திருத்தமுடியாதுடா உங்களை!!!

ஜெயலலிதா மது அருந்தியதாக இரட்டை அர்த்தத்தில் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டது, கொட நாடு எஸ்டேட்டில் சோதனை நடந்தது ஆகியவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று காலை முதல் பேராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய அதிமுக எம்எல்ஏ கைது!
ஆடுங்கடா ஆடுங்க... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை. அரசியல்வாதிகள் கையில் பணமும், அதிகாரமும் இருக்கு என்றால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொளுத்திப்போட்டு என்ஜாய் பண்ணலாம்!

அன்று அவர்கள் தினகரன் கருத்துக்கணிப்பு போட்டப்போ, அழகிரி & கோ கலாநிதி மாறனையோ! தயாநிதி மாறனையோ அடிக்கவில்லை, கொல்லவில்லை! இன்று இவர்கள் சொன்னவரை ஒன்னும் செய்யவில்லை!

எந்த நாயாவது சொன்னவனையோ அல்லது செய்தவனையோ கொல்லறீங்களாடா? பாவம் உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களையும், காவல் காக்கும் காவலர்களும் தான் கிடச்சாங்களாடா? திரும்ப அடிக்கமாட்டாங்க என்ற தைரியம்! மக்களை விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை காலம் வேண்டிவரும் ?? இந்த பாவமலைகள் இந்தியாவை விட்டொழிக்க!!

Comments

Anonymous said…
ரொம்ப லைட்டா இருக்கே
We The People said…
அனானி,

அந்த கண்ணாடியை கொஞ்சம் கழட்டிவைத்துவிட்டு பாருங்க, நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும் :)))))))))
தமிழ்நாட்டின் சாபக்கேடு இந்த பெரியார், அண்ணா வழித்தோன்றல்கள். காமராஜர், கக்கன் போன்ற உத்தமர்களை ஏறி மிதித்து ஆட்சிக் கட்டிலை பிடித்த இவர்களால் ஒரு பிடி அரிசி கிடைக்காமல் இன்றும் போராடும் தமிழனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு' - என்றார் ஒருவர். திராவிட நாடு கனவானதால், தமிழ்நாட்டை சுடுகாடாக்க கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றன இந்த பீடைகள்.
இதற்கு என்ன முடிவோ?
Anonymous said…
3 கல்லூரி மாணவிகளை எரித்த அம்மா வாழ்க!!
Anonymous said…
3 கல்லூரி மாணவிகளை எரித்த அம்மா வாழ்க!!
Anonymous said…
//
அந்த கண்ணாடியை கொஞ்சம் கழட்டிவைத்துவிட்டு பாருங்க, நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும் :)))))))))//

ம்ஹூம். இப்போ ரொம்ப லைட்டா தெரியுது.

- கண்ணாடி போட்ட அனானி
//Krishna (#24094743) said...
தமிழ்நாட்டின் சாபக்கேடு இந்த பெரியார், அண்ணா வழித்தோன்றல்கள். காமராஜர், கக்கன் போன்ற உத்தமர்களை ஏறி மிதித்து ஆட்சிக் கட்டிலை பிடித்த இவர்களால் ஒரு பிடி அரிசி கிடைக்காமல் இன்றும் போராடும் தமிழனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. 'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு' - என்றார் ஒருவர். திராவிட நாடு கனவானதால், தமிழ்நாட்டை சுடுகாடாக்க கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றன இந்த பீடைகள்.
இதற்கு என்ன முடிவோ?
//

அய்யா... கிருஷ்ணா,
உங்காளுங்களுக்கு பெரியாரை குத்தம் சொல்லாட்டி.. சோறு இறங்காதே!

//'அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு' - என்றார் ஒருவர்//

இப்படியான வஜனத்தை இப்படியே இதே மாதிரியே அச்சுப்பிசங்காமல் யார் சொன்னாங்கன்னு ஆதாரத்தோட சொல்ல முடியுங்களா சாமீ! சும்மா அளந்து விடக்கூடாது. அப்படி உண்மையில் சொல்லப்பட்டிருந்தால்... அதன் படி இவர்கள் நடப்பதாக இருந்தால்.. என்னைக்கோ... சுடுகாடாகி இருக்கும். அப்படி சொல்லாத ஒரு விசயத்தை சும்மா அவுத்து விடக்கூடாது.

நடக்கும் அரசியல் காழ்புணர்ச்சி சண்டைகளில் பொதுமக்கள் பாதிப்படைவது நிச்சயம் கண்டிக்கத்தக்கதும், வருத்தப்பட வைக்கும் செயலகளும் தான்.

சும்மா... பொட்டி முன்னாடி உட்கார்ந்து தட்டி தட்டி வெட்டி நியாயம் பேசாமல்... ஊருக்குள் இறங்கி நாலு பேரிடம் போய் பேசுங்கள். இன்ன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளைக்கேனும் மாற்றம் வரும். மக்கள் விழிப்புணர்வு அடைய அவர்களிடம் போய் படித்தவர்கள் பேசினால் தான் இந்த நிலை மாறும்.

