Posts

Showing posts from February, 2007

கல்யாண் மறைவிற்கு என் அஞ்சலி!

Image
தமிழ் வலைதிரட்டிகளில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்த தேன்கூடுவின் நிறுவனரான திரு.கல்யாண் அவர்களின் மரண செய்தி பெரும் அதிர்ச்சி :( இவரை நடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்தித்த போது இப்படி சாந்தமானவரா தேன்கூடின் நிறுவனர் என்று ஆச்சர்யபடுத்தினார். தமிழ் எழுத்துக்கள் வளர்ச்சிக்கு பல விடயங்கள் முயர்ச்சிப்பதாகவும், அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்ன போது, இந்த சிறுவயதில் இவ்வளவு தமிழ் பற்றா என்று வியக்கவைத்தார்! ஒரு 20 நிமிடம் தான் அவரிடம் நானும், தமிழியும் பேசியிருப்போம்! தேன்கூடு சேவைகள், அதில் உள்ள பிரச்சனைகள் என அனைத்தையும் கூறினார், அத்துனை பிரச்சனைகளுக்கு இடையேயும் அவர் அயராமல் செய்துவரும் தமிழ் சேவை நினைத்து வியந்தோம்! அதற்கு பின் சில மின்னஞ்சல் மூலம் தேன்கூடில் வரும் மேலான்மை சேவைகளை பற்றி செய்திகளை அனுப்பிவைப்பார். அவரை அன்று சந்தித்தது தான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை! 29 வயது மரணத்தை தழுவும் வயதா?? வந்தார்! தன் கடமையாக நினைத்து தமிழ் வலையுலக்குக்கு தன்னால் இயன்ற சேவை செய்தார்! இன்று அவர் இல்லை என்றாலும் அவர் சேவைகள் நம்மை நினைவு கூறவைக்க...

நன்றி நன்பர்களே!

என்னை நட்சத்திரமாக ஒரு வாரம் வலம் வர செய்த தமிழ்மணத்துக்கு என் முதல் நன்றி! என்னை நட்சத்திரமானதற்கு வாழ்த்திய அனைத்து வலைப்பதிவர்களுக்கும் நன்றி! இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தமுடியவில்லை என்ற ஆதங்கம் இன்று எனக்கு உண்டு! நேரமின்மை காரணமாக எழுதிய பதிவுகளை கூட சரி செய்து வெளியிட முடியவில்லை! சரி விடுங்க விரைவில் எல்லா பதிவையும் வெளியிடுவோம்! பதிவு வெளியிட நட்சத்திரமாக வேண்டிய அவசியம் இல்லையே! நன்றி மக்களே! இந்த நன்றியை சொல்லும் வேளையில் என் ஆசை மீண்டும்: சாதி, மதம், ஏற்றத்தாழ்வுகள் இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்க நம் பாடுபட வேண்டும்! கீழ் சாதி என்று மேல்சாதியும், மேல் சாதி என்றும் கீழ் சாதி ஒருவரை ஒருவர் சொல்வதை நிறுத்தி அனைவரும் இணைந்து ஒரு புதிய இந்தியாவை உருவாக்க திட்டமிடுவோம்! என் மதம் சிறந்தது! உன் மதம் தாழ்ந்தது என்று வெட்டியாக மதச்சண்டையிடுவதை நிறுத்து அனைவரும் இணைந்து ஒரு ஒப்பற்ற இந்தியாவை உருவாக்குவோம்!

