கடந்த மே 5ஆம் தேதி பாராளமன்றத்தில் வருமை ஒழிப்பு பற்றி ஆலோசனை செய்ய பாராளமன்றம் கூட்டப்பட்டது! அதில் ஜனநாயத்தின் தூண்களான நம் அருமை MPக்கள் அசத்திட்டாங்கன்னா பாருங்களேன்!! கேட்டதும் ஆடிப்போயிட்டேன்!!!! வருமை ஒழிக்க அலோசனை சொல்லி அசத்திட்டாங்கன்னு, நீங்க பாட்டுக்கு ரொம்ப ஓவரா சிந்திச்சுபுடாதிங்க சார்!!! 545 பேர் கொண்ட பாராளமன்றத்தில் அன்றைய அலோசனைகள் துவங்கும் நேரத்தில் வெறும் ஆறு MPக்கள் மட்டும் ஆஜர், பின்னர் வந்து சேர்ந்தவர்கள் மற்றொரு ஆறு பேர்!!! எப்படி!!!! அசத்தப்போவது யாரு??!! வந்த அந்த பனிரெண்டு பேர் யாருன்னு கேட்பீங்கன்னு தெரியும்:(வந்த வரிசையில்) 1. டாக்டர். சித்ரா மோகன் (காங், திருப்பதி) 2. பத்ருஹரி மஹதாப் (பீ.ஜே.டி, கட்டக்) 3. பேராசிரியர்.ராசா சிங் ராவத் (பி.ஜெ.பி, அஜ்மீர்) 4. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (காங், கான்பூர்) 5. நவீன் ஜின்டால் (காங், குருஷேத்ரம்) 6. ப்ரான்சிஸ் ஃபாந்தோம் (காங், நியமன உருப்பினர்) 7. சி.எஸ்.சுஜாதா (சி.பி.எம், மாவேலிக்கரா) 8. சி.கே.சந்திரப்பன் (சி.பி.ஐ, திருசூர்) 9. கே.எறான் நாயுடு (தெ.தேசம், ஸ்ரீகாகுலம்) 10. பி.கே. ஹன்டிக் (காங், ஜோர்ஹத்) 11. பா.சிதம்பரம் ...