We the people supports Eelam
இன்று தான் முத்து தமிழினி யின் இந்த பதிவை படித்தேன். என் நிலை விளக்கம் கேட்டிருந்தார், வேறு யார் கேட்டாலும் பதில் தந்திருப்பேனா என்று தெரியவில்லை! நம்ம முத்து கேட்கும் போது என் நிலையை விளக்க வேண்டும் என்று தோன்றியது! விளக்கம் நம்ம உண்மை தமிழன் மாதிரி ரெம்ப பெருசா போனதாலே தனி பதிவா போட வேண்டியதாயிற்று :) முதலில் என் ஈழம் பற்றிய கருத்துக்கள் என் முந்தய பதிவி இருக்கிறது ! அதை சொடுக்கி பார்க்கவும். நான் ஏழாவது படிக்கும் போதே ஈழ மக்களுக்கும், விடுதலை புலிகளுகும் ஆதரவாக போராட்டங்களில் விடுதலை புலிகளின் கொடி ஏந்தி உங்க தலைவரின் தலைமையில் கலந்து கொண்டவன் தான்! ஆனால் இன்று (ராஜீவ் படுகொலைக்கு பின்பு) நிச்சயம் எனக்கு சில கசப்பு உணர்வுகள் புலிகள் மேல் உண்டு, ஈழ மக்கள் மேல் அல்ல! ஈழ மக்கள் துயர் துடைக்கபட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் யாருக்கு இருக்க முடியாது என்னையும் சேர்த்து தான்! இதற்கு இந்தியா மூலமாக தான் ஒரு முடிவு வர முடியும் என்ற என்னாலும் மறுக்கமுடியாது! ஈழ மக்கள் நிம்மதியாக/அமைதியா வாழ ஒரு இடம் நிச்சயம் தேவை என்பதும், அதற்கு பேச்சுவார்த்தையே தீர்வு என்பதே என் கருத்து! இப்ப உங்...