சுதந்திரம் யாருக்காக?
கடந்த 15ஆம் தேதி நாம் நம்முடைய சுதந்திரத்தின் 60 வருடங்கள் கடந்ததை கொண்டாடினோம்! அறுபது ஆண்டுகளில் நாம் எவ்வளவு சுதந்திரம் அடைந்திருக்கிறோம் என்று எனக்கு புரியவில்லை! ஆங்கிலேயர் ஆட்சிக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றே ஒன்று அன்று ஊழல் குறைவு, இன்று இவர்களால் பெருக்கெடுத்து ஓடுது ஊழல்!! இவருடைய ஆட்சியிலும் சர்வாதிகாரம் இருந்தது, இருக்கிறது!!!
இன்று இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்தா, என்ன கொடுமை சார் இதுன்னு தான் சொல்லத்தோனுது!
பீஹாரின் அரசு இயந்திரங்கள் எங்கள் கண்காணிப்பில் தான் இருக்கிறது! விரைவில் அவை எங்கள் கட்டுப்பாடுக்குள் வரும் என்று சில தினங்களுக்கு முன் Maoist Commander அறிவிக்கிறார்! அதுவும் ஒரு Times Now போன்ற ஒரு தொலைக்காட்சியில்!!! மாவோஸ்டுகளுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் இருக்குன்னு பார்த்துங்க!!!
மனிப்பூரில் 3 ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வீட்டிலேயே 12 தீவிரவாதிகளை பதுங்க வைத்து பிரிவினைவாதத்தை வளர்க்கவும், பாவப்பட்ட மக்களை கொல்லவும், அரசு இயந்திரங்களை அழிக்கவும் உதவி செய்யறாங்க! அப்ப தீவிரவாதிகளுக்கும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் கிடைக்குதுன்னு பாருங்க!
ஆட்சியிலிருப்பவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் தன்னை எதிர்ப்பவர்களை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று சில மாதங்களுக்கும் நம்ம முதல்வரின் குடும்பத்தார் செய்து காட்டினார்கள்! அவர்களை CBIயையாலும் ஒன்னும் செய்யமுடியாதுன்னு இன்றைய நிகழ்வுகள் காட்டுது! அப்ப ஆளும் கட்சியினர்களுக்கும், ஆட்சியாளர்களின் குடும்பத்தாருக்கும் இருக்கும் சுதந்திரம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள முடிகிறது!
சுதந்திர இந்தியாவில் முறைப்படி விசாவுடன் வந்த தஸ்லீமா நஸ் ரீனை கொல்பவருக்கு 'அளவற்ற' (Unlimited) வெகுமானம் வழங்கப்படும் என்று கேஷுவலா Public Meetingல அறிவிக்கும் ஒரு கொல்கொத்தா இமாமுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்குன்னு பாருங்க!!!
அதே தஸ்லீமாவை ஒரு ஆந்திரா சட்டமன்ற உறுப்பினர், தன் பொறுப்பான பதவியை மறந்து Religious Fundamentalistஆக மாறி ஒரு பொது மேடையில் தஸ்லீமாவை தாக்கும் ஆளவுக்கு சுந்ததிரம் கொடுக்கப்படிருக்கு!
இவர்களை எல்லாம் கைது செய்ய தயங்கும் சுதந்திர மாநில/ மத்திய அரசுகள்!!!!
இதுபோன்றவர்களுக்கெல்லாம் கிடைக்கு அந்த சுதந்திரம் தடுக்கப்படவேண்டும்!!!
உண்ண உணவுக்காக தினமும் 150 கீலோ மீட்டர் பயணம் செய்து சம்பாதிக்கும் 30 ரூபாயை கூட Railway TTE க்கு கட்டிங் கொடுக்காமல் வீட்டுக்கு எடுத்துச் செல்ல கூட ஏழை மக்களுக்கு சுதந்திரம் சுத்தமா இல்ல!
இது போன்ற ஏழ்மையையும், ஏழைகளின் துயரையும் எப்படி ஒழிப்பதுன்னு பாராளமன்றதில் விவாதிக்க அழைத்தால் 545 பிரதிநிதிகளில் வெறும் 12 மக்கள் பிரதிநிதிகள் வந்ததால் அந்த பாராள மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்படுது! அவ்வளவு மக்கள் பாசம் நம்ம பிரதிநிதிகளுக்கு!!!
இந்த சுந்திரம் எங்க போகுது! யாருக்காக சுதந்திரம் கிடைத்தது! ஒன்னும் புரியல! யாராவது தெரிந்தா சொல்லுங்க ப்ளீஸ்!!!

Comments
Can we (bloggers) get together do something to change??
Anyone like to lead??
- Raj
//Can we (bloggers) get together do something to change??
Anyone like to lead??//
நடக்ககூடும்! எப்ப எப்படின்னு தெரியல!தலைவரை தேடி அலையாமல் நம்மால் இயன்றதை செய்யத்துவங்குவோம்... வழியில் ஒருவன் வருவான் தலைமை தாங்க என்று நம்பி துவங்கியிருக்கிறேன் இந்த வழியில் :(
மேலும் சக்திகள் உங்களுக்கு....
More power to you....
நாம் இன்றும் இந்திய அரசின் அடிமையாகவே வைக்கப்பட்டுள்ளோம். அன்று ஆங்கிலேய அரசின் அடிமை இன்று இந்திய அரசின் அடிமை (வெறும் சொல்லளவில் சில உரிமைகள் தவிற).
ஒன்னுமே மாறல..
ஆனால் நீங்கள் சொல்லுகிற மாதிறி அது அவர்களின் சுதந்திரம் இல்லை. சட்டம் மீறிய செயல்கள், ஆராஜகங்கள், தேச துரொக செயல்கள். இப்படி செய்தவர்களின் மீது நம் அரசு ஏன் தகுந்த நடவடிக்கை எடுக்க முடியவில்லை?. நமது சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, நீதிதுறை நிலைகுலைந்துள்ளது. இதனை சரி செய்ய எவரும் (பி.எம் முதல் சி.எம் வரை) சீர்திருத்த நடவடிக்கைகள் எடுப்பதில்லை.
அப்படி இருந்தும் அவர்களை ஆஹா, ஒஹோ என்று பாராட்டு ஜல்லிகள் அலங்காரம் செய்கின்றனர்.
இந்த நிலை மாற வேண்டும.் நாம் குறுங்-கால கொள்கைகள், வோட்டு வாங்கும் நொக்குடைய திட்டங்களை விட நீண்ட கால கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே இன்னிலை மாறும்.
இப்படியே சீர்திருத்தமின்றி நீடித்தால் பொது மக்கள் நிலை மோசம்தான்.
கவலைய விடுங்க We The People! எங்கிட்ட எல்லாத்துக்கும் பதில் இருக்கு. கேட்டுக்குங்க.
இந்த காலத்துல நக்சலைட், அரசியல் வியாதி, மதவியாதி போன்ற கோமாளிகளுக்கும் கொள்ளை காரனுக்கும்தான் சுதந்திரம். மத்தவை எல்லாம் ச்சும்மா ஒரு ஜுஜூபி!
பதிவிற்கு நன்றி We The People!