கோலாக்கலும், பூச்சிமருந்தும் அரசியல்வாதிகளும்!

இதுவரைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கோக் மற்றும் பெப்சியின் மீது பூச்சி மருந்து படிமம் இருப்பதாக புகார் வந்தது!

முதலில் 2003 ஆகஸ்டில் அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம், இந்தியாவில் தயாராகும் கோக், பெப்சி போன்ற 12 வகை குளிர்பாணங்களில் பூச்சிமருந்து படிமம் உள்ளதாக அறிக்கை வெளியிட்டு ஒரு கலக்கு கலக்குச்சு! பெப்சியின் குளிர்பாணங்கள் அனுமதிக்கப்பட்ட(0.0005 mg/l) பூச்சிமருந்து அளவுகளைவிட 36 மடங்கு அதிகமாக (0.0180 mg/litre) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது! கோக் நிறுவன குளிர்பாணங்களில் சுமார் முப்பது மடங்கு அதிகமாக (0.0150 mg/litre) இருந்தது! அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாங்கிய அதே நிறுவனங்களின் குளிர்பாணங்களில் ஒரு மில்லிகிராம் கூட பூச்சிமருந்து படிமம் இல்லை என்ற உபரி தகவலும் அந்த அறிக்கையிலிருந்தது.

உடனே நம்ம அரசியல்வாதிகள் என்னவோ மக்கள் நலம் காப்பவர்கள் போல தினமும் ஒவ்வொறு கட்சியிலிருந்தும் ஒரு ஆள் மினிமம் இந்த நிறுவனங்களை திட்டி அறிக்கை விட்டார்கள்! முக்கியமா நம்ம கம்யூனிஸ்டுகள்! அரசு அதை தடை செய்ய வேண்டும் என்று கூப்பாடுயிட்டார்கள்! அந்த நிறுவனங்கள் முன் தர்னா செய்தார்கள்! அறிக்கை! ஆர்பாட்டம்! என்று தூள் கிளப்பினார்கள். வெறும் முப்பது நாட்களில் அத்தனை சூடும் அடங்கி சைலண்ட் ஆனார்கள் நம்ம அரசியல்வாதிகள். நம்ம அரசும் ஒரு கூட்டு பாராளமன்ற உறுப்பினர் குழு அமைத்து எஸ்கேப் ஆனது! அந்த குழு எதை ஆராய அமைக்கப்பட்டது என்பது தான் வேடிக்கை! அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையத்தின் செயல்பாடுகளை ஆராயத்தான்! கோக் அல்லது பெப்சி நிறுவனத்தின் உற்பத்தி முறையை ஆராய அல்ல!!!! இப்படி அடங்கி போனது ஏன்? அந்த நிறுவனங்கள் தன் தவறை சரி செய்து நற்சான்று வாங்கிவிட்டதா? பூச்சிக்கொல்லியின் அளவு குறைந்ததா? இவர்களின் பாக்கெட் நிறைந்ததா? ஏன்? ஏன்? ஏன்? இந்த கேள்வி கேட்கவும் ஆள் இல்லை! வெகு சிலர் கேட்டார்கள் அதற்கு பதில் தர அரசியல்வாதிகள் காதில் விழவும் இல்லை!!! அதோட 2003 குளிர்பாண பூச்சிக்கொல்லி பிரச்சனை முடிந்தது!

