கல்யாண் மறைவிற்கு என் அஞ்சலி!

தமிழ் வலைதிரட்டிகளில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்த தேன்கூடுவின் நிறுவனரான திரு.கல்யாண் அவர்களின் மரண செய்தி பெரும் அதிர்ச்சி :(

இவரை நடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்தித்த போது இப்படி சாந்தமானவரா தேன்கூடின் நிறுவனர் என்று ஆச்சர்யபடுத்தினார். தமிழ் எழுத்துக்கள் வளர்ச்சிக்கு பல விடயங்கள் முயர்ச்சிப்பதாகவும், அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்ன போது, இந்த சிறுவயதில் இவ்வளவு தமிழ் பற்றா என்று வியக்கவைத்தார்! ஒரு 20 நிமிடம் தான் அவரிடம் நானும், தமிழியும் பேசியிருப்போம்! தேன்கூடு சேவைகள், அதில் உள்ள பிரச்சனைகள் என அனைத்தையும் கூறினார், அத்துனை பிரச்சனைகளுக்கு இடையேயும் அவர் அயராமல் செய்துவரும் தமிழ் சேவை நினைத்து வியந்தோம்! அதற்கு பின் சில மின்னஞ்சல் மூலம் தேன்கூடில் வரும் மேலான்மை சேவைகளை பற்றி செய்திகளை அனுப்பிவைப்பார்.

அவரை அன்று சந்தித்தது தான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை! 29 வயது மரணத்தை தழுவும் வயதா?? வந்தார்! தன் கடமையாக நினைத்து தமிழ் வலையுலக்குக்கு தன்னால் இயன்ற சேவை செய்தார்! இன்று அவர் இல்லை என்றாலும் அவர் சேவைகள் நம்மை நினைவு கூறவைக்கும் என்பது உண்மை!

அவரின் குடும்பத்தாருக்கு நன்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

காலன் இவ்வளவு கொடூரமானவனா!!!

Comments

//இன்று அவர் இல்லை என்றாலும் அவர் சேவைகள் நம்மை நினைவு கூறவைக்கும் என்பது உண்மை//

உண்மை!
மிகவும் வருத்தமான செய்தி. அவருடன் நேரடியாக பழக்கம் இல்லாவிட்டாலும் அவருடைய சில பதிவுகளை படித்ததுண்டு. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிர்ச்சியான செய்தி..

தேன்கூடு மின்னஞ்சல்களில் கூட தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை...
அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அவர் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்களை அனுதாபத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
We The People said…
கல்யாண் அவர்களின் இறுதி சடங்குகள் வரும் 15 அல்லது 16ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது! அவரது உடலை இங்கு கொண்டுவர தாமதம் ஏற்பட்டுள்ளதால் தேதியும், நேரமும் முடிவு செய்யப்படவில்லை! மேலும் விவரங்கள் அவரின் இல்லத்தாரால் இந்த சுட்டியில் வெளிடப்படும்!

http://djanakiraman.googlepages.com