குழந்தைகள் தின அதிர்ச்சி!

இன்று குழந்தைகள் தினம், குழந்தைகளுக்கான இந்த நாளில், ஒரு அதிர்ச்சி செய்தியுடம் இந்த பதிவையிடுகிறேன். உலகிலேயே, நம் இந்தியாவில் தான் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையில் அதிகம்!!! உலகவங்கியின் கணக்குப்படி சுமார் 5 கோடி குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர்!!! அதாவது சுமார் இந்தியவின் மக்கள் தொகையில் 5%. நம் நாட்டில் மாட்டும் ஏன் இவ்வளவு குழந்தை தொழிலாளர்கள்?

இதில் சிந்திக்கவேண்டியது, இந்தியவில் சுமார் 41 கோடி குழந்தைகள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) , இதில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் 11 கோடி. இந்த கணக்கு படி சுமார் 30 கோடி குழந்தைகள் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். இந்த முப்பது கோடியில் 5 கோடி குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர், எட்டரை கோடி குழந்தைகள் பள்ளிகூட செல்லாதவர்கள் என்று அறியும் போது அதிர்ச்சியாக உள்ளது. ஏன் இந்த நிலை? இதை தடுக்க என்ன செய்யலாம்? இதுவே இன்றய இந்தியாவின் கேள்வி!!!

நம்முடைய ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தியா 2020 வின் கதாநாயகர்ளாக/சிற்பியாக கருதும் இந்த மலர்களில் பலர், இன்று நகர்புறத்தில் டீ கடையிலும், ஹோட்டலும், மெக்கானிக்/பஞ்சர் கடைகளிலும் தினக்கூலிக்கு வேலை பார்க்கிறார்கள். இது கிராமப்புறத்தில் விசயம், கிராமங்களில் குழந்தைகள் செங்கல் சூளை, அரிசி ஆலை, தீப்பெட்டி தொழில்சாலைகளில் வாடுகின்றன. இன்றும் பல இடங்களில் கொத்தடிமைகளாக குழந்தைகள் சில ஆயிரங்களுக்கு விற்கப்படும் வழக்கம் உள்ளது. குடும்ப பாரத்தை சுமக்கவே இவர்கள் வேலைக்கு செல்கிறார்கள் என்பது இன்னொரு கொடுமையான விசயம்.

ஏன் இந்த நிலை? இதை மாற்ற என்ன செய்யலாம் என தேடியபோது, வலையில் சில புள்ளிவிவரங்களும், காரணங்களும் புலப்பட்டன.

குழந்தை வேலைக்கு செல்ல சில முக்கிய காரணங்கள்:

  • 70% வறுமை கோட்டுக்கீழ் உள்ள காரணங்கள்
  • 20% கடன் சுமைகளுக்காக கொத்தடிமை ஆக்குதல்
  • பெற்றோருக்கு வேலை நிறந்தரமற்ற தன்மை
  • கட்டாய கல்வி திட்டம் சரிவர அமுலாகப்படாதது

இந்திய நாட்டில் 26 கோடி மக்கள் வருமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். (வருட சம்பளம் ரூபாய் ஐந்தாயிரத்துக்கு கீழ்) இது ஒரு முக்கிய காரணம்.

ஆக வருமை ஒழிப்பும், 100% துவக்கப்பள்ளி கல்வி செயல்படுத்தாமையுமே இன்றய இந்த நிலைமைக்கு முக்கிய காரணங்கள் தோன்றுகின்றன.

இந்த குழந்தை தொழிலாளர்கள் எங்கு வேலை செய்கிறார்கள் என்று பார்த்தால் விவசாயமும் அதை சார்ந்த தொழிலையே செய்கிறார்கள்.

2005 ஆண்டு தமிழக அரசு உலக வங்கியிடம் வறுமை நீக்கவும் ரூ 700 கோடியை (USD 160 million) கடனாக வாங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி 2011 செப்டம்பரில் இந்த தொகை அனைத்தும் வறுமை ஒழிப்புக்கு உபயோகப்படுத்தும் என்று தமிழக அரசு உலகவங்கிக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளது. இது போன்று மற்ற மாநிலங்களும் கடன் பெற்று வறுமை நீக்க முயற்சிப்பதாக உலக வங்கியின் இனையம் சொல்கிறது. இவையும் இந்த சிறுவர்களின் சுமையை குறைக்க உதவும் என்று நம்புவோம்.

