Posts

Showing posts from September, 2007

உலக I.T துறையில் சென்னை முதலிடம்!

Image
சென்னைவாசிகளுக்கு இதோ ஒரு குஷியான செய்தி! சமீத்தில் Tholons and Global Service Magazine என்னும் ஒரு மூதலீட்டு ஆலோசனை கழகம் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் (T op 10 emerging destinations worldwide for outsourcing of IT and business processes) முன்ணனிக்கு வரும் நகரங்கள் பற்றி உலகளாவிய கருத்தாய்வு செய்தது. இதில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது என்ற மகிழ்ச்சியான தகவலை இங்கே பதிவு செய்கிறேன். இன்னொரு மகிழ்ச்சியா செய்தி முதல் பத்து இடங்களில் ஐந்து இடங்களை இந்தியாவில் உள்ளன என்பதே! தகவல் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்ணனிக்கு வரும் இந்திய நகங்களின் பட்டியல்: முதலிடம் : சென்னை இரண்டாவது இடம்: ஹைத்தராபாத் மூண்றாவது இடம்: பூனே ஐந்தாவது இடம்: கொல்கொத்தா ஒன்பதாவது இடம்: சண்டிகர் தகவல் தொழில்நுட்ப இந்த வளர்ச்சிக்கு தமிழக அரசுவின் ஊக்குவிப்பு முக்கிய காரணமாகும் என்றே நினைக்கிறேன். இதை தக்கவைக்க சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளான சாலை, போக்குவரத்துக்கு வசதி, போக்குவரத்து நெரிசல் குறைக்க முயற்சிகள் எடுத்தால் இதை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். சீனா வின் தலைநகரமான பீஜிங் பத்தாவது ...

தீவிரவாதிக்கு இன்று பிறந்தநாள்!

Image
இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதியாக காங்கிரஸால் சித்தரிக்கப்பட்ட பகத்தின் பிறந்தநாள் இன்று! இந்திய அரசு இன்று பகத்சிங்கின் தேச பக்தியை மறைக்க நினைக்கிறது! அவன் வரலாறை அழிக்க நினைக்கிறதோ என்று கூட தோண்றுகிறது! ராகுல் காந்திக்கு பிறந்தநாள் கொண்டாட தெரிந்தவர்களுக்கு எப்படி பகத்சிங்கின் பிறந்தநாள் மறந்து போகிறது என்று தெரியவில்லை!! ஒரு சிறு குறிப்பு கூட அரசு தரப்பிலிருந்து வெளிவரவில்லை!! இந்தியா சுத்ந்திரம் பெற முக்கிய காரணங்களாக இருந்தவர்களில் பகத்சிங்கும் ஒருவர். அரசு மறந்தாலும் நாம் அவர் பிறந்தநாளில் அவரை நன்றியுடன் நினைப்போமாக.... அவர் சிறையில் துக்கு தண்டனைக்கு காத்திருந்த வேலையில் எழுதிய பல குறிப்புக்களில் ஒன்று!! Aim of Live "The aim of life is no more to control mind, but to develop it harmoniously, not to achieve salvation here after, but to make the best use of it here below, and not to realise truth, beauty and good only in contemplation, but also in-the actual experience of daily life; social progress depends not upon the ennoblement of the few but on the enr...

அரசுக்கு இது அழகா??

