எம்.பி வாங்களையோ! எம்.பி :(((

நேற்று நடந்த கம்யூனிட்ஸ்டுக்ளின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் காங்கிரஸை பற்றி பரவலா சொன்ன குற்றச்சாட்டு, பெருமளவு குதிரை பேரம் நடப்பதாகவும், கோடிக்கணக்கில் பணம் கைமாறுவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர் கம்யூனிஸ்டுகள்! இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகள் காங்கிரஸுக்கு ஆதரவு தர எவ்வளவு தந்தார்கள் என்று சொல்லவில்லை இதுவரை.... :)))

ஒரு எம்.பிக்கு 25 கோடி ரூபாயும், ஒரு மந்திரி பதவி வரை வாக்குறுதி தரப்படுகிறதாம், காலையில் விண் டி.வி செய்திவிமர்சனத்தில் சொன்னார்.

எனக்கு இருக்கும் ஒரே டவுட், இவ்வளவு காசு கொடுத்து ஒரு வருடம் ஆட்சியில் இருந்தால், ஆட்சியை தக்கவைக்க 60 எம்.பிகளுக்கு கொடுத்த காசுக்கு (1500 கோடி) மேல இவர்களுக்கு தேறுமா?? இல்லை மக்கள் நலனை முன்னிட்டே தங்கள் கட்சி பணத்தை இப்படி விலைக்கு வாங்க உபயோகிக்கிறார்களோ?? இந்தியாவில் நிலவும் ஜனநாயத்தின் கொடிய நிலையை நினைத்து மணம் நொந்து கொள்வதை தவிர வேறென்ன செய்யமுடியும் நம்மால்...

2 comments:

said...

25 கோடியா?????

ம்ம் நம்மாளுங்க 25 ரூபா குடுத்ததுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சவங்க வேற எப்படி இருப்பாங்க

said...

எம்.பி ரேட்டும் மாறிவிட்டதாக தகவல், 50 கோடி ஆகிவிட்டதாம்.
10 மாதத்துக்கு 50 உங்களால் சம்பாதிக்க முடியுமா என்று கேட்டுத்தான் எல்லா எம்.பிகளிடமும் பிரச்சாரம் நடக்குதாம்!!

வாழ்க ஜனநாயகம்!