UNICEFவின் இணையத்தில் தேடிய போது கிடைத்த எடுத்துக்காட்டுக்கள்:

1. 1920 -30களில் இலங்கை அரசு கட்டாய துவக்க கல்வி திட்டம் கொண்டுவந்து நல்ல பலன்களை கொண்டுவந்துள்ளது. 1946ல் 58% துவக்க கல்வி கற்றவர்களானர், 1984ல் 86% மக்கள்தொகை துவக்க கல்வி இலக்கை அடைந்தது. அதே காலகட்டத்தில் 1946ல் 13 சதவீகிதமாக இருந்த குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பு இப்போது 5.3% மாக குறைந்துள்ளது.

2. நம் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று 94% மக்கள் துவக்க கல்வி பயின்றவர்களாக இருக்கிறார்கள் இதன் காரணமாக சுமார் 1% அளவுக்கு குழந்தை தொழிலாளர்கள் குறைந்துள்ளனர்.

இந்த UNICEFவின் எடுத்துக்காட்டுகள் வைத்து பார்க்கும் போது, மற்ற மாநிலங்களும் இலங்கை, கேரளாவை போன்ற கட்டாய கல்வி திட்டத்தை கொண்டுவந்து 100% கல்வி இலக்கை அடைந்தால் நிச்சயமாக நம் முதல்-குடிமகன் காணும் கனவை இந்தியா 2020 அடையமுடியும்.

Comments

We The People said…
ஐயா அனானிகளா ஏங்க இப்படி கொல்லறீங்க. எதுக்கெடுத்தாலும் ஜெய் ஹிந்த் சொல்லுன்னு சொன்ன இதுக்கெல்லாம் என் பதில் ஒன்றும் கிடையாது. என்னை விட்டுவிடுங்க. உபயோகமில்லா அனானி பின்னூட்டங்கள் அனுமதிக்கபட மாட்டாது. சாரி :)
சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்.
ரவி said…
இது ஒரு தரமான பதிவுதான்...நல்ல தேடுதல், மற்றும் நல்ல கருத்துக்கள்..

கேரி ஆன்...
We The People said…
நன்றி இந்தியன் & செந்தழல் ரவி. மீண்டும் வந்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.
We The People said…
செந்தழல் ரவி நீங்களா? ஐயோ மறந்தே போச்சு உங்களுக்கு தனியா நன்றி போடவில்லை என்றால் கோவிச்சுக்குவீங்களே!! நன்றி செந்தழல் ரவி. போதுங்களா?!
எந்த அடிப்படையில் இந்த அரசு குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை தரும் என்று நம்புவது?....

கொஞ்சம் உங்க புள்ளியியல் அறிவை உபயோகித்து எனது சந்தேகங்களை போக்குங்களேன்...

அதுவும் நம்ம அப்துல் கலாம் இப்படி பெரும்பான்மை குழந்தைகள்(உஙக்ளது வறுமை குறித்த அரசு புள்ளிவிவரமே டூபாக்கூர் என்பதை எனது பதிவில் எழுதயுள்ளேன்) இருக்கும் பொழுது அதை குறித்து ஒன்றும் பேசாமல், கனவு காண், நாட்டுக்கு நீ என்னா செஞ்சேன்னு ரோசி அப்படின்னு நம்ம காதுல கிலோ கணக்குல் சுத்துறாறே?

அத்த எப்படி எடுத்துக்கறது?

நீங்களே இந்த பதிவில் குறிப்பிடுவது போல வறுமைதான் பிரதான காரணமாக இருக்கிறது(அதாவது உங்களது நாலு பாயிண்டில் முதல் மூணு பாயிண்டு). பிறகு பதிவின் கடைசிப் பகுதியில், கல்வியறிவு கொடுத்தால் இந்த குழந்தை தொழிலாளர் பிரச்சனை தீந்துரும்னு சம்பந்தமில்லாமல் ஒரு செருகல். இந்த அரசு கல்வி விசயத்திலும் ஒன்னும் பிடுங்க போறதில்லை என்பது இருக்கட்டும், கல்வி கொடுத்தால் குழந்தை தொழிலாளர் குறைவர் என்பது உங்களது முந்தைய பாயின்டுகளுக்கு முரன்படுகிறதே?

அப்புறம், விவசாய பெருங்குடிகள் நவீன நாடோ டிகளாக ந்கர்புறத்தில் லட்சக்கணக்கில் டேரா அடிப்பதும் அவர்க்ளின் குழந்தைகள் நவீன குறத்தி மகன்களாக புழுதிகளுடன் விளையாண்டு சுற்றி வருவதுமான புதிய நவீன உலகமய பண்பாட்டு வளர்ச்சி சூழலில் எந்த வகையில் குழந்தை தொழிலாளியை ஒழிக்கப் போகிறீர்கள்?

