ஈழம் என்ன தான் தீர்வு உங்கள் கருத்துக்கள் தேவை!

நண்பர்களே என் முந்தய பதிவில் இந்தியா ஈழப்பிரச்சனையில் என்ன செய்யலாம் என சில கருத்துக்களை முன் வைத்திருந்த்தேன். இது போல வெட்டியா உண்ணாவிரதம், மனித சங்கிலி, மேடை போட்டு பேசுவது என்று இல்லாமல் ஆக்க பூர்வமாக எதை செய்தால் ஈழப்பிரச்சனையில் நல்ல தீர்வு வரும் என்ற கருத்தை சொல்லுங்களேன்!

என் கருத்துக்கள் இதோ!


இந்த ஈழதமிழர்களுக்கு இன்று உணவு காசும் முக்கியமல்ல.... நிம்மதியா வாழ்க்கையும், வாழ்விடமுமே. அதை இந்தய அரசால் தான் பெற்றுத் தரமுடியும். நீங்க கொடுக்கும் 700 டன் உணவு பொருள் உப தேவைகளே தான் முக்கிய தேவைகள் அல்ல...

1. இந்தியா இந்த விசயத்தை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல வேண்டும், அங்கே வைத்து இலங்கை அரசு, விடுதலை புலிகள், ஏனைய போராட்ட குழுக்கள் என அனைவரையும் ஒரு ஒருமித்த கருத்துக்கு கொண்டுவர வேண்டும். அந்த முடிவுகளை பாதுகாக்க ஒரு ஐ.நா படை அங்கே அமர்ந்த பட வேண்டும்.

2. பாதுகாப்புக்கு இந்தியா ராணுவம் அனுப்பக்கூடாது! ஐக்கிய நாடுகளின் படை மட்டுமே அங்கே செல்ல வேண்டும். இந்திய அரசு மேற்பார்வைக்கு மட்டுமே உதவ வேண்டும்.

பதவியில் உள்ளவர்களே!!! இவை எவையும் முடியாதெனில் குறைந்த பட்சம் ஈழத்தில் இருந்து தப்பிவர கூட காசு இல்லாமல் தவிக்கு (ஒரு உயிரை காப்பாற்ற சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் வரை வசூலிக்கபடுகிறதாம் அது கை குழந்தையாயினும் ) மக்களை இங்கே இருந்து ஒரு கப்பல் அனுப்பி கொண்டுவந்து இப்போது ஈழ தமிழர்களுக்காக கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி வைத்து நல்ல வசதியாவது செய்து தாருங்கள்!! தயவு செய்து அவர்களை மனிதர்களாக வாழ வையுங்கள்!

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதவும்.

நன்றி

Comments

SurveySan said…
தீர்வு அவ்வளோ சுலபமானதா இருந்தா, முப்பது வருஷம் இழுத்திருக்காதே சாரே.

விடைதெரியா பெரிய ப்ரச்சனை இது.