மீண்டும் மூன்று வருடம் பின்னர் ஆகஸ்டு 2006, அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம் நாடு தழுவிய ஆராய்ச்சி செய்து ஒரு ரிப்போர்ட் கொடுத்தது உடனே நம்ம அரசியவாதிகள், அந்த மையத்தையும் அதன் நிறுவாகிகளை பழித்தனர்! அந்த நிறுவனமும், அதன் சோதனைமுறைகளும் தகுதியற்றவை என்று ஒரு தூள் ரிப்போர்ட்! நம்ம சுகாதார துறை மந்திரியோ ஒரு படி மேலே போய் அந்த குளிர்பானங்கள் குடிக்க தகுதியானவை என்று பாராளமன்றத்தில் அறிக்கை வெளியிடுகிறார். இந்த அறிக்கை கோக் நிறுவனத்தின் செலவில் லன்டனில் ஆராய்ச்சி செய்யப்பட்ட அறிக்கையை ஆதாரமாக வைத்து இந்த நற்சான்று கொடுக்கப்பட்டது! அத்துடன் சில மாநில போட்டிருந்த தடைகளையும் இல்லாமல் செய்தது! இதற்கும் 2003ல் அமைத்த பாராளமன்ற கூட்டுக்குழு இந்த ஆராய்ச்சி மையத்தின் செய்முறையும் அதன் ஆராய்ச்சிகளும் திருப்த்தியளிப்பதாக பாராளமன்றத்தின் அறிக்கை தாக்கல் செய்த பின்னர்! மேலும் மந்திய சுகாதார துறை மந்திரி ஒரு குழு அமைப்பதாகவும், அது கோக் மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்களின் தரம் மற்றும் உற்பதி வரைமுறைகளை ரெடி செய்யும் என்று சொன்னார்! அது எப்ப இந்த விதிமுறைகளை தயார் செய்யும்? எத்தனை நாள் ஆராய்ச்சி செய்யும்? அன்று அவர் சொன்னது அது ஒரு வருடமும் ஆகலாம், இரண்டு வருடமும் ஆகலாம்!!! அத்தோடு அரசின் மக்கள் பணி முடிவடைந்துவிட்டது!!! கொடுமைடா சாமீ!!!

அப்புறம் கம்யூனிஸ்டுகள் சில நாடகள் மக்களை திரட்டி கொஞ்சம் போராடற மாதிர் பாவ்லா காட்டினார்கள் அப்புறம் காணாம போயிட்டாங்க அவர்களும்! இப்போ நம்ம மக்களே மறந்து போயி கோக்கும் பெப்சியும் குடிச்சுக்கிட்டுயிருக்காங்க! (நான் 2006 ஆகஸ்டோட இதுகல குடிக்கறதை விட்டு விட்டேன்! இவனுக காசு பார்க்க நான் தான் கிடைத்தேனா என்று!!!)

எனக்கு தெரிய வேண்டியதெல்லாம் இவைதான்:

  • எதற்காக இந்த அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம்? மற்றும் அதன் ஆராய்ச்சிகள்?
  • ஒவ்வொரு முறையும் போராட்டம் சில நாட்கள் இல்லை மேக்ஸிமம் ஒரு மாதத்த்தில் வேற ரூட்டுல போயி காணாமா போகுதே என்ன காரணம்?
  • உள்ள என்ன தான்யா நடக்குது? ஒரு குளிர் பானநிறுவனத்தின் மேல் உள்ள பாசம், மக்கள் ஓட்டுப்போட்டு மேல அனுப்பட்ட உங்களுக்கு ஏன் மக்கள் மேல் பற்று இல்லாம போச்சு?
  • எப்படியும் எனக்கு ஓட்டுப்போடறவன் எனக்கு ஓட்டு போடுவான் என்ற ஆதீத நம்பிக்கையா??
  • ஆனா நிறுவனங்கள் அப்படியல்ல என்ற பயமா? அடுத்த தேர்தலுக்கு செலவுக்கு கை கடிக்க விட்டுவிடுவார்களா??
  • உண்மையில் இந்த குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி இருக்கா? அதுக்கு என்ன வரைமுறை? எப்பதான் இதற்கான கட்டுப்பாடுகளை இந்த அரசு செயல் படுத்தும்!
மருந்து உயிரோடு இருக்கும் போது தேவைப்படுவது! மக்கள் இவைகளை குடித்து காசநோய், புற்றுநோய், மலட்டுத்தன்மை என பல தரப்பட்ட வியாதிகள் பாதித்து அழிவதற்கு முன், இவைகளுக்கு கட்டுப்பாடு போட்டால் உபயோகயிருப்பதாக தோன்றுகிறது! நான் சொல்லும் உபயோகம் நம்ம மக்களுக்குங்கோய்!!!

என் பழைய பதிவான நாடகம்.காம் பதிவை படிச்சீங்க!!

Comments

Anonymous said…
from aasath

A good post ... and Valuable questions!

1. CSE is not the Govt. Undertaking institution. But such scientist whom can concern about peoples and nature have form this lab.

2. Each and everytime the struggle has liqufied by its end. Because this stuggle is the part of the struggle which is against Imperialism, ie world Capitalism, ie, USA, WTO, WB and their activities.
But we had speak only the part of dangerous of the Coke while the struggle. ie "Kundan chattiyil Kuthirai Ottugirom". But enemy have good strength. He wouldn't try to separate us. Because already we have separated by understanding of the depth of this matter.

