந்து மணம் செய்து கொண்டீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
அய்யா டோண்டு ராகவன் அவர்களே,
நீங்கள் ஹரிஜன் என்று சொல்லக்கூடிய சாதியில் பிறந்தவன் நான். எம்.சி.ஏ வரை படித்து இப்போது நல்ல பணியில் இருக்கிறேன். நான் கலப்பு திருமணம் செய்ய விரும்புகிறேன். உங்கள் சாதியில் ஒரு பெண் பார்த்து எனக்கு கட்டி வைப்பீரா?
கட்டி வைக்க முடிந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் மூடிக்கொண்டு போங்கள். இனிமேல் இந்த வறட்டு வாதம் செய்துகொண்டு எங்கும் அலையாதீர்கள்.
சந்திரமோஹன், பெங்களுர்
ஆக நான் கூறியதைத்தான் நீங்கள் நிரூபிக்கிறீர்கள். உங்களை விட கீழ் நிலையில் உள்ள சாதி இருக்குமே. அங்கு பெண் எடுப்பதைப் பற்றி யோசிக்கக்கூட மாட்டீர்களா? உங்கள் சாதியிலேயே ஏழைப்பெண்ணாகப் பார்த்து சீர்வரிசை இல்லாது திருமணம் செய்யத் தயாரா?
மேலும் நல்ல பார்ப்பனப் பெண் கிடைத்து, அவரும் விருப்பட்டால் தாராளமாக கல்யாணம் செய்து கொள்ளுங்களேன். நான் எதற்கு நடுவில்? நான் என்னத் தரகரா என்ன?
மேலும் சாதி விட்டு வேறு சாதியில் திருமணம் கொள்ளத்தான் வேண்டும் என்று நான் எங்கும் கூறவில்லையே?
முதலில் இந்த ஆங்கன்வாடி குழந்தைகளுக்கு பதில் கூறுங்கள். இப்பதிவிலேயே அதைப் பற்றித்தானே பேச்சு. ஒரு சோகால்ட் தலித் சாதிக் கொடுமை செய்கிறார். அதைத் தடுக்க முடிந்தால் தடுக்கவும். இல்லாவிட்டால் நீங்கள் பொத்திக் கொண்டு போகவும்.
நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
டோண்டு ராகவன்
பதிவுகளின் எண்ணிக்கையை கூட்டியாச்சு! வாழ்த்துகள்!
உங்கள் சமூகப்பார்வை , நடுநிலைமை எந்தளவு என்பதை போனப்பதிவின் போது(டாக்டர் அன்புமணி)புரிந்துக்கொண்டேன்! எனவே இனியும் நான் பின்னூட்டம் போட்டு நேரம் விரயம் செய்ய மாட்டேன்! நமக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யும்ல! :-))
//தோடா இன்னொரு பதிவு! :-))//
நான் பதிவுகள் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது! இந்த பதிவு கடந்த வருடம் பிப்ரவரியில் எழுதியது! எதோ புண்ணியவான் பின்னூட்டம் போட்டு ஆட்டத்தை மீண்டும் துவக்கிவிட்டார் அவ்வளவே :))))
//நமக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யும்ல! :-))//
உங்க கமெண்டை பார்த்தா அப்படி தெரியலையே??!!!
அதெல்லாம் இருக்கட்டு அன்புமணி விசயத்தில் அப்படி என்ன குறை கண்டீர் என் சமூக பார்வையில்??!!
அதுசரி,நான் நடுநிலை என்று எப்ப சொன்னேன்??!!!