எட்டு(ம்) இடத்தில் ஜெய்
வாங்க எட்டு போட்டு விளையாடலாம்ன்னு முதல்ல சர்வேசன் போட்டாரு ஒரு கமெண்ட், ஓ.கே ரெடி பண்ணுவோம்ன்னு நினைத்துக்கொண்டுயிருக்கையில் நம்ம வெங்கட்ராமன் வேற கெளபிட்டாரு... இப்படியே விட்டா பல எட்டு போட வேண்டியிருக்கும் பயமாயிட்டதால முதலில் நம்ம பதிவை போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்ப்போம்ன்னு எறங்கிட்டோமில்ல... என்னைப்பற்றி ஏற்கனவே பல தடவை மொக்கை போட்டதால ... உங்களுக்கு தெரியாத சில (எட்டு) விசயத்தை சொல்லாம்ன்னு நினைக்கிறேன்... இந்த எட்டு என்னை ரொம்பவே பாடா படுத்தியும் இருக்கு, உதவியும் இருக்கு பல விசயங்களில், அதில் சில எட்டுக்களை மட்டும் எடுத்து போடுவோம்ன்னு ஒரு முயற்சி... ஓவரா இருந்த அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... ஹீ! ஹீ!! 1. நான் ஏழாவது பாஸ் பண்ணதும், எங்க வீட்டை கோவை-பீளமேடு பகுதியிலிருந்து கோவை-ராமநாதபுரம் பகுதிக்கு மாற்றிப்போனோம்! அதனால இங்க இருந்து முன்பு படித்த GRG Matriculation பள்ளிக்கு செல்வது சுலபம் அல்ல என்ற காரணத்தால் என்னை CSI Union Higher Secondary தள்ளிவிட்டுட்டாங்க, முதலில் ரொம்ப நொந்து நூலா போனேன்! புது நண்பர்கள், புது ஏரியா, புது மக்கள்... நம்ம சென்னை 600028 மாதிரி கிரிக்கெட் விளை...