இந்த அரசு சில அருமையான திட்டங்கள் மூலம், வறுமையானவர்களை ஒழிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது அதில் உறுதியாக இந்த குழந்தை தொழிலாளர்களும் இருப்பர் அதை எதுவும் மனதில் கொண்டு சொல்கிறீர்களா?


'We The People' பேரு வைச்சிட்டமே ஏதாவது மக்கள் பிரச்சனைகளை பேசனும், ஆனா அது முதலுக்கே மோசமாகி அரசை அம்பலப்படுத்துற மாதிரியும் இருக்கக் கூடாதுன்னு நீங்க எழுதுற மாதிரியே எனக்கு தோணுது. நான் வெளிப்படையா விமர்சன்ம் செய்துதான் பழக்கம். அதான் சந்தேகத்த இங்கேயே முன்வைச்சிட்டேன்.

அசுரன்
We The People said…
அசுரன்,

மீண்டும் வந்து நல்ல விவாதம் துவக்கியதற்கு நன்றி. ஐயா நான் கொடுத்த புள்ளிவிவரம் எங்க இந்திய அரசு கொடுத்த 1.2 கோடி குழந்தை தொழிலாளர்கள் கணக்கு அல்ல.. அரசு சொல்லும் கணக்கு 1.2 கோடி, நான் சொல்லும் கணக்கு 5 கோடி. இது பலர் செய்த ஆராய்ச்சி மற்றும் உனிசெஃப் அமைப்பின் புள்ளி விவரங்கள்.

//அப்புறம், விவசாய பெருங்குடிகள் நவீன நாடோ டிகளாக ந்கர்புறத்தில் லட்சக்கணக்கில் டேரா அடிப்பதும் அவர்க்ளின் குழந்தைகள் நவீன குறத்தி மகன்களாக புழுதிகளுடன் விளையாண்டு சுற்றி வருவதுமான புதிய நவீன உலகமய பண்பாட்டு வளர்ச்சி சூழலில் எந்த வகையில் குழந்தை தொழிலாளியை ஒழிக்கப் போகிறீர்கள்//

இவை கல்வி அறிவு வளரும் போது தானாக குறைந்துவிடும் என்று நினைக்கிறேன்.

//'We The People' பேரு வைச்சிட்டமே ஏதாவது மக்கள் பிரச்சனைகளை பேசனும், ஆனா அது முதலுக்கே மோசமாகி அரசை அம்பலப்படுத்துற மாதிரியும் இருக்கக் கூடாதுன்னு நீங்க எழுதுற மாதிரியே எனக்கு தோணுது.//

நான் அரசை சாடியே என் பதிவுகளை எழுதி உள்ளேன். அரசு தவறு செய்வதை சுட்டிக்காட்டியுள்ளேன். என் முந்தய பதிவுகளை பார்க்கவும்.

இந்த விசயத்தில் இப்ப தான் அரசு ஏதோ சில நடவடிக்கைகளை எடுக்கறாங்க. சில சட்டங்கள் சீரிஸா செயல் படுத்தப்போறதா சொல்லறாங்க பார்ப்போம். இவையும் இந்த சிறுவர்களின் சுமையை குறைக்க உதவும் என்று நம்புவோம் என்று தான் சொல்லி இருக்கேன்.

அப்புறம் என் இரண்டு எடுத்துக்காட்டுக்கள், இதற்கு முன் நடந்து வெற்றிகரமா செயல்படுத்தப்பட்டு, குழந்தை தொழிலாளர் பெருமளவு குறைத்த எடுத்துக்காட்டுக்கள். அந்த Methodologyயை பின்பற்றி பார்ப்போம் என்று தான் சொன்னேன். இது நாளைக்கே பலன் தரும் என்று சொல்ல முடியாது, பல வருடங்களாகலாம், 2020க்கு இன்னும் 14 வருடம் இருக்கு தலைவா, ஏதோ ஒரு நம்பிக்கையில எழுதிட்டேன். :)

பி.கு: உங்க காஷ்மீர் பிரச்சனை மேட்டர் பதில் எழுதி அது ஒரு பெரிய கதை ஆயிடுச்சு. அதை ஒரு தனி பதிவா விரைவில் போடுறேன் தல :)
We The People said…
//முதலுக்கே மோசமாகி அரசை அம்பலப்படுத்துற மாதிரியும் இருக்கக் கூடாதுன்னு நீங்க எழுதுற மாதிரியே எனக்கு தோணுது.//

