Posts

Showing posts from 2006

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Image
அன்பு வலைப்பூ நன்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! இந்த புத்தாண்டில் புது மனிதனாய் பல வெற்றிகளும், வளங்களும் பெற்று பெருமகிழ்ச்சியோடு வரவேற்க என் வாழ்த்துக்கள்!!! இந்த புத்தாண்டு இனம், மதம், மொழி என எல்லா தடைகளையும் தாண்டி சிறந்த ஒரு புத்தாண்டாய் வரவேற்ப்போம்!!! மானுடமும், நல்லிணக்கமும் சிறக்கும் சிறந்த ஒரு புத்தாண்டாய் எதிர்ப்பார்த்து.... வாழ்த்துக்களுடன், நா ஜெயசங்கர்

சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! - வீடியோ

சதாம் ஹுசேனின் இறுதி நிமிடங்கள்! வீடியோவில் பார்க்க மிக கொடுமையாக உள்ளது: இன்று காலை இந்திய நேரம் 8:30 மணிக்கு சதாம் தூக்கிலிடப்பட்டார். வழக்கமாக தூக்கிலிடப்படுகிறவர்களுக்கு தான் முகம் மறைக்கப்பட்டிருக்கும். இங்கு அது வேறு வகையில். தூக்கில் போட வருபவர்கள் முகமூடியில் வந்தது, சதாமின் மேல் உள்ள பயத்தை காண்பிக்கிறது. இங்கே பார்க்கவும் கைபேசியில் பதிவு செய்த வீடியோ பார்க்க(Un Edited) ........ நிச்சயம் ஒரு திறமையான எதிராளியை அமெரிக்கா இழந்துவிட்டது!!! ******************************************** We The Peopleலின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

சில்லுன்னு ஒரு கலாசாரக் கொலை!

Image
கடந்த சில நாட்களாலின் சில்லுன்னு ஒரு ஜோடின்னு ஒரு விஜய் டி.வி நிகழ்ச்சியை இரண்டு, மூன்று முறை பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி நம் சமுதாயத்தை, கலாச்சாரதை எப்படி பாதிக்கும் என்று தெரியாமலா ஒளிபரப்புகிறார்கள்? இல்லை தெரிந்தே ஒழியட்டும் நம் கலாச்சாரம்ன்னு ஒளிபரப்புறாங்களான்னு தெரியலை? அதை பார்த்ததுக்கு அப்புறம் இனி இந்த மாதிரி நிகழ்ச்சியை பார்க்கக்கூடாதுன்னு முடிவு எடுத்துட்டேன்னா பார்த்துக்கோங்க!!! யாரோ ரெண்டு பேர் சில்லுன்னு ஜோடியாமாம்.. ஹூம்!! என்ன கொடுமைடா சாமி. அந்த ஜோடில பொண்ணுக்கு வயசு 26 அப்புறம் பையனுக்கு வயசு 40. அது ஒரு மேட்டரே கிடையாது. சரி அவர்கள் காதல் விவகாரம் எப்படி ஸ்டார்ட் ஆச்சுன்னு ஒரு விளக்கம் கொடுத்தாரு பாருங்க நம்ம ஹீரோ! அந்த பொண்ணு இவரோட சித்தப்பா விட்டுல தங்கி (Paying Guest) இருந்ததாம், இவர் அவங்க சித்தப்பா ஊருக்கு போறதை சாக்கா வச்சு, அவரை ரெயில்வே ஸ்டேஷனில் விட்டுவிட்டு இந்த புள்ளய சனி கிழமை டான்ஸ் பார்ட்டிக்கு போலாமான்னு கேட்டாராம், அவங்களும் சரின்னு போயிட்டு வந்தாங்களாம். அது கூட விடுங்க. என்ன கொடுமைடா இது??: அந்த நிகழ்ச்சியை நடத்துற மமதி சாரி கேட்க்கும் சில கே...

இந்தியாவின் சிற்பிக்கு இன்று நினைவு நாள்

Image
இந்தியாவின் இரும்பு மனிதன் என்று இந்திய வரலாறு சொல்லும் சர்தார் வல்லப்பாய் பட்டேலின் நினைவு நாள், இன்று!!! சுமார் 600 சமஸ்தானங்களா இருந்த இந்தியவை, ஒற்றை ஆளாய் நின்று, ஒன்றுபட்ட இந்தியா ஆகிய பெருமை இவரை மட்டுமே சேரும். இந்திய சுதந்திரத்துக்கு முன்பே இவர் துவங்கிய ஒன்றுபட்ட இந்தியா கனவே இன்று நாம் காணும் சுதந்திர இந்தியா!!! இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஆகவேண்டியவரும் இவரே, காந்தியின் வேண்டுகோளுக்கு இனங்கி தனக்கு கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை நேருவுக்கு விட்டுக்கொடுத்தார். இந்தியாவின் முதல் துணை பிரதமராக இவர் பணியாற்றினார். இவர் உள்துறை மற்றும் தகவல் தொலைதொடர்பு துறைகளை கவனித்துவந்தார். இவருடைய் முயற்சியாலேயே டாக்டர் அம்பேத்கார் இந்தியாவின் அரசியல் சாசனம் வடிவமைப்பு குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிட தகுந்தது. இவர் டிசம்பர் 15, 1950ல் தனது 75வது வயதில் மாரடைப்பால் காலமானார். இன்றைய இந்தியாவின் சிற்பி என்ற முறையிலும், சுதந்திர இந்தியாவை காண இவர் செய்த தியாகத்தையும் இன்று நினைவு கூறுகிறேன். நான் மதிக்கும் சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர். நாளைய இந்தியா இவ...

பா.க.ச வில் சேர்வது எப்படி?