இல்லாவிட்டால் இன்னொரு நாளைக்கு எவனுக்காவது ஆதரவாக ஊரையே எவனாவது கொடுத்திப்போடுவான். அப்போவும் நாம் இப்படி வெட்டி நியாயம் பேசிக்கிட்டு தான் இருப்போம்.
Anonymous said…
//ம்ஹூம். இப்போ ரொம்ப லைட்டா தெரியுது.//

உன்னையை கண்ணாடியை கழட்டக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல!

-கண் டாக்டர்.
அய்யா யெஸ்பா: உங்கள் அறிவுரைக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் உங்களுக்கு ஏன் அய்யா நிரூபணம் வேண்டியிருக்கிறது? நீங்கள் களத்தில் இறங்கி நிறைய பேருக்கு சேவை செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. மிகவும் மகிழ்ச்சி. என்ன இன்னொரு ஆட்டோ அனுப்புவீர்களா? இல்லை இன்னோரு போலி உருவாக்குவீர்களா? நான் தான் உங்கள் பக்கமே வருவதில்லையே? பிறகு ஏன் இந்த ஆவேசம்? என்னை சாடுவதை விடுத்து உங்களுடைய கருத்துக்களைக் கூறலாமே? தமிழ்நாட்டின் நலன் என்ன உங்களுடைய ஏகபோக குத்தகையா? உங்கள் கருத்து உங்களுக்கு; என்னுடையது எனக்கு. உங்களை நான் குறைத்துக் கூறவும் இல்லை; எனக்கு நீங்கள் இலவச யோசனைகள் கூறவும் வேண்டாம்.
கும்மாங் குத்து.... மக்கள் அரசியல் சக்தியான மாறினா இவர்களுக்கு நிச்சயம் விழும் கும்மாங் குத்து!
கும்மாங் குத்து.... மக்கள் அரசியல் சக்தியான மாறினா இவர்களுக்கு நிச்சயம் விழும் கும்மாங் குத்து!
அய்யா... கிருஷ்ணா..,

உங்கள் கருத்துக்கு எதிர் கருத்தை பதிவு செய்தேன் அவ்வளவு தான்.

உண்மையில் அப்படி சொல்லி இருந்தார்களேயானால்.. இந்நேரம் அதையும் செய்து இருப்பார்கள் என்பது தான் என் கருத்து.

பெரியாரைப் பற்ரி பேசுபவன் மட்டுமே ஆட்டோ அனுப்புவது மாதிரியும், போலி உருவாக்குவது மாதிரியும் நீங்கள் பேசுவது சரியல்ல..

மேலும்,
என்னளவில் என்ன செய்ய இயலுமோ அதை செய்துகொண்டுதானிருக்கிறேன் இச்சமூகத்திற்கு.

உங்களுக்கு மட்டுமே "அந்த இலவச" ஆலோசனை என்று நீங்கள் நினைத்தால் மன்னிகவும்.
Anonymous said…
//கும்மாங் குத்து.... மக்கள் அரசியல் சக்தியான மாறினா இவர்களுக்கு நிச்சயம் விழும் கும்மாங் குத்து!

//

ஆமாமா... மேற்கு வங்கத்திலேயேம் தெரியத்தான் போகுது. :)
Anonymous said…
//அந்த கண்ணாடியை கொஞ்சம் கழட்டிவைத்துவிட்டு பாருங்க, நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும் :))))))))) //

சுத்தமாக ஒன்னுமே தெரியலை. :((((((

-கண்ணாடி கழட்டிய அனானி.
Anonymous said…
//சந்திப்பு said...

கும்மாங் குத்து.... மக்கள் அரசியல் சக்தியான மாறினா இவர்களுக்கு நிச்சயம் விழும் கும்மாங் குத்து! //

மக்கள் அரசியல் சக்தியா மாறுவதற்காக தான் நாங்கள் உண்டியல் குலுக்கி கொண்டிருக்கிறோம்.

- கம்மூனிஸ்டு கந்தசாமி
Anonymous said…
உண்மைத்தமிழன் என்ற பெயரில் அபத்தமாக கிறுக்குகிறார் ஒருவர்.அவருக்கு சில கேள்விகளை முகமூடி தருகிறார்.பதில் கிடைக்குமா?

தலைகவசம் விஷயத்தில் தமிழக அரசை கண்டபடி விமர்சித்த இவர் கோர்ட் இதை தடைசெய்ய மறுத்ததை ஏற்கிறாரா?

இதே திட்டத்தை ஜெயா கொண்டுவந்திருந்தால் இவர் அடிவருடியிருப்பாரா இல்லையா?

இவர் பாப்பார பன்னாடை சோவை அடி வருடுபவர் என்பது உலகிற்கே தெரியும்.இவர் உண்மை தமிழன் என்றால் தமிழரின் பரமவிரோதியான சோவின் எல்லா கருத்தையும் ஆதரிக்கிறாரா?