அசுரன் அவர்களே, நீங்க என் அப்சல் பதிவை மட்டும் பார்த்திட்டு இப்படி சொல்லறீங்க. ஒருவேளை First Impression என்னை பற்றி உங்களுக்கு அப்படி தோண்றியதுன்னு நெனைக்கிறேன். கொஞ்சம் மாத்திக்கோங்கோ!!!
ஒவ்வொரு மாவட்டத்திலும் அது சார்ந்த தொழில்களில் சிறார்களை வேலை வாங்குவது இருந்து கொண்டுதான் இருக்கிறது. முழுநேரமாக இல்லாவிட்டாலும் பகுதி நேரமாக..

பீடி சுற்றல், தீப்பெட்டி தொழில், கட்டிட வேலையென...

குழந்தைகள் சார்ந்த எனது அதிர்ச்சி வேறுவிதமானது...
காண http://saathveegan.blogspot.com/2006/11/blog-post_14.html
We The People said…
நன்றி சாத்வீகன். உங்கள் பதிவை பார்த்தேன். நீங்கள் சொல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு :)
BadNewsIndia said…
நல்ல விவரங்கள்.

ஆரம்பக் கல்வி மட்டும் கொடுத்தா கலாமின் 2020 கனவு எல்லாம் நினைவாகாது.
வயிறு பசிக்குமே, படிப்பு எங்க ஏறும்.

ஊரில் இருக்கும் ஏழைகளுக்கு உருப்படியா ஏதாவது செய்ய ஆரம்பிக்கணும். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு வாங்கிட்டு வேட்டி சேலை மட்டும் கொடுத்தா போதாது.

SEZ பேர்ல நடக்கப் போற கூத்து இன்னும் ஏழைகளை அதிகமாக்கப் போவுது.

வசதி படைத்தவர்கள், 'adopt-a-few-children' என்பது மாதிரி ஏதாவது செய்து மாற்றம் சில குழந்தைகளுக்காவது மாற்றம் கொடுக்கலாம்.

இந்த நல்ல நாளில், சிவானந்தா குருக்குலம் மாதிரி குழந்தைகள் காப்பகத்துக்கு வருடா வருடம் சந்தா கட்டி சில பல குழந்தைகளுக்கு உதவுங்களேன் எல்லாரும்?
We The People said…
BadNewsIndia இந்தியா போன்ற மிக பெரிய மக்கள் தொகையை கொண்ட நாட்டுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையே. அரசு வறுமை ஒழிப்பும் அடிப்படை கல்வி திட்டங்களை கொண்டுவராமல் நிச்சயமாய் இந்தியா 2020 கனவு கனவாக தான் இருக்கும் என்பது உண்மை. உலக வங்கியின் உதவியா ஏதாவது செய்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.
We The People,

உங்களது ஆரம்பகால(முதல் பதிவு) பதிவுகளிலிருந்து நான் படித்து வருகிறேன்.

///
//அப்புறம், விவசாய பெருங்குடிகள் நவீன நாடோ டிகளாக ந்கர்புறத்தில் லட்சக்கணக்கில் டேரா அடிப்பதும் அவர்க்ளின் குழந்தைகள் நவீன குறத்தி மகன்களாக புழுதிகளுடன் விளையாண்டு சுற்றி வருவதுமான புதிய நவீன உலகமய பண்பாட்டு வளர்ச்சி சூழலில் எந்த வகையில் குழந்தை தொழிலாளியை ஒழிக்கப் போகிறீர்கள்//

இவை கல்வி அறிவு வளரும் போது தானாக குறைந்துவிடும் என்று நினைக்கிறேன்.///

இது எப்படி சாத்தியம் என்கிற விந்தையை கொஞ்சம் விளக்குங்களேன்?

ஏனெனில் சமீபத்திய வருடங்களில் கல்வியறிவு வளர்ச்சி அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் அதற்க்கு இணையாக மக்களின் வாழ்க்கைத் தரம் படு பாதாளத்துக்கு அல்லவா சென்றுள்ளது. அதுவும் இந்த நாடோ டி வாழ்க்கைக்கு காரணம் கல்வியறிவின்மைதான் எனில் இது முன்பே ஏற்ப்பட்டிருக்க வேண்டுமே?