டிஜிட்டல் அவதாரம் - ஒரு பா.க.ச பதிவு

Image
புது அவதாரம் எடுத்த எங்க தல பாலாபாய்க்கு ஒரு வாழ்த்து சொல்லத்தான் இந்த பா.க.ச பதிவு! சங்கத்துக்கு அப்ப அப்ப வேலை தந்து! ஏதாவது ஐடியா கொடுத்து எங்களை ஊக்கிவிக்கும் தல பாலாபாய்க்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டு தொடங்குவோம்!!! அவதார புருஷனாக வாழ்ந்து வரும் எங்க பாலாபாய் இதுவரை பல அவதாரம் எடுத்துவிட்டார், நம்ம திருமால் பகவான் மேக்ஸிமம் 9 அவதாரம் எடுத்துயிருக்காரு! பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் இந்த கலியுகத்தில் எடுக்கப்போறதா சொல்லறாங்க! ஆனான எங்க தல, கலியுக கிஷ்ணன் பாலாபாய்ஆயிரம் அவதாரம் எடுப்பாரு டெய்லி! எங்க தலையோட லேட்டஸ்ட் அவதாரம் புலியாவதாரம்! அந்த வதாரத்தின் போட்டோ அருகே உள்ளது! இந்த அவதாரம் எதுக்கு என்று கேட்பவர்களுக்கு எங்க தலையின் பதில் "இணைய உலகத்திற்கும், கணினி நாட்டிற்கும்(!) ஏதாவது செய்யனும்னு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளாக ஆசை! " அதை இந்த புது அவதாரத்தில் தான் செய்யனும் என்று ஆசைப்படறாரு!!! இதெல்லாம் உங்களுக்கு பெரிய ஆச்சர்யத்தை தரலாம், ஆனா எங்க பா.க.ச மக்களுக்கு ஒரு ஆச்சர்யமும் இல்லை, ஏன்னா, இதுக்கு முன்னாடி இவர் பல வித்தைகளை கணினி மற்றும் இணைய உலகத்துக்கு காட்டியிருக்காரு,...

VA(A)Tட்டும் சேவைவரியும்

Image
பலர் பல விதமாக இந்த மதிப்புக்கூட்டு வரியை பற்றி கருத்து கூறிவந்தாலும், உண்மையில் இந்த வரி நமக்கு லாபமா? கஷ்டமா? நஷ்டமா? என்ற கேள்விக்கு யாராலும் பதில் தெளிவாக சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. வியாபாரிகள் சங்கம் இதனால் பொருட்களின் விலை கூடுகிறது என்று கூறிவருகிறார்கள், ஆனாலும் அவர்களால் சரியான புள்ளி விவரங்கள் தரமுடியவில்லை, ஏன்னெனில் விலைவாசியும் உயர காரணங்கள் பல காரணங்கள், அதில் முக்கியமானது ஆன்லைன் ட்ரேடிங், பின்னர் டீசல் விலை, சேவை கட்டணங்கள், வரி என பல. இந்த ஆன்லைன் ட்ரேடிங் எனப்படும் இணையவழி வர்த்தகத்தால் நடக்கும் அராஜகங்கள் பல, இதனால் அரசுக்கு நல்ல வருமானம் என்ற ஒரே காரணத்துக்காக அதை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கு என்பதே கொடுமை! இன்றைய நிலையில், அனைத்து வித அத்தியாவசிய பொருட்களின் விலையும் 5 - 20 ரூபாய் வரை உயர்ந்து இருப்பது உண்மை! அரிசி, கோதுமை, பருப்பு முதல் காய்கறி வரை எல்லா பொருட்களும் விலையேற்றம், இந்த வரியால் மட்டும் அல்ல! சும்மா நம்ம முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில் 50 ரூபாய் இருந்த உழுத்தம்பருப்பு இப்ப 31 ரூபாய் தான் என்று, என்னதான் சப்பை கட்டு கட்டினாலும், மார்கெட்டில் கிடைக்கும...

மீள்பதிவு: பாக்கெட் உணவு பொருட்கள் உஷார்!