Image
புதிய வலை கலைஞர்கள் இந்த பா.க.ச என்ன வென்று தெரியாமல் தவிப்பதால். அதை பற்றி சொல்லி, உறுப்பினர் ஆவது எப்படி என்ற விளக்கமும் தர தான் இந்த பதிவு. முதலில் அறிமுகம்: பா.க.ச - பாலபாய் என்று அன்போடு அழைக்க்ப்படும் பாலாபாரதியை சின்னதும் பெருசுமாக கலாய்க்க ஆரம்பித்து அது ஒரு பெரிய இயக்கமா மாறி இப்ப அது பாலபாரதியை கலாப்போர் சங்கமாக உருவெடுத்துல்லது. இதில் பல உறுப்பினர்கள் இருந்தாலும் பொன்ஸ், நான், அருள், ப்ரியன், என எல்லா சென்னபட்டிண வாசிகளின் பங்கு தான் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம். இன்று இது கோவை, திருநல்வேலி, பங்களூரூ, அமெரிக்கா, ஜப்பான் என உலகெங்கும் பல கிளைகள் உருவாகிவருகிறது. 2007ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கிடைத்த புது போட்டோ, மேலே உள்ளது, இப்ப எங்க தல புது அவதாரம் எடுத்து இருக்காரு!! அது தான் யாகவா பாரதி முனிவர் அவதாரம். உலகிலேயே இவ்வளவு சுலபமாக ஒரு உறுப்பினர்களை சேர்க்கும் சங்கம் பா.க.ச மட்டுமே. அது தான் இந்த வளர்ச்சிக்கு ஒரு சிறந்த காரணம். உறுப்பினர் ஆவது எப்படி? மேலே உள்ள தல பாலாபாய் படத்தை இரண்டு நிமிடம் பார்த்தாலே உங்களுக்கும் இந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை வரும்...

குழந்தைகள் தின அதிர்ச்சி!

Image
இன்று குழந்தைகள் தினம், குழந்தைகளுக்கான இந்த நாளில், ஒரு அதிர்ச்சி செய்தியுடம் இந்த பதிவையிடுகிறேன். உலகிலேயே, நம் இந்தியாவில் தான் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையில் அதிகம்!!! உலகவங்கியின் கணக்குப்படி சுமார் 5 கோடி குழந்தைகள் தொழிலாளர்களாக உள்ளனர்!!! அதாவது சுமார் இந்தியவின் மக்கள் தொகையில் 5%. நம் நாட்டில் மாட்டும் ஏன் இவ்வளவு குழந்தை தொழிலாளர்கள்? இதில் சிந்திக்கவேண்டியது, இந்தியவில் சுமார் 41 கோடி குழந்தைகள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) , இதில் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் 11 கோடி. இந்த கணக்கு படி சுமார் 30 கோடி குழந்தைகள் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள். இந்த முப்பது கோடியில் 5 கோடி குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர், எட்டரை கோடி குழந்தைகள் பள்ளிகூட செல்லாதவர்கள் என்று அறியும் போது அதிர்ச்சியாக உள்ளது. ஏன் இந்த நிலை? இதை தடுக்க என்ன செய்யலாம்? இதுவே இன்றய இந்தியாவின் கேள்வி!!! நம்முடைய ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தியா 2020 வின் கதாநாயகர்ளாக/சிற்பியாக கருதும் இந்த மலர்களில் பலர், இன்று நகர்புறத்தில் டீ கடையிலும், ஹோட்டலும், மெக்கானிக்/பஞ்சர் கடைகளிலும் தினக்கூலிக்கு வேலை பார்க்கிற...

இந்த கொலைக்கு யார் காரணம்?

Image
இன்றய இந்தியா இவருக்கு கொடுத்த பரிசு - பசி (தற்)கொலை. இன்று இந்த செய்தி IBNல பார்த்து, நொந்து போனேன். பாட்னா தொடர் வண்டி நிலையத்தில் ஒரு ரெயில் வண்டியில் இவர் பசியின் கொடுமை தாங்க முடியாமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவர் எழுதிய இங்கு(பாட்னா ரெயில் நிலையத்தில்) தற்கொலை கடிதத்தில் கடந்த பதிமூன்று நாட்களாக உண்ண உணவின்றி அலைந்து, தண்ணீர் மட்டும் பருகி வாழ்ததாகவும், தன்னை யாரும் பார்க்கவில்லை, யார் என்றும், எங்கிறுந்து வந்தாய் என்று கேட்க ஆள் இல்லை! யாரும் உணவு கேட்டும் தரவில்லை என்று எழுதி இருக்கிறார். இவர் யார்? எங்கிருந்து வந்தார்? எனற தகவல் இல்லை. இதை பார்த்த போது, இதை தடுக்க வழியே இல்லையா? இந்தியாவை வல்லரசாக முயற்சிப்பதாக சொல்லும் இந்த அரசியல்வாதிகள், இந்த பசி தற்கொலைகளை ஒழிக்காமல் அங்கு அடைய முடியாது என்று தெரியவில்லையா?? பதிமூன்று நாட்களாய் தனி ஒரு மனிதன் உண்ண உணவின்றி தற்கொலை செய்யும் போது பல்லாயிரம் கோடி வெளிநாட்டு டாலர்கள் சேமித்து வைத்து என்ன செய்ய போகிறார்கள்?? டாலர் சேர்த்து வைத்து, மக்களையும், விவசாயிகளை தற்கொலைக்கு வழிநடத்தி செல்வது தான் வல்லரசின் வேலையா...

ஒரு இந்தியனின் தீபாவளி வாழ்த்துக்கள்

Image
அனைத்து தமிழ்மணம், தேன்கூடு வாசகர்கள்/பதிவர்கள் மற்றும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!!! இந்த தீபாவளி உங்கள் இல்லங்களில் வளத்தை பெருக்கட்டும். நன்றி! நா. ஜெயசங்கர் We The People

