சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! - வீடியோ

சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! வீடியோவில் பார்க்க மிக கொடுமையாக உள்ளது:

இன்று காலை இந்திய நேரம் 8:30 மணிக்கு சதாம் தூக்கிலிடப்பட்டார். வழக்கமாக தூக்கிலிடப்படுகிறவர்களுக்கு தான் முகம் மறைக்கப்பட்டிருக்கும். இங்கு அது வேறு வகையில். தூக்கில் போட வருபவர்கள் முகமூடியில் வந்தது, சதாமின் மேல் உள்ள பயத்தை காண்பிக்கிறது.

இங்கே பார்க்கவும்

கைபேசியில் பதிவு செய்த வீடியோ பார்க்க(Un Edited)........

நிச்சயம் ஒரு திறமையான எதிராளியை அமெரிக்கா இழந்துவிட்டது!!!

********************************************
We The Peopleலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Comments

VSK said…
இது ஒரு துக்ககரமான, கொடுமயான முடிவு என்றாலும், உலகத்திற்கு ஒன்றும் நட்டமில்லை எனவே நான் கருதுகிறேன்.

அவர் எண்ணியபடியே முடிந்த வரை வாழ்ந்துவிட்டு, இப்போது, அவர் விரும்பிய சொர்க்கத்தை அவர் அடைந்து விட்டார்.

உலகம் ஒரு கொடுங்கோலனை அகற்றி சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

ம்ம்ம்ம்.... அடுத்தது யாரோ!
BadNewsIndia said…
தேவை இல்லாத அவசரக் கொலை இது.
200 பேரை கொன்றதர்க்கு தூக்கா?

அவனை பிடிக்க படையெடுத்து பல ஆயிரம் பேரை கொன்று குவித்த புஷ்ஷை என்ன செய்வது?

WMD என்ற அல்வா கிண்டி கொடுத்தது எல்லாம் மறந்துடுச்சா?
Anonymous said…
இன்னும் ஆயிரம் ஆயிரம் பலமான எதிரிகளை உறுவாக்கிக்க்கொண்டிருக்கிறது/சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.
வஜ்ரா said…
பூமிக்குப் பாரமா இருந்த ஒரு தற்குறி, சர்வாதிகாரி ஒழிந்தான் என்று சந்தோஷப்படவேண்டும் எல்லோரும்.

அந்த தண்டனை வழங்கப் பட்டதன் ஞாய, அநியாயங்கள் ஆராய்வது அடுத்த கட்ட நடவடிக்கை.

அதை விடுத்து வலைப்பதிவெங்கும் (தமிழ் வலைப்பதிவில்) சதமின் தூக்கு ஏகதிபத்தியத்தின் அராஜகம் என்றெல்லாம் தொண்டை கிழிய கத்திக் கத்திப் பார்க்கிறார்கள் முன்னாள் எகாதிபத்தியத்தின் அடி வருடிகள்.
We The People said…
சதாம் ஒரு கொடுங்கோலன் தான், பல இனக்கொலைகள் செய்தவன் தான், இல்லையென்று மறுக்கவில்லை!!! சதாம் செய்த கொடுமையில் சில இங்கு, அதை பார்க்கும் யாரும் இரக்கம் இவர் மேல் வாராது என்பது உண்மையே!!! ஆனால் அந்த தண்டனையை தர வேண்டியது ஈராக் மக்கள்!!! அமெரிக்கா இந்த மண்ணில் யார்?? பெட்ரோல் திருட வந்த திருடன் மட்டுமே!!! அவர்களுக்கு தண்டனை கொடுக்க உரிமையில்லை!!!! சதாம் ஒரு லட்சம் ஆட்களை கொண்றிருக்கிறார் என்று வைத்துக்கொண்டால், புஷ் ஆப்கானிஸ்தான், ஈராக்லி பண்மடங்கு, பல லட்சம் பொது மக்களை கொண்றிக்கிறார்கள், அப்ப இந்த புஷ்க்கும் தூக்கு தரவேண்டும் தானே???
Chinna Ammini said…
என்னவோ அவசர அவசரமாக அமெரிக்கா ஏதொ செய்த மாதிரிதான் ஒரு உணர்வு. முழு மனதோடு சதாமை தூக்கிலிட்டதை ஏற்றுக்கொள்ளவெ முடியலீங்க
//We The People said...
சதாம் ஒரு கொடுங்கோலன் தான், பல இனக்கொலைகள் செய்தவன் தான், இல்லையென்று மறுக்கவில்லை!!! சதாம் செய்த கொடுமையில் சில இங்கு, அதை பார்க்கும் யாரும் இரக்கம் இவர் மேல் வாராது என்பது உண்மையே!!! ஆனால் அந்த தண்டனையை தர வேண்டியது ஈராக் மக்கள்!!! அமெரிக்கா இந்த மண்ணில் யார்?? பெட்ரோல் திருட வந்த திருடன் மட்டுமே!!! அவர்களுக்கு தண்டனை கொடுக்க உரிமையில்லை!!!! சதாம் ஒரு லட்சம் ஆட்களை கொண்றிருக்கிறார் என்று வைத்துக்கொண்டால், புஷ் ஆப்கானிஸ்தான், ஈராக்லி பண்மடங்கு, பல லட்சம் பொது மக்களை கொண்றிக்கிறார்கள், அப்ப இந்த புஷ்க்கும் தூக்கு தரவேண்டும் தானே???
//
ஈராக்கில் மக்கள் விடுதலை அடைந்தது போல உலக
கொடுங்கோலன்களிடமிருந்து உலக மக்கள் விடுதலைப் பெறும் பொன்னாள் எப்போது வரும் ?

ப்ராத்திப்போம் !