உண்மைத்தமிழன் என்பதற்கு என்ன விளக்கம் என்று சொல்லுவாரா?மற்ற தமிழன்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்?

இந்த கிறுக்கு சிவாஜி படத்திற்கு வரிவிலக்கு இல்லையென்று அரசு அறிவித்திருந்தால் அது ஒரு பெயர் தானே என்று ஒரு பதிவு பத்து பக்கத்திற்கு போட்டு அரசை தாக்கியிருக்கும் என்பது உறுதி.
Subramanian said…
1965ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்,கோவையில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை உயிருடன் எரித்துக் கொன்ற சில திமுகவினர் தற்போது மொழிப்போராட்டத் தியாகிகள் என்ற பட்டத்துடன் மாதா மாதம் தமிழக அரசிடமிருந்து தியாகிகளுக்கான உதவித் தொகை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
இது வரலாறு காட்டும் நிதர்சனமான உண்மை.
நாளைய வரலாறு என்னவாக இருக்கும்?
//உங்களுக்கு மட்டுமே "அந்த இலவச" ஆலோசனை என்று நீங்கள் நினைத்தால் மன்னிகவும்.//
யெஸ்பா அவர்களே: பெரிய வார்த்தைகள் வேண்டாமே. கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். அந்த ஆலோசனை எனக்கு மட்டும் இல்லையென்றாலும் என் கருத்து அது தான். தங்களைப் போலவே நானும் என்னாலியன்ற நல்ல காரியங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன். உங்களை மன்னிக்கும் அளவுக்கு நான் அவ்வளவு பெரியர் இல்லை. என் வார்த்தைகள் உங்களைப் புண்படுத்தியிருப்பின் மன்னிப்பீர்களாக. peace :-)
Anonymous said…
இது எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதிதான்!.

வயசான காலத்தில் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வெண்ணீராடை மூர்த்தி மாதிரி இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசி, தன் பேரன்களைப்போல தமிழகத்தில் கலவரங்களை உண்டுபண்ணிக்கொண்டிருக்கிறார்.

போகிற காலத்தில் ஆட்சிக்கு வந்து ஏதாவது நல்லது செய்து புண்ணியம் தேடாமல், இதெல்லாம் இவருக்கு தேவையா?

தினகரன் கருத்துக்கணிப்பால், கலவரம் நடந்து மூன்று உயிர்கள் பலியானபோது சும்மா கைகட்டி வாய் பொத்தியிருந்த காவல் துறையினர், இந்த கொடும்பாவி எரிப்பு சம்பவத்தின் போதும் அதே மாதிரி இருந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆளும் கட்சி கிண்டினா அல்வா, மத்தவன் கிண்டினா களியா?
என்னடா உங்க ஊரு நியாயம்!
Anonymous said…
//உண்மைத்தமிழன் என்பதற்கு என்ன விளக்கம் என்று சொல்லுவாரா?மற்ற தமிழன்களுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்//

தங்களைத் திராவிடத் தமிழர்கள் என்று வர்ணித்துகொள்ளும் "பிரியாணி குஞ்சுகள்" எனப்படும் அல்பங்களைத் தவிர மற்ற தமிழர்கள் யாவரும் உண்மைத் தமிழர்கள் தான்.
Anonymous said…
இது எல்லாவற்றிற்கும் காரணம் LTTEதான்.
First take action against LTTE!!!
Anonymous said…
இந்தியான்னா என்ன ?
Anonymous said…
//அந்த கண்ணாடியை கொஞ்சம் கழட்டிவைத்துவிட்டு பாருங்க, நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும் //


கண்ணாடி எங்கே விற்கும்.....
Madhu Ramanujam said…
வாழ்க நம்ம திராவிடக் கட்சிகள். வாழ்க நம்ம அரசியல்வாதிகள். நம்ம நாட்ல ஏழைங்க ரொம்ப அதிக அளவில இருக்காங்க. ஆனாலும் அவங்களும் சேர்ந்து ஓட்டு போட்டாத் தான் நம்ம அரசியல் வாதிங்க ஜெயிக்க முடியும்னு ஒரு நிலை. இதே அப்படி இல்லாம பணமிருக்கிறவங்க மட்டும் தான் ஓட்டு போடணும்னு இருந்தா, நம்ம துண்டு போட்ட அண்ணாச்சிங்க அந்த ஏழைகளை கொன்னு திங்கக் கூடத் தயங்க மாட்டாங்க.

நமக்கு இப்ப தேவை தெரசாவின் அன்புள்ளம் கொண்ட ஒரு அடால்ப் ஹிட்லர்.

வாழ்க நம்ம ஜனநாயகம்!!
Anonymous said…
Krishna (#24094743) said...
//எல்லாவற்றிற்கும் உங்களுக்கு ஏன் அய்யா நிரூபணம் வேண்டியிருக்கிறது? //

ஹை !!!!
அப்போ ஆதாரமில்லாம எந்த குற்றச்சாட்டும் எழுப்புவேன்னு சொல்லுறீங்களா?