லக்கிலுக்கும் - நீதிமன்ற அவமதிப்பும்

Image
நம்ம பகுத்தறிவு ஜீவி லக்கிலுக் இவ்வளவு சூப்பரா திரைகதை அமைப்பார்ன்னு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சுவனப்பிரியன் என்னும் ம.உ.கண்மணி கொடுத்த ஒரு ஒன் லைன்னை (One Line) கதையை செம அசத்தலா திரைகதை அமைத்து. பாக்கியராஜ், மணிரத்னம் ஆகியவரை விட ஒரு சிறந்த திரைகதையாளனா அசத்தியிருக்காரு . ராம் கோபால் வர்மா ரேஞ்சுக்கு ஒரு சிறந்த திவிரவாத சினிமா எடுக்கலாம். அவர் சொல்லாராரு அப்சலை தூக்குல போடுன்னு சொன்னா தேசபக்தி ஜல்லியாம். தூக்குல போடாதன்னு சொன்னா பகுத்தறிவாமா!!! இது! இவருக்கு தேசபக்தி ஜல்லியா தெரியுது!! லக்கிலுகின் கண்டுபிடிப்புகள்: பாராளமன்றம் தாக்க இந்தியாவே சதி செய்தது! அதற்கு அப்சலை அவருக்கே தெரியாம உபயோகிச்சிடாங்களாம். இந்தியா நீதிமன்றங்கள்(Sessions Courts, High Court, Supreme Court வரை) பொய்வழக்குன்னு தெரிஞ்சும் அப்சலுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்காம்! அப்சல் ஒரு பாவம் இந்திய குடிமகனாம்! கதையின் கரு: அப்சல் குரு நல்லவனா இருந்தா எப்படி இருக்கும் என்று எண்ணியதன் விழைவு. கதைக்கு Referrence : அப்சலின் மனைவி எழுதியதாக சொல்லப்படும் கடிதம் என்று சுவனப்ரியன் எழுதிய பதிவு (லக்கிலுக் Googleல த...

அப்சலுக்கு இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ப்ளீஸ்!

Image
இதை நான் சொல்லவில்லை JKLF என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்ணனியின் தலைவர் சொல்லியிருக்காரு: "Afzal must be given another chance. I sure that he will get complete support from all quarters and will be pardoned." எதுக்கு இன்னொரு chance இன்னும் வெயிட்டா வெடி வைக்க ஒரு chance கேட்கிறாரோ? அடப்பாவிகளா? அந்த complete support எதுக்கு? இப்படி பப்ளிக்கா பிரஸ் மீட்டிங் போட்டு கேக்கற அளவுக்கு இந்தியாவில சுதந்திரம் இருக்குடா சாமி. இந்த கேடு கெட்ட திவிரவாதிகளை காப்பாற்ற வரும் மனித உரிமை காப்பாளர் என்ற பெயரில் வரும் ___ களை என்ன சொல்லறது. இந்த அஃப்சல் நாட்டின் தலை நகரில் அதுவும் நம்ம பாராளமன்றத்தில் தாக்குதல் நடத்தி பலரை கொல்ல சதி செய்தவன் என்று நிரூபிக்கப்பட்டுள்ளவனை ஆதரிக்கும் இந்த ம.உ.கா!!! இந்த அப்சலின் உயிரை எவ்வளவு முக்கியமோ அது போல தானே இவன் கொன்ற நம் பாதுகாப்பு படை நன்பர்களின் உயிரும். அப்பொழுது எங்க போனாங்க இந்த மனித உரிமை காப்பாளர்கள். இந்தியாவின் இறையாண்மையை தொட்டு விளையாடினால் தூக்கு தான் கெதி என்று நாம் உரக்க சொல்லவேண்டிய நேரத்தில் தீவிரவாதிக்கு ஆதரித்து அவர்களுக்...

மக்கள் கேட்கிறோம் - இவை என்ன ஆச்சு?

நம்ம அரசு போடற ஒவ்வொரு விசாரணை கமிஷன்களும் எங்க போகுது? என்ன ஆகுது என்று எனக்கு ரொம்ப நாள் சந்தேகம். கடந்த இரண்டு ஆண்டுகள் அரசு ஆனையிட்ட பல கமிஷன்கள் புஸ்வானமானதா? அல்ல கமிஷன் வாங்கிட்டு செட்டில் ஆயிடுச்சான்னு ஒரே சந்தேகம். அப்படி காணாமல் போன சில விசாரணை கமிஷன்கள்: "ஆப்ரேஷன் துரியோதனா" விசாரணை கமிஷன்: பாராளமன்றத்தில் கேள்விகள் கேட்க சுமார் 11 MPகள் பணம் பெற்றுக்கொள்ள அதை ஒரு தனியார் தொலைகாட்சி நிறுவனம் அதை வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு காட்டியது. அரசும், பாராளமன்றமும் உடனடியாக என்ன என்னவோ வித்தை காட்டி அதை மழுப்பி, அதற்கு ஒர் விசாரணை கமிஷன் போட்டாங்க. மாட்டிக்கொண்டவர்கள் காங்கிரஸ், பி.ஜே.பி, ஆர்.ஜே.டி என எல்லா கட்சியிலும் சமபங்கு இருந்தமையால் பெரிய எதிர்ப்பு இல்லாமல் விசாரணை கமிஷன் காணாமல் போனது. யாராவது தெரிந்தால் சொல்லுங்க ப்ளீஸ். "ஆப்ரேஷன் சக்ரவியூக்" விசாரணை கமிஷன்: Member of Parliament’s Local Area Development Scheme (MPLADS) எனபடும் தொகுதி மேன்பாட்டு நிதியை சுமார் முப்பது சதவீதம் MPக்களுக்கு தந்தால் தங்கள் தொகுதி மேன்பாட்டு நிதியை தாரை வார்க்க ரெடியா உள்ள...

ஓணம் ஒரு தேசிய பண்டிகை ஆக்கலாம்...

