தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான திரு.கருணாநிதியின் அறிக்கை: இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23-4-2009 வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். *********************** ஐயா, தெரியாமா தான் கேட்கிறேன், இதை யாருடைய கண் துடைக்க நடக்கிறது? எதற்காக இந்த நாடகம். இது மத்திய அரசை எதிர்த்தானால், அந்த மத்திய அரசில் நீங்கள் யார்? அதே மத்திய மந்திரிசபையில் பங்கு கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன தார்மீக பொறுப்பு இருக்கிறது இந்த பந்த் நடத்த?? தாயநிதி மாறனுக்கு ஐ.டி துறை மந்திரி பதவியும், டி.ஆர்.பாலுவுக்கு கப்பல் போக்குவரத்து துறையும் தரும் வரை நான் இந...