இந்த நாடோ டீ வாழ்க்கை போக்குக்கு பிறகு வேண்டுமானால் குழந்ததைகள் பள்ளிக்கு செல்லும் விகிதம் குறைந்திருக்கலாம். ஆனால்ம், இந்த நாடோ டி வாழ்க்கை ஆரம்பித்ததன் காரணம் உறுதியாக கல்வியின்மை கிடையாது.

கண்முன்னே இந்த அரசும், பொருளாதார கொள்கைகளுமே இதற்க்கு காரணாமாக இருக்க, நீங்களோ 'கல்வியறிவு பெற்றால் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்' என்று ரொம்ப சிம்பிளாக சொல்வது, உங்களது இந்த வாதம் மீண்டும் உங்களது, பொறுப்பின்றி எனக்கென்ன வந்தது என்பது போல பேசும் மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது(காஷ்மீர் விவாத்த்திலும் இது வெளிவந்து அதை விமர்சித்தேன்).


ஆக, சுதந்திரம் அடைந்து 50 வருடங்களுக்கு மேலும் கூட இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை என்பதும், கடந்த பத்து வருடங்களில் அரசு செய்து கொண்டிருந்த பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளை(மருத்துவம், கல்வி, உணவு வினியோகம், உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு ஆதரவு etc) முற்றிலுமாக துடைந்தெறிந்து வருகிறது. இப்பொழுது வேறு சில கண்துடைப்பு நடவடிக்கைகளை செய்து வருவதை புதிதாக செய்வது போல நீஙகள் சித்திரிக்கிறீர்கள்.

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவதாக உத்தேசம்?....

பிரச்சனையின் மூலத்தை நாங்களும் பலமுறை சொல்கிறோம் அதை பாராமுகமாக இருப்பதுதான் எமது சந்தேகங்களை அதிகரிக்கச் செய்கிறது(எனது பதிவுகளை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்று நீங்கள் சொல்லக் கூடுமெனில் நான் அதை நம்ப வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளாகிறேன்).

நீங்கள் அரசை சாடி எழுதுவதேல்லாமே, ஒரு சம்பிரதாய முதலாளித்துவ பத்திரிக்கை பாணி அளவில்தானே அன்றி(அவுட்லுக் etc), அதை தாண்டி செல்லும் போக்கு வெளீப்பட்டதே இல்லை அல்லது தாண்டி செல்லும் வகையில் வாதஙக்ளின் போது நழுவிச் செல்லும் போக்கையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள் - எனும் பொழுது எமக்கு சந்தேகம் வருவதற்க்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

கேள்வி சிம்பிள், குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க இந்த அரசால் முடியுமா?

அதற்க்கான தகுதி நேர்மை இந்த அரசுக்கு உள்ளதா?

இது வரை என்ன செய்துள்ளது இந்த அரசு?

குழந்தைத் தொழிலாளீ உருவாவதன் உருவாவதன் காரணம் கல்வியின்மையா அல்லது வேறு ஏதேனுமா?

அப்படியெனில் அந்த அடிப்படை பிரச்சனையை சரி செய்ய என்ன செய்யலாம்?
********

//ஆரம்பக் கல்வி மட்டும் கொடுத்தா கலாமின் 2020 கனவு எல்லாம் நினைவாகாது.
வயிறு பசிக்குமே, படிப்பு எங்க ஏறும்.

ஊரில் இருக்கும் ஏழைகளுக்கு உருப்படியா ஏதாவது செய்ய ஆரம்பிக்கணும். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஓட்டு வாங்கிட்டு வேட்டி சேலை மட்டும் கொடுத்தா போதாது.

SEZ பேர்ல நடக்கப் போற கூத்து இன்னும் ஏழைகளை அதிகமாக்கப் போவுது.

வசதி படைத்தவர்கள், 'adopt-a-few-children' என்பது மாதிரி ஏதாவது செய்து மாற்றம் சில குழந்தைகளுக்காவது மாற்றம் கொடுக்கலாம்.

இந்த நல்ல நாளில், சிவானந்தா குருக்குலம் மாதிரி குழந்தைகள் காப்பகத்துக்கு வருடா வருடம் சந்தா கட்டி சில பல குழந்தைகளுக்கு உதவுங்களேன் எல்லாரும்? //



Bad News India பிரச்சனையை சரியாகவே பார்க்கிறார்(We the people போலவே). ஆயினும் அவரும் கூட தீர்வு என்று பார்க்கிமிடத்து தவறு செய்கிறார்.

ஆஸ்ரமம் நடத்துவது, தத்து எடுப்பது என்ற தீர்வில் இரு அம்சங்களைப் பார்த்தால் அதன் சாத்தியப்பாட்டின் போலித்தனம் தேரியவ்ரும்.