Image
மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதி, மத, இன பேதமின்றி இன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சியாக கேரளாவில் கொண்டாட படுகிறது. கேரளாவில் பிறந்த ஒவ்வெறு மலையாளிக்கும் கடந்த பத்து நாட்களாக அத்தபூ கோலமுடன் தூள் கிளப்பறாங்க. ஓணம் ஒரு பார்வை: இது ஒரு அறுவடை பண்டிகை என்ற போதும் பொதுவாக இது தங்களை வருடத்துக்கு ஒரு முறை காணவரும் புராண இதிகாச ராக்ஷ்ச ராஜாவான மஹாபலியை வரவேற்க்கவே இந்த பத்து நாள் விசேஷம். ஊரெங்கும் பூக்கள் கோலமாக பரவிகிடக்கும், புலி வேசம் போட்டு நடனம், வெள்ளம்களி (boat Race), யானை ஊர்வலம் என ஒரு வசந்தகாலத்து எபெக்ட் கொடுக்கும் பண்டிகை இது. ஓண பண்டிகையில் எனக்கு பிடித்த விசயம் முஸ்லிம், கிருத்துவர்கள், ஹிந்து என எந்த மத பாகுபாடு இல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதே!!! என்னை ஆச்சர்ய படுத்தும் பண்டிகையும் இது. ஏன் ஓணம்? ராக்ஷ்ச ராஜாவான மஹாபலி ஊழல், திருட்டு, பசி, பட்டினிசாவு என எந்த ஒரு கஷ்டங்களும் இல்லாமல் கேரளாவை ஆண்டுவந்த ராஜா, அவரை சோதனை செய்ய வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்னு மூன்று அடி மண் கேட்க, கொடை வள்ளலான மஹாபலி சரியென்று சொல்ல, விஷ்வரூபம் எடுத்த வாமனன் ஒரு அடிக்...

வலைப்பதிவர் சுற்றுலா - 7

Image
ரிலே பதிவின் முந்தய பதிவுகள்: பாகம் 1: வீரமணி பாகம் 2: பிரியன் பாகம் 3: பால பாரதி பாகம் 4: மா.சிவக்குமார் பாகம் 5: சிங்.ஜெயக்குமார் பாகம் 6: அருள் குமார் வானம் மழைகான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்க கடற்கரை கோவிலை சென்று அடைந்தோம். ஒரு வழியா சுற்றுலாவின் கடைசி கட்டத்தை அடைந்தோம். Parkingயில் பார்க் செய்துவிட்டு பார்த்தால் பாலாபாரதி & மா.சிவகுமார் கோஷ்டியை காணவில்லை. அவர்கள் 10 நிமிடம் தமதமாக வந்தடைந்தனர். ஒருவழியா அனைவரும் வந்து சேர உள்ளே செல்ல தயாராக, அருள் நுழைவு டிக்கெட் எடுக்க முயற்சி செய்ய, அப்ப சிவகுமாரும், நானும் 5 ரதம் பார்க்க எடுத்த நுழைவாயில் சீட்டு இந்த கடற்கரை கோவிலையும் பார்க்க உபயோகபடுத்தலாம் என்ற மேட்டரை அருளுக்கு சொல்ல, அவரும் டிக்கெடை பார்த்துவிட்டு கரெக்ட் என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல போகும் வழியில் குப்புசாமி, கவிஞர் பாலபாரதியிடம் சுற்றுலா பற்றி ஒரு விவாதம் நடக்க... சுற்று என்றாலும் உலா என்றாலும் ஒரே அர்த்தம் தானே ஏன் அதை சுற்றுலா என்று சொல்லனும் என்று சர்ச்சை கெலப்பினாரு குப்ஸ். பாலா ஏதோ சப்பை கட்டு கட்டிகிட்டு இருந்தாரு... நாங்க உள்ளே சென்று பார்த்தால் திரு...

நாளை சோனியா Chairman of NAC??!!

இதனால் சகலருக்கு அறிவிப்பது என்ன வென்றால் நம் ரப்பர் ஸ்டாம்ப், ஸாரி பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து பிச்சை கேட்டு இரட்டை பதவி மசோதாவுக்கு கையெழுத்து வாங்கிட்டு வந்திட்டாருபா!!! நான் என்னமோ நாட்டு பிரச்சனைக்காக ஜனாதிபதியை சந்தித்து இருப்பரோன்னு தப்பா நெனச்சுட்டேன். பாவம் தல கொடச்சல் தாங்க முடியாம கையெழுத்து போட்டுட்டாரு போல... So, மிக விரைவில் சோனியா தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராக பதிவியை ஏற்கபோகிறார் என்று மட்டும் நன்றாக புரியுது. எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க அது தான் எனக்கு நினைவுக்கு வருது. "சொந்தம் காரியம் ஜிந்தாபாத்"

MPகளிடம் சுதந்திரதின Quiz

நேற்று இரவு தற்செயலா NDTV காண்டபோது. நம்ம MPகளிடம் சுதந்திரதின Quiz கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார்கள். மொத்தம் ஒரு 5 கேள்விகள் தான். 1. தேசிய கீதம் (National Anthem) யார் எழுதியது? 2. தேசிய பாடல் (National Song) யார் எழுதியது? 3. நம் தேசிய கொடியில் மேலே உள்ள நிறம் என்ன? 4. தேசிய கொடியின் நடுவில் உள்ள சக்கரம் எங்கிருந்து எடுத்தது? 5. காந்தியின் முழு பெயர் என்ன? அதில் கொடுமை என்ன வென்றால் ஒரு 10 - 15 MPக்களிடம் கேள்வி கேட்கப்பட்டது, ஒரு MP கூட சரியான பதில் சொல்லவில்லை. அந்த லிஸ்டில் நம் மூத்த பாராளமன்ற உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லாவும் அடங்கும். 1. தேசிய கீதம் (National Anthem) யார் எழுதியது? இந்த கேள்விக்கு கிடைத்த பதில்களில் சில: பதில்கள்: தெரியாது, எந்த தேசிய கீதத்தை கேக்கறீங்க (என்னமோ சொன்ன பதில் சொல்லிடுவாரு போல), அதெல்லாம் எனக்கு தேவை இல்லை, எனக்கு ஜன் கன மன தெரியும் அவ்ளோதான், ஒருதர் மட்டும் ரொம்ப ட்ரை பண்ணி பாதி பேரு கண்டுபிடிச்சாரு ரபிந்தரூ.... என்று ஒரே இழுப்பு... சூப்பரோ சூப்பர் .... 2. தேசிய பாடல் (National Song) யார் எழுதியது? இந்த கேள்விக்கு கிட்ட தட்ட ஒரே மாதிரி பதில்கள் தா...

