ஈழம் போதும் அரசியல் நாடகம்

கடந்த சில வாரங்களா எங்க பார்த்தாலும் ஈழ தமிழர் பிரச்சனை குறித்து பேச்சு, பல வருடங்களாக தூங்கி கொண்டிருந்த பலரும் ஏதோ நேற்று முதல் தான் இலங்கை ராணுவம் தமிழ் மக்கள் மேல் குண்டு மழை பொழிவது போல பேசி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இன்று இது பூதாகரமாக பேச நிச்சயமாக கம்யூனிஸ்டுகளும், ஜெயலலிதாவுமே காரணம்! என்னடா இது ஜெயலலிதா வெல்லாம் ஈழ மக்களின் பிரச்சனையை பற்றி பேசும் போது நாம் பேசவில்லை என்றால் பின் நம் தமிழின தலைவர் பட்டம் காணாமல் போய்விடுமோ என்ற பயமே நம்ம முதல்வர் இந்த மேட்டரை கையிலெடுக்க காரணம். சில மாதங்களுக்கு முன் கோயம்பேட்டில் ஒரு ஓரமா நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது என்ன நடந்தது என்று ஊர் அறியும்! இன்று அதே உதவிகள் மட்டுமே கிடைக்க போகிறது ஆனால் பெரிய சாதனை நடந்துவிட்டது போல கூவி கூவி விலை போக பொருளை விற்கிறார்கள் அரசியலிலும் வலைப்பதிவிலும். அறிவிழி என்று ஒருவர் தோழர் தமிழச்சியின் ஈழ பதிவுக்கு பதில் தருவதாக நினைத்து கிட்ட தட்ட ஜெ. அறிக்கை மாதிரி ஒரு சப்பை கட்டு கதை எழுதியிருந்தார், நான் வினாகளை எழுப்பினே இதுவரை வெளியிடவும் இல்லை, பதில் சொல்லவும் இல்லை. அதனால் அந்த வினாகளை பொதுவாக இங்கே வைக்கிறேன்.

அவர் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்:

\\ 2. சில மாதங்கட்கு முன்னர் திரு.பழ. நெடுமாறன், மருத்துவப் பொருட்களை அனுப்பிட, வசூலித்து வைத்த பின்னர் கேட்டபோது மறுக்கப்பட்டதே. ஏன்? இப்போது எங்கிருந்து வழி பிறந்தது? \\

இப்போது அவற்றை அனுப்ப வழி பிறந்து விட்டது என்பது தமிழக கட்சிகளின் முயற்சியால் கிடைத்த வெற்றிதானே.

மேலே உள்ள கேள்விக்கு நீங்க கூறியுள்ளது பதிலே இல்லை!!!

//இந்தியா தனது அண்டை நாடான இலங்கையின் மீது எந்த அளவிற்கு அதிகாரம் செலுத்த முடியும்.இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தானோ அல்லது அமெரிக்காவோ தலையிட்டால் அதை எந்த அளவிற்கு நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்.
//

ஐயா, இதற்கு முன் ராஜீவ் காந்தி காலத்தில் இலங்கை அரசை எதிர்த்து நம் விமானங்கள் ஈழப்பகுதிக்கு சென்று உணவுகள் வான்வழியாக இடப்பட்டிருக்கு! அதுவும் இல்லாமல் இதே போன்ற ஒரு மொக்கை பேச்சை தான் சில நாட்களுக்கு முன் ஜெயலலிதா பேசினார், இப்ப நீங்க அதே மொக்கை பதில் சொல்லறீங்க! இரண்டுக்கு வித்தியாசம் அந்த அம்மா கருணாநிதி எதை கேட்டாலும் அது நடக்காது என்று சொல்லவேண்டும் என்பதற்காக சொல்கிறார், நீங்க கலைஞர் எதஹி செய்தாலும் சரியே என்று நிரூபிக்க அதே மொக்கை பதிலை சொல்கிறீர்கள். இதற்கு என் பதில் நாம் பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனையில் நம்மாள் இறங்க முடியாது ஏன் என்றால் தார்மீக உரிமை இல்லை. ஆனால் இது அப்படி அல்ல,நம் நாட்டிருக்கு இலங்கையிலிருந்து அகதிகளாக ஈழத்தமிழர்கள் வருகிறார்கள் என்ற ஒரு காரணம் போது நாம் இந்த உள்நாட்டு பிரச்சனையில் தலையிட சரியான காரணம். அதனால் நமக்கு இதில் தலையிட கண்டிப்பாக தார்மீக உரிமை 100% உள்ளது. இதே போன்ற ஒரு தார்மீக உரிமையில் தான் அன்று பாகிஸ்தானிடமிருந்து பாங்ளாதேஷை இந்தியா உதவி செய்து பிரித்து தந்தது என்று தெரிந்து கொள்ளவும்.

//அப்பாவித் தமிழர் மீதான குண்டுத் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது, அதை ஏற்று இலங்கையும் ஒப்புக் கொண்டு உள்ளது.//

எங்கே??!! எப்போ?? செய்திக்கு இங்கே கிளிக் செய்யவும்

இந்த இலங்கை அரசை தான் நம்ப சொல்லறீங்களா?? அட நீங்க வேற..

