நீயா? நானா? - டாக்டர் அன்புமணி

நேற்று இரவு 9 மணிக்கு விஜய் டி.வியில் நீயா ? நானா? என்ற ஒரு டாக் ஷோவில், மருத்துவ மாணவர்கள் ஒரு வருட கட்டாய கிராமபுற சேவையை எதிர்த்து பலமாக குரல் எழுப்பினர், ஆனால் அந்த பலம் டாக்டர் அன்புமணி அவர்கள் வந்த பிறகு காற்றில் பறந்தது! நிகழ்ச்சியை பார்த்த பிறகு டாக்டர் அன்புமணியை பாராட்டவே தோண்றியது. அந்த நிகழ்ச்சியை பார்த்தில் எனக்கு கிடைத்த தகவல்கள்! அரசு கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் வருடம் வெறும் 4000 முதல் 6000 வரையே செலவு செய்கிறார்கள்! அதே மருத்துவ படிப்புக்கு தனியார் கல்லூரிகள் 4 முதல் 6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது! அரசு பெரும் செலவு செய்து (சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு மாணவருக்கும் செலவு!) அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரே ஒரு வருடமாவது சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது! நிரந்தர வேலையை கொடுத்தால் கிராமப்புர சேவை செய்வதாக கூறிய இவர்களின் வாதம் ஒரு சப்பை கட்டாகவே எனக்கு தோண்றியது! இவர்களை எதிர்த்து சில புள்ளிவிவரங்களுடன் வந்த சில டாக்டர்கள், தாங்கள் ஏன் கிராமப்புறங்களில் வேலை செய்யவில்லை/ முன்வரவில்லை என்று சொல்ல முடியா...