Posts

Showing posts from November, 2008

We the people supports Eelam

இன்று தான் முத்து தமிழினி யின் இந்த பதிவை படித்தேன். என் நிலை விளக்கம் கேட்டிருந்தார், வேறு யார் கேட்டாலும் பதில் தந்திருப்பேனா என்று தெரியவில்லை! நம்ம முத்து கேட்கும் போது என் நிலையை விளக்க வேண்டும் என்று தோன்றியது! விளக்கம் நம்ம உண்மை தமிழன் மாதிரி ரெம்ப பெருசா போனதாலே தனி பதிவா போட வேண்டியதாயிற்று :) முதலில் என் ஈழம் பற்றிய கருத்துக்கள் என் முந்தய பதிவி இருக்கிறது ! அதை சொடுக்கி பார்க்கவும். நான் ஏழாவது படிக்கும் போதே ஈழ மக்களுக்கும், விடுதலை புலிகளுகும் ஆதரவாக போராட்டங்களில் விடுதலை புலிகளின் கொடி ஏந்தி உங்க தலைவரின் தலைமையில் கலந்து கொண்டவன் தான்! ஆனால் இன்று (ராஜீவ் படுகொலைக்கு பின்பு) நிச்சயம் எனக்கு சில கசப்பு உணர்வுகள் புலிகள் மேல் உண்டு, ஈழ மக்கள் மேல் அல்ல! ஈழ மக்கள் துயர் துடைக்கபட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் யாருக்கு இருக்க முடியாது என்னையும் சேர்த்து தான்! இதற்கு இந்தியா மூலமாக தான் ஒரு முடிவு வர முடியும் என்ற என்னாலும் மறுக்கமுடியாது! ஈழ மக்கள் நிம்மதியாக/அமைதியா வாழ ஒரு இடம் நிச்சயம் தேவை என்பதும், அதற்கு பேச்சுவார்த்தையே தீர்வு என்பதே என் கருத்து! இப்ப உங்...

ஏன் இப்ப உங்க கல்லூரியின் பெயர் முழுசா சொல்லறாங்களா??

Image
சட்டம் என் கையில் என்று மாணவர்கள் த்தூ! அதுங்களை மாணவர்கள் என்று சொல்லக்கூட மனம் வரவில்லை, மிருகங்களை போல ஒரு சக மாணவனை வேட்டைய அந்த வீடியோ காட்சிகளை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் என் இதய படபடப்பு அடங்கவில்லை! ஒரு மனிதனை, சக மனிதன் அதுவும் அடிவாங்கி மரணித்து கிடக்கும் ஒருவனை இப்படி அடிக்க எப்படி மனம் வருகிறது என்று புரியவே இல்லை! இத்தனைக்கு காரணம் முத்துராமலிங்கதேவர் பிறந்தநாள் விழாவுக்கு போஸ்டர் அடிக்கும் போது வெறும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று அச்சிட்டதே காரணம், இதில் உள்ள நுண்ணரசியல் அம்பேத்கார் பெயர் வேண்டுமென்றே விடப்பட்டதானால் என்று கேட்க்கும் போது வெட்கபட வேண்டியுள்ளது நம் இளைஞன் இது போன்ற வெட்டி சித்தாந்தக்கு, சாதி வெறி தூண்டும் வண்மைக்கு அழைத்து செல்லப்படுவது வருத்த அளிக்கிறது! அரசு கல்லூரிகளில் மட்டுமே சாதிவாரியாகவும், இனவாரியாகவும் சண்டை நடைபெறுவது என்ற ஒரு முக்கிய விசயம் வெளிவருகிறது! இந்த சாதிய விஷத்தை இவர்கள் மேல் தினிப்பது யார்? எனக்கு தெரிந்த மட்டும், நம் தமிழக அரசியல்வாதிகளின் தங்கள் பிரச்சனைகள்/அடி தடி அழிக்கும் தேவைகளுக்கு இந்த அரசு சார்ந்...