If we fight against Water privitisation, Coke is a part of this issue. Water privitisation is the special rule of Worldbank. For its' privitization thrust, we should shout by the cobination of peoples from various sector against individual enemy ...
Anonymous said…
I am venkatesh,
CSE is an NGO which works for environmental cause whose cheif had received an award in recognition of their water coservation works from SIWI(Swedan International Water Institute).

As usual our politicians make benefit for thier own cause ,i mean to fill thier pocket.
Anonymous said…
The entire issue is created by politicans for their own benifits. Where from the pesticide coming from g.water or from pepsi concentrate. Sure it is from g.water. If that is the case people drink coke/pepsi more or bottled/can water more. Obivously now a days almost everone buys water for drining. If that is the case have anyone checked what is the level of pesticide? Definetly it is more compared to pepsi / cola. even in vegtables/ milk it is more. All this is due to heavy use of pesticides by our formaing community.This is known to all the testing agencies and scientist. Then why cola / pepsi. The reason is it is very difficult process and involves huge amount of investement to remove pesticides from water. This is known to communist and they have taken upwith their connection and took up the issue probaly they have not got what they want from pepsi/coke. So the issue was blown out of proportion. Even in thamizmanan i have seen some postings that pepsi/coke is consumiang the entire ground water depriving agricultural water. It is radiculous. You can imagine the water required for coke/ drinking water / water for household and water required for agri purposes. Agri. water requiremnt will by atleast 10,ooo times maore than required for coke/pespsi requirment. All ploitics.
நன்றாக விளம்பரப்படுத்தினால்,
நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தை கூட, சுத்த இள நீர் என்று ஒருகை பார்த்து விடுவார்கள்.

- இம்சை அரசன் வசனம்.
We The People said…
நன்றி அனானி,ஆசாத், வெங்கட் அண்ட் வெங்கட்ராமன்.

உண்மை தான் கோக் பிரச்சனையும் நிலத்தடி நீர் பிரச்சனையும் பிரிக்கமுடியாதவை! இந்த பதிவு குளிர்பானங்களில் உள்ள பூச்சி கொல்லி படிமம், அதை வைத்து அரசியல்வாதிகள் செய்யும் பிஸினஸ், கட்டிங் வேலைகள், இதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதே!

நன்றி
Anonymous said…
I AM aasath

CSE is a NGO aided sector. But it has not working for Individual institutions like Ford and Rockefeller foundations. Nowadays science has work for Capital market only. At Basic medicines vs. Pharmacheutical tablets, you can identify it. And the large deviation of rates between Western Countries and india. But the experiments of CSE cannot compromise for anything ... Because we have lot of Check pts which is known by public through electronic media also.

For agriculture the usage of water can re-cycled by our eco-system. But shunk of 9 liters of water can change to 1 liter Coke + 8 liter residues. This residue also demolish the nature of land and groundwater. After Greenrevolution, especially at Punjab, Ground water, Mother-milk, human blood also have poisonized above the order of 36. So we will fight against it like ms swaminathan etc
They announced that 2007-2009 is the Yr of planet of earth. Based on this world agenda, All state and decision makers have form many forums with capture of one-line. That is "we should give the safer world to our forthcoming generation". How is it !!!. The demolish everything including nature for their market. But for defects they call everyone have responsibility. IS it justice. So if you can't the core of Communists dont' say the lessy words ... This struggle has becomes against WB also
We The People said…
அசாத் இப்ப தான் எனக்கு புரியற மாதிரி ஏதோ எழுதியிருக்கீங்க!

அழுத்தமான வாதங்கள். இதை எப்படி ஒரு முகப்படுத்தி ஒரு போராட்டமாக மக்கள் முன் கொண்டுப்போக போறோம் என்பதே ஒரு பெரிய கேள்வி!??