உறவுகள் பகைகளே!!! - தேன்கூடு போட்டி

கோவையில் எங்கள் வீட்டு முதல் மாடியில் புதியதாக குடி வந்தார் பாலாஜி, இவர்தான் குடும்ப தலைவர். ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜர். அவர், மனைவி வனஜா மற்றும் பாலாஜியின் பத்து வயது மகள் பூவிதா என சின்ன குடும்பம் தான். அன்று ஞாயிறு காலை 8 மணி வழக்கம் போல் என்.டி.டி.வி யில் செய்தியை பார்த்துக்கொண்டிருந்தேன், முதல் மாடியில் வீட்டிலிருந்து பலர் புதிதாய் வந்திருந்தனர், பெரிய தகராறு நடத்து கொண்டிருந்தது, ஒரே கூச்சலும் குழப்பம். எதோ விவகாரம் என்று மட்டும் தெரிந்தது. அவர்கள் குடிவந்து 6 மாதம் இருக்கும் இதுவரை அவர்களின் சப்தம் கூட வெளியே கேட்டதில்லை, இன்று என்னவாயிற்று என்று எனக்குள் ஒரு ஆவல். மெல்ல அவர்களின் வீட்டிலிருந்து வரும் போச்சுக்களை கேட்க துவங்கினேன். நான் செய்வது தவறு என்று தெரிந்தும் ஏனோ அதை கேட்க தூண்டியது என் உள் மனசு. யாரையோ இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள், அவரை யார் பார்த்துக்கொள்வது என்பது தான் பிரச்சனை என்று மட்டும் புரிந்தது. ஒரு 2 மணி நேர கூச்சலுக்கு பின் சப்தம் அடங்கியது. என்னவானாலும் நமக்கு நியூஸ் வரும் என்று தேத்திக்கிட்டேன். மதியம் நண்பன் மணி வீட்டுக்கு புறப்பட்டு வெளியே வந்தேன்...

இது தான்டா உள்குத்து!

Image
வழக்கமாக இவர் கொடுப்பார் உள்குத்து மக்களுக்கு! இவருக்கும் வெள்ளிக்கிழமை ஒரு சூப்பர் உள்குத்து கிடைத்தது. பாராளமன்றத்தில் வெள்ளிக்கிழமை விலைவாசி உயர்வு பற்றி விவாதம் வந்த போது பா.ஜா.க வும், இடதுசாரிகளும் நிதியமைச்சரின் மெத்தன போக்கே இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று சொல்லி முதலில் பா.ஜா.க பாராளமன்றத்திலிருந்து வெளியேறியது, அடுத்து அதே காரணத்தை சொல்லி இடதுசாரிகளும் வெளியேறியது, இதை தொடர்ந்து விவாதத்தில் பங்கு கொண்ட பகுஜன் சாமாஜ், ராஷ்டிரிய ஜனதாதள் என எல்ல கட்சிகளும் வெளியேறியது. ஸ்ப்பா தப்பிச்சோமுடா என்று, மீண்டும் ஏன் விலைவாசி உயர்ந்தது என்று Statistical points (cost-push and demand-pull inflation ) அள்ளிவீச தொடங்கினா? யாரோ எதிர்த்து பேசராங்களே என்று அண்ணன் பார்க்கிறார், அட அத்தனை காங்கிரஸ் உறுப்பினர்களும் தலைவரை பிச்சு ஒதரியிருக்காங்க! "நங்க பொது மக்களை நேர்ல சந்திக்கனும்(அடுத்த தேர்தலுக்கு!!) இப்படி விலைவாசி உயர்ந்துக்கிட்டே போனா எங்களைத்தான் மக்கள் கேள்வி கேட்ப்பார்கள், சாதாரண மக்கள் பிரச்னைக்கு உள்ளாகராங்க, நீங்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எடுத்த முயற்சி எல்லாம் வேஸ்ட்...

நாடகம்.காம்

நண்பர் Mejoritypeople என்னிடம் பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் இந்த பதிவில் ஒரு கேள்வி எழுப்பினார், அதற்கு நான் தந்த பதில் அதை தனி பதிவாக கொஞ்சம் விரிவாக போட்டால் அனைவருக்கும் அறிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என்று தான் இந்த பதிவு. Mejoritypeople கேள்வி: இந்த அரசு பற்றிய உங்க்ள் நிலையும் CPI and CPM நிலையும்ஒன்று என எடுத்து கொள்ளலாமா ? என் பதில்: CPI and CPM முழு நேர வியாபாரிகளாகிவிட்டதாக தான் எனக்கு தோண்றுகிறது??!! எந்த முதாலாளித்துவ கொள்கையை எதிர்த்தார்களோ அதை இன்று ஆதரிப்பது போல் பெங்காலில் வேலைகள் நடக்கிறது! அன்னிய முதலீடு வாங்க கூடாது என கூறும் இடதுசாரிகளின் அரசு பெங்காலில் அன்னிய முதலீட்டுக்கு காத்திருக்கிறது! அவர்களை மக்களுக்கு நன்மை செய்ய நாம் பாராளமன்றத்துக்கு அனுப்பினால் அவர்கள் காங்கிரஸுடன் கை கோர்த்து 6 முறை பெட்ரோல் விலை ஏற்றிய போது வாயளவில் போராட்டம் செய்து! மக்களின் நண்மையை கருத்தில் கொள்ளாமல் வாய்ப்பேச்சில் வீரர்கள் ஆனதில் எனக்கு பெரும் வருத்தம். ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது இவர்கள் போராட்டம் செய்வதும், உடனே காங்கிரஸ் நவரத்தின நிறுவ...

ஒரு பாசிடிவ் அப்ரோச்!