Image
ஐயா சாமிகளா, உங்களுக்கு ஓட்டு போட்டு எல்லா எம்.பி பதவியும் உங்களுக்கு தானே வாங்கி கொடுத்திருக்கு இல்லையா?.... இன்னும் ஏன்யா எங்களை போட்டு ரவுண்ட் கட்டறீங்க!! ராமர் பாலம் இடிக்கனுமா போயி திருமதி.சோனியா கிட்டயோ! திருவாளர்.மன்மோகன்சிங்கிடமோ ஆட்சியை காலி பண்ணிடுவோம்ன்னு சொல்லி அல்லது என்னத்தையாவது செய்யவேண்டியதுதானே! ஏன்யா பந்துன்னு சொல்லி எங்க தாலியை அறுக்கறீங்க... உங்களுக்கு ஓட்டுப்போட்ட பாவத்துக்கு, எங்களுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்!!! ஒரு நாள் வேலை நிறுத்தம், கோடிக்கணக்கா சேர்த்துவைத்த உங்களுக்கு ஒன்னும் ஆவப்போறது இல்லை... ஆனா.. ஒவ்வொரு தின கூலிக்காரனிலிருந்து நடுத்தர வர்கம் வரை உள்ள அனைவருக்கும் சாப்பாட்டுல மண் விழும்! நீங்க சொல்லும் சேது சமுத்திரம் அவனுக்கு ஒரு மண்ணும் கிடையாது! அது வந்தாலும், வராவிட்டாலும் அவனுக்கு ஒரு பைசா லாபம் கிடையாது! தினக்கூலி முதல் சாதாரண குடிமகன் வரை அனைவருக்கு எத்தனை சிரமம் உங்களால் பண்ண முடியோ அவ்வளவு செய்யும் முடிவோட தான் ஆட்சிக்கு வந்தீங்களா??... யாருக்காக, என்ன நிரூபிக்க பாக்கறீங்க... ஒரு ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் உங்களால் ஒன்னும் பண்...

பா.க.ச போட்டி முடிவுகள்!

Image
டி.வி புகழ் பாலாபாரதியை கலாய்க்க ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடைந்ததை கொண்டாடும் வகையில் போட்டி ஒன்று போன மாதம் பா.க.ச தலிம கலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது! அதன் முடிவுகளை அறிவிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது, ஏன்ன பல பேர் பல விதமா தலய கலாய்த்தார்கள்! எதை தேர்ந்தெடுப்பது என்று கொஞ்சம் சிரமப்பட்டுவிட்டோம் என்றே சொல்லவேண்டும்! பலரும் ரூம் போட்டு யோசித்து அருமையாக எழுதியிருந்தார்கள்! குறிப்பாக ப்ரேம்குமார் , குசும்பன் , அருட்பெருங்கோ , ஹாய் கோபி , வெங்கட்ராமன் , ராமசந்திரன் உஷா என அனைவரும் பின்னிப்பெடலெடுத்திருந்தார்கள்! அட நம்ம நடுவர் ஆசிப் கூட விடாம நானும் கலாப்பேன்னு தூள் கிளப்பியிருந்தாரு! இது போதானுன்னு நம்ம தல பாலா பாய் கூட ஒரு பதிவு போட்டிருந்தாரு! இந்த பா.க.ச முதலாம் ஆண்டுவிழா போட்டி பரிசு அருட்பெருங்கோவுக்கு அளிக்க நடுவர்கள் முடிவு எடுத்ததை இங்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு தல ரத்தால் கையெழுத்திட்ட ஒரு புகைப்படமும், ஒரு புத்தகமும் பரிசாக அளிக்கப்படுகிறது! விழா குழுவினர் விரைவில் அவரை தொடர் கொள்வார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறோம். பி.கு: தல ரத்தத்தால் கையெழுத்து ப...

நோ கமெண்ட்ஸ்!!!

டிஸ்கி: இங்கே தமிழ்மணத்தில் நடக்கும் விசயத்துக்கும், இந்த விடியோவுக்கும் சம்பந்தம் இருக்கு!! அவங்க அவங்களுக்கு புரியரமாதிரி இந்த விடியோவின் நீதியை புரிஞ்சுங்கோங்கோ!!!! சிங்கங்கள் யாரு! முதலைங்க யாரு! காட்டெருமை யாரு! எருதுவின் கன்று யாருன்னு... நீங்களே ஊகித்துக்கொள்ளுங்க :) சோ,(சத்தியமா துக்ளக் சோ இல்லைங்கோ!)நோ கமெண்ட்ஸ்!!!