Posts

Showing posts from August, 2007

இந்திய குடிமகனானுமா?

நீங்க எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் பரவாயில்லை, தீவிரவாதியா இருந்தாலும் பரவாயில்லை!!!! உங்களுக்கு எங்க மண்ணின் மைந்தர்களும், அரசு இயந்திரங்களும் இந்திய குடியுரிமை வாங்கி தராங்கோ!!! அதுவும் வெறும் ரூ. 32,500/- இருந்தா போதும்!!!! குடியுரிமைன்னா சும்மா இல்லைங்க! 1. ரேஷன் கார்டு 2. பிறப்பு சான்றிதழ் 3. PAN Card 4. Pass Port Rs 7,500/- 5. படிப்பு சான்றிதழ் 6. Voter ID Card - Rs 1,800/- என்று எல்லா மேட்டரும் உண்டு... அடுத்த மாசம் முதல் வேணும்னா ரேஷன் கூட வாங்கிக்கலாம்!!! ஆள் வரவேண்டிய தேவையில்லை! சும்மா யார்கிட்டயாவது 32,500 ரூபாயை கொடுத்து அனுப்பினா போதும்! எல்லா மேட்டரும் ரெடி செய்து தர ஆள் இருக்கு! பாஸ்போர்ட்க்கு Verification கூட இல்லாம ஈஸியா வாங்கித்தராங்க! ஜாலி பண்ணுங்க! IBN Live முயற்சியால் வெளிவரும் இந்த கொடுமையை பாருங்க! லஞ்சம் எப்படி எல்லாம் கொழுத்து போயிருக்குன்னு பாருங்க! அட இதெல்லமாம் மாமூலான விசயம்ன்னு நம்ம முதல்வர் மாதிரி ஸ்டேட்மென்ட் தந்திடாதீங்க ப்ளீஸ் :) இது அரசுகளுக்கு தெரியுமா? அரசுகள் ஏன் இது போன்ற வழியை அடிக்க வழிவகை செய்யவில்லை!! அரசுகளின் அலட்சிய போக்கு நாளை தீவிரவா...

சுதந்திரம் யாருக்காக?

கடந்த 15ஆம் தேதி நாம் நம்முடைய சுதந்திரத்தின் 60 வருடங்கள் கடந்ததை கொண்டாடினோம்! அறுபது ஆண்டுகளில் நாம் எவ்வளவு சுதந்திரம் அடைந்திருக்கிறோம் என்று எனக்கு புரியவில்லை! ஆங்கிலேயர் ஆட்சிக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றே ஒன்று அன்று ஊழல் குறைவு, இன்று இவர்களால் பெருக்கெடுத்து ஓடுது ஊழல்!! இவருடைய ஆட்சியிலும் சர்வாதிகாரம் இருந்தது, இருக்கிறது!!! இன்று இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்தா, என்ன கொடுமை சார் இதுன்னு தான் சொல்லத்தோனுது! பீஹாரின் அரசு இயந்திரங்கள் எங்கள் கண்காணிப்பில் தான் இருக்கிறது! விரைவில் அவை எங்கள் கட்டுப்பாடுக்குள் வரும் என்று சில தினங்களுக்கு முன் Maoist Commander அறிவிக்கிறார்! அதுவும் ஒரு Times Now போன்ற ஒரு தொலைக்காட்சியில்!!! மாவோஸ்டுகளுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்துங்க!!! மனிப்பூரில் 3 ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வீட்டிலேயே 12 தீவிரவாதிகளை பதுங்க வைத்து பிரிவினைவாதத்தை வளர்க்கவும், பாவப்பட்ட மக்களை கொல்லவும், அரசு இயந்திரங்களை அழிக்கவும் உதவி செய்யறாங்க! அப்ப தீவிரவாதிகளுக்கும், ஆளும...

வலைப்பதிவர் பட்டறை - வீடியோ காட்சிகள்!!!

தமிழ் வலைப்பதிவர் பட்டறை வீடியோ காட்சிகள். பொன்ஸ்க்கு நல்ல கவரேஜ் கிடைச்சிருக்கு!!! நன்றி:IBNLive.com

பா.க.ச உலகுக்கு அறிவித்த வினை :)

Image
இன்றைய் இந்தியன் எக்ஸ்பிரஸின் முதல் பக்கத்திலேயே "டாப்"ல நம்ம பா.க.சவின் பெயரை வெளியிட செய்த தம்பி வினையூக்கியை வாழ்த்தியும் நன்றி தெரிவிக்கவும் இந்த பதிவு!!! பா.க.சன்னு மட்டும் சொல்லாம அதன் விரிவாக்கமான பாலபாரதியை கலாய்ப்போர் சங்கம் என்று தெளிவா அச்சிட்டு வந்திருக்கு!!! இன்னமா வேல செய்யறாங்க நம்ம சங்கத்து சிங்கங்கள்!!! நெனச்சாலே புல்லரிக்குதுபா!! இந்த செய்தி வெளியானதும் நம்ம பா.க.சவின் தல ஓடிவந்து வினையூக்கியை பாராட்டி சென்றார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்! உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்ன்னு களக கண்மனிகளுக்கு சொல்லிக்கிறோம்பா!!! நன்றி நா ஜெயசங்கர், பா.க.ச தலிம களகம், சென்னை!!!! களத்தில் பிரச்சனை வருவதை தவிர்க்க பின்னாடி சேர்த்தது :D :: இந்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு சொன்னதில் முக்கிய பங்கு நம்ம களக கண்மனிகள் பொன்ஸ்க்கும் நம்ம சிவஞானம்ஜியுக்கும் பெரும் பங்குள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கிறது சங்கம், அதனால் பொன்ஸையும், சிவஜீயையும் சிறப்ப ஒரு பாராட்டு விழா வைத்து கொண்டாடும் முயற்சியை பொதுகுழுவும், செயற்குழுவும் சேர்ந்து முடிவு செய்யும்.

வலைப்பதிவர் பட்டறை என் பார்வையில்...

Image
நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்த தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் என்னை கவர்ந்த விசயங்களை இங்கே பட்டியலிட விரும்புகிறேன்... வினையூக்கியும் மற்றும் ஜெயாவும் பட்டறைக்கு ஏற்பாடுகள் நடந்த முதல் நாள் மாலையும் சரி பட்டறை தினத்தன்றும் சரி அயராத உழைப்பை தங்கள் பங்கிற்கு கொடுத்தார்கள், துடிப்புடன் காலை முதல் மாலை வரை ஆர்வமாக கற்றுக்கொள்ள வந்த பார்வையாளர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்த விசயம் என்னை அசர வைத்தது!!! என்ன எனர்ஜி அவருக்குக்கு! ஒரு நிமிடம் கூட சலிக்காம ஆர்வமா எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கு என் முதல் சபாஷ்! அடுத்தது விக்கி, மா.சி & பொன்ஸ்: இது தான் முதல் பட்டறை, அனுபவம் இல்லாத காரணத்தால் ஒரு குறையும் வந்துவிடக்கூடாது என்று இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சிறப்பான பலனை தந்தது என்பது 100% உண்மை. பல பட்டறைகள் நடந்த்திய அனுபவம் வாய்ந்தவர்கள் நடத்தியது போல சிறப்பாக கலை கட்டியது பட்டறை. இவர்கள் முயற்சியும் உழைப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்! பாலாபாய் பம்பரமா சுழன்று கொண்டேயிருந்தார், CD வாங்கிவருவது முதல் உணவு ஏற்பாடுக...