Image
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு பதிவு! எழுத பல விசயங்கள் சிந்தையில் வந்தது ஆனால் ஏனோ அதை எழுத முடியவில்லை, சில பாதியில் கைவிடப்பட்டது (நீங்க தப்பிச்சிட்டீங்க!!!) :) இன்னும் சில எழுத்தில் உள்ளது... உங்களை சும்ம விடுவனா?! நன்பர்கள் வெகுவாரியா என் பிளாக் பத்தி சொன்ன ஒரு குறை, பாசிடிவ் அப்ரோச்(Positive Approach) இல்லை என்பது! சரி என்றே எனக்கும் தோன்றியது! அதனால் இந்த பதிவு சில நல்ல விசயங்களை பற்றி எழுத நினைத்தேன். இங்கு குறை பல இருந்தாலும் சில நல்ல விசயங்கள் நடக்க தான் செய்கிறது! சில நல்ல விசயங்கள் கேட்க தான் செய்கிறது! அதில் ஒன்று சில நட்களுக்கு முன் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். இந்திய வின்வெளி ஆராய்ச்சி மையத்தின் பழைய படங்களையும் மற்றும் சிறு குறிப்புக்களையும்! இதை நான் உங்களுடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தும்பா ராக்கெட் ஏவுதளம் உருவான கதை: மேற்கத்திய நாடுகள் நிலவுக்கு பயணிக்க துடங்கிய 1960களில், இந்தியா தன் விண்வெளி ஆராய்ச்சியில் பாதம் பதிக்க எடுத்த கன்னி முயற்சிகள் மற்றும் அதற்க்காக நம் விண்ஞானிகள் பட்ட பாடுகள்! அப்பொழுது எடுக்கப்பட்ட சில படங்கள் பார்க்க பிரம்மிப்பாய் இருந்தது! முதல் ப...

கழுதை கைது ;)

Image
இது காஞ்சிபுரம் - சூன் 29, 2006 நடந்த காமெடி: ஒரு கழுதையை கைது செய்தது காஞ்சிபுரம் காவல்துறை. எதுக்குன்னு பார்க்கறீங்களா? பேப்பர்(மனு) தின்னதுக்கு தான்! 29 ஆம் தேதி ஏதோ திராவிட மக்கள் மன்றம் பெயரில கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் (மாவட்ட நிர்வாகிகள் மனு கொடுத்தா, கண்டுக்காம இருக்கறதயும், அட்லீஸ்டு கழுதைக்கு கொடுத்த அதுக்கு ஒரு வேளை உணவாகும் என்ற உயரிய நோக்கதுக்காக)ஒரு நூதன போராட்டம் நடந்தது காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகளை கண்டிச்சு! அங்க தான் இந்த கழுதைக்கு எழரை புடிச்சிருக்கு போல, ஓசில பேப்பர் நிறையா கிடைக்கும் இந்த கழுதையின் முதலாளி இந்த திராவிட மக்கள் மன்றம் கோஷ்டிகளோட அனுப்பியிருக்காரு! இந்த மன்றமும் அறபோர்தான் பண்ணாங்க போல அது தருமவான்களான காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு புடிக்கல போல. உடனே ஒரு புகார் காஞ்சிபுரம் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது! உடனடி நடவடிக்கையில் காவல்துறை இறங்கி தூள் பண்ணீட்டங்க!!! அங்கு போராட்டம் செய்த மன்றத்தார் + கழுதை + மனுக்கள் + கூடாரம் + கட் அவுட் என்று எல்லத்தையும் அள்ளிக்கிட்டு போக முடிவு எடுத்துட்டு பார்த்த கழுதை மன்றத்தாருடன் வேனில் எற மறுத்தது எவ்வ...

தினமலரில் We The People பதிவு!!!

இன்றைய தினமலர் நாளிதலில் நம்ம பதிவான பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் ஒரு வரி விடாம "இது உங்கள் இடம்"ன்னு ஒரு பகுதியில் அச்சு ஆயிருக்கு. முதலில் நன்றியை சொல்லுவோம் தினமலர்க்கு. இது பலரை சென்று அடையும் என்று சந்தோஷப்படுவோம். என் 3 மாத பெட்ரோல் விலை பற்றிய ஆராய்ச்சி (ofcourse in my spare time) மக்களுக்கு சென்று அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி! மற்றும் அரசின் முகமூடியும் கிழிக்கப்பட ஒரு முயற்சி வெற்றி பெற்றதில் ஒரு பெருமிதம்!!! Link to the dinamalar page: நேரடி மின்முகவரி: www.dinamalar.com/2006june29/ithu.asp தினமலரின் மின்முகவரி: http://www.dinamalar.com அதில் "இது உங்கள் இடம்" என்ற ஒரு Link உள்ளது. அதில் வந்துள்ளது. பி.கு: என் பெயர் மாற்றப்பட்டுள்ளது (எம்.ஜெயகுமார் என்று) இது சின்ன அச்சு பிழையா? அல்லது தினமலர் என் நலம் விரும்பி மாற்றி பதித்தா என்று தெரியவில்லை (ஆட்டோ நன்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்ற!) . மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் பதில் வந்தால் பார்ப்போம்!!!

ஒரு இந்திய கனவு

Image
என் நீண்ட நாள் கனவு... அனேகமாக ஒவ்வொறு தமிழனுக்கும் ஏன் ஒவ்வொறு இந்தியனுக்கும் இந்த கனவு இருக்கும்... இந்த கனவுக்கு base ஷங்கரின் "முதல்வன்" .... நம்மை ஆள்வதற்கு ஒரு புகழேந்தி வரமாட்டானா? நான் சொல்ல வந்தது முதல்வனில் வரும் நாயகன் புகழேந்தி ... தப்பா நினைத்துகொள்ள வேண்டாம் ... யாரையும் மனதில் புகழேந்தியாக வைத்திருக்கவில்லை... இங்கு இருக்கும் யாரும் அந்த அளவுக்கு மக்களை நினைப்பவர்களில்லை... இது என் மனதில் தோன்றியது... அவன் வருவானா? ஊழல் இல்லாதவன், ஊழல் பிடிக்காத தலைவன், ஊழல் கறைபடியாதவன், ஒரு நல்ல முதல்வன் ... ஒரு நல்ல பிரதமர் .... ஒரு மக்கள் தலைவன்... என்று தனியும் இந்த தேடல்!!!! நாம் ஏமாந்துவிட்டோம் !!! நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்!!! இவர்களை தெரிந்துகொள்ள தவறிவிட்டோம்.. தன்னிகர் அற்ற தலைவர்களை விட்டுவிட்டு .... இப்போது தலைமகனை தேடி அலைகிறோம்... கக்கன் - மந்திரியாக இருந்தும் ... ஓலை குடிசையில் வாழ்ந்து... ஓலை குடிசையில் இறந்தார்... இந்த வரலாறு தெரிந்தவர்கள் சிலரே... அவரை போல் ... காமராஜர் ... பக்தவச்சலம் ... என்று பலர்... அவர்களை அரசியலிருந்து... மக்கள் சேவைலிருந்து வெளியேற்...