ஒரு நாள் வரும் என்ற ஆசையுடன்

ஜெயசங்கர் நா
Anonymous said…
அண்ணே,
எப்படிண்ணே இருக்கீங்க்?
நல்ல கருத்தா எப்பவுமே எழுதுவீங்க, அதனால அப்பப்ப ஒங்க பதிவ வாசிச்சிட்டு 'உச்' கொட்டிட்டு போறவண்ணே நான்.
என் ஏண்ணே, இப்பன்னு பாத்தா ஒங்களை நட்சத்திரமா குழில தள்ளோனும்? ஊசிப்போன போண்டாவோட நாத்ததுல ஒங்க வாசனை எவனுக்கும் புடிபடாதுன்னா :(

அதக்கண்டி, நீங்க ஒங்க நேரத்தை வீணடிக்காம, இப்போதைக்கு நட்சத்திரம்மா இருக்குறதிலேருந்து வில்கி, பின்னாள, நாத்தமெல்லாம் அடங்கினப்புறமா, உங்க நல்ல கருத்தை பதிவா போடுங்க. அப்பவாவது வம்புக்களையும் நம் மக்கள் படித்து தெளியட்டும்!

எல்லாம் தலையெழுத்து...என்ன சொல்றீங்க?
Anonymous said…
சின்ன (!?) திருத்டம்ணா..

//அப்பவாவது வம்புக்களையும் நம் மக்கள் படித்து தெளியட்டும்!//

அப்பவாவது நம்ம மக்கள் வம்புகளை விட்டு நல்லவைகளையும் படித்து தெளியட்டும்!
We The People said…
நான் ஒரு அனானி,

என்ன அனானி வஞ்ச புகழ்ச்சியா??

:(
>>நான் ஒரு அனானி,

என்ன அனானி வஞ்ச புகழ்ச்சியா??

:(
<<
அண்ணே என்ன இப்புடி கேட்டிட்டீங்க? நெசமா நான் ஒங்க பதிவை எல்லா நல்லா படிச்சுப்புட்டு நாம்பாட்டுக்கு போய்க்கிடே இருப்பேங்க.. நாம என்ன எல்லாத்துக்கும் கருத்து கழிய கருத்து கண்ணாயிரமா என்ன படிக்கிற அல்லாத்துக்கும் பின்னூட்டிக்கிட்டிருக்க? சொல்லுங்க?

என்னதான் இருந்தாலும் ஒங்கலை போண்டாவுல அடிச்ச (வாலறுந்த) நட்சத்திரமா ஆக்கினது எனக்கு மனசு ஒப்பலைன்னா. அதக்கண்டிதான் நான் வாயைவே தொறந்தேன்.

இப்பன்னு மட்டும் கருத்து (இதெல்லாமாடா கருத்துன்னு யாரோ காறுர சத்தம் கேக்குது?) ன்னு சொல்ல வறசொல்ல, என்னையும் ஒரு போலின்னு யாரும் ஒதிக்கிறப்படாது பாருங்க, அதுக்குன்னே சொந்த அய்டி எடுத்துட்டோமல..இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க?
SurveySan said…
குட் போஸ்ட்.

இன்றைய நிலையில், கோக்/பெப்ஸி மாதிரி வெளிநாட்டு கம்பெனியெல்லாம் போடா வெளியன்னு சொல்றது நல்லதில்ல.
win-win arrangement இது.

அவங்களுக்கான சட்டத்த கொஞ்சம் டைட் பண்ணலாம்.

ஏற்கனவே ஊர்ல குடிக்க தண்ணி இல்ல. இவனுங்க வேற நிலத்தடி நீர உறிஞ்சா என்ன ஆவரது. சோ, கோக்/பெப்ஸி இன்னும் பல கம்பெனிகள, கடல்நீர் உபயோகித்து குளிர்பாணம் தயாரிக்க சொல்லி சட்டம் போடலாம்.

செலவு அதிகமாகும்னா, பாட்டில் வெலயும் ஏத்தட்டும். இதே சட்டம், பீர் கம்பெனி, தண்ணி பாட்டில் இந்த ரக ஆளுங்களுக்கும் போடணும்.
போடரதோட விட்டுவிடாம, நேர்மையா வாட்ச் பண்ணனும்.

நிலத்தடி நீர் - dont touch.
Anonymous said…
from aasath

Apart from the danerous (scientific and economically) of Coke we should fight against their monopoly of Soft drinks market at India. This monopoly had demolish the market of Kalimark like Indian Smaillscale Soft drink producers.

--------------------
We know the patriotism of Kattabomman and "Throgam" of Ettappan.
"If Kattabomman had ready to give atleast one paise to Company, He also had called as Ettappan"
-----

Yes this is the way to approach of measure our originality