முதல் விசயம், தத்து எடுக்கும் வல்லன்மை பெற்ற்வர்கள் சிறுபான்மையாகவும், கல்வி முதலான அடிப்படை வசதி கோரும் தத்து எடுப்பை வேண்டுபவர்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர்.

இரண்டு, அவர்கள் என்ன பிச்சைக்காரர்களா? உழைப்பதற்ற்கு தயங்காமல்தான் குழந்தைத் தொழிலாளர் ஆகிறார்கள். ஆக பிரச்சனை வளஙகளை விநியோகிப்பதில அராஜகமாக நடந்து கொள்ளும் அரசின் மீது உள்ளது.


அசுரன்
//உலக வங்கியின் உதவியா ஏதாவது செய்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். //

மக்களுக்கு கல்வி தரவும், அடிப்படை வசதிகள் செய்யவும் உலக வங்கியை எதிர்ப்பர்ர்பதன் அவசியம் என்ன என்று We the People விளக்க வேண்டும்.

உலக வங்கியையா நீங்கள் சொல்லும் போலி ஜனநாயக சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் தேர்ந்தெடுத்த்து.

கல்வி கொடுக்க ஆசிரியர் வேண்டும், அவருக்கு சோறும் இருக்க இடமும், அவர் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான் வாழ்வும் எதிர்காலமும் வேண்டும், இதை செய்வதற்க்கு உலகவங்கி ஏன் வரவேண்டும்?

அசுரன்
அசுரன்!

வாதத்தில் அனல் பறக்கிறது. உங்களை வாதங்களில் வெல்ல இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்.
We The People,

உங்கள் மீதோ அல்லது நண்பர் Bad News மீது இதுவரை தீர்மானகரமான அபிப்ராயம் எதுவும் வைக்கவில்லை. இருவரிடம் பல்வேறு ஆளும் வர்க்க பிற்போக்கு கருத்துக்கள் ஆளுமை செலுத்து கின்றன, ஆயினும் இது இந்த சமூகத்தில் பிறந்த அனைவருக்குமே இருக்கக்கூடியதுதான்.

அதே நேரத்தில் சமூக அக்கறை மிளிர்வதுதான் பிறரிடமிருந்து உங்கள் இருவரையும் வேறு படுத்திக் காட்டுவதாக உள்ள் அம்சம்.

ஆகவேதான், உங்கள் மீதான் விமர்சனங்களை வெளிப்படையாக உங்களிடமே வைத்து விளக்க்ம் கோருகிறேன்(Instead of Exposing in some other platforms).

லக்கிலுக்கின் பாராட்டுக்கு நன்றி, ஆனால் விசயம் மக்களுக்கு நேர்மையானதை பேசுகிறோமா இல்லையா என்பதுதான் முக்கியமானது.

அசுரன்.
We The People said…
அசுரன்,

//உங்களது ஆரம்பகால(முதல் பதிவு) பதிவுகளிலிருந்து நான் படித்து வருகிறேன்.//

அசுரன் என் நன்றியை முதலில் சொல்லிக்கொள்கிறேன்.

///
//அப்புறம், விவசாய பெருங்குடிகள் நவீன நாடோ டிகளாக ந்கர்புறத்தில் லட்சக்கணக்கில் டேரா அடிப்பதும் அவர்க்ளின் குழந்தைகள் நவீன குறத்தி மகன்களாக புழுதிகளுடன் விளையாண்டு சுற்றி வருவதுமான புதிய நவீன உலகமய பண்பாட்டு வளர்ச்சி சூழலில் எந்த வகையில் குழந்தை தொழிலாளியை ஒழிக்கப் போகிறீர்கள்//

இவை கல்வி அறிவு வளரும் போது தானாக குறைந்துவிடும் என்று நினைக்கிறேன்.///

நீங்க படித்து நாடோடியா வாழ்வீங்களா? இல்லை உங்க மகனை நாடோடியா வாழவிடுவீங்களா? அதனால அடிப்படை அறிவு கல்வி தரும். நீங்க சொல்லும் வருமை நிச்சயமா ஒரு முக்கிய காரணம் அந்த குழந்தைகள் வேலைக்கு போக.. அதை ஒழிக்க வருமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை பூஜியத்துக்கு வரவேண்டும். அரசு அதை இத்தனை காலம் செய்யவில்லை, ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர், பணக்காரன் பெரும்பணக்காரனாகிறான். 60 ஆண்டுகள் அரசு பெருசா ஒன்னும் செய்யவில்லை. இது நிதர்சனமான உண்மை. அதை தானே நானும் சொல்கிறேன். இலங்கை & கேரளா மேட்டர் ஒரு Live Examples சொல்லப்பட்டிருந்தது உனிசெஃப் இணையத்தில் கிடைத்த விசயமே, அதை தான் மேற்கோள் காண்பித்தேன்... அது என் சொந்த கருந்து அல்ல :)

