ஏன் இப்ப உங்க கல்லூரியின் பெயர் முழுசா சொல்லறாங்களா??

சட்டம் என் கையில் என்று மாணவர்கள் த்தூ! அதுங்களை மாணவர்கள் என்று சொல்லக்கூட மனம் வரவில்லை, மிருகங்களை போல ஒரு சக மாணவனை வேட்டைய அந்த வீடியோ காட்சிகளை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் என் இதய படபடப்பு அடங்கவில்லை! ஒரு மனிதனை, சக மனிதன் அதுவும் அடிவாங்கி மரணித்து கிடக்கும் ஒருவனை இப்படி அடிக்க எப்படி மனம் வருகிறது என்று புரியவே இல்லை! இத்தனைக்கு காரணம் முத்துராமலிங்கதேவர் பிறந்தநாள் விழாவுக்கு போஸ்டர் அடிக்கும் போது வெறும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று அச்சிட்டதே காரணம், இதில் உள்ள நுண்ணரசியல் அம்பேத்கார் பெயர் வேண்டுமென்றே விடப்பட்டதானால் என்று கேட்க்கும் போது வெட்கபட வேண்டியுள்ளது நம் இளைஞன் இது போன்ற வெட்டி சித்தாந்தக்கு, சாதி வெறி தூண்டும் வண்மைக்கு அழைத்து செல்லப்படுவது வருத்த அளிக்கிறது!
அரசு கல்லூரிகளில் மட்டுமே சாதிவாரியாகவும், இனவாரியாகவும் சண்டை நடைபெறுவது என்ற ஒரு முக்கிய விசயம் வெளிவருகிறது! இந்த சாதிய விஷத்தை இவர்கள் மேல் தினிப்பது யார்? எனக்கு தெரிந்த மட்டும், நம் தமிழக அரசியல்வாதிகளின் தங்கள் பிரச்சனைகள்/அடி தடி அழிக்கும் தேவைகளுக்கு இந்த அரசு சார்ந்த கல்லூரிகளை ஒரு ரெக்கூருட்டிங் ஏஜென்ஸிகளா மாற்றிவைத்துள்ளனர் என்றே தோண்றுகிறது!

இதே அளவுக்கு தலித் மற்றும் தேவர்களும் ஆதிக்க சாதியினரும் தனியார் கல்லூரிகளில் படிக்கிறார்களே, அங்கு மட்டும் ஏன் இது போன்ற விசயங்கள் வருவதில்லை?? ஏன் என்றால் தனியார் கல்லூரிகளில் அரசியலுக்கு இடம் இல்லை! அங்கே பெரும்பாலும் மாணவர் தலைவர் தேர்தல் என்ற ஒன்று இல்லை! அரசியல் கட்சி அங்கு அனுமதி இல்லை! கல்லூரி நிர்வாகம் ஓட்டு பொறுக்க விடுவதில்லை! அதனால் அங்கு இது போன்ற விசயங்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன்!!!

இதில் பெரும் கொடுமை என்றவென்றால் காவல் துறையில் பொறுப்பற்ற செயல் கண்டனங்களுக்கு உரியது! சுமார் 40 - 50 காவலர்கள் அங்கு நடக்கு அத்துனை ஆராஜத்தையும், கண்முன்னே மயங்கிடக்கும் (இதற்கும் அந்த மாணவன் கல்லூரி கேட்டுக்கு வெளியே வந்துவிட்டார்) அதற்கு பின்னரே அவனை அடித்து நொருக்கினார்கள்! எருமை மாட்டு சாணியை போல நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு காக்கி உடை தேவைதானா?? எதற்காக கை கட்டி வேடிக்கை பார்த்தார்கள் என்பது ஹிமாலய கேள்வி!

கேலிக்கூத்துக்கள் சில:

  • கண்முன்னே அடித்து கொண்டிருந்தவர்களை விட்டுவிட்டு, இன்று வலைவீசு தேடுகிறோம் என்று சொல்வது ஒரு சரியான கேலிக்கூத்து! இது போன்ற வேலை செய்ய காவல் துறை எதற்கு!!அத்தனை கலவரங்கள் முடிந்த பின்னர் ஒரு காவல்துறை அதிகாரி, யார் தவறு செய்தார்களோ அவர்கள் மேல் டிப்பாட்மென்டல் ஆக்ஷன் எடுக்கப்படும் என்று கூறினார், எனக்கு தெரிந்த மட்டும் டிப்பாட்மென்டல் ஆக்ஷன்எனபது காவல்துறையினரே தவறு செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கை என்று நினைக்கிறேன், ஒருவேளை அவர் மேல் டிப்பாட்மென்டல் ஆக்ஷன் நிச்சயம் வரும் என்று முன்கூட்டி அறிந்திருந்தாரா அவர் என்று தெரியவில்லை !!!
  • சட்ட மனறத்துக்கு தினமும் வரும் முதல்வர், தன் துறையான காவல்துறையின் அலட்சியத்தியத்துக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் எஸ்கேப் ஆனது நல்ல வேடிக்கை!
  • சட்ட மன்றத்தில் வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன் வழக்கமான பல்லவியான ஜெயலலிதாவின் ஆட்சியில் அதிகமான வண்முறை நடந்தது என்று கம்பேரிஸன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தது அதைவிட கொடுமை!
  • ஜெயலலிதாவின் அறிக்கை வழக்கமான காமெடிகளைவிட இது குறைவு என்றாலும், முதலவரே நீங்க ராஜினாமா செயுங்க, நான் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற கேலிகூத்து சூப்பர்! அத்துனை அராஜகங்களை செய்தது மாணவர்கள் இல்லையாம், அண்ணா பிறந்தநாளில் விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளாம் என்ற மிக பெரிய காமெடியை வேறு அந்த அறிக்கையின் அசத்தல் விசயம் :)))


