Posts

Showing posts from January, 2009

திருமங்கலம் லேட்டஸ்ட் முடிவுகள்! தி.மு.க 41,341 முன்னிலை!!

திருமங்கலம் லேட்டஸ்ட் முடிவுகள்! நேற்று நாம் சொன்னதில் ஒன்று அனேகமாக நடந்துவிட்டது! தி.மு.க - 78,106 அ.தி.மு.க - 36,765 வித்தியாசம் - 41,341 அடுத்த விசயங்கள் விரைவில் தொடரும்... மேலும் விவரங்களுக்கு என் நேற்றைய பதிவை பார்க்கவும். மறக்காமல் வலது பக்கம் உள்ள வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் :)

திருமங்கலம் முடிவும் மாறும் கூட்டணிகளும்

Image
நாளைய திருமங்கலம் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் என்ன நடக்கலாம் என்ற சிறு அலசலே இந்த பதிவு. திருமங்கலம் தொகுதி வர இருக்கு பாராளமன்ற தேர்தலுக்கு ஒரு வெள்ளோட்டமாக கருதப்படுகிறது! இங்கு விழும் ஓட்டுக்களை வைத்து மக்கள் யாரிடம் இருக்கிறார்கள் என்ற ஒரு மாயாயை உருவாக்க முடியும், அதனால் ஜெயிக்கும் கட்சிக்கு கண்டிப்பாக சில சதவீத ஆதரவு பெருகும் என்பது ஒரு கருத்து! அதனால் எப்படியும் ஜெயிப்பது என்று இரண்டு கழகங்களும் கச்சை கட்டி இறங்கி இருக்கிறது! எனக்கு தெரிந்தவர்களிடமிருந்து தகவல் படி இறக்கப்பட்ட காசுக்கு கண்டிப்பா தி.மு.க தான் ஜெயிக்கும், அது நிச்சயம்! ஒரு ஆளுக்கு 5 - 6 ஆயிரம் வரை காசு கொடுத்திருக்கிறார்கள் ஓட்டுக்காக என்ற நிலையில் கண்டிப்பா அதிகம் கொடுத்தவருக்கே ஓட்டு என்ற லாஜிக்ல் பார்த்தால் நிச்சயம் அது தி.மு.கவுக்கு தான் அதிக ஓட்டு கிடைக்க வழி உள்ளது! இத்துணை கோடி செலவு செய்து எதற்காக இந்த ஓட்டு பிச்சை என்றது எனக்கு தோன்று சில விசயங்கள். பாவம் அ.தி.மு.க குறைவான காசு + தி.மு.க ஆட்சிக்கு எதிர்ப்பு ஓட்டுக்களை மட்டும் வைத்து ஜெயித்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டது என்றே தோன்றுகிற...