மரண அரசியல் - செல்வி.ஜெயலலிதா!
கடந்த வாரம் தடுப்பூசி இட்ட நான்கு குழந்தைகள் மரணத்தை தழுவின, அந்த மரணங்கள் தவிர்கப்பட்டிருக்களாமோ இல்லையோ! தெரியவில்லை, அதற்கு என்ன காரணம், மருந்தா? குளிரூட்டு பெட்டியில் பாதுக்காக்காததா? என்ற காரணங்களே வெளிவராத நிலையில், தமிழக அரசு தான் தரகுறைவான மருந்துகளை வாங்கி குழந்தைகளை கொண்றது போன்று ஒரு கேவலமான அரசியல் செய்வது என்ற கொடூர வேலையை செய்யும் செல்வி. ஜெயலலிதா, அதை தினமும் சொல்லிக்கொண்டிருக்கும் ஜெயா டி.வி மற்றும் மக்கள் டி.விக்கு என் கண்டனங்கள்! இது தொடர்பான சில விசயங்கள்: 1. இந்த மருந்து தமிழக அரசு வாங்கி வினியோபிப்பதல்ல! மந்திய அரசு மொத்தமாக வாங்கி, இந்தியாவில் உள்ள அத்துனை மாநிலங்களுக்கும் வினியோக்கிறது! 2. மத்திய அரசு தான் சோதனை அடிப்படையில் Human Biologicals Institute ( HBI ) நிறுவனத்தின மிருந்து இந்த மருந்துகளை வாங்கியுள்ளது! வழக்கமாக வாங்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடூடிடமும் ( Serum Institute of India) வாங்கியுள்ளது! 3. இதில் HBIயிடம் வாங்கிய மருந்துகள் ஒரு டோஸ்க்கு ரூ 7/- விலை அதாவது ரூபாய் ஒன்று சீரம் இன்ஸ்டிடூடின் தடுப்பு மருந்து(ரூபாய் 8/-) விலையைவிட குறைவானவை! 4. இறந...