We the people supports Eelam

இன்று தான்முத்து தமிழினி யின் இந்த பதிவை படித்தேன். என் நிலை விளக்கம் கேட்டிருந்தார், வேறு யார் கேட்டாலும் பதில் தந்திருப்பேனா என்று தெரியவில்லை! நம்ம முத்து கேட்கும் போது என் நிலையை விளக்க வேண்டும் என்று தோன்றியது! விளக்கம் நம்ம உண்மை தமிழன் மாதிரி ரெம்ப பெருசா போனதாலே தனி பதிவா போட வேண்டியதாயிற்று :)

முதலில் என் ஈழம் பற்றிய கருத்துக்கள் என் முந்தய பதிவி இருக்கிறது! அதை சொடுக்கி பார்க்கவும். நான் ஏழாவது படிக்கும் போதே ஈழ மக்களுக்கும், விடுதலை புலிகளுகும் ஆதரவாக போராட்டங்களில் விடுதலை புலிகளின் கொடி ஏந்தி உங்க தலைவரின் தலைமையில் கலந்து கொண்டவன் தான்! ஆனால் இன்று (ராஜீவ் படுகொலைக்கு பின்பு) நிச்சயம் எனக்கு சில கசப்பு உணர்வுகள் புலிகள் மேல் உண்டு, ஈழ மக்கள் மேல் அல்ல! ஈழ மக்கள் துயர் துடைக்கபட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் யாருக்கு இருக்க முடியாது என்னையும் சேர்த்து தான்! இதற்கு இந்தியா மூலமாக தான் ஒரு முடிவு வர முடியும் என்ற என்னாலும் மறுக்கமுடியாது! ஈழ மக்கள் நிம்மதியாக/அமைதியா வாழ ஒரு இடம் நிச்சயம் தேவை என்பதும், அதற்கு பேச்சுவார்த்தையே தீர்வு என்பதே என் கருத்து!

இப்ப உங்க பதிவில் வந்த சில வாதங்களுக்கு என்று கருத்துக்கள்:

//உனது பிள்ளைக்கும் உற்றார் உறவினருக்க உன் குடும்ப துதிபாடிகளுக்கும் கீழ்சபையில் எம்பி பதவியும் மத்தியில் அமைச்சர் பதவியும் உன்னால் தனித்து நின்று மத்தியரசிடம் வாங்கி கொடுக்கமுடியும் ஆனால் எந்த இனத்தின் பெயாரால் பிழைப்பு நடத்துகிறாயோ அந்த இனத்திற்கு எதாவது நன்மைசெய்யதான் உன்னால் முடியாது.//

நீங்க சொல்லுவதை போல நான் "நச்" போட்டது செலக்டிவ்வான சில விசயங்களுக்கு மட்டுமே! அது சரி செலக்டிவ் என்ற வார்த்தை ஏதோ அந்த அம்மாவுக்கு மட்டும் காப்பிரைட்ஸ் இருக்காமாதிரி எழுதியிருக்கீங்க. நான் யாரை தலைவராக கொண்டிருக்கிறேன் என்று நீங்களா முடிவு செய்வது நல்லதல்ல! அதை நான் தான் சொல்லனும்! கருணாநிதியை திட்டினா, ஜெயா தான் என் தலைவின்னு எப்படி சொல்லுறீங்க! ஜெயலலிதாவையும் திட்டி பல பதிவு போட்டிருக்கேன் அப்படின்ன நான் கருணாநிதி கட்சியா?? என்னய்யா உங்க லாஜிக்...கேட்கும் போதே புல்லரிக்குது!

//we the people என்ற பதிவர் சமீபத்தில் குழலியின் பதிவொன்றில் குழலி தன் அணியில் சேர்ந்து விட்டதாக புளகாங்கிதப்பட்டுள்ளார்.//

எனக்கும் ஏதோ அணி இருப்பதாக ஒரு மாயை தயார் செய்யும் உங்கள் முயற்சிக்கு நன்றி :)

எம்.பிக்கள் ராஜினாமா முடிவை, கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சி மீட்டிங் போட்டு முடிவு எடுத்தார்கள் தானே, அப்படி இருக்கும் போது ராஜினாமா செய்ய வேண்டாம் என்ற முடிவையும் அனைத்து கட்சி கூட்டம் போட்டு தானே சார் முடிவெடுக்கனும்! மத்திய அரசுக்கு கொடுத்த முடிக்கு முன்பே உங்க தலைவரே தன்னிச்சையா ராஜினாமா தேவையில்லை என்று முடிவெடுத்தது சரியா?? அப்ப எதுக்கா இந்த நாடகம் என்று கேட்டா என்னை அ.தி.மு.க கட்சியில் நீங்களா கோத்துவிடுவது ஓவரா தெரியல???