ஈழம் என்ன தான் தீர்வு உங்கள் கருத்துக்கள் தேவை!

நண்பர்களே என் முந்தய பதிவில் இந்தியா ஈழப்பிரச்சனையில் என்ன செய்யலாம் என சில கருத்துக்களை முன் வைத்திருந்த்தேன். இது போல வெட்டியா உண்ணாவிரதம், மனித சங்கிலி, மேடை போட்டு பேசுவது என்று இல்லாமல் ஆக்க பூர்வமாக எதை செய்தால் ஈழப்பிரச்சனையில் நல்ல தீர்வு வரும் என்ற கருத்தை சொல்லுங்களேன்! என் கருத்துக்கள் இதோ! இந்த ஈழதமிழர்களுக்கு இன்று உணவு காசும் முக்கியமல்ல.... நிம்மதியா வாழ்க்கையும், வாழ்விடமுமே. அதை இந்தய அரசால் தான் பெற்றுத் தரமுடியும். நீங்க கொடுக்கும் 700 டன் உணவு பொருள் உப தேவைகளே தான் முக்கிய தேவைகள் அல்ல... 1. இந்தியா இந்த விசயத்தை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல வேண்டும், அங்கே வைத்து இலங்கை அரசு, விடுதலை புலிகள், ஏனைய போராட்ட குழுக்கள் என அனைவரையும் ஒரு ஒருமித்த கருத்துக்கு கொண்டுவர வேண்டும். அந்த முடிவுகளை பாதுகாக்க ஒரு ஐ.நா படை அங்கே அமர்ந்த பட வேண்டும். 2. பாதுகாப்புக்கு இந்தியா ராணுவம் அனுப்பக்கூடாது! ஐக்கிய நாடுகளின் படை மட்டுமே அங்கே செல்ல வேண்டும். இந்திய அரசு மேற்பார்வைக்கு மட்டுமே உதவ வேண்டும். பதவியில் உள்ளவர்களே!!! இவை எவையும் முடியாதெனில் குறைந்த பட்சம் ஈழத்தில் இருந்து தப்ப...

ஈழம் போதும் அரசியல் நாடகம்

கடந்த சில வாரங்களா எங்க பார்த்தாலும் ஈழ தமிழர் பிரச்சனை குறித்து பேச்சு, பல வருடங்களாக தூங்கி கொண்டிருந்த பலரும் ஏதோ நேற்று முதல் தான் இலங்கை ராணுவம் தமிழ் மக்கள் மேல் குண்டு மழை பொழிவது போல பேசி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இன்று இது பூதாகரமாக பேச நிச்சயமாக கம்யூனிஸ்டுகளும், ஜெயலலிதாவுமே காரணம்! என்னடா இது ஜெயலலிதா வெல்லாம் ஈழ மக்களின் பிரச்சனையை பற்றி பேசும் போது நாம் பேசவில்லை என்றால் பின் நம் தமிழின தலைவர் பட்டம் காணாமல் போய்விடுமோ என்ற பயமே நம்ம முதல்வர் இந்த மேட்டரை கையிலெடுக்க காரணம். சில மாதங்களுக்கு முன் கோயம்பேட்டில் ஒரு ஓரமா நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது என்ன நடந்தது என்று ஊர் அறியும்! இன்று அதே உதவிகள் மட்டுமே கிடைக்க போகிறது ஆனால் பெரிய சாதனை நடந்துவிட்டது போல கூவி கூவி விலை போக பொருளை விற்கிறார்கள் அரசியலிலும் வலைப்பதிவிலும். அறிவிழி என்று ஒருவர் தோழர் தமிழச்சியின் ஈழ பதிவுக்கு பதில் தருவதாக நினைத்து கிட்ட தட்ட ஜெ. அறிக்கை மாதிரி ஒரு சப்பை கட்டு கதை எழுதியிருந்தார் , நான் வினாகளை எழுப்பினே இதுவரை வெளியிடவும் இல்லை, பதில் சொல்லவும் இல்லை. அதனால் அந்த வினாகளை ப...