//தாண்டி செல்லும் வகையில் வாதஙக்ளின் போது நழுவிச் செல்லும் போக்கையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள் - எனும் பொழுது எமக்கு சந்தேகம் வருவதற்க்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.//

நழுவவில்லை தல எனக்கு தெரிந்ததை எழுதறேன். எனக்கு தெரிந்த, படித்த, தெளிவாக உள்ள விளக்கங்களை சொல்லறேன். எனக்கு தெரியததை எழுத சொன்னால் நான் என்ன பண்ணமுடியும் :)
//லக்கிலுக்கின் பாராட்டுக்கு நன்றி, ஆனால் விசயம் மக்களுக்கு நேர்மையானதை பேசுகிறோமா இல்லையா என்பதுதான் முக்கியமானது.//

கம்யூனிஸ்டுகள் நேர்மையானவர்கள், நேர்மையான விஷயங்களையே பேசுவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை....
We The People said…
//கேள்வி சிம்பிள், குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க இந்த அரசால் முடியுமா?//
//அதற்க்கான தகுதி நேர்மை இந்த அரசுக்கு உள்ளதா?
இது வரை என்ன செய்துள்ளது இந்த அரசு?//

அரசு முயற்சி எடுத்தால் முடிக்கலாம் என்பது என் எண்ணம். அது இது நாள் வரை நடக்கவில்லை என்பதும் உண்மை. இப்ப ஏதோ ஜூ காட்டறாங்க சட்டம் அது இதுன்னு போட்டு ஏதாவது நடக்குமான்னு பார்ப்போம்ன்னு தான் சொல்லறேன்.

//குழந்தைத் தொழிலாளீ உருவாவதன் உருவாவதன் காரணம் கல்வியின்மையா அல்லது வேறு ஏதேனுமா?//

இதற்கு என்னுடைய விளக்கம் ஏற்கனவே பின்னூட்டமாக எழுதிவிட்டேன்.

அப்படியெனில் அந்த அடிப்படை பிரச்சனையை சரி செய்ய என்ன செய்யலாம்?

நிச்சயமாக வறுமை ஒழிப்பும், குழந்தை தொழிலாளார்களும் ஒன்றுக்கு ஒன்று பின்னிப்பினைந்தவையே. அரசு நினைத்தால் ஒழிக்கக்கூடியதே இந்த நிலை. வறுமை கோட்டுக்கீழ் உள்ள குழந்தைகளை கல்வி கற்க அனுப்பினால் ஒரு ஊக்கத்தொகை, குழந்தைகளில் படிப்பு செலவுகளை அரசு ஏற்குமாயின் இந்த பிரச்சனை பெருமளவு குறையும் என்பது என் நம்பிக்கை.

//உங்கள் மீதோ அல்லது நண்பர் Bad News மீது இதுவரை தீர்மானகரமான அபிப்ராயம் எதுவும் வைக்கவில்லை.//

//அதே நேரத்தில் சமூக அக்கறை மிளிர்வதுதான் பிறரிடமிருந்து உங்கள் இருவரையும் வேறு படுத்திக் காட்டுவதாக உள்ள் அம்சம்.//

இதற்கு மிக்க நன்றி. :)

//ஆகவேதான், உங்கள் மீதான் விமர்சனங்களை வெளிப்படையாக உங்களிடமே வைத்து விளக்க்ம் கோருகிறேன்(Instead of Exposing in some other platforms).//

அசுரன் வெளிப்படையாக பேசுவதே நல்லது. இங்கு சுற்றித்திரியும் முகமூடி அணிந்து பல முகங்களில் வந்து திட்டிப்போகும் அனானிகளிருந்து உங்களை வேறிட்டு காண்பிக்கிறது. நிச்சயமாக நான் வரவேற்கிறேன்.

மீண்டும் வந்து உங்கள் கருந்துக்களை பின்னூட்டம் இட்டதற்கு நன்றி அசுரன்.
We The People said…
சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு.