இது எப்படி இருக்கு!

ஆனாலும் ரொம்ப குசும்புங்க இந்த லாலு பிரசாத் மச்சானுகளுக்கு. சூன் 19, 2006: ஒரு மச்சான் (சுபாஷ் யாதவ், MP) பாட்னா ரெயில் நிலையத்தின் பிளாட்பாரம் #1 இருந்துகினு மூன்றாவது பிளாட்பாரதில் வந்த ரெயில் வண்டிய ஓட்டிகினு வா இங்கன்னு கட்டளை வுட்டிருக்காரு! உடனே ரெயில்வே அமைச்சரின் மச்சானாச்சே உடனே ரெயில்வே அதிகாரிகளும் பறந்து அடிச்சுகினு பிளாட்பாரம் #1 வண்டிய ஓட்டி வந்திருக்காங்க. சூன் 20, 2006: விடுவார அடுத்த மச்சான் (சாது யாதவ், MP) (யாரு வெயிட்டுனு காட்ட வேண்டாம்!!!) அதே பாட்னா ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரம் போயி நின்னுகினு, இரண்டாவது பிளாட்பாரதில் வர வேண்டிய ரெயில் வண்டிய முதல் பிளாட்பாரத்துக்கு ஓட்டிக்கின்னு வா சொல்லியிருக்காரு தலிவரு, எதோ ஒரு லொல்லு புடிச்ச ரெயில்வே அதிகாரி அதெல்லாம் முடியாதுன்னு சொன்னாரு போல, சாதுவின் சூப்பர் டயலாக் " அந்த மச்சானுக்கு வரும் வண்டி, ஏன் எனக்கும் வர கூடாது " நியாயமான கேள்விதான? சுமார் ஒரு மணி நேரம் ரெயில் நிலையத்தை உண்டு இல்லைன்னு பண்ணியிருக்காரு நம்ம சாது! (யாதவ்!) இதில் ஒரு தொண்டர்கள் தர்ணாவும் அடங்கும்போல! அய்யோ பாவம் ரெயில்வே அதிகாரி தண்ண...

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி

அரசியல் ஒரு வியாபாரமா? இன்றைய முதலீடு, நாளைய லாபம் என்கிற "ரேஞ்சில்" வளருது இந்திய அரசியல். இந்த பரிநாம வளர்ச்சி எப்படி தோன்றியது! யார் இதை வியாபாரம் ஆக்கியது? சமீபத்தில் என் நண்பன் கார்த்திக்கின் திருமணத்துக்கு போனபோது ஒரு கலந்துரையாடலில் கிடைத்த மேட்டர் இது. நான், நண்பன் அருள், அருளின் தந்தை, வீரமணி, ராம், etc., ஹோட்டல் அறையிலிருந்து திருமண மண்டபத்துக்கு போகும் வழியில் Time Passக்கு பேச துவங்கினோம், மெதுவா அரசியல் பக்கம் திரும்பியது அப்போது வழக்கம் போல என் அதங்கமான வாரிசு அரசியல் பத்தி டாப்பிக்கு எடுத்து விட்டேன், அருளோட அப்பா ஒரு கேள்வியால் அடித்தருங்க ஒரு அடி நான் வாயடச்சு போயிட்டேன்!!! என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்? உங்க பிஸினசிலே உங்க மகன கொண்டுவர நெனைப்பீங்கல்ல? அது மாதிரிதான் இது என்றார். நான் வாயடச்சதுக்கு Reason அவர் தந்த அரசியலும், வியாபாரமும் ஒன்று என்ற விசயம், அறியாமை படித்தவர்கள் மத்தியுலுமா? என்ற ஷாக்கில் தான். நான் அறிந்த அரசியல், மக்கள் சேவை ஒன்றே கொள்கையாக கொண்டு, மக்களுக்கு நன்மைக்காக வாழ்வதே அரசியல்??!! கரெக்ட்டா? இது வியாபாராமா மாறி வருது... மக்களும், அரசி...

நட்புக்கும் உண்டு அடைக்கும் தாள்

இந்த பதிவு நேற்று என்னை ரொம்பவே பாதிச்ச ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள தோன்றியதன் விழைவுதான். 13 வருடங்களுக்கு முன்! கல்லூரி நாட்களில் நட்பு ரீதியா நிறைய பேரிடம் பழகினாலும் ஒரு 6 பேரு ஒரு Groupபா தான் அலையுவோம்! நான், சிவஞானம், சிவ அமுதன், டானி, அசோக் & Iyer என்று அன்போடு அழைக்கப்படும் ஷிரிக்ஸ். தினம் ஒரு லொள்ளு, கலாட்ட, கல்லூரி முன் உள்ள டீ கடை அரட்டைகள் என பல கூத்துகள் Daily. நினைத்தால் திருப்பதி ட்ரிப், திடீர் கோனை நீர்விழ்ச்சி பயணம் என சுத்தி சுத்தி நாங்க உயிர் நன்பர்களா மாறிவிட்டோம்! இப்ப என்ன அச்சு? எதுக்கு இந்த Build upன்னு தான நினைக்கறீங்க? நீங்க நெனைக்கறது சரிதான்! அதை பத்திதான் இப்ப சொல்லப்போறேன். நேற்று! அமுதன் என் கைப்பேசிக்கு அழைத்து, டேய் ஒரு மேட்டர் தெரியுமா, நம்ம அசோக்கு ஆண் குழந்தை பொறந்திருக்குன்னு சொன்னான், ரொம்ப சந்தோஷம் டா!!! பரவால்ல மச்சி 10 வருஷம் குழந்தையில்லன்னு கஷ்டப்பட்டாலும் அதுக்கு ஒரு முடிவு வந்திருச்சு, Very good சொன்னேன். அடுத்து அமுதன் சொன்ன மேட்டர் "மச்சி அவனுக்கு கொழந்த பொறந்து ஒரு மாசம் ஆச்சாம!!!" அப்ப தான் எனக்கு பயங்கர ஷாக்!!! ஒரு மாசமா...