//அன்புமணி ஏதாவது ராஜீனாமா செய்து கீய்து விட்டாரா என்று அனைத்து பேப்பரையும் புரட்டி பார்த்தேன். அப்படி எதுவும் செய்தி இல்லை. தீடிரென்று கலைஞர் ஈழபிரச்சினையில் வெறும் அரசியல் தான் செய்கிறார் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று புரியவில்லை.//

//ராமதாஸ் தன் கட்சி எம்பிக்களை ராஜினாமா செய்வதை எது தடுக்கிறது என்று புரியவில்லை.//

அனைத்துக்கட்சி தலைவர் எவ்வழி, அது போலவே மற்ற கட்சிகளும் செய்யும். அவருக்கு இருக்கும் பதவி வெறி, மற்றவர்களுக்கும் வரக்கூடாதா என்ன?? தமிழின தலைவனே சும்மா இருக்கும் போது, குட்டி தலைவர்களுக்கு என்ன தலை எழுத்தா என்ன??

//கலைஞரை தாண்டி நாம் ஏன் சிந்திப்பதில்லை? //

ஏன்னா அவர் தானே Self Styled தமிழின தலைவர், அப்ப அவரை சுற்றித்தானே கேள்விகள் விழவேண்டும்? அது தானே நியாயம்!

//கம்யூனிஸ்ட் கட்சி சில நாட்களுக்கு முன் ஒரு நாடகம் நடத்தியது.//

அது மட்டும் நாடகம் என்று நன்றாக தெரியும் உங்களுக்கு!! ஏன் உங்க தலைவர் நடத்தும் மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரதங்களும் நாடகம் என்று புரியமாட்டிங்குது!!?? ஒரு வேலை இதுவும் செலக்டிவ் வகையை சேருமா??

Comments

//விளக்கம் நம்ம உண்மை தமிழன் மாதிரி ரெம்ப பெருசா போனதாலே தனி பதிவா போட வேண்டியதாயிற்று:)//

இதுக்கு மட்டும் நானா.. நல்லாயிருங்க சாமியோவ்..

முத்து ஸாரே சொல்லிட்டாரு நீங்களே மனம் மாறிட்டீங்கன்னு..

அப்ப நீங்கதாண்ணே கொள்கை சிங்கம்..

வாழ்க ஜெய் ஸார்..
We The People said…
//முத்து ஸாரே சொல்லிட்டாரு நீங்களே மனம் மாறிட்டீங்கன்னு..

அப்ப நீங்கதாண்ணே கொள்கை சிங்கம்..//

வாங்க உண்மை தமிழன் சார், நான் மனமும் மாறவில்லை, கொள்கையும் மாறவில்லை! அன்று என்ன நினைத்தேனோ அதே தான் இன்றும் நினைக்கிறேன், செய்கிறேன், ஆனா என்ன என் கொள்கை கொண்டிருந்தவர்கள் பின்னர் மனம் மாறிவிட்டு நான் கொள்கை மாறிவிட்டேன் என்று சொல்லாம், ஆனால் உண்மை கொள்கை மாறியது யார் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் :))
Muthu said…
நீங்க எப்பவுமே செலக்டிவ் நச் தான் போடுவீங்க என்றுதான் எனக்கு தெரியுமே :))

ஏழாவது படிக்கும்போதே கொடி புடிச்சீங்க என்ற தகவலை படிக்கும்போது எனக்கு புல்லரித்தது.

//எனக்கும் ஏதோ அணி இருப்பதாக ஒரு மாயை தயார் செய்யும் உங்கள் முயற்சிக்கு நன்றி :)//

:)

ஆனா பாருங்க அந்த அணியில் நீங்க தலைவர் இல்ல...நீங்களா அப்படி நினைச்சீங்கன்னா நான் என்ன பண்றது?

//தமிழின தலைவனே சும்மா இருக்கும் போது, குட்டி தலைவர்களுக்கு என்ன தலை எழுத்தா என்ன??//


அதே தான்..அப்படின்னா குட்டி தலைவர்கள் வாயையையும் அதையும் மூடிட்டு இருக்கணும் இலலையா? நான் அதைத்தான் சொன்னேன்....


என் பதிவை நீங்க சரியாவே படிக்கவில்லை.கலைஞர் உளப்பூர்வமாக இதை செய்கிறார் என்று எங்கயுமே நான் சொல்லல.அதுதான் முக்கியமான பாயிண்ட்.
We The People said…
//ஆனா பாருங்க அந்த அணியில் நீங்க தலைவர் இல்ல...நீங்களா அப்படி நினைச்சீங்கன்னா நான் என்ன பண்றது?//

அணியே இல்லை என்று சொல்லும் போது அதுக்கு போய் நான் ஏன் தலைவன் என்று நினைத்துக்கொள்ள போகிறேன் :)))))
சும்மா சீனப் போடுறாங்கோ..