அன்புடன் ஆண்டு விழா 2 - பரிசுப் போட்டி!

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்! "இதயம் மீறும் எண்ணங்களால் நாம் எழுந்து பறப்போமே இதய நிழலில் இதயம் கிடத்தி இன்னல் துறப்போமே" எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது... உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது. போட்டி விபரம்: கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது. 1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com ) 2. இசைக்கவிதை* - பாடச்சுவை சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். ...