Posts

Showing posts from July, 2008

உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா!!!

நாட்டில ஏழை மற்றும் மிடில் கிலாஸ் மக்கள் விலைவாசி, பெட்ரோல்/டீசல் விலை ஏற்றம், பணவிக்கத்தால திண்டாடிக்கிட்டு இருக்காங்க, அதுக்குகாக ஒரு எழவும் செய்யாம, வெட்டியா 2030 ஆண்டு கரெண்ட் பிரச்சனையை சமாளிக்க போறேன்னு, அணு சக்தி பின்னாடி சுத்திக்கிட்டு இருக்காரே நம்ம பிரதமர்!! ரெம்ப நல்ல பிரதமர் தான் நமக்கு கிடைத்து இருக்காருடே !! நேற்று அதைவிட முக்கியமான வேலையா, முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கு இடையில் கோடிகள் பிரச்சனையாம், பாவம் வேலை வெட்டியில்லாம இருக்காரு பிரதமர், உடனே கிளம்பிட்டாரு அவங்க பிரச்சனையை சரி செய்யறதுக்கு!! நல்லா வெளங்கும்டா நாடு!!! பாவம் அவரும் ஏதாவது உருப்படியா வேலை இல்லையே! இதையாவது பார்த்தா ஏதாவது கட்டிங் தேருமான்னு யோசிக்கறாரோ??

எம்.பி வாங்களையோ! எம்.பி :(((

நேற்று நடந்த கம்யூனிட்ஸ்டுக்ளின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் காங்கிரஸை பற்றி பரவலா சொன்ன குற்றச்சாட்டு, பெருமளவு குதிரை பேரம் நடப்பதாகவும், கோடிக்கணக்கில் பணம் கைமாறுவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர் கம்யூனிஸ்டுகள்! இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகள் காங்கிரஸுக்கு ஆதரவு தர எவ்வளவு தந்தார்கள் என்று சொல்லவில்லை இதுவரை.... :))) ஒரு எம்.பிக்கு 25 கோடி ரூபாயும், ஒரு மந்திரி பதவி வரை வாக்குறுதி தரப்படுகிறதாம், காலையில் விண் டி.வி செய்திவிமர்சனத்தில் சொன்னார். எனக்கு இருக்கும் ஒரே டவுட், இவ்வளவு காசு கொடுத்து ஒரு வருடம் ஆட்சியில் இருந்தால், ஆட்சியை தக்கவைக்க 60 எம்.பிகளுக்கு கொடுத்த காசுக்கு (1500 கோடி) மேல இவர்களுக்கு தேறுமா?? இல்லை மக்கள் நலனை முன்னிட்டே தங்கள் கட்சி பணத்தை இப்படி விலைக்கு வாங்க உபயோகிக்கிறார்களோ?? இந்தியாவில் நிலவும் ஜனநாயத்தின் கொடிய நிலையை நினைத்து மணம் நொந்து கொள்வதை தவிர வேறென்ன செய்யமுடியும் நம்மால்...

கலைஞர் கடிதமும் விலைவாசி உயர்வும்

முரசொலியில் முதல்வரின் நேற்றைய சேதி பயங்கரமா சிரிப்பை தான் வரவைத்தது! வெங்காயம் விலையும், தக்காளி விலையும் கடுமையாக குறைந்துவிட்டதாம், மக்கள் சந்தோஷ கடலில் தத்தளிக்கிறார்களாம் :))))) அது கொடநாடு எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லைன்னு சொல்லியிருக்காரு! (அங்க அந்த அம்மா என்ன தான் செய்யறாங்களோ! ஒன்னியும் பிரியில! எதிர்கட்சி தலைவருக்கு ரெஸ்டு தவிர வேற வேலையே இருக்காதோ! அது வேற விசயம்!) மற்ற எல்லா காய்கறிகளில் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிட்டது! அது நம் முதல்வருக்கு தெரியவில்லை!! என்ன சொல்லவரார் குறைந்த விலையில் கிடைக்கும் வெங்காயம் + தக்காளியை மட்டும் வைத்து ஜாலியா இருங்க! மற்ற காய்கறிகள் எங்களை மாதிரி காசு இருக்கிறவங்க சாப்பிடுவது என்பதை தெரிந்து கொள்ளுங்க என்றா??