Image
சில நாட்களுக்கு முன் பலசரக்கு அங்காடிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க போயிருந்தோம், என் மகன் ஒரு பெட்டி Lay's Stax எடுத்துவந்து, அப்பா, இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லு? Zero Added Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கனும் என்று பெரிய ஆள் மாதிரி ஒரு மேட்டரை கேட்டான்!!! போன மாதம், என் மகனுக்கு காய்ச்சல் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வைஸ் அது!!! நான் மறந்துவிட்டேன், என் மகன் ஞாபகம் வைத்து கேட்டான்!!! ஆச்சர்யமாக இருந்தது!!! இந்த தகவல் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் உபயோகமா இருக்கும் என்று தோன்றியதால் இந்த பதிவு. Hydrogenated Trans Fat & Partially hydrogenated oils : Trans Fat இயற்கையாகவே பசுவின் பாலில் 2 - 5% சதவீதம் இருக்கும். ஆனால் Hydrogenated Trans Fat என்பது செயற்கையாக செய்யப்படும் Trans Fat. இது பசு, எறுது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும், சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது!!! இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து!! இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density li...

கோலாக்கலும், பூச்சிமருந்தும் அரசியல்வாதிகளும்!

Image
இதுவரைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கோக் மற்றும் பெப்சியின் மீது பூச்சி மருந்து படிமம் இருப்பதாக புகார் வந்தது! முதலில் 2003 ஆகஸ்டில் அறிவியல் மற்றும் சுற்றுப்புறசூழல் மையம், இந்தியாவில் தயாராகும் கோக், பெப்சி போன்ற 12 வகை குளிர்பாணங்களில் பூச்சிமருந்து படிமம் உள்ளதாக அறிக்கை வெளியிட்டு ஒரு கலக்கு கலக்குச்சு! பெப்சியின் குளிர்பாணங்கள் அனுமதிக்கப்பட்ட( 0.0005 mg/l ) பூச்சிமருந்து அளவுகளைவிட 36 மடங்கு அதிகமாக ( 0.0180 mg/litre ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது! கோக் நிறுவன குளிர்பாணங்களில் சுமார் முப்பது மடங்கு அதிகமாக ( 0.0150 mg/litre ) இருந்தது! அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாங்கிய அதே நிறுவனங்களின் குளிர்பாணங்களில் ஒரு மில்லிகிராம் கூட பூச்சிமருந்து படிமம் இல்லை என்ற உபரி தகவலும் அந்த அறிக்கையிலிருந்தது. உடனே நம்ம அரசியல்வாதிகள் என்னவோ மக்கள் நலம் காப்பவர்கள் போல தினமும் ஒவ்வொறு கட்சியிலிருந்தும் ஒரு ஆள் மினிமம் இந்த நிறுவனங்களை திட்டி அறிக்கை விட்டார்கள்! முக்கியமா நம்ம கம்யூனிஸ்டுகள்! அரசு அதை தடை செய்ய வேண்டும் என்று கூப்பாடுயிட்டார்கள்! அந்த நிறுவனங்கள் முன் தர்னா செய்தார்கள்! அற...

ஸ்டார் தடாலடி போட்டி!

Image
மகா ஜனங்களே! Gpost கௌதம்ஜீயின் 'அடுத்த தடாலடி எப்போ?' என விசாரித்துப்பார்தால் ரிஸ்ல்ட் ஒன்றும் இல்லை, சரி நம்மளே ஒன்னு வைப்போம் என்று இறங்கிவிட்டேன்! இதோ நான் தரும் அடுத்த தடாலடிப் போட்டி! இந்த புகைப்படத்தில் உள்ளது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்! ஆகவே தோழர்களே.. போட்டிக்கான இறுதி நாள்: 07.02.2007, சனிக்கிழமை கெடு நேரம்: காலை பத்து மணி (இந்திய நேரப்படி) நேரம் முடிந்துவிட்டும் உங்களை காக்க வைத்தமைக்கு மன்னியுங்க ப்ளீஸ்! சரியான பதில் : திருமதி. சோனியா காந்தி சரியான பதில் சொன்ன அனைவருக்கும் என் இதயத்தில் ஒரு ஏக்கர் இடம்! ஜாலியா குடிவாங்க ;) என் இன்றைய மற்றொரு பதிவான ஏன் இந்த சாதி வெறி! பதிவை படிச்சீங்க!! அட ஆமாம் அவங்களை மாதிரியே இருக்காங்கபா!!! ஏதாவது சொந்தமா இருக்குமோ??!!! இந்த படத்தில் உள்ளது ரீவ்ஸ் என்று எல்லாரும் சொல்லிட்டாங்க! ஆனா பாருங்க அப்படியே நம்ம திருமதி .சோனியா சின்ன வயசுல இருந்தா மாதிரியே இருக்காங்க! எப்படின்னு ஒரு போட்டி வைக்கலாமா?? ;)

ஏன் இந்த சாதி வெறி!

