உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா!!!

நாட்டில ஏழை மற்றும் மிடில் கிலாஸ் மக்கள் விலைவாசி, பெட்ரோல்/டீசல் விலை ஏற்றம், பணவிக்கத்தால திண்டாடிக்கிட்டு இருக்காங்க, அதுக்குகாக ஒரு எழவும் செய்யாம, வெட்டியா 2030 ஆண்டு கரெண்ட் பிரச்சனையை சமாளிக்க போறேன்னு, அணு சக்தி பின்னாடி சுத்திக்கிட்டு இருக்காரே நம்ம பிரதமர்!! ரெம்ப நல்ல பிரதமர் தான் நமக்கு கிடைத்து இருக்காருடே !!

நேற்று அதைவிட முக்கியமான வேலையா, முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கு இடையில் கோடிகள் பிரச்சனையாம், பாவம் வேலை வெட்டியில்லாம இருக்காரு பிரதமர், உடனே கிளம்பிட்டாரு அவங்க பிரச்சனையை சரி செய்யறதுக்கு!! நல்லா வெளங்கும்டா நாடு!!! பாவம் அவரும் ஏதாவது உருப்படியா வேலை இல்லையே! இதையாவது பார்த்தா ஏதாவது கட்டிங் தேருமான்னு யோசிக்கறாரோ??

7 comments:

said...

:)

said...

மாமா வேலை மட்டும்தான் இன்னும் பாக்கல நம்ம பாரதபிரதமரு

கூடிய சீக்கிரம்.........

ம்ம்ம் என்னத்த சொல்ல

said...

அவர சொல்லி என்ன பிரயோஜனம்.. அவர் வெறும் தலையாட்டி பொம்மை மட்டும் தாங்க..

said...

பிளிச்சீங் பவுடர்னா பிளிச்சீங் பவுடர்தான். எல்லா கிரிமிகளையும் கொல்ற பிளிச்சீங் பவுடரு.
நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்குது. விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என ஏகத்துக்கும் பிரச்சனைகள் இருக்குது.

said...

ஜிம்ஷா நீங்க என்ன சொல்லவறீங்க என்று தெரியல... ஆனா நீங்க அரசியல் வாதிகளை விட பெரிய கொழப்பவாதியா இருப்பீங்க போல!!! ஒன்னியும் பிரியலயே!!

Anonymous said...

//ஜிம்ஷா நீங்க என்ன சொல்லவறீங்க என்று தெரியல... ஆனா நீங்க அரசியல் வாதிகளை விட பெரிய கொழப்பவாதியா இருப்பீங்க போல!!! ஒன்னியும் பிரியலயே!!//

நீங்க Bleaching Powder என்ற பெயரிலும் அங்கங்கே பின்னூட்டம் போடுறீங்க இல்லை. அதை சொல்றாரு போலிருக்கு :-)

said...

//நீங்க Bleaching Powder என்ற பெயரிலும் அங்கங்கே பின்னூட்டம் போடுறீங்க இல்லை. அதை சொல்றாரு போலிருக்கு :-)//

அட போங்கப்பா! யாருன்னு தெரியலைனா உடனே உங்களுக்கு என்னைத்தான் நினைவுக்கு வருமா!! இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு என்னிடம் ஒரே பதில் நான் என் பெயரில், என் படம் போட்டுத்தான் பதிவு எழுதறேன், அதே பெயரில் தான் பின்னூட்டங்களும் எழுதுவேன், எனக்கு கண்ட பெயரில் பேசவேண்டிய தேவை கிடையாது! யாரும் நம்பனுன்னு கட்டாயம் கிடையாது! நம்பாவில்லை என்றால் I dont care too!

:) (இதை வேற போடலைன்னா கோவிச்சிக்கிட்டேன்னு நினைக்க போறாங்க )