பிச்சை பாத்திரத்தில் கையிட்ட அரசு!

ஒரு நல்லரசு எதை செய்யக்கூடாதோ அதை செய்வதை தொழிலாக ஆக்கி கொண்டுள்ளது நம் இந்திய அரசு! நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை மிகவும் பாதிக்கும் பனிகளை செவ்வனே செய்து மார்தட்டி கொள்ளும் "Middle Class Budget " அரசு!!! காமெடிக்கு ஒரு அளவே இல்லையா?? மிக சிறந்த உதாரணத்துக்கு பெட்ரோல் விலையேற்றத்தை கூறலாம். நேற்று முன் தினம் சுமார் ரூ4 விலையேற்றி ஒரு லிட்டர்க்கு ரூ 52 என்று ஏற்றியாது. அன்று இரவு 12 மணி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது, உடனே எடு வண்டியை என்று படை எடுத்தேன் பெட்ரோல் நிலையத்துக்கு. அங்கு சென்றதும் மக்கள் வெள்ளம் தங்கள் இருசக்கர வகணங்களுடன. அய்யோ பாவம், இந்த 4 ரூபாயை மிச்ச படுத்த வரிசையில் காத்திருக்கிறார்கள் நம் மக்களின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளது என்று நினைக்கும் போது மிகவும் வருத்தப்பட்டேன், நானும் அந்த 4 X 5 = 20 ரூபாயை மிச்சப்படுத்த தான் வரிசையில் காத்திருந்தேன்!!! நாம் கஷ்டப்பட்டு உண்டாக்கும் பணத்தை எவ்வளவு எளிதாக தட்டி செல்கிறது இந்த அரசு! இதைத்தான் பிச்சை பாத்திரத்தில் கையிடுவது என்பார்களோ! வேறு வழி இல்லை, விதி என்று நினைப்பதை விட்டு...

பெட்ரோல் இடி விழுந்தது!!!

நன்பா! அரசு நமக்கு பெட்ரோல் வெடி இல்லை இடியை நம் தலையில் போட்டது வெற்றிகரமாக. இன்று இரவுமுதல் பெட்ரோல் விலை ரூ 4 கும் , டீசல் விலை சுமார் ரூ 2 ஏற்றபடுகிறது. இனி அனைத்து அத்தியாவச பொருட்களில் விலையேற்றம் தவிற்க்க முடியாத ஒன்றாகிவிடும். நான் வாழ இந்தியாவில் இடமில்லயா? மக்களே சிந்திப்பீர்! போராட துடங்குவோம்!! ஆசியாவிலேயே நாம் தான் மிக அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறோம்!!! ஏன்னென்று அறிவதற்கும், என் முந்தைய பதிப்பான " பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் " படிக்கவும்

பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்

Image
ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய, பெட்ரோல் விலை பற்றிய விஷயங்களை இங்கே பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அப்படி தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமும் ஆகிவருகிற நேரமிது. ஏனெனில், ஆசியாவிலேயே நாம் தான் மிக அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறோம். உலக அளவில் இதில் நாம் இரண்டாம் இடம்! இந்த எரிபொருள் விலை உயர்வு எங்கெல்லாம் நடுத்தர மக்களை பாதிக்கும் : 1. காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களில் விலையும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில், இந்த சரக்குகளின் போக்குவரத்துக்கு எரிபொருள் இன்றியமைதாத தேவையாகிவிட்டது. 2. நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவைகளான ரெயில், பேருந்து, ஆட்டோ என அனைத்தின் சேவை கட்டணங்களும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது. ஏன் இந்த நிலை? என்ன தான் உண்மை? இந்த பெட்ரோல் விலையின் சூட்சமம் தான் என்ன? சில இனைய வலையில் இருந்து கிடைத்த சில புள்ளி விவரங்களை இங்கு பார்ப்போம்... நமது அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் எண்ணை கிணறுகள் மூலம் 35 முதல் 40 சதவிகிதம் வரை பெட்ரோலிய வளத்தில் தன்னிறைவு பெறுகிற நாடு நம்முடையது! உங்களால்...

நானும் ஒரு இந்தியன்

Image
இந்த வலைபதிவு என்னைப்பற்றியல்ல... நம்மை பற்றி... அப்படியென்றால்.... நம் இந்திய மக்கள் பற்றியது... நம் வாழ்வின் ஒரு அலசல்... இது அரசியல் வலை அல்ல... இருந்தாலும் நம் வாழ்வில் சில ... பல இடர்பாடுகள் இந்த அரசியவாதிகளால்... அரசியலால்... அரசால்... மக்களால்... சமுதாயத்தால்... என்று எல்லாம் அலசுவோம்... முதலில் என்னை பற்றி ஒரு சிறு குறிப்பு.... பெயர் : ஜெயசங்கர் நாராயணன் படிப்பு : இளநிலை தொழிற்கல்வி பட்டம் வயது : 33 வருடம் சில நேரம் seriousசா வேலை செய்வது (சின்னதா ஒரு மென்பொறி நிறுவனம் நடத்துகிறேன்) , சில நேரம் jollya நண்பர்ளோடு பேசுவது, சில நேரம் சமூக சிந்தனை ( வேலையின்மை ஒழிப்பது, பிட்சை எடுப்பவர்கள் இல்லாமல் ஆக்குவது...) இப்படி... ஒரு பெரிய பட்டியல்... சில நேரம் எனக்கே காமெடியா இருக்கும் ...அது வேறு விசயம்... என் சமூக சிந்தனையின் விளைவாக நிறைய விசயம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்... அவர்களின் தூண்டுதலின் பேரில் தான் இந்த வலை பதிப்பு... வரும் நாட்களில் விரிவாக ஆராய்வோம்....