எது எப்படியோ அடிபட்ட மாணவனின் பெற்றோர்(மேலே உள்ள வீடியோவில்) கேட்டும் கேள்விக்கு யார் பதில் சொல்வார்கள்!

இந்த மாணவர்களில் சிலர் தான் நாளைய அரசியல் தலைவர்கள், நீதி அரசர்களாக வலம் வரப்போகிறார்கள் என்பதை நினைக்கும் போது, இனி வரும் தலைமுறை காட்டுமிராண்டிகளிடம் சிக்கி தவிக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை!

அரசிடம் எதிர்ப்பார்ப்பது:

சில சஸ்பெண்டுகள், பணியிட மாற்றம், விசாரணை கமிஷன் என்ற கண்துடைப்பு வேலைகளை மட்டும் செய்து தன்னையும் தன்மக்களையும் ஏமாற்றாமல் உண்மையில் ஏன் இப்படிப்பட்ட விசயங்களை நடக்கின்றன, அதன் வேர்கள் என்ன? யார் யார் இத்தீயினை(இருபுறமும்) மாணவர்களிடம் விதைப்பது என்பதை கண்டு ஆராய்ந்து முற்றிலுமாக நீக்க தகுந்த நடவடிக்கை வேண்டும், அது யாராக இருந்தாலும் என்பதே ஒரு சாதாரண பொதுமக்களில் ஒருவனான என்னுடைய ஆவல்! இதுவே மக்களின் ஆசையாக இருக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

நன்றி IBNLive.com

8 comments:

said...

//அரசு கல்லூரிகளில் மட்டுமே சாதிவாரியாகவும், இனவாரியாகவும் சண்டை நடைபெறுவது என்ற ஒரு முக்கிய விசயம் வெளிவருகிறது!//

மன்னிக்கவும் தல

இது தவறான வாதம்

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக்கல்லூரிகளில் இது கிடையாது.

தனியார் கலைக்கல்லூரிகளில் கூட சாதி மோதல் உண்டு. ஒரு காலத்தில் சாராயக்கடை ஏலத்தை விட அதிக போலிஸ் பாதுகாப்புடன் தான் நெல்லை ஜான்ஸ் கல்லூரி தேர்தல் நடக்கும்

said...

//ஏன் என்றால் தனியார் கல்லூரிகளில் அரசியலுக்கு இடம் இல்லை! அங்கே பெரும்பாலும் மாணவர் தலைவர் தேர்தல் என்ற ஒன்று இல்லை! அரசியல் கட்சி அங்கு அனுமதி இல்லை! கல்லூரி நிர்வாகம் ஓட்டு பொறுக்க விடுவதில்லை! அதனால் அங்கு இது போன்ற விசயங்கள் வருவதில்லை என்று நினைக்கிறேன்!!!//

கோயம்புத்தூரில் ஒரு தனியார் கல்லூரி மாணவர் மன்றத்தின் தேர்தல் செலவு ஒவ்வொரு வேட்பாளருக்கும் லட்சக்கணக்கில் ஆவதாக கேள்வி

--

இந்த பிரச்சனையை நீங்கள் அணுகிய விதம் தவறு என்று நினைக்கிறேன்

--

பிரச்சனையின் அடிநாதம் வேறு

சென்னை மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் அரசியலில் ஈடுபட விரும்பும் மாணவர்களின் சதவிதம் என்ன

அண்ணா பல்கலைகழகத்தின் இருந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் சதவிதம் என்ன

சட்டக்கல்லூரியில் இருந்து அரசியலில் ஈடுபட விரும்புபவர்களின் சதவிதம் என்ன என்று பார்த்தால் ஒரு எளிய உண்மை புரியும்.

--

said...

மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போது எதை நோக்கி செல்கிறார்கள் --> பட்ட மேற்படிப்பு அல்லது அரசு பணி அல்லது அயல்நாடு அல்லது அவர்களின் தந்தை (அல்லது மாமனாரின் !!) மருத்துவமனை

பொறியியல் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போது எதை நோக்கி செல்கிறார்கள் --> ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ அல்லது டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களிலிருந்து பணிநியமண உத்தரவு

சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரிகாலத்தில் எதை நோக்கி செல்கிறார்கள் --> கட்சியில் பதவி :(

வெகு சிலரே எம்.எல் படிக்க வேண்டும், Intellectual Proprietary Law படிக்க வேண்டும், லேபர் லா படிக்க வேண்டும், என்று நினைக்கிறார்கள்

அதே போல் சில அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளில் காலேஜ் சேர்மன் என்றால் வருங்கால எம்.எல்.ஏ என்ற நிலை இருக்கிறது.

said...

//நம் தமிழக அரசியல்வாதிகளின் தங்கள் பிரச்சனைகள்/அடி தடி அழிக்கும் தேவைகளுக்கு இந்த அரசு சார்ந்த கல்லூரிகளை ஒரு ரெக்கூருட்டிங் ஏஜென்ஸிகளா மாற்றிவைத்துள்ளனர் என்றே தோண்றுகிறது!//

சில மாற்றங்கள்

1. இது தமிழகத்தில் மட்டும் அல்ல. நாடு முழுவதும் இப்படி தான் இருக்கிறது

2. ”அரசு சார்ந்த” அல்ல.

அண்ணா பல்கலைக்கழகம் டிசிஎஸுக்கு
விப்ரோவிற்கும் ரெக்கூருட்டிங் ஏஜென்ஸியாக இருப்பது போல் சில அரசு மற்றும் சில தனியார் கலைக்கல்லூரிகள் மற்றும் சட்டக்கல்லூரிகள் ரெக்கூருட்டிங் ஏஜென்ஸிகளா இருக்கின்றன என்பது கசப்பான நிஜம்.

said...

சமுகத்தின் பிரச்சனைகளின் தாக்கம் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் குறைவே

அதே போல் சாதியின் தாக்கமும் குறைவு

ஆனால் கலைக்கல்லூரிகள் மற்றும் சட்டக்கல்லூரிகளின் சமுக பிரச்சனைகளின் தாக்கம் அதிகமாகவே இருந்துள்ளது

அதே போல் சாதி தாக்கமும்

--

இதை வெறும் பொருளாதார அளவு கோல் வைத்து மட்டும் பார்ப்பது தவறு. உதாரணமாகாக பொதுவாக ஏழை மாணவர்கள் படிக்கும் ஐ.டி.ஐகளில் (அரசு என்றாலும் சரி, தனியார் என்றாலும் சரி) சாதி மோதல் மிக மிக குறைவு (அங்கும் 69 சத இடப்பங்கீடு உள்ளது)

காரணம் - தெரிந்த விஷய்ம் தான்

said...

புருணோ! ஒத்துக்கு கொள்கிறேன் தனியார் கல்லூரிகளில் பெரும்பாலும் நடப்பதில்லை என்று சொன்னால் ஓ.கேவா?? அதே போல அரசு கல்லூரிகள் பெரும்பாலும் என்று சொன்னால் சரியாகிவிடுமா... Few exceptions will be there but exceptions are not examples.

நீங்க சொல்லும் //ஒரு காலத்தில் சாராயக்கடை ஏலத்தை விட அதிக போலிஸ் பாதுகாப்புடன் தான் நெல்லை ஜான்ஸ் கல்லூரி தேர்தல் நடக்கும்//

தேர்தல் என்றதுமே அரசியல் வருதில்ல! அதை மாணவர் மத்தியில் கட்சிகள் சிண்டு முடிவதே காரணம் என்கிறேன் நான்! அனேகமாக இருவரும் ஒரே விசயத்தை இரண்டு கண்ணாடி வழியா பார்க்கிறோம் என்று நினைக்கிறேன் :)

said...

as Bruno said, law students are indeed prepping for a spot in politics.

obviously, for preparation to politics, adi kudukkavum theriyanum, adi vaangavum theriyanum, vedikka paakkavum theriyanum.

enna karumamo idhellaaam.

Olimayamana edhirkaalam irukku namma oorukku :(

Anonymous said...

//தேர்தல் என்றதுமே அரசியல் வருதில்ல! அதை மாணவர் மத்தியில் கட்சிகள் சிண்டு முடிவதே காரணம் என்கிறேன் நான்! //

ஆமாம்.

//தனியார் கல்லூரிகளில் பெரும்பாலும் நடப்பதில்லை என்று சொன்னால் ஓ.கேவா?? அதே போல அரசு கல்லூரிகள் பெரும்பாலும் என்று சொன்னால் சரியாகிவிடுமா.//

இல்லை தல

பெரும்பாலான கலைக்கல்லூரிகள், ஏறத்தாழ அனைத்து சட்டக்கல்லூரிகள்

பிற பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் நடப்பதில்லை என்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்

--

இதை அரசு x தனியார் என்று பிரிக்க முடியாது என்பது தான் என் கருத்து