--
Posted by துளசி கோபால்

------

சாரி மேடம் இங்க நடந்த அனானி ஆட்டத்துல உங்க கமெண்ட்டும் அனானி பின்னூட்டத்துடம் ரிஜெக்ட் ஆயிடுச்சு. சாரி.
நட்சத்திர பதிவு எழுதும் வேளையிலும் என் பதிவில் வந்து பின்னூட்ட்டம் இட்டமைக்கு நன்றி.
We The People said…
//கம்யூனிஸ்டுகள் நேர்மையானவர்கள், நேர்மையான விஷயங்களையே பேசுவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை//

இது உண்மையான கம்யூனிஸ்டுகளை பற்றி என்றால் ஒத்துக்கொள்கிறேன். இன்று இந்தியாவில் கம்யூனிஸம் பேசும் அரசியல்வாதிகள் (CPI, CPI-M)வெளிவேடக்காரர்களாவே எனக்கு தோன்றுகினறன!! இதற்கான பல காரணங்கள் உள்ளன அதில் சில என் இந்த பதிவில் உள்ளது.இங்கே சொடுக்கவும்..
We The People said…
அனானிகளா நீங்க எதுக்கு என்ன திட்டறீங்கன்னு தெரியாது! நான் எதையும் வாங்கிக்கொள்ளவில்லை. அதனால் நீங்கள் கொண்டுவந்த கழிவுகள் உங்கள் கையிலேயே உள்ளது. Enjoy with dirty stuffs which u have right now. I dont mind these faceless fanatics.
RBGR said…
சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி..

தன் தாயை கொடுமைப் படுத்திய தன் தந்தை மீது 10 வயது மகன் வழக்கு.
மும்பையை சேர்ந்தவர் யாஸ்மின். இவருடைய மகன் ஜுனைத் ரசாக் மெஹ்தர் (10). ஜுனைத் பிறந்த பிறகு வரதட்சணையாக பெற்றோரிடம் பணம் வாங்கி வரும்படி கணவரும், அவருடைய குடும்பத்தினரும் யாஸ்மினை கொடுமைப்படுத்தினர்.

பொங்கி எழுந்தான் ஜுனைத். "பொறுத்தது போதும்", என்று தாய்க்கு அறிவுரை கூறினான். சட்டத்தின் உதவியை நாடுவோம் என்று வலியுறுத்தினான். தாயை சித்ரவதை செய்யும் தந்தை மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் ஜுனைத்.

அதிர்ந்தது அந்தேரி நீதிமன்றம். தவறு செய்பவர் தந்தை ஆனாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஜுனைத்தின் துணிவையும், நீதிமன்றத்தின் மீது அவனுக்கிருந்த நம்பிக்கையையும் பார்த்து அந்தேரி நீதிமன்றம் வியந்தது.
"என் தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோர் என் தாயை தினமும் அடித்து, உதைக்கின்றனர். தாய்க்கு உணவு கொடுப்பதில்லை. அதனால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். என் தாய்க்கு நீதி வேண்டும்"...உறுதியுடன் முழங்குகிறான் ஜுனைத்.

///இதைத் தான் நானும் சொல்கிறேன். இனிமேல் பெரியவர்கள் பொங்கி எழுந்து பயனில்லை. காலகாலமாக பெரிவர்கள் பொங்கியது போதும். அவர்கள் பொங்கினால் மட்டும் தான் இனி நீதி என்பது தான் உண்மை.
//நிச்சயமாக வறுமை ஒழிப்பும், குழந்தை தொழிலாளார்களும் ஒன்றுக்கு ஒன்று பின்னிப்பினைந்தவையே. அரசு நினைத்தால் ஒழிக்கக்கூடியதே இந்த நிலை. வறுமை கோட்டுக்கீழ் உள்ள குழந்தைகளை கல்வி கற்க அனுப்பினால் ஒரு ஊக்கத்தொகை, குழந்தைகளில் படிப்பு செலவுகளை அரசு ஏற்குமாயின் இந்த பிரச்சனை பெருமளவு குறையும் என்பது என் நம்பிக்கை.//

We The People,

கல்வியறிவு பெறுவது வறுமை ஒழிப்பிற்க்கான தீர்வு என்று நீங்கள் நம்புவதாக தெரிகிறது. அதை இப்பொழுது பேச வேண்டாம்.

கல்வியறிவை வளர்த்து, வறுமையை ஒழித்து, குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க இந்த அரசு வேலை செய்யும் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். இதைத்தான் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

என்ன அடிப்படையில் இதை நம்புகிறீர்கள்?

அசுரன்