விஜயகாந்த் - ரெய்டு - நேரடி ரிப்போர்ட்

விஜயகாந்த் வீட்டில் ரெய்டு என்று இட்லிவடை பதிவை பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன், என் அலுவலகம் விஜயகாந்தின் வீட்டுக்கு அருகாமையில் உள்ளது, உடனே நிலைமை என்னவென்று பார்க்க ஒரு சின்ன விசிட், விஜயகாந்தை பெரிய ஆளாக்கிவிட்டுத்தான் அடங்குவேன் என்று ஏன் ஒற்றை காலில் நிற்கிறார்கள் இந்த ஆளும் கட்சிகள்??!!! இங்கே ஒரு பதட்ட சூழ்நிலையே காணமுடிகிறது, 2 போலீஸ் வண்டிகளின் கண்ணாடி உடைக்கப்பட்டுவிட்டது!!! தொண்டர்கள் குவிந்துள்ளனர், அதே அளவுக்கு போலீஸும் குவிந்துள்ளது!! புதியதாய் போலீஸில் இணைந்த ஆசென்ட் கார்கள் ஒரு நான்கு, தே.மு.தி.க முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களின் கார்கள் என்று ஏரியாவே ரங்கநாதன் வீதி அளவுக்கு ஒரு கூட்டம்!!! டீ கடையில் காசு கொடுக்காமல் டீ, காபி, தம் அடித்து செல்லும் போலீஸார், சண்டையிடும் டீ கடை ஓனர் (அவரை பார்க்க பாவமா இருக்கு!!!), அண்ணா இந்த காய்ச்சிய பால் தீர்ததும் கடைய முடிவிடுவது தான் நல்லது என்று என்னிடம் சொன்னார், கொடுமைடா சாமி!! எங்கே போகுது நம் சமுதாயம்!!!