------------------------------------------------------------------------------------------------

இந்த விசயத்தில் முதல்வர் ராஜினாமா என்ற ஆயுதத்தை எடுத்திருக்க கூடாது! என்ன கட்டாயத்துக்கு எடுத்தார், ஏன் வாபஸ் பெற்றார் என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்திருக்கிறது! எனக்கு தெரிந்து ஜெ. ஈழ மக்கள் பற்றி அறிக்கையும், கம்யூனிஸ்டுகளின் போராட்டதுக்கு ஆதரவும் தெரிவிக்காமல் இருந்திருந்தால், நம் முதல்வர் இந்த ஈழ தமிழர் மேட்டரை தொட்டுக்கூட பார்த்திருக்க மாட்டார் என்பதே நிதர்சனமான உண்மை!!

-----------------------------------------------------------------------------------------

எனக்கு தெரிந்த மட்டும் ஈழத்தமிழர்கள் பொருத்த மட்டில் உண்மையா வருந்துபவர்கள் என்று சொல்லுவதானால் பழ.நெடுமாறன், டாக்டர். ராமதாசு, வை.கோ மட்டுமே! மற்றவர்கள் எல்லாம் இமேஜ், ஓட்டு , தமிழின தலைவர் போன்ற பட்டங்களுக்காகவோ சங்கு ஊதுபவர்கள் தான்!

இங்கேயும் இருக்கு ஈழ தமிழர்கள் அகதி முகாம் அதை பற்றி நாம் பல முறை பேசியும் இருக்கிறோம்! இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகள், கொத்தடிமை கைதிகள் போலவே வாழ்கிறார்கள், அவர்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள் இன்று நான் தான் உங்களை காப்பாற்ற வந்த தலைவன்/தலைவி சொல்லுபவர்கள்... இங்கே இருப்பவர்களுக்கூட ஒன்று செய்ய முடியாத நீங்க தான் அங்கே உதவி அனுப்பறீங்கா சாமிகளா??

இந்த ஈழதமிழர்களுக்கு இன்று உணவு காசும் முக்கியமல்ல.... நிம்மதியா வாழ்க்கையும், வாழ்விடமுமே. அதை இந்தய அரசால் தான் பெற்றுத் தரமுடியும். நீங்க கொடுக்கும் 700 மில்லியன் டன் உணவு பொருள் உப தேவைகளே தான் முக்கிய தேவைகள் அல்ல...

1. இந்தியா இந்த விசயத்தை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல வேண்டும், அங்கே வைத்து இலங்கை அரசு, விடுதலை புலிகள், ஏனைய போராட்ட குழுக்கள் என அனைவரையும் ஒரு ஒருமித்த கருத்துக்கு கொண்டுவர வேண்டும். அந்த முடிவுகளை பாதுகாக்க ஒரு ஐ.நா படை அங்கே அமர்ந்த பட வேண்டும்.

2. பாதுகாப்புக்கு இந்தியா ராணுவம் அனுப்பக்கூடாது! ஐக்கிய நாடுகளின் படை மட்டுமே அங்கே செல்ல வேண்டும். இந்திய அரசு மேற்பார்வைக்கு மட்டுமே உதவ வேண்டும்.

பதவியில் உள்ளவர்களே!!! இவை எவையும் முடியாதெனில் குறைந்த பட்சம் ஈழத்தில் இருந்து தப்பிவர கூட காசு இல்லாமல் தவிக்கு (ஒரு உயிரை காப்பாற்ற சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் வரை வசூலிக்கபடுகிறதாம் அது கை குழந்தையாயினும் ) மக்களை இங்கே இருந்து ஒரு கப்பல் அனுப்பி கொண்டுவந்து இப்போது ஈழ தமிழர்களுக்காக கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி வைத்து நல்ல வசதியாவது செய்து தாருங்கள்!! தயவு செய்து அவர்களை மனிதர்களாக வாழ வையுங்கள்!

4 comments:

said...

//இந்த ஈழதமிழர்களுக்கு இன்று உணவு காசும் முக்கியமல்ல.... நிம்மதியா வாழ்க்கையும், வாழ்விடமுமே//

அதே...

said...

//எனக்கு தெரிந்த மட்டும் ஈழத்தமிழர்கள் பொருத்த மட்டில் உண்மையா வருந்துபவர்கள் என்று சொல்லுவதானால் பழ.நெடுமாறன், டாக்டர். ராமதாசு, வை.கோ மட்டுமே!//

டாக்டர். ராமதாசு?

said...

ஏங்க ராமதாசு அவர்கள் நீண்ட நாட்களாக ஈழப்பிரச்சனையை பற்றி பேசிக்கிட்டே தான் இருக்காரு! அவரால் முடிந்தது அவ்வளவு தான் :)

said...

இன்று தான் இந்த பதிவைப் பார்த்த படியால் எழுதுகிறேன்.
மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!
நடுநிலையான கருத்துக்கள்!!
வளர்க உங்கள் பணி!!!