Image
அருந்ததியினர் இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஐந்து குழந்தைகள் தமிழக அரசு நடத்தும் அங்கன்வாடியில் சேர்க்கமுடியாமல் தவிக்கும் பெற்றோர் பற்றிய செய்தி வந்திருந்தது! இது நடந்தது வேற எங்கயும் இல்லைங்க நம்ம சமூகநலத் துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை அவர்களின் தொகுதியான ஆளங்குலத்துக்கு உட்பட்ட தெற்குப்பட்டி கிராமத்தில் தான் இது நடந்திருக்கிறது. இந்த் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகளை அங்குள்ள அங்கன்வாடியில் (Kindergarten) வகுப்புக்களில் சேர்க்க மறுத்தது வருபவரும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்த்தவர் என்பதை அறியும் போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்த அங்கன்வாடி ஊழியர் அந்தோணியம்மாள், பள்ளர் என்னும் ஒரு இனத்தை சேர்ந்தவர், இவர்கள் அருந்ததியினரைவிட ஒரு படி உயர்ந்தவராம்! அதனால் அருந்ததியினரை அங்கன்வாடியில் சேர்த்து, அவர்களுக்கு பனிவிடை செய்யமாட்டேன் என்று கூறியிருக்கிறார் அந்த அங்கன்வாடியின் ஊழியர் அந்தோணியம். தெற்க்குப்பட்டியில் மேலும் விசாரித்த மும்பய் மிரர்ரின் செய்தியாளருக்கு கிடைத்தது மேலும் அதிர்ச்சியான தகவலகளே! "கடந்த இருபது ஆண்டுகளில் அந்த அங்கன்வாடிய...

என்னை தெரியுமா?

என்னையும் நட்சத்திரமாக் தேர்ந்தெடுத்து என்னை ஆச்சர்யப்படுத்திய தமிழ்மணத்துக்கு நன்றி சொல்லி முதலில் என்னை பற்றிய சிறு குறிப்புடன் என் பதிவுகளை துவங்குவோம் என்று நினைத்தேன் :) பெயர்: ஜெயசங்கர் நா வயது: 34 படிப்பு: பொறியியல் பட்டம் தொழில்: மென்பொருள் ஏற்றுமதி ஏன் வலைப்பதிவு: நான் பொதுவா அரசியல் சார்ந்து எழுதுவதாக எல்லாரும் சொன்னாலும், நான் மக்கள் பிரச்சனை சார்ந்து எழுதுகிறேன்னு என்பதே உண்மை. அரசியல் சாக்கடை ஆனதால், மக்கள் படும் அவதிகளை சொல்லும் பதிவே என் பதிவுகள், மக்கள் விழிப்புணர்வு பதிவுகள், ஏமாற்றுக்காரர்களை அடையாளம் காட்ட எழுத துவங்கினேன். என்னை தேசிய ஜல்லி அடிப்பவன் என்று பலர் சொல்லறாங்க! ஆமாம் என்று பெருமையா சொல்லிக்கிறேன். ஏன்னென்றால் நான் முதலில் இந்தியன், அப்புறம் தான் மற்றவைகள்...இதை ஜல்லி என்று சொல்பவர்கள் சொல்லட்டும், அது அவர்களின் சுதந்திரம் :) என் தலைவன்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். நேதாஜி இல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்றிருக்க முடியாது என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். அவர் சுத்ந்திர போராட்ட தியாகத்துக்கு இணை யாரும் கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன். நேதாஜி தான் என்னை பொ...